General Tamil Model Question Paper 20
51. “அடவிமலை யாறெல்லாம் கடந்து போகித் திண்ணமுறு நடந்தோளும் உளமுங் கொண்டு” – அடிக்கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்.
(அ) உவமைத்தொகை, உரிச்சொற்றொடர்
(ஆ) உம்மைத்தொகை, உருவகம்
(இ) அடுக்குத்தொடர், வினைத்தொகை
(ஈ) உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்
“உம்” என்ற விகுதி மறைந்து வருவது உம்மைத் தொகையாகும். அடவியும், மலையும், ஆறும் என்ற சொற்களிலுள்ள “உம்” விகுதி மறைந்து வந்துள்ளது. எனவே அச்சொற்றொடர் உம்மைத் தொகையாகும். தடந்தோள்-உரிச்சொல்.
52. இளமைப் பெயர்களைப் பொருத்துக:
அ. மான் – 1. குருளை
ஆ. கீரி – 2. குஞ்சு
இ. கோழி – 3. கன்று
ஈ. சிங்கம் – 4. பிள்ளை
அ ஆ இ ஈ
அ. 1 4 2 3
ஆ. 3 4 1 2
இ. 3 4 2 1
ஈ. 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: இ. 3 4 2 1
53. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
(அ) கண்ணன் காலையில் நாஷ்டா சாப்பிட்டான்
(ஆ) அலுவலகத்தில் அனுமதி பெற்று உள்ளே வர வேண்டும்
(இ) கோயிலில் தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது
(ஈ) பெரியவர்களிடம் மணமக்கள் ஆசிர்வாதம் பெற்றனர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கோயிலில் தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது
பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்
நாஷ்டா காலைச்சிற்றுண்டி
அனுமதி இசைவு
ஆசீர்வாதம் வாழ்த்து
54. சரியான இலக்கணக்குறிப்பைப் பொருத்துக
அ. மடக்கொடி – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ. தேரா மன்னா – 2. பண்புத்தொகை
இ. செங்கோலன் – 3. வினைத்தொகை
ஈ. செய்கொல்லன் – 4. அன்மொழித்தொகை
அ ஆ இ ஈ
அ. 4 2 1 3
ஆ. 2 3 1 4
இ. 3 1 2 4
ஈ. 4 1 2 3
விடை மற்றும் விளக்கம்
விடை: ஈ. 4 1 2 3
55. பொருத்துக:
பட்டியல் – I பட்டியல் II
அ. தெலுங்கு – 1. வடமொழி
ஆ. தமிழ் – 2. வடதிராவிட மொழி
இ. மால்தோ – 3. தென்திராவிட மொழி
ஈ. சமஸ்கிருதம் – 4. நடுதிராவிட மொழி
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
ஆ. 3 2 4 1
இ. 1 2 4 3
ஈ. 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
ஈ. 4 3 2 1
தென்திராவிட மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா. நடுத்திராவிட மொழிகள்: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கு, பெங்கோ, முண்டா. வடதிராவிட மொழிகள்: குரூக், மால்தோ, பிராகுய். வடமொழி: சமஸ்கிருதம்
56. கீழ்க்கொடுக்கப்பட்டவற்றுள் இயல்புப் புணர்ச்சி சொல்லைத் தேர்க:
(அ) வாழைப்பழம்
(ஆ) பொற்குடம்
(இ) பாசிலை
(ஈ) பொன்வளையல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பொன்வளையல்
பொன்+வளையல்-பொன்வளையல். இயல்பாகப் புணர்ந்தது. வாழை+பழம்-வாழைப்பழம். “ப்” தோன்றியதால் இது “தோன்றல்” வகைப் புணர்ச்சியாகும். பொன்+குடம்-பொற்குடம். “ன்”, “ற்” ஆகத் திரிந்ததால் இது “திரிதல்” வகைப் புணர்ச்சியாகும். பசுமை+இலை-பாசிலை. இது பண்புப்பெயர் புணர்ச்சியாகும். ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு பசு+இலை என்றானது. பின்னர், ஆதி நீடல் விதிப்படி பாசு+ இலை என்றானது. “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி பாச்+இலை என்றானது. பின்னர் “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி, “பாசிலை” என்றானது.
57. “ஆடுவாயா” என்ற வினாவிற்குப் “பாடுவேன்” என்று விடையளித்தல்
(அ) நேர்விடை
(ஆ) இனமொழி விடை
(இ) உற்றது உரைத்தல் விடை
(ஈ) உறுவது கூறல் விடை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) இனமொழி விடை
ஒரு வினாவிற்கு “இல்லை” என்ற பதிலைக் கூறாமல், அதற்கு இனமான வேறொரு பதிலைக் கூறுவது இனமொழி விடையாகும்.
58. “கார் அறுத்தான்” – எவ்வகை ஆகுபெயரைச் சார்ந்தது?
(அ) சினையாகுபெயர்
(ஆ) தொழிலாகுபெயர்
(இ) பண்பாகுபெயர்
(ஈ) காலவாகுபெயர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) காலவாகுபெயர்
கார்காலம் என்பதைக் குறிக்காமல் கார்கால பயிரைக் குறித்ததால் இது காலவாகு பெயராகும்.
59. பொருளறிந்து பொருத்துக:
அ. அரசன் வந்தது – 1. பால் வழு
ஆ. கபிலன் பேசினாள் – 2. எண் வழு
இ. குயில்கள் கூவியது – 3. இட வழு
ஈ. கமலா சிரித்தாய் – 4. திணை வழு
அ ஆ இ ஈ
அ. 4 1 3 2
ஆ. 4 1 2 3
இ. 1 4 3 2
ஈ. 3 2 1 4
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
ஆ. 4 1 2 3
அரசன் வந்தான்-உயர்திணை. “வந்தது” எனக் குறித்ததால் இது திணை வழுவாகும். கபிலன் பேசினான்- ஆண்கால். ‘பேசினாள்’ எனப் பெண்பாலைக் குறித்தால் இது பால் வழுவாகும்.
குயில்கள் கூவின-பன்மை. “கூவியது” என ஒருமையில் குறித்ததால் இது எண் வழுவாயிற்று. கமலா சிரித்தாள்-படர்க்கை. “சிரித்தாய்” என முன்னிலையில் குறித்ததால் இஃது இடவழுவாயிற்று.
60. கீழ்வரும் சொற்றொடர்களில் உரிச்சொற்றொடரை எழுதுக
(அ) விரிகடல்
(ஆ) கடிமுரசு
(இ) முகத்தாமரை
(ஈ) கரகமலம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) கடிமுரசு
சால, உறு தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட முதலியவை உரிச்சொற்களாகும். கடிமுரசு-உரிச்சொல். விரிகடல்-வினைத்தொகை. முகத்தாமரை, கரகமலம்-உருவகங்கள்.