General TamilTnpsc

General Tamil Model Question Paper 2

31. பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக:

(அ) கலம்பகம்-பதினெட்டு உறுப்புகள்

(ஆ) சிற்றிலக்கியங்கள்-தொண்ணூற்றாறு

(இ) பிள்ளைத்தமிழ்-பத்துப்பருவங்கள்

(ஈ) பரணி-100 தாழிசைகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பரணி-100 தாழிசைகள்

இரண்டடித் தாழிசையால் பாடப்படுவது பரணி இலக்கியமாகும்.

32. பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை

(அ) நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்

(ஆ) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

(இ) பெண்களே சமூகத்தின் கண்கள்

(ஈ) சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

கூற்று கூறியவர்

நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன் திரு.வி.க

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே இராமலிங்க அடிகளார்

பெண்களே சமூகத்தின் கண்கள் ஈ.வெ.ரா

சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம் அம்பேத்கர்

33. பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிக:

(அ) மார்பு

(ஆ) வரகு

(இ) மடு

(ஈ) மாசு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மாசு

மார்பு, வரகு, மாசு-குற்றியலுகரங்கள். மடு-முற்றியலுகரம்

34. சித்துகளின் எண்ணிக்கை

(அ) பன்னிரண்டு

(ஆ) பதினெட்டு

(இ) பத்து

(ஈ) எட்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) எட்டு

சித்துகளின் எண்ணிக்கை 8.

அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்

மகிமா – மலையைப் போல் பெரிய தேகத்தை அடைதல்

இலகிமா -காற்றைப்போல் இலேசாக மாறுதல்

கரிமா- மலைகளாலும் காற்றாலும் அசைக்க முடியாத அளவு கனமாக இருத்தல்

பிராப்தி – மனத்தினால் நினைத்த யாவற்றையும் அடைதல்

பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்

ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்துதல்

வசித்துவம் – அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

35. அடிவரையறை அறிந்து சரியான விடையைக் குறிப்பிடுக:

(1) 3-6 (2) 4-8 (3) 9-12 (4) 13-31

(அ) ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு

(ஆ) அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு

(இ) குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு

(ஈ) நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு

ஐங்குறுநூறு-3-6 அடி. குறுந்தொகை- 4-8 அடி. நற்றிணை- 9-12 அடி. அகநானூறு- 13-31 அடி

36. தன்வினையைத் தேர்ந்து எழுதுக:

(அ) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை

(ஆ) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்

(இ) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்

(ஈ) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்

அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை – எதிர்மறை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார் – பிறவினை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்றார் – தன்வினை வாக்கியம்

அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா? – வினா வாக்கியம்

37. பொருத்துக

பட்டியல் I – பட்டியல் II

அ. பேதையர் நட்பு – 1. உடுக்கை இழந்தகை

ஆ. பண்புடையார் தொடர்பு – 2. வளர்பிறை

இ. அறிவுடையார் நட்பு – 3. நவில் தோறும்

ஈ. இடுக்கண் களையும் நட்பு – 4. தேய்பிறை

குறியீடுகள்:

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 3 4 2 1

(இ) 4 3 1 2

(ஈ) 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 4 3 2 1

பேதையார் நட்பு தேய்பிறை போல் தேய்ந்து போகும் தன்மையுடையது. அறிவுடையார் நட்பு வளர்பிறை போல் வளரும் தன்மையுடையது. பண்புடையார் நட்பு நூலின் நற்பொருள் கற்க கற்க இன்பம் தருவதைப் போன்றது. உடை நெகிழ்ந்தவனது கை உடனே உதவி மானத்தைக் காப்பது போல நண்பனுக்கு துன்பம் வந்தால் அப்பொழுதே சென்று துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் சிறந்த நட்பு.

38. “ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய தூய

நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப”

இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பற்றியவை எவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது?

(அ) அன்பும் பண்பும்

(ஆ) அறிவும் ஆற்றலும்

(இ) அறனும் மறனும்

(ஈ) கற்பும் அருளும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கற்பும் அருளும்

39. “வளன்” என்ற சொல்லால் குறிக்கப்படுபவன் யார்?

(அ) தாவீது

(ஆ) கோலியாத்து

(இ) சூசையப்பர்

(ஈ) சவுல் மன்னன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சூசையப்பர்

தேம்பாவணியில் “வளன்” என்று குறிப்பிடப்படுபவர் சூசையப்பர் ஆவார். இந்நூலை இயற்றியவர் வீரமாமுனிவர். இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது இந்நூல், யோசோப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் “வளன்” என்று தமிழ்ப்படுத்தியுள்ளார்.

40. கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்:

(அ) ஆழி, அம்பி, ஆர்கலி

(ஆ) பௌவம், முந்நீர், பரிசல்

(இ) ஆழி, ஆர்கலி, பௌவம்

(ஈ) வாரணம், பரவை, புணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஆழி, ஆர்கலி, பௌவம்

கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை. புணரி, அம்பி, பரிசல், புணை-படகு.

Previous page 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin