General Tamil Model Question Paper 13
41. “கோதைவில் குரிசில் அன்னான்”
– இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
(அ) சிவன்
(ஆ) இராமன்
(இ) அருச்சுனன்
(ஈ) இலக்குவன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) இராமன்
“கோதைவில் குரிசில் அன்னான்”
பொருள்:கோதண்டம் என்னும் வில்லேந்திய, ஆடவரில் நல்லவனாகிய இராமபிரான். கம்பராமாயணம்-அயோத்தியாக் காண்டம் (குகப்படலம்).
42. பொருந்தாத இணையினைக் காண்க:
(அ) யாதும் ஊரே யாவரும் கேளிர்-கணியன் பூங்குன்றனார்.
(ஆ) கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது – நாமக்கல் கவிஞர்
(இ) மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்-கவிமணி
(ஈ) தேனொக்கும் செந்தமிழே நீ கனி-பாரதியார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) தேனொக்கும் செந்தமிழே நீ கனி-பாரதியார்
“தேனொக்கும் செந்தமிழே நீ கனி நான் கிளி,
வேறென்னவேண்டும் இனி!” – பாரதிதாசன்
43. “தமிழ் செய்யுள் கலம்பகம்” இது யார் தொகுப்பு?
(அ) மறைமலை அடிகளார்
(ஆ) திரு.வி.க
(இ) க.சு.பிள்ளை
(ஈ) ஜி.யூ.போப்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) ஜி.யூ.போப்
ஜி.யூ.போப் அவர்கள், உயர்ந்த பண்பாடுகளை விளக்கும் 600 செய்யுள்களை நீதி நூல்களில் இருந்து ஆய்ந்தெடுத்து “தமிழ்ச்செய்யுட்கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்ததுடன் அந்தப் பாக்களுக்கு விளக்கங்களும் கொடுத்துள்ளார்.
44. கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?
(அ) இசையமுது
(ஆ) கண்ணகி புரட்சிக்காப்பியம்
(இ) தமிழியக்கம்
(ஈ) தமிழ்ப்பசி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) தமிழ்ப்பசி
“தமிழ்ப் பசி” என்ற கவிதை நூலின் ஆசிரியர் க.சச்சிதானந்தன் ஆவார். இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஆவார். இவருடைய பிற படைப்புகள் ஆனந்தத்தேன் (கவிதைத் தொகுதி) அன்னபூரணி (புதினம்). ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர் மகாவித்துவான் நவநீதகிருட்டிண பாரதியாரின் மாணவர் ஆவார்.
45. திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது?
(அ) தருமசேனர்
(ஆ) தாண்டகவேந்தர்
(இ) தம்பிரான் தோழர்
(ஈ) வாகீசர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தம்பிரான் தோழர்
“தம்பிரான் தோழர்” என்பது சுந்தரமூர்த்தி நாயனாரைக் குறிக்கும் பெயராகும்.
46. “உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் ——- வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
(அ) சீத்தலைச்சாத்தனார்
(ஆ) மாணிக்கவாசகர்
(இ) கம்பர்
(ஈ) திருமூலர்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) கம்பர்
47. ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது
(அ) சிலேடை
(ஆ) செம்மொழிச் சிலேடை
(இ) பிரிமொழிச் சிலேடை
(ஈ) பிறிதுமொழிதல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) செம்மொழிச் சிலேடை
ஒரு சொல் அல்லது தொடர் பல பொருள்படும்படி அமைவது சிலேடை எனப்படும். இரு இரண்டு வகைப்படும்
1.செம்மொழிச்சிலேடை: தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக அமைந்து பல பொருள் தருவதாகும்.
2. பிரிமொழிச் சிலேடை: ஒரு வகையில் பொருள் தரும் தொடரை வேறு வகையில் பிரித்து எழுதும் போது வேறு கொருள் தருவதாகும்.
48. “தற்குற்றம் வருவது ஓரான் புனைமலர்ச் சார்பால் அன்றி
அற்குற்ற சூழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்”
– இதில் “அல்கு” என்பதன் பொருள்.
(அ) மருள்
(ஆ) இருள்
(இ) உருள்
(ஈ) திரள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) இருள்
அல்கு-இருள்
49. வாக்கிங் போகும்போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் – சரியாக மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியத்தைக் கண்டறிக.
(அ) நடைபயிற்சி செய்யும் போது செல்பேசியைப் பயன்படுத்த வேண்டாம்.
(ஆ) நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன் படுத்த வேண்டாம்.
(இ) நடைபயிற்சி போகும் போது தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்
(ஈ) நடைபயிற்சியின் போது இணையதளம் பயன்படுத்த வேண்டாம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன் படுத்த வேண்டாம்.
50. பொருத்துக:
பொருத்தமான இடைநிலையைத் தேர்க:
அ. வருவான் – 1.இறந்தகால இடைநிலை
ஆ. காணான் – 2.நிகழ்கால இடைநிலை
இ. பார்த்தான் – 3.எதிர்கால இடைநிலை
ஈ. நடக்கிறான் – 4.எதிர்மறை இடைநிலை
அ ஆ இ ஈ
(அ) 3 4 2 1
(ஆ) 4 1 3 2
(இ) 3 4 1 2
(ஈ) 1 2 4 3
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) 3 4 1 2
வருவான்-இதில் அமைந்துள்ள இடைநிலை “வ்”.
ப்,வ் – எதிர்கால இடைநிலைகள்.
காணான்-இதில் அமைந்துள்ள இடைநிலை “ஆ”.
ஆ-எதிர்மறை இடைநிலை.
பார்த்தான்-இதில் அமைந்துள்ள இடைநிலை “த்”
த்.ட்,ற்,இன்-இறந்தகால இடைநிலைகள்.
நடக்கிறான்-இதில் அமைந்துள்ள இடைநிலை “கிறு”.
கிறு,கின்று,ஆ,நின்று-நிகழ்கால இடைநிலைகள்