General TamilTnpsc

General Tamil Model Question Paper 15

91. “கிறித்தவக் கம்பர்” எனப் புகழப் பெறுபவர்

(அ) வீரமாமுனிவர்

(ஆ) ஜி.யூ.போப்

(இ) எல்லீஸ்

(ஈ) ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டிணனார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டிணனார்

விளக்கம்:

“கிறித்தவக் கம்பர்” எனப் புகழப்படுபவர் ஹென்றி ஆல்பர்ட் கிருட்டிணனார். இவர் இயற்றிய நூல்கள் – இரட்சணிய யாத்திரிகம். இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக் குறள்.

92. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

(அ) மதுரை சொக்கநாதநாயக்கர் மனைவி இராணி மங்கம்மாள்

(ஆ) இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டிண முத்து வீரப்பன் மனைவி இராணி முத்தம்மாள்

(இ) இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன்

(ஈ) பட்டினப்பாலை, பாண்டியனின் வீரச் செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பனுவல்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) பட்டினப்பாலை, பாண்டியனின் வீரச் செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பனுவல்

விளக்கம்:

பட்டினப்பாலை

சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய இந்நூல் 301 அடிகளைக் கொண்டது

93. கீழே தரப்பெற்றவற்றில் எவை சரியானவை என்று எழுதுக:

அ. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை.

ஆ. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவர்

இ. தனது சகோதரியின் மரணத்தை விடவும், வள்ளியம்மையின் மரணம் தனக்குப் பேரிடியாக இருந்ததென்று காந்தியடிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஈ. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரக வேள்விப் பணிக்கு முதல் களப்பலி ஆகி அவரை, மகாத்மா எனும் உயர்நிலைக்கு உயர்த்திய பெருமை வள்ளியம்மைக்கு உண்டு.

(அ) அ,இ,ஈ சரியானவை

(ஆ) அ,ஆ,ஈ சரியானவை

(இ) ஆ,இ,ஈ சரியானவை

(ஈ) ஆ,அ,இ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அ,இ,ஈ சரியானவை

விளக்கம்:

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898-ஆம் ஆண்டு முனுசாமி-மங்களம் இணையருக்கு மகளாய்ப் பிறந்தார்.

94. பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயண நூலில் குறிப்பிட்ட வெனிசு நாட்டுப் பயணி

(அ) தாலமி

(ஆ) பிளினி

(இ) யுவான் சுவாங்

(ஈ) மார்க்கோபோலோ

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) மார்க்கோபோலோ

விளக்கம்:

கொற்கை:

இது பாண்டிய மன்னர்களுக்குரிய துறைமுகம். இங்கு முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததை வெனிசு நாட்டுப் பயணி மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். இவர் வெனிசு நாட்டிலிருந்து இலங்கை சென்று அங்கிருந்து 13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தார். முதலாம் சடையவர்மன் பாண்டியன், இலங்கை அரசின் இளவரசனாக நியமித்த சாவகன் மைந்தன் என்பனுடன் பாண்டிய நாடு வந்தார். இவர் வந்த பொழுது ஆட்சியில் இருந்த மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆவார்.

95. “பலே, பாண்டியா? பிள்ளை! நீர் ஒரு புலவன், ஐயமில்லை” என்று பாரதியாரால் பாராட்டப்பெற்றவர் யார்,

(அ) நாமக்கல் கவிஞர்

(ஆ) பாரதிதாசன்

(இ) கவிமணி

(ஈ) ச.து.சு. யோகியார்.

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) நாமக்கல் கவிஞர்

விளக்கம்:

1920-இல் பாரதியாரை காரைக்குடியில் சந்திக்கும் வாய்ப்பு நாமக்கல் கவிஞருக்கு கிடைத்தது. அப்போது நாமக்கல் கவிஞரை ஒரு பாடல் பாடச் சொன்னார் பாரதியார். உடனே கவிஞர், எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களின் நாடகத்திற்காக தான் எழுதிய “தம்மரசைப் பிறர் ஆளவிட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கைகட்டி நின்றபேரும்” என்ற பாடலைப் பாடினார். உடனே பாரதியார், “பலே பாண்டியா? பிள்ளை! நீர் ஒரு புலவர் ஐயமில்லை” என்று பாராட்டினார்.

96. பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக.

(அ) ந.பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவர்

(ஆ) ந.பிச்சமூர்த்தி “காட்டு வாத்து” என்னும் கவிதையினை எழுதியுள்ளார்.

(இ) ந.பிச்சமூர்த்தி “புதுக்கவிதை” முன்னோடி எனப்படுகிறார்

(ஈ) ந.பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்.

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ந.பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்.

97. பொருந்தாத விடையைக் கண்டறிக.

சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்

(அ) புளியமரத்தின் கதை

(ஆ) பஞ்சும் பசியும்

(இ) ஜே.ஜே.சில குறிப்புகள்

(ஈ) குழந்தைகள் ஆண்கள் பெண்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பஞ்சும் பசியும்

விளக்கம்:

“பஞ்சும் பசியும்” என்ற நாவலை எழுதியவர் தொ.மு.சி.ரகுநாதன் ஆவார். அவரது காலம் அக்டோபர் 20, 1923 முதுல் டிசம்பர் 31, 2001 வரையாகும். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1983-இல் சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றார்.

இவரது பிற படைப்புகள்: பாரதி:காலமும் கருத்தும், இளங்கோ அடிகள் யார்? கங்கையும் காவிரியும், பாரதியும் ஷெல்லியும், புயல், சிலை பேசிற்று, மருது பாண்டியன் போன்றவை.

98. பொருத்துக:

கவிதை நூல் கவிஞர்

(அ) புலரி – 1. கலாப்ரியா

(ஆ) சுயம்வரம் – 2. பசுவய்யா

(இ) மின்னற்பொழுதே தூரம் – 3. கல்யாண்ஜி

(ஈ) யாரோ ஒருவனுக்காக – 4. தேவதேவன்

அ ஆ இ ஈ

(அ) 2 3 4 1

(ஆ) 3 4 1 2

(இ) 4 2 3 1

(ஈ) 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 3 1 4 2

99. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

(அ) மொழிஞாயிறு – 1. பாரதிதாசன்

(ஆ) மகாகவி – 2. பெருஞ்சித்திரனார்

(இ) புரட்சிக் கவி – 3. தேவநேயப் பாவாணர்

(ஈ) பாவலரேறு – 4. பாரதியார்

அ ஆ இ ஈ

(அ) 1 3 4 2

(ஆ) 3 4 1 2

(இ) 3 1 4 2

(ஈ) 2 4 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 1 2

100. பொருத்துக

பட்டியல் I பட்டியல் II

அ. தமிழ்நாடும், நம்மாழ்வாரும் – 1. கவிமணி, தேசிக விநாயகனார்

ஆ. தேன்மழை – 2. சயங்கொண்டார்

இ. குழந்தைச் செல்வம் – 3. திரு.வி.க

ஈ. இசையாயிரம் – 4. சுரதா

அ ஆ இ ஈ

(அ) 3 2 1 4

(ஆ) 3 4 1 2

(இ) 3 1 2 4

(ஈ) 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 1 2

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!