General Tamil Model Question Paper 20
11. கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது?
அ. சிங்கம்-முழங்கும் (ஆ) பூனை-கீச்சிடும் (இ) புறா-குனுகும் (ஈ) வண்டு-முரலும்
(அ) அ மற்றும் ஆ சரி
(ஆ) இ மற்றும் ஈ சரி
(இ) அ, இ மற்றும் ஈ சரி
(ஈ) ஆ, இ மற்றும் ஈ சரி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) அ, இ மற்றும் ஈ சரி
ஒலி மரபு:
சிங்கம்-முழங்கும்.
பூனை-சீறும்.
புறா-குனுகும்.
வண்டு-முரலும்.
12. கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை
(அ) சிந்துவிருத்தம்
(ஆ) கட்டளை கலித்துறை
(இ) ஆசிரிய விருத்தம்
(ஈ) கலித்தாழிசை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) கலித்தாழிசை
கலிங்கத்துப்பரணி கலித்தாழிசையில் பாடப்பட்டுள்ளது. இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.
13. கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்
(அ) காக்கைப்பாடினியார்
(ஆ) காரைக்காலம்மையார்
(இ) வெள்ளி வீதியார்
(ஈ) நப்பசலையார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வெள்ளி வீதியார்
வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண் புலவர்களுள் ஒருவர். அவர் தன் கணவனைத் தேடியலைந்த செய்தியை அவரின் சமகாலப் புலவரான ஒளவையார் “ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த” எனத் தொடங்கும் அகநாநூற்றுப் பாடலில் விளக்கியுள்ளார்.
14. உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஓக் கும்மே
– இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
(அ) புறநானூறு
(ஆ) அகநானூறு
(இ) ஐங்குநுறூறு
(ஈ) பரிபாடல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) புறநானூறு
புறநானூறு
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஓக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே.
– மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனர்
15.”—- சிறு புல் நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலைப் பாடியவர்.
(அ) கபிலர்
(ஆ) கம்பர்
(இ) ஒளவையார்
(ஈ) பரணர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) கபிலர்
திருக்குறளின் சிறப்பினை உணர்த்த இயற்றப்பட்டது “திருவள்ளுவமாலை” என்ற நூலாகும். இந்நூலில் அமைந்துள்ள 55 பாடல்களை 53 புலவர்கள் இயற்றியுள்ளனர். இந்நூலில் உள்ள 3-ஆவது பாடல் கபிலர் இயற்றியதாகும்.
“திணையளவு போதாச் சிறபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.
– கபிலர்.
16. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
(அ) 100
(ஆ) 105
(இ) 107
(ஈ) 110
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 107
திருக்குறள் 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவற்றுள் இந்திய மொழிகள் 14
17. “வருகைப் பருவம்” – என்பது
(அ) குழந்தையின் பத்தாம் திங்களில் நிகழ்வது
(ஆ) குழந்தையின் பன்னிரண்டாம் திங்களில் நிகழ்வது
(இ) குழந்தையின் இருபதாம் திங்களில் நிகழ்வது
(ஈ) குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது
பிள்ளைத் தமிழ் பருவங்கள்:
3-ஆம் திங்கள்-காப்பு.
5-ஆம் திங்கள்-செங்கீரை.
7-ஆம் திங்கள்-தாலாட்டு.
9-ஆம் திங்கள்-சப்பாணி.
11-ஆம் திங்கள்-முத்தம்.
13-ஆம் திங்கள்-வருகை.
15-ஆம் திங்கள்-அம்புலி.
17-ஆம் திங்கள்-சிற்றில் (ஆண்பால்)/கழங்க பெண்பால்).
19-ஆம் திங்கள்-சிறுபறை (ஆண்பால்)/அம்மானை(பெண்பால்).
21-ஆம் திங்கள்-சிறுதேர் (ஆண்பால்)/ஊசல் (பெண்பால்)
18. “உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே” – என்று தொடங்கும் பாடல் எந்தப் பருவத்தில் இடம் பெற்றுள்ளது?
(அ) செங்கீரைப் பருவம்
(ஆ) முத்தம் பருவம்
(இ) வருகைப் பருவம்
(ஈ) அம்புலிப் பருவம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வருகைப் பருவம்
முத்துக்குமராசாமி பிள்ளைத் தமிழ்.
“உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே
உருகும் அடியர் இதய நெகிழ உணர்வில் எழுநல் உதயமே”
எனத் தொடங்கும் பாடல் வருகைப் பருவத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர்.
19. உமறுப்புலவரின் காலம்
(அ) கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
(ஆ) கி.பி பதினேழாம் நூற்றாண்டு
(இ) கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
(ஈ) கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) கி.பி பதினேழாம் நூற்றாண்டு
சீறாப்புரணத்தை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவார். இவரது காலம் 17-ஆம் நூற்றாண்டு (கி.பி.1642 முதல் கி.பி.1703) ஆகும்.
20. “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் ——— காதையாக உள்ளன.
(அ) இருபதாவது
(ஆ) இருபத்து நான்காவது
(இ) இருபத்தேழாவது
(ஈ) இருபத்தொன்றாவது
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) இருபத்து நான்காவது