General Tamil Model Question Paper 17
41. “பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) வெ.இராமலிங்கனார்
(ஈ) சுரதா
விடை மற்றும் விளக்கம்
(இ) வெ.இராமலிங்கனார்
விளக்கம்:
பெண்மை
அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்தும் இன்ப சொரரூபமாய்த்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும்;
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்;
உடன்பிறப்பாகி உறுதுணை புரியும்;
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்;
அயலார் தமக்கும் அன்பே செய்யும்;
நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்;
– வெ. இராமலிங்கனார்.
பொருள்:
பெண்மையின் பன்முகங்கள்: 1. அன்பு, ஆர்வம், அடக்கம் முதலியன பெண்மையின் பண்புகளாகும். 2.உண்மைத் தன்மையும் உள்ள உறுதியும், தன்னலமில்லாது குடும்பநலம் பேணுதல் யார் எது செய்யினும் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் தாயின் இனிய பண்புகளாகும். 3. கணவன் மனம் தளரும் போதெல்லாம் அவனது கவலைக்கு மருந்தாக இருப்பவள் மனைவி. 4. தமக்கையோ. தங்கையோ உடன்பிறந்தானுக்கு உறுதுணையாகத் திகழ்கிறாள். 5. மகளாகப் பிறந்து தந்தைக்குப் பணிவிடை செய்து மகிழ்பவளும் பெண்ணே. 6. அயலாரிடத்து அன்பு காட்டியும், தனக்கே உரிய நாணம் கெடாது நட்பு கொள்வதும் பெண்மையின் சிறந்த பண்புகளாகும்.
42. “பாவலரேறு” பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
(அ) அப்துல் ரகுமான்
(ஆ) வாணிதாசன்
(இ) முடியரசன்
(ஈ) துரை, மாணிக்கம்
விடை மற்றும் விளக்கம்
(ஈ) துரை, மாணிக்கம்
விளக்கம்:
இயற்பெயர் புனைப்பெயர்
எத்திராசலு வாணிதாசன்
துரைராசு முடியரசன்
துரை.மாணிக்கம் பெருஞ்சித்திரனார்
43. மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்;
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்
– என்று பாராட்டப்படுபவர்
(அ) உமறுப்புலவர்
(ஆ) அப்துல் ரகுமான்
(இ) ந.பிச்சமூர்த்தி
(ஈ) ஞானக் கூத்தன்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) அப்துல் ரகுமான்
44. தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?
(அ) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
(ஆ) நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு
(இ) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை
(ஈ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை
விடை மற்றும் விளக்கம்
(அ) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
விளக்கம்:
தாயுமானவர்.
இவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (வேதாரண்யம்). இவரது காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டாகும். இவர், விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடமும் அவரது மறைவுக்குப் பின் அவரின் மனைவு இராணி மீனாட்சி ஆட்சியிலும் கண்கராகப் பணியாற்றினார்.
இவர் திருமூலர் மரபில் வந்த மௌனகுரு ஆவார். இவர், இராமநாதபுரத்தின் அருகிலுள்ள இலட்சுமிபுரத்தில் முக்தி (இயற்கை எய்தினார்) பெற்றார்.அவ்விடத்தில் இவருக்கு நினைவு இல்லம் உள்ளது
45. “ஞான சாகரம்” – இதழினை ”அறிவுக்கடல்” என மாற்றியவர்
(அ) பாதிரிமாற்கலைஞர்
(ஆ) மறைமலையடிகள்
(இ) இரா.பி.சேதுப்பிள்ளை
(ஈ) திரு.விக.
விடை மற்றும் விளக்கம்
(ஆ) மறைமலையடிகள்
விளக்கம்:
மறைமலையடிகள்.
சிறந்த சைவ சமய சொற்பொழிவாளராகிய இவர், வடமொழி கலப்பற்ற தூய தனித்தமிழ் இயக்கத்தினைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர் ஆவார். சங்க இலக்கியங்களை முதன்முதலில் மக்களிடையே பரப்பிய பெருமைக்குரியவர்.
“வேதாச்சலம்” என்ற தனது பெயரை மறைமலையடிகள் எனத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டார். வேதம் 🡪 மறை; சலம் 🡪 மலை. “ஞானசாகரம் என்ற இதழினை “அறிவுக்கடல்” என மாற்றினார். ஞானம் 🡪 அறிவு; சாகரம் 🡪 கடல்.
46. “நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழு(து)) எழுக ஓர்ந்து” – இவ்வாறு திருக்குறனின் பெருமையைப் பாடியவர் யார்?
(அ) கபிலர்
(ஆ) ஒளவையார்
(இ) கவிமணி
(ஈ) பரணர்
விடை மற்றும் விளக்கம்
(இ) கவிமணி
47. தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் – இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?
(அ) பாரதியார், பெரியாரைப் பற்றிப் பாடியது
(ஆ) பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
(இ) கவிமணி, இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
(ஈ) நாமக்கல் கவிஞர், இரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பாடியது
விடை மற்றும் விளக்கம்
(ஆ) பாரதிதாசன், பெரியாரைப் பற்றிப் பாடியது
விளக்கம்: ஈ.வெ.ரா பெரியாரைப் பற்றி பாரதிதாசன் எழுதிய கவிதை தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும்
48. “காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” என்று பாடியவர்.
(அ) திருமூலர்
(ஆ) கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
(இ) பாரதியார்
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
(ஆ) கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
49. “நாளை என் தாய்மொழி சாகுமானால் – இன்றே நான் இறந்து விடுவேன் – என்று கூறியவர்
(அ) காந்தியக் கவிஞர் இராமலிங்கர்
(ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
(இ) ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
(ஈ) ருசிய அறிஞர் தால்கதாய்
விடை மற்றும் விளக்கம்
(இ) ருசியக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
50. “தாயுமேது தந்தையேது தனையர் சுற்றத் தாருமேது ஆயும்போது யாவும் பொம்ம லாட்டமே பூலோகசூது” – என்று பாடியவர்
(அ) மீரா
(ஆ) சாலை.இளந்திரையன்
(இ) பாஸ்கரதாஸ்
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
(இ) பாஸ்கரதாஸ்
விளக்கம்: மேற்கண்ட பாடலடிகள் மதுரகவி பாஸ்கரதாஸ் கீர்த்தனைகளின் இரண்டாம் பாகத்தில் “வஞ்சகமாய் நெஞ்சோடு மொழிதல்” என்ற தலைப்பில் அமைந்துள்ளன.
பொருள்: இப்பிறவியில் உன் தாய், தந்தை, உடன்பிறந்தோர் மற்றும் உறவினராக இருப்போர் அனைத்துப் பிறவியிலும் அவ்வாறே இருப்பரோ? இதனை எண்ணிப் பார்த்தால் உறவுகளெல்லம் பொம்மலாட்டம் பேல மாறிமாறி வரும் உறவுகளாகவே உள்ளன.