General Tamil Model Question Paper 20
81. ஜி.யூ.போப் அவர்களுக்கு தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?
(அ) அகநானூறு
(ஆ) புறநானூறு
(இ) ஐங்குநுறூறு
(ஈ) பரிபாடல்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) புறநானூறு
82. ‘சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே” இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
(அ) நற்றிணை
(ஆ) குறுந்தொகை
(இ) புறநானூறு
(ஈ) அகநானூறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) புறநானூறு
புறநானூறு
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே – கண்ணகனார். பொருள்: பொன்னும் பவளமும் முத்தும் நிலைத்த பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும் தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில் இருப்பினும், மாலையாகக் கோர்த்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும் போது தம்முள் ஒருங்கு சேரும். அதுபோல, சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர். சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேருவர்
83. பொருத்துக:
(அ) அரி – 1. பனையோலைப் பெட்டி
(ஆ) செறு – 2. புதுவருவாய்
(இ) யாணர் – 3. வயல்
(ஈ) வட்டி – 4. நெற்கதிர்
அ ஆ இ ஈ
அ. 4 3 2 1
ஆ. 1 2 4 3
இ. 3 4 1 2
ஈ. 4 2 3 1
விடை மற்றும் விளக்கம்
விடை: அ. 4 3 2 1
84. கம்பராமாயணம் ———– நூல்.
(அ) முதல்நூல்
(ஆ) நாடக நூல்
(இ) வழிநூல்
(ஈ) மொழிபெயர்ப்பு நூல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வழிநூல்
கம்பராமாயணம் வழி நூலாகும். வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் முதல் நூலாகும். அந்நூலைத் தழுவி கம்பரால் எழுதப்பட்ட ராமாயணம் வழி நூலாகும்.
85. “குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று” இடம் பெற்றுள்ள நூல் எது?
(அ) நாலடியார்
(ஆ) ஏலாதி
(இ) திரிகடுகம்
(ஈ) முதுமொழிக்காஞ்சி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக்காஞ்சி – சிறந்த பத்து
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல் மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை இளமையில் சிறந்தன்று மெய்பிணி யின்மை நலனுடை மையின் நானுச் சிறந்தன்று குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று – மதுரைக் கூடலூர்க்கிழார்.
86. “கல்லார் அறிவிலாதார்” என்று கூறும் நூல்
(அ) நாலடியார்
(ஆ) திருக்குறள்
(இ) இன்னா நாற்பது
(ஈ) ஏலாதி
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) திருக்குறள்
87. ———— என்ப உளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்.
(அ) அருவினை
(ஆ) நல்வினை
(இ) தீவினை
(ஈ) தன்வினை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) அருவினை
அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் – திருக்குறள் 483; அதிகாரம் – காலமறிதல்
88. ஏலாதி —- வெண்பாக்களைக் கொண்டுள்ளது
(அ) எழுபத்தொரு
(ஆ) எண்பத்தொரு
(இ) ஐம்பத்தொரு
(ஈ) முப்பத்தொரு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) எண்பத்தொரு
ஏலாதியில் தற்சிறப்புப் பாயிரம் மற்றும் கடவுள் வாழ்த்து ஆகியவற்றைத் தவிர்த்து 80 பாடல்கள் உள்ளன.
89. “கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை” இடம் பெற்றுள்ள நூல்
(அ) திரிகடுகம்
(ஆ) நாலடியார்
(இ) நான்மணிக்கடிகை
(ஈ) சிறுபஞ்சமூலம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம்: கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக் கேட்டார் நன்றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான்நன் றென்றல் வனப்பு – காரியாசான். பொருள்: கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளல்; காலுக்கு அழகு பிறரிடம் இரந்து செல்லாமை; ஆராய்ச்சிக்கு அழகு தமது முடிவை துணிந்துரைத்தல், இசைக்கு அழகு அதனைக் கேட்போர் நன்றெனப் புகழ்தல்; அரசனுக்கு அழகு குடிமக்களை வருத்தாமல் காப்பவன் என்று பிறர் அவனைப் புகழ்ந்துரைத்தல்
90. குருதிக் கொடை தருபவர்களுக்கு, அக்குருதி மீண்டும் ———- நாட்களுக்குள் உடலில் சுரந்து விடும்
(அ) 30 நாட்கள்
(ஆ) 25 நாட்கள்
(இ) 3 மாதங்கள்
(ஈ) 21 நாட்கள்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) 21 நாட்கள்