General TamilTnpsc

General Tamil Model Question Paper 14

31. பொருத்துக:

வரிசை ஒன்று வரிசை இரண்டு

அ. Internet – 1. மின்இதழ்

ஆ. Search Engine – 2. மின் நூல்

இ. E-Journal – 3. இணையம்

ஈ. E-Book – 4. தேடுபொறி

அ ஆ இ ஈ

(அ) 4 2 1 3

(ஆ) 2 4 3 1

(இ) 3 4 1 2

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 1 2

32. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க:

அ. சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்

ஆ. தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்.

இ. ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்

ஈ. பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை.

விடை மற்றும் விளக்கம்

விடை:

இ. ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்

விளக்கம்:

தாயுமானவர், வள்ளலாரை விட காலத்தால் முந்தையவர்

33. பொருத்துக:

அகநாநூற்றின் பாட்டு வைப்பு முறை திணை

அ. 10, 20, 30, 40, ….. 1. முல்லைத் திணை

ஆ. 6, 16, 26, 36…. 2. நெய்தல் திணை

இ. 4, 14, 24, 34, …. 3. குறிஞ்சித் திணை

ஈ. 2, 8, 12, 18,… 4. மருதத் திணை

அ ஆ இ ஈ

(அ) 4 2 3 1

(ஆ) 2 3 1 4

(இ) 2 1 4 3

(ஈ) 2 4 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 2 4 1 3

விளக்கம்:

அகநானூறு பாடல்கள் வைப்புமுறை 1,3,5,7 … என ஒற்றைப்படை எண்களாக வருவன பாலைத் திணைப் பாடல்கள். 2,8,12,18… என வருவன குறிஞ்சித்திணைப் பாடல்கள். 4,14,24,34… என வருவன முல்லைத்திணைப் பாடல்கள். 6,16,26,36… என வருவன மருதத்திணைப் பாடல்கள். 10,20,30 என வருவன நெய்தல் திணைப் பாடல்கள். இந்நூலை தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் ஆவார். தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஆவான்.

34. ஒலி வேறுபாடறிந்து பொருத்துக:

அ. வலை 1.பொந்து

ஆ. வளை 2.மீன்வகை

இ. வாளை 3.மரவகை

ஈ. வாழை 4.மீன்பிடி வலை

அ ஆ இ ஈ

(அ) 1 4 2 3

(ஆ) 2 3 1 4

(இ) 4 1 2 3

(ஈ) 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 4 1 2 3

35. கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?

அ. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்

ஆ. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை

இ. மரயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது.

ஈ, கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்

(அ) அ, ஆ சரியானவை

(ஆ) ஆ, இ சரியானவை

(இ) இ, ஈ சரியானவை

(ஈ) அ, ஈ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அ, ஆ சரியானவை

விளக்கம்:

கம்பர் ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.

36. நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

(அ) பனு அகமது மரைக்காயர்

(ஆ) சீதக்காதி

(இ) உமறுப்புலவர்

(ஈ) செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பனு அகமது மரைக்காயர்

விளக்கம்:

உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தில் நபிகள் நாயகத்தின் வாழ்வு முற்றிலுமாய்ப்பாடி முடிக்கப்படவில்லை. பனு அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய வாழ்வு முழுவதையும் பாடி முடித்தார். அது “சின்னச் சீறா” என்று வழங்கப்படுகிறது.

37. பொருந்தா ஒன்றைத் தேர்க. கண்ணதாசன் பாடல்கள்

(அ) “முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ”

(ஆ) “சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா”

(இ) “ஆடி அடங்கும் வாழ்க்கையடா”

(ஈ) “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) “சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா”

விளக்கம்:

“சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா” என்ற பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.

38. “இராசராச சோழனுலா” வைப் பாடியவர்

(அ) ஒட்டக்கூத்தர்

(ஆ) புகழேந்திப் புலவர்

(இ) காளமேகப் புலவர்

(ஈ) குமரகுருபரர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) ஒட்டக்கூத்தர்

விளக்கம்:

இராசராச சோழனுலாவைப் பாடியவர் ஒட்டக்கூத்தர். கூத்தர் என்பதே இவரின் இயற்பெயர். ஒட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர். ஆதலால் இவர் ஒட்டக்கூத்தர் எனப்பட்டார். இவரது காலம் 12-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர். ஆம்மூவரைப் பற்றியும் அவர் பாடிய மூன்று உலாக்களும் “மூவரூலா” எனப்படுகிறது. இவரது சிறப்புப்பெயர்களாவன. “கவிச்சக்கரவர்த்தி” “கவிராட்சசன்” “காளக்கவி” “சர்வக்ஞகவி” என்பவையாகும். இவர் இயற்றிய பிற நூல்களாவன, தக்கயாகப்பரணி, ஈட்டி எழுபது, அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக் கோவை, குலோத்துங்கச் சோழன் பிள்ளைத் தமிழ் என்பனவாம். சமகாலப் புலவர்கள்-கம்பர், புகழேந்தி புலவர்

39. பொருத்துக:

பட்டியல்-I பட்டியல்-II

(அ) மாணிக்கவாசகர் – 1. திருத்தொண்டத் தொகை

(ஆ) ஆண்டாள் – 2. தாண்டகவேந்தர்

(இ) சுந்தரர் – 3. திருக்கோவை

(ஈ) திருநாவுக்கரசர் – 4. நாச்சியார் திருமொழி

அ ஆ இ ஈ

(அ) 3 4 1 2

(ஆ) 2 3 4 1

(இ) 1 4 3 2

(ஈ) 4 3 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) 3 4 1 2

40. “முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” என்று கூறியவர்

(அ) தொல்காப்பியர்

(ஆ) பவணந்தி முனிவர்

(இ) தண்டியடிகள்

(ஈ) புலவர் குழந்தை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தொல்காப்பியர்

விளக்கம்:

“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை” தொல்காப்பியம்-பொருளதிகாரம் – அகத்திணையியலில் பொருள்வயிற்பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளது. பொருள்: கடல்வழிப் பயணம் செல்லும்போது பெண்டிரை அழைத்துச் செல்வதில்லை.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin