General Tamil Model Question Paper 20
21. சரியான பொருள் தருக.
“ஆயம்”
(அ) செவிலியர் கூட்டம்
(ஆ) பாணன் கூட்டம்
(இ) தோழியர் கூட்டம்
(ஈ) அனைத்தும் சரி
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) தோழியர் கூட்டம்
22. தெய்வக் கவிஞர் என்றால் ———- என்று பொருள்படும்
(அ) திவ்வியகவி
(ஆ) அழகியமணவாளதாசர்
(இ) பிள்ளைப்பெருமாள் ஐங்கார்
(ஈ) குமரகுரபரர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) திவ்வியகவி
23. மூன்றாம் நந்திவர்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?
(அ) உலா
(ஆ) அந்தாதி
(இ) கலம்பகம்
(ஈ) பரணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கலம்பகம்
நந்திக்கலம்பகம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் ஆவான்.
24. பொருந்தாத இணையைக் கண்டறிக:
(அ) மேதி-எருமை
(ஆ) கேசரி-சிங்கம்
(இ) எண்கு-புலி
(ஈ) மரை-மான்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) எண்கு-புலி
எண்கு-கரடி
25. பொருந்தாத தொடரைக் கண்டறிக:
(அ) இழிந்த பிறப்பாய் விடும்
(ஆ) பிறப்பொழுக்கங் குன்றக்கெடும்
(இ) ஏதம் படுபாக் கறிந்து
(ஈ) செல்வத்துப் பயனே ஈதல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) செல்வத்துப் பயனே ஈதல்
ஏனைய மூன்றும் திருக்குறள் தொடர்களாகும். “செல்வத்துப் பயனே ஈதல்” என்பது புறநானூற்றுப் பாடலடிகளாகும்.
புறநானூறு
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஓக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே.
– மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனர்
ஒழுக்கமுடைமை.
1. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். – திருக்குறள் 133
2.மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். – திருக்குறள் 134
3.ஒழுக்கத்தின் ஓல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. – திருக்குறள் 136
26. “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க்கபிலன்”
– எனக் கபிலரைப் புகழந்தவர் யார்?
(அ) நக்கீரர்
(ஆ) இளங்கீரனார்
(இ) பெருங்குன்றூர்க்கிழார்
(ஈ) நப்பசலையார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) இளங்கீரனார்
புகழுரை புகழ்ந்தவர்
வாய்மொழிக் கபிலன் நக்கீரர்
நல்லிசைக் கபிலன் பெருங்குன்றூர்க்கிழார்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் பொருந்தில் இளங்கீரனார்
புலனழுக்கற்ற அந்தணாளன், பொய்யா
நாவிற் கபிலன் மாறோகத்து நப்பசலையார்
27. “வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே” – பாடியவர் யார்?
(அ) கபிலர்
(ஆ) பேயனார்
(இ) ஓரம்போகியார்
(ஈ) ஓதலாந்தையார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) ஓதலாந்தையார்
ஐங்குறுநூறு
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபினன் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பெற்றினை வல்சி
பொலம்புனை கலத்திற் றருகுவேன் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக் கரைந் தீமே
– ஓதலாந்தையார்.
பொருள்: தன் மகள் உடன்போக்காய் தலைவனோடு சென்று விட்டதை அறிந்த நற்றாய், தன் மகள் திரும்பி வந்து விட்டால், பொன்னால் செய்யப்பட்ட பாத்திரத்திலே பச்சை ஊன் இடப்பட்டு சமைக்கப்பட்ட நல்ல உணவினைப் பலியாய்க் கொடுப்பதாக காத்திடம் உரைக்கிறாள்.
28. ———- மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவார்.
(அ) சேர
(ஆ) சோழ
(இ) பாண்டிய
(ஈ) பல்லவ
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) சேர
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னன், இன்பப் பொருளமைந்த அகப்பொருள் பாடல்கள் திணைக்கு நூறாய் ஐந்நூறு பாடல்களைக்கொண்ட நூல் ஒன்றை உருவாக்கித் தமிழ் உலகிற்கு அளிக்க விரும்பினான். தன் விருப்பத்தைக் கூடலூர்க் கிழார் என்னும் புலவரிடம் கூறினான். அவர் அவ்வவத் திணை பாடுதலில் வல்ல புலவர்களைக் கொண்டு நூறு நூறு பாடல்களைப் பாடச் செய்து “ஐங்குறுநூறு” என்ற நூலைத் தொகுத்தளித்தார்.
29. அகநானூறில் 6, 16 என்ற எண்களாக வரும் திணை
(அ) பாலை
(ஆ) குறிஞ்சி
(இ) நெய்தல்
(ஈ) மருதம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) மருதம்
அகநானூறு பாடல்களில் எண் வைப்பு முறை
1,3,5,7, 9 …. பாடல்கள் – பாலைத் திணை.
2,8,12,18…. பாடல்கள்-குறிஞ்சித்திணை.
4,14,24,34 ….பாடல்கள்-முல்லைத்திணை.
6,16,26,36 ….. பாடல்கள்-மருதத்திணை.
10,20,30,40 ….. பாடல்கள்-நெய்தல் திணை
30. நல்லந்துவனார் நெய்தல் கலியில் பாடிய பாடல்கள்
(அ) பதிமூன்று
(ஆ) முப்பத்து மூன்று
(இ) பதினொன்று
(ஈ) நூறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) முப்பத்து மூன்று
கலித்தொகை
திணை பாடியவர் பாடல்கள்
குறிஞ்சி கபிலர் 29
முல்லை சோழன் நல்லுருத்திரன் 17
மருதம் மருதன் இளநாகனார் 35
நெய்தல் நல்லந்துவனார் 33
பாலை பெருங்கடுங்கோ 35