General Tamil Model Question Paper 12
51. வெற்பு, சிலம்பு, பொருப்பு – ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்?
(அ) நிலம்
(ஆ) மலை
(இ) காடு
(ஈ) நாடு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) மலை
மலையைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள், வெற்பு, பொருப்பு, சிலம்பு, குறிச்சி, வடசொல்-கிரி
52. “நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே”
-இவ்விதிக்குச் சான்றைத் தேர்க:
(அ) இரட்டுற மொழிதல்
(ஆ) வட்டப்பலகை
(இ) கட்டுச்சோறு
(ஈ) காட்டுக்கோழி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) காட்டுக்கோழி
குற்றியலுகரப்புணர்ச்சி
நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே – நன்னூல் 183
“ட”கரம் (ட்) ஊர்ந்து வரும் நெடில் தொடர்க் குற்றியலுகரம், “ற”கரம் (ற்) ஊர்ந்து வரும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் வருமொழியோடு இணையும் போது அவை ஊர்ந்து வரும் ஒன்று இரட்டித்துப் புணரும்.
காடு + கோழி – காட்(ட்+உ)+கோழி = காட்டுக்கோழி.
ஆறு + பாலம் ஆற்(ற்+உ) + பாலம் = ஆற்றுப்பாலம்
கிணறு + தவளை = கிணற் (ற்+உ) + தவளை = கிணற்றுத் தவளை
53. “முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை” – இதில் மகடூஉ என்பது —–
(அ) மகள்
(ஆ) மகன்
(இ) பெண்
(ஈ) ஆண்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) பெண்
மகடூஉ-பெண்
54. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
(அ) 40
(ஆ) 35
(இ) 25
(ஈ) 45
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) 35
1.மோனைத்தொடை. 2.எதுகைத்தொடை. 3.முரண்தொடை. 4.இயைபுத்தொடை. 5.அளபெடைத்தொடை.
மேற்கண்ட 5 வகைத் தொடைகள் ஒவ்வொன்றிலும் 7 உட்பிரிவுகள் உள்ளன. 5 x 7 = 35. மொத்தம் 35 தொடை விகற்பங்கள் உள்ளன.
7 உட்பிரிவுகள்: இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று.
55. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
(அ) தொகா, தொகை நிலைத் தொடர் 7
(ஆ) தொகை, தொகா நிலைத்தொடர் 9
(இ) தொகை நிலைத்தொடர் 6; தொகை நிலைத்தொடர் 9
(ஈ) தொகை நிலைத்தொடர் 9; தொகா நிலைத்தொடர் 6
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தொகை நிலைத்தொடர் 6; தொகை நிலைத்தொடர் 9
தொகாநிலைத் தொடர் – 9
1.எழுவாய்த்தொடர். 2.விளித்தொடர். 3.வினைமுற்றுத்தொடர். 4.பெயரெச்சத்தொடர். 5.வினையெச்சத்தொடர். 6.வேற்றுமைத்தொடர். 7.இடைச்சொற்றொடர். 8.உரிச்சொற்றொடர். 9.அடுக்குத்தொடர்.
தொகைநிலைத்தொடர் – 6
1.வேற்றுமைத்தொகை. 2.வினைத்தொகை. 3.பண்புத்தொகை. 4.உவமைத்தொகை. 5.உம்மைத்தொகை. 6.அன்மொழித்தொகை
56. ஐ, ஒள ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
(அ) அளபெடை
(ஆ) எழுத்துப்பேறு
(இ) இதழ்குவி எழுத்து
(ஈ) சந்தியக்கரம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) சந்தியக்கரம்
போலி எழுத்து என்பது நன்னூல் கையாளும் ஓர் இலக்கணக் குறியீடு. இதனை “எழுத்துப்போலி” எனவும் குறிப்பிடுவர். தொல்காப்பியத்திலும் போலி பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஐயா-அய்யா; ஐயர்-அய்யர்; ஓளவை-அவ்வை.
வடமொழியில் இதனை “சந்தியக்கரம்” என்பர். சந்தியக்கரம் என்றால் கூட்டெழுத்துகளால் உருவாகும் எழுத்து என்று பொருளாகும்.
57. முற்றியலுகரச் சொல்லை எழுதுக:
(அ) மாடு
(ஆ) மூக்கு
(இ) கதவு
(ஈ) மார்பு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) கதவு
மாடு-நெடில் தொடர்க்குற்றியலுகரம், மார்பு-இடைத்தொடர்க்குற்றியலுகரம். மூக்கு-வன்தொடர்குற்றியலுகரம். கதவு-முற்றியலுகரம்.
58. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் “ஒரு பொருட் பன்மொழிச்” சொல்லைத் தேர்க:
(அ) மீமிசை ஞாயிறு
(ஆ) உயர்ந்த கட்டடம்
(இ) மேல்பகுதி
(ஈ) மையப்பகுதி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) மீமிசை ஞாயிறு
ஒரே பொருளைத் தரும் வெவ்வேறான சொற்கள் தொடர்ந்து வருவது ஒரு பொருட்பன்மொழி ஆகும்.
(எ.கா) ஒரு தனி, ஓங்கி உயர்ந்த, மீமிசை
59. “பெறு” என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
(அ) பெற்றான்
(ஆ) பெறுவான்
(இ) பெறுகிறான்
(ஈ) பெறுபவன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பெறுபவன்
பெறு-வேர்ச்சொல்.
பெற்றான்-இறந்தகால வினைமுற்று.
பெறுகிறான்-நிகழ்கால வினைமுற்று.
பெறுவான்-எதிர்கால வினைமுற்று.
பெறுபவன்-வினையாலணையும் பெயர்.
60. பொருத்துக:
(அ) இலக்கணமுடையது – 1. புறநகர்
(ஆ) மங்கலம் – 2. கால்கழுவி வந்தான்
(இ) இலக்கணப்போலி – 3. இறைவனடி சேர்ந்தார்
(ஈ) இடக்கரக்கல் – 4. நிலம்
அ ஆ இ ஈ
(அ) 2 3 1 4
(ஆ) 4 3 1 2
(இ) 1 2 3 4
(ஈ) 3 4 1 2
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) 4 3 1 2
இலக்கணமுடையது-நிலம்.
மங்கலம்-இறைவனடி சேர்ந்தார் (இறந்துவிட்டார் என்பது அமங்கலம்).
இலக்கணபோலி-புறநகர் (நகர்ப்புறம் என்பது இலக்கண-முடையது).
இடக்கரடக்கல்-கால் கழுவி வந்தான் (சபையில் கூற முடியாத தொடர்).