General Tamil Model Question Paper 15
51. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
(அ) பரிதிமாற் கலைஞர் என்ன செய்தார்?
(ஆ) பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?
(இ) பரிதிமாற் கலைஞர் இலக்கணம் வகுத்தாரா?
(ஈ) பரிதிமாற் கலைஞரின் தொண்டு யாது?
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?
52. கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(அ) வெட்சித் திணை
(ஆ) வாகைத் திணை
(இ) முல்லைத் திணை
(ஈ) வஞ்சித் திணை
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) முல்லைத் திணை
விளக்கம்:
வெட்சி, வாகை, வஞ்சி ஆகியவை புறத்திணைகளாகும். முல்லைத் திணை அகத்திணையாகும்.
53. சரியான எதுகையைத் தேர்க:
“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்”
(அ) எள்ளறு-வியப்ப
(ஆ) புள்ளுறு-புன்கண்
(இ) எள்ளறு-புள்ளுறு
(ஈ) சிறப்பின்-புன்கண்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) எள்ளறு-புள்ளுறு
விளக்கம்:
செய்யுளில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகைத் தொடை ஆகும்
எள்ளறு – புள்ளுறு
54. வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது
(அ) நான்காம் வேற்றுமை
(ஆ) இரண்டாம் வேற்றுமை
(இ) முதல் வேற்றுமை
(ஈ) ஆறாம் வேற்றுமை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) முதல் வேற்றுமை
விளக்கம்:
முதல் வேற்றுமை
ஒரு பெயர், வாக்கியத்தின் எழுவாயாக நிற்பது முதல் வேற்றுமையாகும். இவ்வேற்றுமைக்கு உருபு இல்லை. உருபு இல்லாமலேயே இது வேற்றுமையாக அமைகின்றது. இதற்கு “எழுவாய் வேற்றுமை” என்றும் பெயர் உண்டு.
முதல் வேற்றுமை வினைமுற்றையும், பெயரையும், வினாவையும் பயனிலையாகக் கொள்ளும்.
அமைச்சர் வந்தார்-வினைமுற்றுப் பயனிலை.
இவர் அமைச்சர்-பெயர்ப்பயனிலை.
இவர் அமைச்சரா?-வினாப்பயனிலை.
55. பொருத்துக:
அ. தாங்குறூஉம் – 1.ஒரு பொருட்பன்மொழி
ஆ. வல்விரைந்து – 2. இன்னிசையளபெடை
இ. ஓரீஇ – 3. உரிச்சொற்றொடர்
ஈ. மல்லல் மதுரை – 4. சொல்லிசையளபெடை
அ ஆ இ ஈ
(அ) 3 2 4 1
(ஆ) 2 1 4 3
(இ) 2 4 1 3
(ஈ) 1 2 3 4
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) 2 1 4 3
56. தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை
அ. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர்.
ஆ. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி…..
இ. தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன.
ஈ. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்
(அ) ஈ, இ, அ சரியானவை
(ஆ) ஆ, இ, ஈ சரியானவை
(இ) அ, ஆ, ஈ சரியானவை
(ஈ) இ, அ, ஆ சரியானவை
விடை மற்றும் விளக்கம்
விடை:
விளக்கம்:
இவ்வினாவில் கூற்று ஆ முழுமையாகக் கொடுக்கப்படவில்லை.
தமிழில் பெயர்ச்சொற்கள் ஒருபோதும் காலம் காட்டுவதில்லை.
வினா அமைப்பு முறை சரியாக இல்லாததினால் விடையை சரியாகக் கணிக்க இயலாது.
57. பொருத்துக:
அ. தூறு – 1.காரணச் சிறப்புப்பெயர்
ஆ. மரம் – 2. இடுகுறிப்பொதுப்பெயர்
இ. வளையல் – 3. புதர்
ஈ. மலை – 4. இடுகுறிப்பெயர்
அ ஆ இ ஈ
(அ) 3 1 2 4
(ஆ) 3 4 1 2
(இ) 2 4 1 3
(ஈ) 1 3 2 4
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) 3 4 1 2
58. பொருத்துக:
கலைச்சொற்கள் தமிழாக்கம்
அ.Editorial – 1. செய்தித்தாள் வடிவமைப்பு
ஆ.Bulletin – 2. தலையங்கம்
இ.Green Proof – 3. சிறப்புச் செய்தி இதழ்
ஈ. Layout – 4. திருத்தப்படாத அச்சுப்படி
அ ஆ இ ஈ
(அ) 4 2 1 3
(ஆ) 2 3 4 1
(இ) 3 1 2 4
(ஈ) 1 4 3 2
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) 2 3 4 1
59. கீழ்க்காணும் “வல்லினம் மிகும் இடம்” குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
(அ) அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
(ஆ) ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும்.
(இ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்
(ஈ) சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்
விளக்கம்:
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
(எ.கா) தாய் + தந்தை-தாய்தந்தை
இரவு + பகல்-இரவு பகல்
60. பின்வருவனவற்றுள் பண்புப்பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?
(அ) தன்னொற்றிரட்டல்
(ஆ) அடியகரம் ஐயாதல்
(இ) மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
(ஈ) இடையுகரம் இய்யாதல்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(இ) மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
விளக்கம்:
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்” என்ற விதி மெய்யீற்றுப் புணர்ச்சியில் “மகரஈறு” வகையில் பயன்படுகிறது.
(எ.கா):மரம் + கிளை.
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்” என்ற விதிப்படி, மகரமெய் கெட்டு “மர+கிளை” என்றானது. பின் “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி மர+க்+கிளை-மரக்கிளை என்றானது