General Tamil Model Question Paper 15
81. கீழுள்ள பட்டியலில் பொருந்தாத நாடகம்.
(அ) சந்திரரோதயம்
(ஆ) ஓர் இரவு
(இ) தூக்குமேடை
(ஈ) வேலைக்காரி
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) தூக்குமேடை
விளக்கம்:
சந்திரோதயம், ஓர் இரவு, வேலைக்காரி ஆகியவை அறிஞர் அண்ணா எழுதிய நாடகங்கள். தூக்குமேடை-கலைஞர் கருணாநிதி எழுதிய நாடகம்.
82. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி
(அ) ஆங்கில மொழி
(ஆ) இலத்தீன் மொழி
(இ) வட மொழி
(ஈ) பிரெஞ்சு மொழி
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) இலத்தீன் மொழி
83. “பெருங்கை யானை இனநிரை பெயரும் கருங்கை வீதி மருங்கில் போகி” – பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்.
(அ) கோட்டைவாயில்
(ஆ) அந்தப்புரம்
(இ) சுரங்கப்பாதை
(ஈ) வேனிற்பள்ளி
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) சுரங்கப்பாதை
விளக்கம்:
சிலப்பதிகாரம்
“இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழியில்
பெருங்கை யானை இனநரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகி”
– இளங்கோவடிகள்.
பிரிவு-மதுரைக் காண்டம்
உட்பிரிவு-ஊர்காண் காதை.
பாடல் எண்-65.
பொருள்: கட்டுவேலி சூழ்ந்த காவற்காட்டுடன் கூடியதாக நகரைச் சுற்றி வளைத்துக் கிடந்தது, விளங்குகின்ற நீர்ப்பரப்பினையுடைய வெற்றி பொருந்திய மதுரையின் அகழி. அதனிடையே, பெருங்கையினையுடைய யானைத்திரள் செல்வதற்காக அமைந்த நிலத்துப்பாதையின் வழியாத நடந்து, நகருட்சென்றான் கோவலன்.
சுருங்கை வீதி-சுரங்கப்பாதை
84. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
அ. “தேம்பாவணி”யில் அறம், பொருள், வீடு மட்டுமே பாடப்பட்டுள்ளன. இன்பம் பாடப்பெறவில்லை.
ஆ. தேம்பாவணியை “புறநிலைக் காப்பியம்” என்றும், தன்னை புறநிலைக் காப்பியன் என்றும் தொன்னூலில் வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார்.
இ. சீறாப்புரணாத்தில் மூன்று காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன.
ஈ. அரபுச் சொற்கள், அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரியது.
விடை மற்றும் விளக்கம்
விடை:
ஈ. அரபுச் சொற்கள், அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரியது.
85. பின்வருவனவற்றுள் ஓவியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?
(அ) தேசிகப்பாவை
(ஆ) மர வட்டிகை
(இ) புனையா ஓவியம்
(ஈ) கண்ணுள் வினைஞர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) தேசிகப்பாவை
விளக்கம்:
தேசிகப்பாவை-நாடக மகள்
86. பொருத்துக:
வள்ளல்கள் சிறப்பு
அ. பேகன் – 1. நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன்
ஆ. காரி – 2. மயிலுக்குப் போர்வை தந்தவன்
இ. ஆய் – 3. இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன்
ஈ. ஓரி – 4. இரவலர்க்குத் தேர் தந்தவன்
அ ஆ இ ஈ
(அ) 2 4 1 3
(ஆ) 1 3 4 2
(இ) 3 4 1 2
(ஈ) 2 3 1 4
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 2 4 1 3
87. பொருத்துக:
பட்டியல் – சொல் பட்டியல் – பொருள்
அ. ஆகாறு 1. செலவழியும் வழி
ஆ. போகாறு 2. திருமணம்
இ. தகர் 3. பொருள் வரும் வழி
ஈ. வதுவை 4. ஆட்டுக்கிடாய்
அ ஆ இ ஈ
(அ) 3 1 4 2
(ஆ) 4 3 2 1
(இ) 2 4 1 3
(ஈ) 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 3 1 4 2
விளக்கம்:
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
– திருக்குறள்-478.
பொருள்: ஒருவனது வருவாய் வருகின்ற வழி சிறிதாயினும், அது செலவாகிப் போகும் வழி விரிவு படாவிட்டால், அதனால் அவனுக்குக் கேடில்லை.
ஆகாறு-பொருள் வரும் வழி
போகாறு-பொருள் செலவழியும் வழி
ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்
தக்காற்கும் பேருந் தகைத்து
– திருக்குறள்-486.
பொருள்: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) போருக்குச் செல்லாமல் அடங்கியிருப்பதும், போரிடும் ஆட்டுக்கிடாய் தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்வாங்கும் தன்மையது.
தகர்-ஆட்டுக்கிடாய்.
ஐங்குநுறூறு-294-ஆவது பாடல்.
எரிமருள் வேங்கை இருந்த தோகை.
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட!.
இனிது செய்தனையால்; நுந்தை வாழியிர்!
நல் மனை வதுவை அயர, இவள்
பின் இருங் கூந்தல் மலர் அணிந்தோயே!
– கபிலர்
வதுவை-திருமணம்
88. பொருத்துக:
பதிற்றுப் பத்து பாடியவர்
அ. மூன்றாம் பத்து – 1. பெருங்குன்றூர்க் கிழார்
ஆ. ஆறாம்பத்து – 2. அரிசில்கிழார்
இ. எட்டாம் பத்து – 3. காக்கைப்பாடினியார்
ஈ. ஒன்பதாம் பத்து – 4. பாலைக் கௌதமனார்
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 2 3 1 4
(இ) 1 3 4 2
(ஈ) 2 3 4 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 4 3 2 1
விளக்கம்:
பதிற்றுப் பத்து
சேர மன்னர்கள் பற்றிய இந்நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை.
இரண்டாம் பத்து: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றி குமட்டூர்க் கண்ணனார் பாடியது.
மூன்றாம் பத்து: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றி பாலைக் கௌதமனார் பாடியது.
நான்காம் பத்து: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் பற்றிக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.
ஐந்தாம் பத்து: கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் மீது பரணர் பாடியது.
ஆறாம் பத்து: ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றி காக்கைப் பாடினியார் பாடியது.
ஏழாம் பத்து: செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றி கபிலர் பாடியது.
எட்டாம் பத்து: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பற்றி அரிசில்கிழார் பாடியது.
ஒன்பதாம் பத்து: இளஞ்சேரல் இரும்பொறையைப் பற்றி பெருங்குன்றூர்க்கிழார் பாடியது.
89. குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
(அ) மதுரைக் கலம்பகம்
(ஆ) நந்திக் கலம்பகம்
(இ) கந்தர் கலிவெண்பா
(ஈ) நீதிநெறி விளக்கம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) நந்திக் கலம்பகம்
விளக்கம்:
நந்திக்கலம்பகம், தமிழில் முதன்முதலில் தோன்றிய கலம்பக நூலாகும்.
தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.
அறம் வைத்து பாடப்பட்ட நூல் ஆதலால், ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை.
90. தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்
(அ) சுரதா
(ஆ) வாணிதாசன்
(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
(ஈ) பாரதிதாசன்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) வாணிதாசன்