General TamilTnpsc

General Tamil Model Question Paper 14

21. திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?

அ. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர் “மேலகரம் என்றும் ஊரில் பிறந்தவர்

ஆ. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர் மீது அன்பு கொண்டு நலிவதையும் அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், குற்றாலக் குறவஞ்சியின் மையக் கதைப்பொருள் ஆகும்.

இ. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று.

ஈ. “வசந்தவல்லி திருமணம்” எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது.

(அ) அ மற்றும் ஆ சரியானவை

(ஆ) இ மற்றும் ஈ சரியானவை

(இ) ஆ மற்றும் இ சரியானவை

(ஈ) அ மற்றும் ஈ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அ மற்றும் ஆ சரியானவை

விளக்கம்:

“குறவஞ்சி” 96 வகை சிறிலக்கியங்களுள் ஒன்றாகும்.

22. “மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி

உயங்கி யொருவர்க் கொருவர்” – இப்பாடலடியின் ஆசிரியர் யார்?

(அ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

(ஆ) கம்பர்

(இ) குமரகுருபரர்

(ஈ) ஒட்டக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஒட்டக்கூத்தர்

விளக்கம்:

“மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க்கொருவர்”

இப்பாடலடியின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் இயற்றிய “மூவர் உலா” என்ற நூலின் ஒரு பகுதியான இராசராச சோழனுலா என்ற பகுதியில் இப்பாடலடிகள் அமைந்துள்ளன.

பாடலின் பொருள்: இராசராச சோழன் தெருவில் உலாவந்த போது அவனைக் காணவந்த பல்வேறு குலமங்கையர் மாளிகை, ஆடரங்கு, மண்டபம், சாளரம், செய்குன்று முதலிய எல்லா இடங்களிலும் குழுமியிருந்தனர். இவர்கள் தாங்கள் இருக்குமிடம் தெரியாதபடி ஒருவரையொருவர் பற்றி, மனமயங்கி, தெருவிலும் மாறுபட்டுக் கை குவித்து வணங்கி, ஒருவரோடு ஒருவர் நெருக்கத்தால் வருந்தி இருந்தனர் மறுகில்-தெருவில், பிணங்கி-மாறுபட்டு, உயங்கி-நெருக்கத்தால்

23. “ஒற்றுமைக் காப்பியம்” என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

(அ) பெரியபுராணம்

(ஆ) மணிமேகலை

(இ) கம்பராமாயணம்

(ஈ) சிலப்பதிகாரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) சிலப்பதிகாரம்

விளக்கம்:

ஒற்றுமைக் காப்பியம் எனப்படுவது சிலப்பதிகாரம் ஆகும். இந்நூலின் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் பெருமைகள் மற்றும் அவர்களின் தலைநகரங்களாகிய புகார், மதுரை, காஞ்சி ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றிய இளங்கோவடிகள் சேர, மன்னரின் இளவல் என்றாலும் சோழ, பாண்டிய நாடுகளின் சிறப்பு பற்றிக் கூறியமையாலும், இவர் சமண சமயத்தைச் சார்ந்திருந்தாலும் பிற மதங்களை இழித்துரையாமையாலும் இந்நூல்ஒற்றுமைக் காப்பியம் எனப்பட்டது.

24. “அம்மானை” பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?

அ. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகள் ஒன்று

ஆ. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு “அம்மானை வரி” என்பது பெயர்.

இ. பாடிக்கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது “பந்து விளையாடல்” ஆகும்.

ஈ. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி முடிவில் ஒரு நீதி இடம் பெறும்.

(அ) அ மற்றும் இ

(ஆ) ஆ மற்றும் அ

(இ) இ மற்றும் ஈ

(ஈ) ஈ மற்றும் அ

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) ஆ மற்றும் அ

விளக்கம்:

“அம்மானை” என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகை விளையாட்டு. மூவர் வட்டமாக அமர்ந்து கல்லை மேலெறிந்து பிடித்தாடுவதாகும். விளையாடும் போது முதலாமவர் ஒரு கருத்தைக் கூறித் தொடங்க, இரண்டாமவர் மூன்றாவரிடம் அதுபற்றி வினவ மூன்றாமவர் அதற்கு விடை கூறுவதாக முடியும். செய்யுளில் இவ்வகைப் பாடல்கள் “கலம்பகம்” என்ற சிற்றிலக்கிய வகையில் இரண்டாவது உறுப்பாகும்.

25. கடற்பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக:

அ. விளைந்து முதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை

ஆ. பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு

இ. காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக்காஞ்சி

ஈ. கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் 4. அகநானூறு

நாவாய் அசைந்தது

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 3 4 2 1

(இ) 1 2 3 4

(ஈ) 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 3 4 2 1

விளக்கம்:

கொற்கை: பாண்டிய மன்னர்களுக்குரிய துறைமுகம் “கொற்கை” ஆகும். இங்கு முத்துக்குளித்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றததையும் இங்கிருந்து அயல்நாடுகளுக்கு முத்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டதையும் “விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என்று சிறப்பித்து மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.

முசிறி: இது சேரமன்னர்களுக்குரிய துறைமுகம். அங்கு “கள்ளி” என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரங்கலங்கள் பொன்னைச் சுமந்து வந்து அதற்கீடாக மிளகைச் சுமந்து செல்லும் என்று அகநானூறு குறிப்பிடுகிறது.

