General Tamil Model Question Paper 15
31. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்.
(அ) தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலை இளந்திரையனும், தில்லி கல்லூரியில் தமிழ்ப் போரசிரியராக் சாலினி இளந்திரையனும் பணியாற்றியவர்கள்.
ஆ. நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீனே பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்.
இ. மானுடம் பூத்தது, நெஞ்சோடு நெஞ்சம், விட்ட குறை தொட்ட குறை, செயல் மணக்கும் தோள்கள், தாய் எழில் தமிழ், உரை வீச்சு, தமிழனின் ஒரே கவிஞன் முதலியன சாலை இளந்திரையனின் நூல்களாகும்.
ஈ. கருத்துக்குப் பெரியாரையும், கவிதைக்குப் புரட்சிக் கவிஞரையும் வழிகாட்டியாகக் கொண்ட சாலை இளந்திரையன், எழுச்சிச் சான்றோர், திருப்புமுனைச் சிந்தனையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர்.
விடை மற்றும் விளக்கம்
விடை: ஆ. நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீனே பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்.
விளக்கம்:
சாலை இளந்திரையன்.
சாலை இளந்திரையனின் இயற்பெயர் மகாலிங்கம் ஆகும். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலை நயினார் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர். தன்னுடைய புனைப்பெயராக தன் ஊரின் முதல் பகுதியான சாலை என்பதுடன் சங்ககால மன்னன் இளந்திரையன் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டார்.
வினாவில் இவர் எழுதிய நூல்களில் ஒன்றாக “மானுடம் பூத்தது” என்று கொடுத்துள்ளனர் அது தவறாகும். “பூத்தது மானுடம்” என்பதே சரி.
32. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக:
அ. ஓவ, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் ஓவியக்கலை வழங்கப்பெற்றது.
ஆ. ஓவியர், “கண்ணுள் வினைஞர்” எனப் புகழப்பெற்றார்.
இ, ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என நச்சினார்க்கினியர் தம் உரையில் இலக்கணம் வகுத்துள்ளார்.
ஈ. ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது.
விடை மற்றும் விளக்கம்
விடை: ஈ. ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது.
விளக்கம்:
சிலப்பதிகாரத்தில் மாதவி பற்றிக் குறிப்பிடும் போது, “ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” என்று இளங்கோவடிகள் கூறுகிறார். “சுதமதி” என்ற பாத்திரம் மணிமேகலையில் அமைந்துள்ளது.
33. “எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி” எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை
(அ) சிற்பக்கலை
(ஆ) கட்டடக்கலை
(இ) செப்புப்படிமக்கலை
(ஈ) ஓவியக்கலை
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) ஓவியக்கலை
விளக்கம்:
“எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறருங்கூடி”
– மதுரைக்காஞ்சி
கண்ணில் கண்ட காட்சியை உள்ளத்தில் உணர்ந்து படைப்பிற்கு பொருந்துமாறு வரைகின்றவர்களே ஓவியர்கள், என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. இதே செய்தி மணிமேகலையிலும் கூறப்பட்டுள்ளது.
34. கீழே காணப்படுவனவற்றுள் பொருந்தமற்றதைத் தெரிவு செய்க:
அ. கலம்பக இலக்கியத்தின் முதல் நூல் நந்திக்கலம்பகம்
ஆ. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட நந்திவர்ம பல்லவன் பற்றிய நூல்.
இ. நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும் என்று தொண்டை மண்டல சதகமும், சோமேசர் முதுமொழி வெண்பாவும் நந்தி கதை உரைக்கின்றன.
ஈ, “அறம் பாடுதல்” என்பது போர்த்தாக்குதல் முறை. அம்முறை நந்திக்கலம்பத்தில் பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது.
விடை மற்றும் விளக்கம்
விடை:ஈ, “அறம் பாடுதல்” என்பது போர்த்தாக்குதல் முறை. அம்முறை நந்திக்கலம்பத்தில் பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது.
விளக்கம்:
நந்திக்கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் முதலாவதாகும். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன் ஆவான். “அறம்பாடுதல்” என்ற முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அறம் வைத்துப் பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்திவர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து, நூல் முழுவதையும் கேட்க விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால், மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள மாறாக் காதலால் உயிரையும் பொருட்படுத்தாது எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் நீத்தார் என்று கூறப்படுகிறது.
