General TamilTnpsc

General Tamil Model Question Paper 14

11. “எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்” இந்த அடியில் அமைந்துள்ள மோனை வைகயைத் தேர்ந்தெடு

(அ) கீழ்க்கதுவாய்

(ஆ) இணை

(இ) கூழை

(ஈ) மேற்கதுவாய்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) கீழ்க்கதுவாய்

விளக்கம்:

ஓர் அடியில் 1,2 மற்றும் 4-ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவது கீழ்க்கதுவாய் மோனையாகும்.

1 2 4

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

12. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க

(அ) வெண்மதி-வெண்+மதி

(ஆ) வெந்துவர்ந்து-வெந்து+உவர்ந்து

(இ) காடிதனை-காடு+இதனை

(ஈ) கருமுகில்-கருமை+முகில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) வெண்மதி-வெண்+மதி

விளக்கம்:

வெண்மதி-வெண்மை+மதி

13. பொருந்தாத இணையினைக் காண்க:

(அ) “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்

(ஆ) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்

(இ) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”- இளங்கோவடிகள்

(ஈ) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்

விளக்கம்:

“அழுது அடியடைந்த அன்பர்”

– மாணிக்கவாசகர்.

திருப்பெருந்துறை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கிஅ ழுது தொழுதவர் மாணிக்கவாசகர். அதனால் இவரை “அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.

14. “நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது

செய்தல் ஓம்புமின்” – இவ்வடிகள் பெற்றுள்ள நூல்

(அ) பதிற்றுப்பத்து

(ஆ) பரிபாடல்

(இ) புறநாநூறு

(ஈ) குறுந்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) புறநாநூறு

விளக்கம்:

“நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” – என்ற அடிகள் புறநானூற்றில் அமைந்துள்ள பாடலடிகள் ஆகும். “பல்சான்றீரே பல்சான்றீரே” எனத்தொடங்கும் இப்பாடலை நரிவெரூஉத் தலையார் இயற்றியுள்ளார். இவர் சங்ககாலப் புலவர் என்பதைத் தவிர, வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. இவரின் பாடல்கள் புறநானூறு தவிர குறுந்தொகையிலும் திருவள்ளுவமாலையிலும் இடம் பெற்றுள்ளன.

பாடலின் பொருள்: உயிருடன் வாழும்போதே நல்லவற்றை செய்ய வேண்டும். அஃது இயலாத போது தீயதைச் செய்தலையாவது கைவிட வேண்டும்.

15. திருக்குறள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

அ. திரு+குறள் – திருக்குறள்: மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின் “திருக்குறள்” எனப்பெயர் பெற்றது.

ஆ. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளை கூறுவர்.

இ. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன.

ஈ. திருவள்ளுவருடைய காலம் கி.மு.32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

(அ) ஆ, ஈ சரியானவை

(ஆ) அ,இ சரியானவை

(இ) இ,ஈ சரியானவை

(ஈ) ஆ,இ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அ, இ சரியானவை

விளக்கம்:

திருக்குறளின் வேறுபெயர்கள்: முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவரின் காலம் கி.மு.31 என்றும் அறிஞர் சிலர் கூறுவர். இதைக் கணக்கில் கொண்டு திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது.

16. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்

(அ) தேன்மழை

(ஆ) குயில்

(இ) தென்றல்

(ஈ) இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) குயில்

விளக்கம்:

பாரதிதாசன் வெளியிட்ட இதழ் “குயில்”.

“தேன்மழை”-சுரதாவின் கவிதை நூல்.

தென்றல்-கண்ணதாசன் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகை.

இந்தியா-பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய வார ஏடு.

17. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

அ. கோக்கோதை நாடு – 1.பறவை இனம்

ஆ. பார்ப்பு – 2. சேற்று வயல்

இ. புள்ளினம் – 3. சேர நாடு

ஈ. அள்ளற் பழனம் – 4. குஞ்சு

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 2 3 1 4

(இ) 3 4 1 2

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 1 2

விளக்கம்:

சேரநாடு-கோக்கோதை நாடு என அழைக்கப்பட்டது.

பார்ப்பு-கோழிக்குஞ்சு, மான்கன்று.

புள்ளினம்-பறவையினம்.

அள்ளல்-சேறு.

பழனம்-வயல். அ

அள்ளற்பழனம்-சேற்றுவயல்

18. “நாடக இயல்” எனும் நூலை இயற்றியவர் யார்?

(அ) பரிதிமாற் கலைஞர்

(ஆ) பம்மல் சம்மந்த முதலியார்

(இ) கிருஷ்ணசாமிப் பாவலர்

(ஈ) விபுலானந்த அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பரிதிமாற் கலைஞர்

விளக்கம்:

“நாடக இயல்” என்ற நூல் பரிதிமாற்கலைஞரால் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நூலாகும். “சூரியநாராயண சாஸ்திரி” என்ற தனது பெயரைத் தனித்தமிழில் “பரிதிமாற் கலைஞர்” என இவர் மாற்றிக் கொண்டார். மேலும் ரூபாவதி, கலாவதி போன்ற நற்றமிழ் நாடகங்களையும், “மானவிஜயம்” என்ற இலக்கிய நாடகத்தையும் இயற்றியுள்ளார்

19. “ஏலாதி” பற்றி கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?

அ. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம் “ஏலாதி”

ஆ. “ஏலாதி” நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது.

இ ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்.

ஈ. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன.

(அ) ஆ மற்றும் இ

(ஆ) இ மற்றும் ஈ

(இ) அ மற்றும் இ

(ஈ) அ மற்றும் ஈ

விடை மற்றும் விளக்கம்

விடை:(இ) அ மற்றும் இ

விளக்கம்:

ஏலாதி-இதனை இயற்றியவர் கணிமேதவியார். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். தற்சிறப்புப் பாயிரம் மற்றும் கடவுள் வாழ்த்து ஆகியவற்றைத் தவிர்த்து 80 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துகளைக் கொண்டுள்ளது.

ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்களும் உடல் பிணியை நீக்குவதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துகளும் மக்களின் அறியாமையை நீக்க வல்லமை.

20. பொருந்தா இணையைக் கண்டறிக:

வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்

(அ) இயேசு பெருமான் – 1. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

(ஆ) சிவபெருமான் – 2. சுந்தரர்

(இ) புத்தபிரான் – 3. நீலகேசி

(ஈ) நபிகள் நாயகம் – 4. உமறுப்புலவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) புத்தபிரான் 3. நீலகேசி

விளக்கம்:

“நீலகேசி” ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகும்.

குண்டலகேசி என்ற பௌத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமண சமயக்காப்பியமாகும். இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. இந்நூல் 10 சருக்கங்களையும் 894 செய்யுள்களையும் கொண்டது. இதன் மற்றொரு பெயர் நீலகேசித் தெருட்டு, ஐந்து வகை மனிதர்களைப் பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin