General Tamil Model Question Paper 21
11. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:
(அ) கெடாஅ
(ஆ) அரங்ங்கம்
(இ) எடுப்பதூஉம்
(ஈ) தழீஇ
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) அரங்ங்கம்
அளபெடை: உயிர் அளபெடை, ஒற்றளபெடை-அரங்கம்
உயிர்அளபெடை: செய்யுளிசை அளபெடை-எ.கா:கெடாஅ.
இன்னிசை அளபெடை:எ.கா:எடுப்பதூஉம்,
சொல்லிசை அளபெடை: தழீஇ.
கெடாஅ, எடுப்பதூஉம், தழீஇ, – மூன்றும் உயிர் அளபெடைகளின் வகைகள்.
அரங்ங்கம்-ஒற்றளபெடை.
12. பாதபீடிகை உள்ள இடம்:
(அ) வஞ்சிமாநகர்
(ஆ) மணிபல்லவத் தீவு
(இ) ஆபுத்திரன் நாடு
(ஈ) சேரநாடு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) மணிபல்லவத் தீவு
மணிமேகலை-ஆபுத்திரன் நாடு அடைந்த காதை. “ஆபுத் திரனா டடைந்தற் பின்னாள் மாசில் மணிபல் லவம் தொழு தேத்தி” – சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் கூற்று: “நான் ஆபுத்திரன் நாட்டையடைந்து, பின்னர் அங்கிருந்து குற்றமற்ற மணிபல்லவத் தீவுக்குச் சென்று பாதபீடிகையை வணங்குவேன்”.
13. அறவண அடிகள் “அறிவுண்டாகுக” என யாரை எல்லாம் வாழ்த்தினார்?
(அ) அரசமாதேவி, தோழியர் கூட்டம்
(ஆ) சித்திராபதி
(இ) மணிமேகலை
(ஈ) அனைவரையும்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) அனைவரையும்
மணிமேகலை-ஆபத்திரன் நாடு அடைந்த காதை
தேவியும் ஆயமும் சித்திரா பதியும்
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்
எழுத்தெதிர் சென்றாங்கு இணைவளைக் கையால்
தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க
அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும்
பொருள்: அறவண அடிகளைக் கண்ட அளவில் அரசமாதேவியும் தோழியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும் எழுந்து, அவர் எதிரே சென்றனர். வணங்கும் தகுதியுடைய அறவணரின் இருபாதத்தைத் தம் இரு கைகளாலும் தொட்டு வணங்கினர்; அடிகள் “அறிவுண்டாகுக” என அவர்களை வாழ்த்தினார்.
14. “புல்லாகிப் பூடாய்” இடம்பெற்றுள்ள நூல்
(அ) திருவாசகம்
(ஆ) திருமந்திரம்
(இ) தேவாரம்
(ஈ) பதிற்றுப்பத்து
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) திருவாசகம்
திருவாசகம்: புல்லாகிப் பூடாய்ப் புழவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று விடு உற்றேன் – மாணிக்கவாசகர். மேற்கண்ட பாடலடிகள் ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள பரிணாம வளர்ச்சியைக் கூறுகின்றன.
15. திருக்குறளில் அறத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்
(அ) 70
(ஆ) 25
(இ) 38
(ஈ) 30
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 38
அறத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்-38. பொருட்பாலுக்குரிய அதிகாரங்கள்-70. இன்பத்துப்பாலுக்குரிய அதிகாரங்கள்-25
16. முழுவதும் விருத்தப்பாக்களால் ஆன காப்பியம்.
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) மணிமேகலை
(இ) கம்பராமாயணம்
(ஈ) குண்டலகேசி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கம்பராமாயணம்
முழுதும் விருத்தப்பாக்களால் ஆன காப்பியம் கம்பராமாயணம் ஆகும். “விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்ற தொடர் இதனை விளக்குகிறது.
17. எத்திராசுலு (எ) அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்.
(அ) நா.காமராசன்
(ஆ) தாராபாரதி
(இ) அப்துல் ரகுமான்
(ஈ) வாணிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) வாணிதாசன்
கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் எத்திராசலு (எ) அரகங்சாமி என்பதாகும். புதுவையில் பிறந்தார். இவருடைய காலம் 22.07.1915 முதல் 07.08.1974 வரையாகும். 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். இவருடைய சிறப்புப் பெயர்கள் கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” என்பவையாகும்.
18. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் சிறப்பு குறித்து பாடப்பட்ட நூல் எது?
(அ) மும்மணிக்கோவை
(ஆ) முத்தொள்ளாயிரம்
(இ) மூவர் உலா
(ஈ) கலிங்கத்துப்பரணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம்
இந்நூல் மூவேந்தர்களைப் (சேர,சோழ, பாண்டியர்) பற்றிய 900 பாடல்களைக் கொண்டது. ஆயினும் இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. “புறத்திரட்டு” என்னும் நூல் மூலமாக 108 பாடல்களும், பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக 22 பாடல்களும் கிடைத்துள்ளன. இந்நூல் மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை விளக்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
19. மார்போலையில் எழுதும் எழுத்தாணி
(அ) ஈட்டி
(ஆ) தூரிகை
(இ) தந்தம்
(ஈ) ஊசி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தந்தம்
முத்தொள்ளாயிரம்-பாண்டிய மன்னன் பற்றிய பாடல்
மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் – திருத்தக்க
வையக மெல்லா மெமன் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு.
பொருள்: நெருங்கி அமைந்த இலை போன்ற வடிவிலான வேலை உடையவன் பாண்டிய மன்னன். அம்மன்னனின் யானை, தன் தந்தங்களை எழுத்தாணியாகவும் வீரம் செறிந்த வேற்படையையுடைய பகை மன்னரின் அகன்ற மார்புகளை ஓலைகளாகவும் கொண்டு, “செல்வம் நிலைத்த உலகமெல்லாம் எம் பாண்டியருக்கே உரியது” என எழுதும்.
20. “வனப்பு” என்னும் சொல்லின் பொருள்
(அ) அழகு
(ஆ) அறிவு
(இ) வளமை
(ஈ) ஆளுமை
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) அழகு