General TamilTnpsc

General Tamil Model Question Paper 15

71. “சின்னச்சீறா” – என்ற நூலை எழுதியவர்

(அ) பனு அகமது மரைக்காயர்

(ஆ) உமறுப்புலவர்

(இ) அப்துல் ரகுமான்

(ஈ) சேக் மீரான்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பனு அகமது மரைக்காயர்

விளக்கம்:

சீறாப்புராணத்தின் ஆசிரியர் உமறுப்புலவர். சீறாப்புரணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை. பனு அகமது மரைக்காயர் என்பவர்தான் பெருமானாரின் தூய வாழ்வு முழுமையும் பாடி முடித்தார். அந்நூல் “சின்னச்சீறா” என்றழைக்கப்படுகிறது

72. “அழுது அடியடைந்த அன்பர்” எனக் குறிப்பிடப் பெறுபவர்

(அ) சுந்தரமூர்த்தி

(ஆ) மாணிக்கவாசகர்

(இ)திருஞானசம்பந்தர்

(ஈ) திருநாவுக்கரசர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மாணிக்கவாசகர் 

விளக்கம்:

மாணிக்கவாசகர்.

இவர் எழுதிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. இவர் “திருவாதவூரார்” என்றும் அழைக்கப்பட்டார்.

திருப்பெருந்துறை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுதவர். இதனால் மாணிக்கவாசகரை “அழுது அடியடைந்த அன்பர்” என்று குறிப்பிடுவர்.

73. உரிய சொல்லால் நிரப்புக.

அறனறிந்து மூத்த அறிவுடையார் ——–

திறனறிந்து தேர்ந்து கொளல்

(அ) கேண்மை

(ஆ) நன்மை

(இ) வன்மை

(ஈ) தகைமை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) கேண்மை

விளக்கம்:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்

– திருக்குறள்-441

அதிகாரம்-பெரியாரைத் துணைகோடல்.

பிரிவு-பொருட்பால்.

இயல்-அரசியல்.

பொருள்: அறத்தின் தன்மைகளை உணர்ந்தவராய்த் தன்னை விட முதிர்ந்த அறிவுடையவரது நட்பினைக் கொள்ளும் வகையறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும்

74. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

(அ) “பொல்லாக்காட்சி” என்பதன் பொருள், “மாயத்தோற்றம்” என்பது

(ஆ) வெகுளல் என்பதன் பொருள், “சினத்தல்” என்பது

(இ) வெஃகல் என்பதன் பொருள் “விரும்புதல்” என்பது

(ஈ) “குறளை” என்பதன் பொருள் “புறம்பேசுதல்” என்பது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) “குறளை” என்பதன் பொருள் “புறம்பேசுதல்” என்பது

விளக்கம்:

மணிமேகலை

“தீவினையென்பது யாது? என வினவின், ஆய்தொடி நல்லாய்!

ஆங்கது கேளாய்,

கொலையே. களவே, காமத் தீ விழைவு,

உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,

பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்

சொல் எனச் சொல்லின் தோன்றுவ நான்கும், வெஃகல், வெகுளல்,

பொல்லாக் காட்சி என்று

உள்ளந் தன்னின் உருப்பன மூன்றும் – எனப்

பத்து வகையால் பயன்தெறி புலவர்,

இத்திறம் படரார், படர்குவ ராயின்

விலங்கும் பேயும், நரகரும் ஆகிக்

கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவீர்

– சீத்தலைச் சாத்தனார்

பிரிவு-பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை.

பொருள்:

உடலில் தோன்றும் மூன்று குற்றங்கள் – கொலை, களவு, காமம்

சொல்லில் தோன்றும் நான்கு குற்றங்கள் – பொய் பேசுதல், புறங்கூறுதல்,

கடுஞ்சொல், பயனற்ற சொல்

உள்ளத்தில் தோன்றும் மூன்று குற்றங்கள் – பேரவா, கடுஞ்சினம் தெளிவில்லா அறிவு

A,B, C – மூன்றும் உள்ளத்தில் தோன்றும் குற்றங்கள்.

D – சொல்லில் தோன்றும் குற்றம்.

75. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

(அ) திருச்சிற்றம்பலம் – 1. வேதாரண்யம்

(ஆ) திருமுதுகுன்றம் – 2. கும்பகோணம்

(இ) திருமறைக்காடு – 3. சிதம்பரம்

(ஈ) குடமூக்கு – 4. விருத்தாசலம்

அ ஆ இ ஈ

(அ) 4 2 3 1

(ஆ) 3 4 1 2

(இ) 1 3 2 4

(ஈ) 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 1 2

76. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க:

அ. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது

ஆ. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள “துள்ளம்” என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் “தண்டலம்” என்றழைக்கப்படுகிறது.

இ. மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்

ஈ. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்

(அ) அ மற்றும் ஈ பொருத்தமற்றவை

(ஆ) ஆ மற்றும் ஈ பொருத்தமற்றவை

(இ) ஈ மற்றும் இ பொருத்தமற்றவை

(ஈ) ஆ மற்றும் இ பொருத்தமற்றவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஆ மற்றும் இ பொருத்தமற்றவை

விளக்கம்:

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள “துள்ளம்” என்ற ஊரில் திரு.வி.க.பிறந்தார்.

இவ்வூர் “தண்டலம்” என்று அழைக்கப்படுகிறது.

“மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்” என்பது இவருடைய நூலாகும்.

77. பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?

(அ) பஃறி

(ஆ) திமில்

(இ) ஓடை

(ஈ) வங்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஓடை

விளக்கம்:

கலத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்: கப்பல், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம். கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி,

78. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக:

(அ) பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்

(ஆ) பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர்

(இ) பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர்

(ஈ) பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்

79. பொருத்துக:

அ. இமயம் – 1. சந்தனம்

ஆ. குடகு – 2. பவளம்

இ. கொற்கை – 3. மணிகள்

ஈ. கீழ்க்கடல் – 4. முத்து

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 4 3 1

(இ) 4 3 1 2

(ஈ) 1 4 2 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 1 4 2

80. பொருந்தா இணையைக் கண்டறிக.

(அ) பரவை-கடல்

(ஆ) கரி-நரி

(இ) பரி-குதிரை

(ஈ) கணை-அம்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கரி-நரி

விளக்கம்:

பரவை-கடலைக் குறிக்கும் சொல்.

பரி-குதிரையைக் குறிக்கும் சொல்.

கணை-அம்பைக் குறிக்கும் சொல்.

கரி-யானையைக் குறிக்கும் சொல்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin