General Tamil Model Question Paper 15
41. “தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்” என்று புகழப்படுபவர்
(அ) இளங்கோவடிகள்
(ஆ) வாணிதாசன்
(இ) கண்ணதாசன்
(ஈ) திருத்தக்கதேவர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) திருத்தக்கதேவர்
42. பொருத்துக:
நூல் நூலாசிரியர்
அ. மருமக்கள் வழி மான்மியம் – 1.திரு.வி.க
ஆ. தமிழ்ச் சோலை – 2. சுரதா
இ. இரட்சணியக் குறள் – 3. கவிமணி
ஈ. தேன்மழை – 4. எச்.ஏ.கிருட்டிணனார்
அ ஆ இ ஈ
அ. 4 1 2 3
ஆ. 1 4 3 2
இ. 2 1 3 4
ஈ. 3 1 4 2
விடை மற்றும் விளக்கம்
விடை: ஈ. 3 1 4 2
43. கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
அ. ந.வேங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட ந.பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், “ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள்” என்பது.
ஆ. கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந.பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்.
இ திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
ஈ. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
(அ) அ, ஈ சரியானவை
(ஆ) ஆ, இ சரியானவை
(இ) இ, ஈ சரியானவை
(ஈ) அ, ஆ சரியானவை
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) ஆ, இ சரியானவை
விளக்கம்:
ந.பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ந.வேங்கட மகாலிங்கம்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் தான் உ.வே.சாமிநாதர்
44. பொருத்துக:
அ. இடுகுறிப்பொதுப்பெயர் – 1.மரங்கொத்தி
ஆ, இடுகுறிச்சிறப்புப்பெயர் – 2. பறவை
இ. காரணப் பொதுப்பெயர் – 3. காடு
ஈ. காரணச் சிறப்புப் பெயர் – 4. பனை
அ ஆ இ ஈ
அ. 3 4 2 1
ஆ. 2 1 3 4
இ. 1 3 2 4
ஈ. 4 2 3 1
விடை மற்றும் விளக்கம்
விடை:
அ. 3 4 2 1
விளக்கம்:
நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு இட்ட பெயரே இடுகுறிப் பெயராகும். காரணம் கருதி ஒரு பொருளுக்கு இடும் பெயர் காரணப் பெயராகும்.
காடு என்பது இடுகுறிப் பொதுப்பெயர். பனங்காடு, மூங்கில் காடு என்பது இடுகுறிச் சிறப்புப் பெயர்கள்.
“மரம்” என்பது இடுகுறிப் பொதுப்பெயர். பனை மரம் என்பது இடுகுறிச் சிறப்புப் பெயர்.
பறப்பதால், பறவை என அழைக்கப்படுவது காரணப் பொதுப் பெயராகும்.
மரங்கொத்திப் பறவை என்பது காரணச் சிறப்புப் பெயராகும்.
45. எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது?
