General Tamil Model Question Paper 15
11. தவறான மரபுச் சொல்லைத் தேர்க:
(அ) மாம் பிஞ்சு-மாவடு
(ஆ) இளந் தேங்காய்-வழுக்கை
(இ) வாழைப்பிஞ்சு-வாழைக்கச்சல்
(ஈ) முருங்கைப் பிஞ்சு-முருங்கை மொட்டு
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) முருங்கைப் பிஞ்சு-முருங்கை மொட்டு
விளக்கம்:
காய்களின் இளமைப் பெயரில் முருங்கைக்காயின் இளமைப் பெயர் முருங்கைப் பிஞ்சாகும். முருங்கைமொட்டு தவறானது.
12. “கொள்” என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று
(அ) கொண்டான்
(ஆ) கொள்க
(இ) கொண்ட
(ஈ) கொண்டு
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) கொண்டான்
விளக்கம்:
கொள்-வேர்ச்சொல்.
கொண்டான்-வினைமுற்று.
கொள்க-வியங்கோள் வினைமுற்று.
கொண்ட-பெயரெச்சம்.
கொண்டு-வினையெச்சம்
13. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:
(அ) கப்பல்
(ஆ) அம்பி
(இ) ஆழி
(ஈ) திமில்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) ஆழி
விளக்கம்:
கலத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்
கப்பல், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.
கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்
ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி,
14. பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. கனகம் – 1. மோதிரம்
ஆ. மேழி – 2. ஆடை
இ. கலிங்கம் – 3. பொன்
ஈ. ஆழி – 4. கலப்பை
அ ஆ இ ஈ
(அ) 2 4 3 1
(ஆ) 1 3 2 4
(இ) 3 2 4 1
(ஈ) 3 4 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) 3 4 2 1
விளக்கம்:
“கனகம்” என்பது பொன்னைக் குறிக்கும் சொற்களில் ஒன்றாகும்.
“கலிங்கம்” என்பது ஆடையைக் குறிக்கும் சொற்களில் ஒன்றாகும்.
(எ.கா) “அரைக்கலிங்கம் உரிப்புகண்ட கலிங்கர்” – கலிங்கத்துப் பரணி.
பொருள்: அரையின் கண் உள்ள ஆடை களையப்பட்ட கலிங்க வீரர்கள்.
மேழி-கலப்பை; ஆழி-மோதிரம்.
(எ.கா): “மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை
ஆழி தரித்தே அருளும் கை”
– கம்பர்.
உழவர்களின் சிறப்பு பற்றி கம்பர் இயற்றிய பாடலடிகளாகும்.
பொருள்: கலப்பை பிடித்த உழவனின் கைகளை, வேற்படையைக் கையில் பிடித்துள்ள மன்னர்களும் ஆர்வத்துடன் நோக்குவர். மோதிரம் அணிந்துள்ள உழவரின் கைகள் வருபவர்க்கெல்லாம் வரையாது வழங்கும் கைகளாகும்.
15. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
(அ) சிலப்பதிகாரம், மணிமேகலை
(ஆ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது
(இ) இராமாயணம், மகாபாரதம்
(ஈ) பாண்டியன் நெடுஞ்சொழியன், கபிலர்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) பாண்டியன் நெடுஞ்சொழியன், கபிலர்
விளக்கம்:
சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெருங்காப்பியங்கள்,
இன்னாநாற்பது, இனியவைநாற்பது-பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
இராமாயணம், மகாபாரதம்-இதிகாசங்கள்.
முதல் காரணம்: கபிலர்-புலவர்,
பாண்டியன் நெடுஞ்செழியன்-மன்னன்.
இரண்டாம் காரணம்: கபிலருடன் தொடர்புடைய மன்னன் பாரி ஆவார்.
16. பின்வருவனவற்றுள் தவறான இணையைச் சுட்டுக:
(அ) சிறிது x பெரிது
(ஆ) திண்ணிது x வலிது
(இ) உயர்வு x தாழ்வு
(ஈ) நன்று x தீது
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) திண்ணிது x வலிது
விளக்கம்:
திண்ணிது x மெலிது
17. திருக்குறள்-பொருட்பாலின் இயல்கள்
(அ) பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல்
(ஆ) அரசியல், அங்கவியல், ஒழிபியல்
(இ) அரசியல், இல்லறவியல், களவியல்
(ஈ) பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஆ) அரசியல், அங்கவியல், ஒழிபியல்
விளக்கம்:
நிலைகள் | கூறுகள் | |||||||
பால் | அறம் | பொருள் | இன்பம் | |||||
இயல் | பாயிரம் | இல்லறம் | துறவறம் | அரசு | அங்கம் | ஒழிபு | களவு | கற்பு |
அதிகாரம் | 4 | 20 | 14 | 25 | 32 | 13 | 7 | 18 |
குறள் | 40 | 200 | 140 | 250 | 320 | 130 | 70 | 180 |
18. நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
(அ) 1968
(ஆ) 1988
(இ) 1958
(ஈ) 1978
விடை மற்றும் விளக்கம்
விடை:
(ஈ) 1978
விளக்கம்:
நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை 1978-ஆம் ஆண்டு வெளியிட்டு சிறப்பித்தது.
19. குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
(அ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
(ஆ) பெருங்குன்றூர்க் கிழார்
(இ) பொருந்தில் இளங்கீரனார்
(ஈ) காக்கைப்பாடினியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
விளக்கம்:
குறுந்தொகை என்ற நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூலின் பாடல்கள் நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. ஆனால் ஒன்பதடியில் இருபாடல்கள் (307, 391) அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக இந்நூலில் 401 பாடல்கள் உள்ளன.
20. “நாரதர் வருகிறார்” என்ற தொடர் என்ன ஆகுபெயர்?
(அ) காரியவாகு பெயர்
(ஆ) கருத்தாவாகு பெயர்
(இ) கருவியாகு பெயர்
(ஈ) உவமையாகு பெயர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) உவமையாகு பெயர்
விளக்கம்:
“நாரதர் வருகிறார்” என்பது உவமையாகு பெயர். இங்கு நாரதர் என்பது அவரைப் போன்ற குணமுடைய மனிதனைக் குறிக்கின்றது.