புகார்: இது சோழமன்னர்களின் துறைமுக நகரமாகும். “புகார் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாவாய்கள் அலைகளால் அசைவது கட்டுத் தறியில் கட்டப்பட்ட யானை அசைவது போலிருந்தது” என்று பட்டினப்பாலை கூறுகிறது. “கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர்” என்று புறநானூறு கூறுகிறது.

26. “புனையா ஓவியம்” என்பதன் பொருள்

(அ) வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்

(ஆ) பூக்களால் வரைவது

(இ) மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்

(ஈ) கரித்துண்டுகளால் வடிவம் வரைவது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) கரித்துண்டுகளால் வடிவம் வரைவது

விளக்கம்:

வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவத்தை மட்டும் வரைவதற்குப் “புனையா ஓவியம்” என்று பெயராகும். நடைமுறையில் இன்றும் இது மென்கோட்டு ஓவியமாக (Sketch) உள்ளது.

27. கிருஷ்ணகிரி, கோத்தகிரி – இதில் காணப்படும் “கிரி” எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?

(அ) கல்லிடைக்குறிச்சி

(ஆ) பாறை

(இ) மலை

(ஈ) கோட்டை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மலை

விளக்கம்:

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். ஓங்கியுயர்ந்த பகுதி மலை, மலையை விட சற்று உயரம் குறைந்த பகுதி குன்று, குன்றை விட சற்று உயரம் குறைந்த பகுதி கரடு அல்லது பாறை.

மலையின் அருகேயுள்ள பகுதிகள் நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமைல எனப்பட்டன.

குன்றை விட குறைந்த உயரம் உள்ள பகுதிகள் சஞ்சீவிராயன் கரடு, பூம்பாறை, சிப்பிப்பாறை மட்டப்பாறை, வால்பாறை எனப்பட்டன.

மலையைக் குறிக்கும் வடசொல்லான கிரி என்ற சொல்லுடன் இணைந்து கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்று மலையை ஒட்டிய பகுதிகள் அழைக்கப்பட்டன.

28. திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?

அ. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் “திருவிளையாடல் புராணம்”

ஆ. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்.

இ. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.

ஈ. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன.

(அ) அ மற்றும் இ சரியானவை

(ஆ) ஆ மற்றும் இ சரியானவை

(இ) இ மற்றும் ஈ சரியானவை

(ஈ) அ மற்றும் ஈ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) ஆ மற்றும் இ சரியானவை

விளக்கம்:

சுந்தரபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு திருவிளையாடல் புராணம் இயற்றப்பட்டது. மொத்தம் 64 திருவிளையாடல்களை இந்நூல் விளக்குகிறது. மதுரைக் காண்டம்-18 படலங்கள். கூடற்காண்டம்-30 படலங்கள். திருவாலவாய்க் காண்டம்-16 படலங்கள். மொத்தம்-64 படலங்கள். இந்நூலில் 3363 பாடல்கள் உள்ளன.

29. பொருத்துக:

பட்டியல்-I பட்டியல்-II

அ. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது – 1. தண்டியலங்கார மேற்கோள்

ஆ. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே – 2. கிரௌல்

இ. தன்னேரில்லாத தமிழ் – 3. கால்டுவெல்

ஈ. தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது – 4. தொல்காப்பியம்

அ ஆ இ ஈ

(அ) 2 3 1 4

(ஆ) 3 4 2 1

(இ) 3 4 1 2

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 1 2

விளக்கம்:

தமிழ்மொழி பிறமொழித் துணையின்றி தனித்தியங்குவது என கால்டுவெல் மெய்ப்பித்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் கால்டுவெல். “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – பெயரியலில் முதல் நூற்பாவாகும்.

30. பொருத்துக:

நூல் ஆசிரியர்

அ. சிறுபாணாற்றுப்படை – 1. முடத்தாமக் கண்ணியார்

ஆ. திருமுருகாற்றுப்படை – 2. நல்லூர் நத்தத்தனார்

இ. பொருநராற்றுப்படை – 3.கடியலூர் உருத்திரங் கண்ணனார்

ஈ. பெரும்பாணாற்றுப்படை – 4. நக்கீரர்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 2 4 1 3

(இ) 3 1 4 2

(ஈ) 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 2 4 1 3

விளக்கம்:

சிறுபாணாற்றுப்படை: ஒய்மானாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற விரும்பிய பாணன் ஒருவனை அவனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது சிறுபாணாற்றுப்படை. இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார். திருமுருகாற்றுப்படை: பத்துப்பாட்டில் இந்நூலே கடவுள் வாழ்த்து போல முதலாவதாக அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் நக்கீரர். பதினோராம் திருமுறையில் சைவர்கள் இதனையும் சேர்த்துள்ளனர். பொருநராறுப்படை: இந்நூல் கரிகாற் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் பரிசில் பெற விரும்பும் பிறிதொரு பொருநனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதளை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார். பெரும்பாணாற்றுப்படை: இந்நூல் பரிசில் பெற்ற பேரியாழ்ப் பாணன் ஒருவன் பரிசில் பெற்ற விரும்பும் மற்றொரு பெரும்பாணனைத் தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin