General Tamil Model Question Paper 17
71. “ஆற்றுணா வேண்டுவ(து) இல்” – இப்பழமொழியில் உள்ள “ஆற்றுணா” என்பதன் பொருள்:
(அ) அரையன்
(ஆ) வழிநடை உணவு
(இ) அரண்மனை
(ஈ) திருவிழா
விடை மற்றும் விளக்கம்
(ஆ) வழிநடை உணவு
விளக்கம்: பழமொழி நானூறு: ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு வேற்றுநாடு ஆகா; தமவேயாம், ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல். – முன்றுறை அரையனார்.
பொருள்: கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. எனவே, அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. ஆறு-வழி; உணா-உணவு; ஆற்றுணா-வழிநடை உணவு
72. சங்க கால இலக்கியங்கள்:
(அ) எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்
(ஆ) நன்னூலும், நம்பியகப்பொருளும்
(இ) கம்பராமாயணமும், பெரியபுராணமும்
(ஈ) வளையாபதியும், குண்டலகேசியும்
விடை மற்றும் விளக்கம்
(அ) எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்
விளக்கம்:
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு சங்க இலக்கியங்கள்
நன்னூல், நம்பியகப் பொருள் இலக்கண நூல்கள்
கம்பராமாயணம், பெரியபுராணம் காப்பியங்கள்
வளையாபதி, குண்டலகேசி ஐம்பெருங்காப்பியம்
73. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமில்லாததைக் கூறுக
அ. பெருமுத்தரையர் பற்றிய குறிப்பு நாலடியாரில் உள்ளது. பழமொழியிலும் இடம்பெற்றுள்ளது.
ஆ. கபிலர் பாடிய அறநூல் “இன்னா நாற்பது”
இ. நான்மணிக்கடிகையில் உள்ள நூறு பாடல்களும் நான்கு நான்கு கருத்துகளைக் கொண்டு இயங்குவது.
ஈ. அம்மை என்னும் வனப்பின்பாற்படும் காரியாசான் இயற்றிய நூல் சிறுபஞ்சமூலம் என்பதாகும்.
(அ) ஆ மட்டும் பொருத்தமற்றது
(ஆ) இ மட்டும் பொருத்தமற்றது
(இ) ஈ மட்டும் பொருத்தமற்றது
(ஈ) அ மட்டும் பொருத்தமற்றது
விடை மற்றும் விளக்கம்
(ஈ) அ மட்டும் பொருத்தமற்றது
74. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் கலிங்கத்துப்பரணியே” – இப்படிக் கூறியவர்
(அ) திரு.வி.கல்யாண சுந்தரம்
(ஆ) பெரியார்
(இ) அண்ணாதுரை
(ஈ) மு.வரதராசன்
விடை மற்றும் விளக்கம்
(இ) அண்ணாதுரை
விளக்கம்: “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே”
75. குரவைக் கூத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவி
(அ) தொண்டகப்பறை
(ஆ) செங்கோட்டுயாழ்
(இ) புல்லாங்குழல்
(ஈ) உடுக்கை
விடை மற்றும் விளக்கம்
(அ) தொண்டகப்பறை
76. “கண்ணுள் வினைஞர்” என மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப்பெறுபவர்கள்
(அ) ஓவியக் கலைஞர்கள்
(ஆ) சிற்பக் கலைஞர்கள்
(இ) கட்டடக் கலைஞர்கள்
(ஈ) இசைக் கலைஞர்கள்
விடை மற்றும் விளக்கம்
(அ) ஓவியக் கலைஞர்கள்
77. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களுள் மிகவும் பழைமையான கோயில் உள்ள ஊர்
(அ) சுவாமிமலை
(ஆ) பிள்ளையார்பட்டி
(இ) திருப்பரங்குன்றம்
(ஈ) பழனி
விடை மற்றும் விளக்கம்
(ஆ) பிள்ளையார்பட்டி
78. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
(அ) ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
(ஆ) எலிக்குப் பகை பூனை, நண்டுக்குப் பகை நரியும் கொக்கும், தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்.
(இ) கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
(ஈ) சேற்று நண்டு சேற்றைக் குழைத்து ஏற்றடைக்குதே
விடை மற்றும் விளக்கம்
(ஆ) எலிக்குப் பகை பூனை, நண்டுக்குப் பகை நரியும் கொக்கும், தவளைக்குப் பகை பாம்பும் பருந்தும்.
விளக்கம்: முக்கூடற்பள்ளு: ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே
79. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் சேராத ஒருவர்
(அ) தருமர்
(ஆ) ஜி.யூ.போப்
(இ) மல்லர்
(ஈ) பரிமேலழகர்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) ஜி.யூ.போப்
விளக்கம்: திருக்குறளுக்கு உரை செய்த பத்து உரையாசிரியர்கள்: தருமர், மணக்குடவர், தாமதத்தர், நக்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்.
80. கபிலரைப் பிற கவிஞர்கள் புகழ்ந்ததைச் சரியாகப் பொருத்துக
அ. நக்கீரர் – 1. “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்”
ஆ. பெருங்குன்றூர் கிழார் – 2. “வாய்மொழிக் கபிலன்”
இ. இளங்கீரனார் – 3. “பொய்யா நாவிற் கபிலன்”
ஈ. மாறோக்கத்து நப்பசலையார் – 4. “நல்லிசைக்கபிலன்”
அ ஆ இ ஈ
(அ) 2 1 4 3
(ஆ) 2 4 1 3
(இ) 3 1 4 2
(ஈ) 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
(ஆ) 2 4 1 3