General Tamil Model Question Paper 21
21. “விளம்பி” என்பது —– பெயர்
(அ) இயற்பெயர்
(ஆ) புனைபெயர்
(இ) ஊர்ப்பெயர்
(ஈ) சொல்பெயர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) ஊர்ப்பெயர்
“நான்மணிக்கடிகை” என்ற நூலின் ஆசிரியர் விளம்பி நாகனார். இவரது இயற்பெயர் நாகனார். இவரது ஊரின் பெயர் விளம்பி.
22. விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல்
(அ) விவியம்
(ஆ) திருக்குறள்
(இ) ஷேக்ஸ்பியரின் படைப்பகள்
(ஈ) கீட்சின் கவிதைகள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) திருக்குறள்
23. திருவள்ளுவராண்டு எதை உறுதி செய்து கணக்கிடப்படுகிறது?
(அ) கி.மு.31
(ஆ) கி.மு.13
(இ) கி.மு.2
(ஈ) கி.மு.12
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) கி.மு.31
திருவள்ளுவரின் காலத்தை சரியாகக் கூற இயலவில்லை. எனினும் மறைமலையடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாக கி.மு.31 எனக் கணக்கிடப்பட்டு திருவள்ளுராண்டு நடைமுறைக்கு வந்தது.
24. “சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்” – எனப் பாடியவர்.
(அ) திருமூலர்
(ஆ) பெரியார்
(இ) வள்ளவர்
(ஈ) வள்ளலார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) வள்ளலார்
25. “அரியா சனமுனக்கே யானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே?-இடம் பெற்ற நூல்.
(அ) தென்றல் விடு தூது
(ஆ) நெஞ்சு விடு தூது
(இ) தமிழ் விடு தூது
(ஈ)புகையிலை விடு தூது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தமிழ் விடு தூது
தமிழ்விடு தூது
அரியா சனமுனக்கே யானால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே – விரிவார்
திகழ்பா ஒரு நான்குஞ் செய்யுள்வரம் பாகப்
புகழ்பா வினங்கள்மடைப் போக்கா – நிகழவே
நல்லேரி னால் செய்யுள் நாற்கரணத் தேர்பூட்டிச்
சொல்லேர் உழவர் தொகுத்தீண்டி – நல்லநெறி
நாலே விதையா நனி விதைத்து நாற்பொருளும்
மேலே பலன்பெறச்செய் விக்குநாள்.
– ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
பொருள்: தமிழே! உமக்குத் தலைமைப் பேறு அளித்தால், உமக்கு ஒப்பாவார் ஒருவருமிலர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும் வயலின் வரப்புகளாகவும், துறை, தாழிசை, விருத்தம் என்னும் பாவினங்கள் மடைகளாகவும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்களையும் நல்ல ஏர்களாகவும் கொண்டு சொல்லேருழவர் உழவு செய்ய, வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய செய்யுள் நன்னெறிகளே அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய விளைபொருள்களாயின.
26. “கண் வனப்புக் கண்ணோட்டம்,
கால் வனப்புச் செல்லாமை” – என உறுப்பழகு பாடியவர்
(அ) பரணர்
(ஆ) கபிலர்
(இ) காரியாசான்
(ஈ) முடியரசன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) காரியாசான்
சிறுபஞ்சமூலம்
கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்-பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு.
– காரியாசன்.
பொருள்: கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளல். காலுக்கு அழகு பிறரிடம் இரந்து செல்லாமை.
ஆராய்ச்சிக்கு அழகு தமது முடிவை துணிந்துரைத்தல்.
இசைக்கு அழகு அதனைக் கேட்போர் நன்றெனப் புகழ்தல்.
அரசனுக்கு அழகு குடிமக்களை வருத்தாமல் காப்பவன் என்று பிறர் அவனைப் புகழ்ந்துரைத்தல்.
27. “பராய்க்கடன் உரைத்தல்” என்பது
(அ) கடன் கேட்டல்
(ஆ) கடன் கொடுத்தல்
(இ) வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் எனல்
(ஈ) வாங்கிய கடனைத் தர மறுத்தல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் எனல்
“பாராய்க் கடன் உரைத்தல்” என்பது, தான் வேண்டியது நிறைவேறினால் இன்னது தருவேன் என்றுரைத்தல்.
ஐங்குறுநூறு
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபினன் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பெற்றிண வல்கி,
பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே.
– ஓதலாந்தையார்.
பொருள்: தன் மகள் உடன்போக்காய் தலைவனோடு சென்று விட்டதை அறிந்த நற்றாய், தன் மகள் திரும்பி வந்து விட்டால், பொன்னால் செய்யப்பட்ட பாத்திரத்திலே பச்சை ஊன் இடப்பட்டு சமைக்கப்பட்ட நல்ல உணவினைப் பலியாயக் கொடுப்பதாக காகத்திடம் உரைக்கிறாள்.
28. கோவலன், கண்ணகி மதுரையில் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டனர்?
(அ) கவுந்தியடிகள்
(ஆ) மாதரி
(இ) மாதவி
(ஈ) நெடுஞ்செழியன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) மாதரி
கோவலன், கண்ணகியை வழிநடத்திச் சென்றவர் கவுந்தியடிகள். அவர்களுக்கு மதுரையில் அடைக்கலம் கொடுத்தவள் மாதரி.
29. “Charity begins at home” என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி
(அ) தன் கையே தனக்குதவி
(ஆ) அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்
(இ) தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
(ஈ) வீட்டிலேயே தானம் செய்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்
30. அகப்புறப்பாடல்களைக் கொண்ட சங்க நூல் எது?
(அ) பதிற்றுப்பத்து
(ஆ) பரிபாடல்
(இ) புறநானூறு
(ஈ) அகநானூறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பரிபாடல்
பரிபாடல்:
திணை-அகமும் புறமும், பாவகை-பரிபாட்டு.
பாடல்கள்-70 (கிடைத்தவை 22); பாடிய புலவர்கள் 13 பேர்.
அடிவரையறை-25 முதல் 400.
பெயர்க்காரணம்: வெண்பா, ஆசிரியப்பர், கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பல வகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மையால் பரிபாட்டு ஆனது.
வேறுபெயர்கள்: பரிபாட்டு, ஓங்கு பரிபாடல், இசைப்பாட்டு, பொருட்கலவை நூல், தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.
பதிப்பித்தவர்: உ.வே.சாமிநாதய்யர்.
தொல்காப்பிய விதிப்படி அமைந்த தொகை நூலாகும்.
தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகுப்பு நூலாகும்.
பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.
பாண்டிய நாட்டை மட்டும் கூறும் தொகை நூல்கள் பரிபாடல், கலித்தொகை.
“கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் அமைந்துள்ளது. உலகத் தோற்றம் குறித்தும் கூறுகிறது.
பரிபாடலில் அமைந்துள்ள எண்ணுப் பெயர்களாவன, 0–பாழ். 1/2-பாகு, 9-தொண்டு.
பகுப்புமுறை:
தெய்வம் பாடல் எண்ணிக்கை கிடைத்தவை
திருமால் 8 6
செவ்வேள் (முருகன்) 31 8
காடுகாள்(காளி) 1 0
வையை 26 8
மதுரை 4 0
மொத்தம் 70 22