General Tamil Model Question Paper 21
61. “கால்நகம் கீறிய கோடுகள் வழியே கங்கையும் சிந்துவும் ஓடிவரும்”
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக:
(அ) உம்மைத் தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) எண்ணும்மை
(ஈ) இழிவு சிறப்பும்மை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) எண்ணும்மை
எண்ணும்மை: “உம்” விகுதி வெளிப்படையாக வருவதாகும்.
எ.கா:கங்கையும் சிந்துவும், இரவும் பகலும் எண்ணும் எழுத்தும்.
62. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
(அ) நாலடியார்
(ஆ) நான்மணிக்கடிகை
(இ) பழமொழி
(ஈ) கலித்தொகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) கலித்தொகை
நாலடியார்h, நான்மணிக்கடிகை, பழமொழி ஆகியவை பதினெண்கீழ்கணக்கு நூல்களாகும். கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
63. இலக்கணக்குறிப்பறிதல்: பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
வினைத்தொகை.
(அ) பொங்குதாமரை
(ஆ) பூதரப்புயம்
(இ) அலைகடல்
(ஈ) அகல்முகில்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பூதரப்புயம்
பொங்குதாமரை, அலைகடல், அகல்முகில் ஆகிய மூன்றும் வினைத்தொகைகள். பூதரப்புயம்-உவமைத்தொகை.
64. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
நான் வாங்கிய நூல் இது அல்ல.
(அ) நான் வாங்கிய நூல் இஃது அல்ல
(ஆ) நான் வாங்கிய நூல் இஃது அன்று
(இ) நான் வாங்கிய நூல் இது அன்று
(ஈ) நான் வாங்கின நூல் இது அன்று
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) நான் வாங்கிய நூல் இஃது அன்று
நான் வாங்கிய நூல் இஃது அன்று-சரியான தொடர்
நான் வாங்கிய நூல் இஃது அல்ல-தவறான தொடர்.
ஏனெனில் “நூல்” ஒருமைச்சொல். “அல்ல”பன்மைச்சொல்” நூல்கள் இவை அல்ல” என்பது சரியான தொடராகும்.
ஒருமைக்கு “அன்று” என்ற சொல்லே அமையும்.
அன்று, அல்ல ஆகிய சொற்களில் முதலெழுத்து உயிரெழுத்தாக இருப்பதால், “இது” என்ற சொல் அதற்கு முன்னே அமையக்கூடாது. இஃது, அஃது என்ற சொற்களே உயிரெழுத்திற்கு முன்பு அமைய வேண்டும்.
65. நற்றிணை ———- சிற்றெல்லையும் ————- பேரெல்லையும் கொண்ட நூல்.
(அ) 4, 8
(ஆ) 3, 6
(இ) 9, 12
(ஈ) 13, 31
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 9, 12
நூல் அடிவரையறை:
நற்றிணை 9-12.
குறுந்தொகை 4-8.
ஐங்குறுநூறு 3-6.
அகநானூறு 13-31.
66. முதல் சமய காப்பியம் எது?
(அ) மணிமேகலை
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) வளையாபதி
(ஈ) குண்டலகேசி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) மணிமேகலை
தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தை சார்ந்தவர். எனினும் அக்காப்பியத்தில் எச்சமயத்தையும் உயர்த்தியோ தாழ்த்தியோ அவர் கூறவில்லை. அதன் பின்னர் இயற்றப்பட்ட மணிமேகலை புத்த சமய சார்புடையதாகும்.
சீவகசிந்தாமணி-சமண சமய சார்புடையது.
வளையாபதி-சமண சமய சார்புடையது.
குண்டலகேசி-புத்த சமய சார்புடையது.
67.பொருத்தமான விடையைத் தேர்வு செய்க:
“தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள்-திருக்குறள் குறித்து இப்படிக் கூறியவர் யார்?
(அ) திரு.வி.க
(ஆ) ஒளவையார்
(இ) பாரதியார்
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) பாரதிதாசன்
68. வீரமாமுனிவர் பிறந்த நாடு
(அ) பாரிசு
(ஆ) இத்தாலி
(இ) இங்கிலாந்து
(ஈ) சுவிட்சர்லாந்து
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) இத்தாலி
69. “இனியவை நாற்பது” நூலின் ஆசிரியர் யார்?
(அ) தாயுமானவர்
(ஆ) சச்திதானந்தன்
(இ) பூதஞ்சேந்தனார்
(ஈ) கபிலர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) பூதஞ்சேந்தனார்
70. “அம்மானை” என்பது ———- விளையாடும் விளையாட்டு
(அ) ஆண்கள்
(ஆ) பெண்கள்
(இ) குழந்தைகள்
(ஈ) பெரியவர்கள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) பெண்கள்