35. பொருந்தாத விடையைக் குறிப்பிடுக:
(அ) மனுமுறை கண்ட வாசகம்
(ஆ) திருப்புகழ்
(இ) திருவருட்பா
(ஈ) ஜீவகாருண்ய ஒழுக்கம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) திருப்புகழ்
விளக்கம்:
மனுமுறைகண்ட வாசகம் திருவருட்பா. ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய நூல்களின் ஆசிரியர் வள்ளலார் இராமலிங்க அடிகள்.
திருப்புகழை இயற்றியவர் அருணகிரிநாதர்.
36. கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
அ. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று “முதுமொழிக்காஞ்சி” இப்பெயரில் மதுரைக் கூடலூர்க்கிழார் இயற்றிய நூல், “அறவுரைக்கோவை” என்றும் அழைக்கப்படுகிறது.
ஆ, முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
இ. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
ஈ. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப் பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.
(அ) அ மற்றும் இ சரியானவை
(ஆ) அ மற்றும் ஈ சரியானவை
(இ) ஆ மற்றும் இ சரியானவை
(ஈ) இ மற்றும் ஈ சரியானவை
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) அ மற்றும் இ சரியானவை
விளக்கம்:
முதுமொழிக் காஞ்சி
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர்க்கிழார். நீதி நூல்களில் மிகச் சிறிய நூல் இதுவே. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்து செய்யுள்கள் வீதம் 10 அதிகாரங்கள் உள்ளன.
ஒவ்வொரு பத்திலும் 10 அடிகள் வீதம் 100 அடிகள் கொண்டது இந்நூல் ஒவ்வொரு பத்தின் முதுலடியும் “ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்” என்று தொடங்குகிறது.
1.சிறந்த பத்து, 2.அறிவுப்பத்து, 3.பழியாப்பத்து, 4.துவ்வாப்பத்து. 5.அல்ல பத்து, 6.இல்லை பத்து, 7.பொய்ப் பத்து, 8.எளிய பத்து, 9.நல்கூர்ந்த பத்து, 10.தண்டாப்பத்து என பத்து பிரிவுகள் உள்ளன.
37. மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க:
அ. மதுரையைப் பாடுவது.
ஆ.நிலையாமையைக் கூறுவது.
இ.பத்துப்பாட்டுள் மிகுதியான அடிகளை உடையது.
(அ) ஆ, இ சரி அ தவறு
(ஆ) அ, ஆ, இ சரியானவை
(இ) அ, ஆ சரி இ தவறு
(ஈ) அ, இ சரிய ஆ தவறு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) அ, ஆ, இ சரியானவை
விளக்கம்:
மதுரைக் காஞ்சி
பத்துப்பாட்டில் மிகப் பெரிய நூல் இதுவே. 782 அடிகளைக் கொண்டு விளங்குகிறது. இது பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது மாங்குடி மருதனார் பாடியது. இதனை “பெருகு வளமதுரைக் காஞ்சி” என்றும் “கூடற்றமிழ்” என்றும் குறிப்பர்.
38. “நாட்டுப்புற இயலின் தந்தை” என அழைக்கப்படுபவர்
(அ) ஜேக்கப் கிரீம்
(ஆ) மாக்ஸ் முல்லர்
(இ) கி.வா.ஜகந்நாதன்
(ஈ) ஆறு.அழகப்பன்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(அ) ஜேக்கப் கிரீம
விளக்கம்:
நாட்டுப்புற இயலின் தந்தை என அழைக்கப்படுபவர் ஜேக்கப் கிரீம் ஆவார். இவர் ஜெர்மானிய மொழியியலாளர் ஆவார். தமிழ் நாட்டுப்புற இலக்கியங்களை ஆய்வு செய்து வெளியுலகிற்குக் கொண்டு வந்தவர் ஆவார்.
39. சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?
(அ) அ
(ஆ) ஊ
(இ) ஐ
(ஈ) ஏ
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) ஏ
40. பொருந்தா இணையினைக் காண்க:
(அ) “பாட்டாளி மக்களது பசி தீரவேண்டும்” – நாமக்கல் கவிஞர்
(ஆ) “முல்லைக்கோர் காடு போலும்”- சுரதா
(இ) கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் – கவிமணி
(ஈ) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்-பாரதியார்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்-பாரதியார்
விளக்கம்:
“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்” என்று பாடியவர் பாரதிதாசன். பாரதிதாசனின் “சங்கநாதம்” என்ற கவிதையில் கீழ்க்கண்ட இவ்வரிகள் இடம் பெற்றுள்ளன.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”