(அ) பத்மபூஷன்
(ஆ) பத்மவிபூஷண்
(இ) ஞானபீட விருது
(ஈ) பத்மஸ்ரீ
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) பத்மஸ்ரீ
விளக்கம்:
எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது ஞானபீட விருதாகும். இவ்விருது அவருக்கு 2002-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. இந்திய இலக்கிய மேம்பாட்டிற்காக ஞானபீட அமைப்பின் மூலமாக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த அமைப்பு “டைம்ஸ் ஆஃப் இந்தியா” என்ற பத்திரிகை நிறுவனத்தாரான சாஹீ ஜெயின் குடும்பத்தாரால் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விருது 1965-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
46. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. உடம்பார் அழியின் உயிரார் அழிவர் – 1. திருவள்ளுவர்
ஆ. மீதூண் விரும்பேல் – 2. திருமூலர்
இ. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே – 3. சீத்தலைச் சாத்தனார்
ஈ. நீரின்றமையாது உலகு – 4. ஒளவையார்
அ ஆ இ ஈ
(அ) 4 3 1 2
(ஆ) 3 1 4 2
(இ) 2 4 3 1
(ஈ) 3 2 4 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 2 4 3 1
47. பொருத்துக:
அறநூல்கள் ஆசிரியர்
அ. அறநெறிச்சாரம் – 1. துறைமங்கலம் சிவப்பிரகாசர்
ஆ. நீதி நூல் – 2. முத்துராமலிங்க சேதுபதி
இ. நீதி போதனை வெண்பா – 3. முனைப்பாடியார்
ஈ. நன்னெறி பிள்ளை – 4. மாயூரம் வேதநாயகம்
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 2 1 3 4
(இ) 3 4 2 1
(ஈ) 1 3 4 2
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 3 4 2 1
48. பொருத்துக:
கவிதை நூல்கள் கவிஞர்கள்
(அ) நெருஞ்சி – 1. சி.மணி
(ஆ) அன்று வேறு கிழமை – 2. இரா.மீனாட்சி
(இ) தோணி வருகிறது – 3. ஞானக்கூத்தன்
(ஈ) வரும் போகும் – 4. ஈரோடு தமிழன்பன்
அ ஆ இ ஈ
(அ) 2 3 4 1
(ஆ) 3 4 1 2
(இ) 4 1 2 3
(ஈ) 2 4 3 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) 2 3 4 1
49. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(அ) பெண்மை தாயாய் நின்று – 1. அன்பே செய்யும்
(ஆ) பெண்மை அயலார் தமக்கும் – 2. தரணியைத் தாங்கும்
(இ) பெண்மை மகளாய்ப்பிறந்து – 3. தளர்வைப் போக்கும்
(ஈ) பெண்மை தாரமாய் வந்து – 4. சேவையில் மகிழும்
அ ஆ இ ஈ
(அ) 3 1 4 2
(ஆ) 2 4 1 3
(இ) 2 1 4 3
(ஈ) 1 3 2 4
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 2 1 4 3
விளக்கம்:
பெண்மை
அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்தும் இன்பசெ ரூபமாய்த்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும்;
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்;
உடன்பிறப் பாகி உறுதுணை புரியும்;
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்;
அயலார் தமக்கும் அன்பே செய்யும்;
நாணம் கெடாமல் நட்பு கொண் டாடும்
– வெ.இராமலிங்கனார்
“நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் கவிதைத் தொகுப்பில் 11 தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. மேற்கண்ட கவிதை “சமுதாய மலர்” என்னும் தலைப்பின் கீழ் “பெண்மை” என்ற உட்பிரிவில் அமைந்துள்ளது.
இப்பாடலில் தாய், மனைவி, தமக்கை, தங்கை, மகள் எனப் பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு என்பதனை நாமக்கல் கவிஞர் எடுத்துக்காட்டியுள்ளார்.
50. பொருத்துக:
அ. வெண்பா – 1. சயங்கொண்டான்
ஆ. விருத்தப்பா – 2. இரட்டையர்கள்
இ. பரணி – 3. புகழேந்தி
ஈ. கலம்பகம் – 4. கம்பர்
அ ஆ இ ஈ
(அ) 4 2 3 1
(ஆ) 1 3 2 4
(இ) 3 4 1 2
(ஈ) 2 3 1 4
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 3 4 1 2
விளக்கம்:
நளவெண்பாவை இயற்றிய புகழேந்தி “வெண்பாவிற் புகழேந்தி” என்று புகழப்பட்டார். கம்பர். “விருத்தப்பா எனும் வெண்பாவிற்கோர் உயர் கம்பன்” எனப் புகழப்பட்டார். கலிங்கத்துப்பரணியை இயற்றிய செயங்கொண்டார் “பரணிக்கோர் செயங்கொண்டார்” என்று பாராட்டப்பெற்றவர்.
இரட்டையர்கள் எனப்பட்ட இளஞ்சூரியர். முதுசூரியர் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள். இவர்கள் தில்லைக் கலம்பகத்தை இயற்றியுள்ளனர்.