General Tamil Model Question Paper 12
41. “முத்தொள்ளாயிரம்” இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
(அ) சேர, சோழ, பாண்டியர்
(ஆ) பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்
(இ) முகமதியார், ஆங்கிலேயர், மராட்டியர்
(ஈ) குப்தர், மௌரியர், டச்சுக்காரர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) சேர, சோழ, பாண்டியர்
முத்தொள்ளாயிரம்: இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியரைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டது. ஆயினும் 130 பாடல்களே கிடைத்துள்ளன.
42. பொருத்துக:
(அ) சிக்கனம் – 1. கவிஞர் தாரா பாரதி
(ஆ) மனிதநேயம் – 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம்
(இ) காடு – 3. சுரதா
(ஈ) வேலைகளல்ல வேள்விகளே – 4. வாணிதாசன்
அ ஆ இ ஈ
(அ) 4 3 2 1
(ஆ) 2 4 3 1
(இ) 3 2 4 1
(ஈ) 1 2 3 4
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 3 2 4 1
43. “மணிமேகலை வெண்பா”வின் ஆசிரியர் யார்?
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) திரு.வி.க
(ஈ) கவிமணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) பாரதிதாசன்
“மணிமேகலை வெண்பா” என்ற நூலின் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்.
44. 1942-இல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான “பர்மா வழி நடைப்பயணம்” நூலின் ஆசிரியர்
(அ) வைத்தியநாத சர்மா
(ஆ) வெ.சாமிநாத சர்மா
(இ) தேவன்
(ஈ) அநுத்தமா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) வெ.சாமிநாத சர்மா
வெ.சாமிநாத சர்மா.
காலம்: செப்டம்பர் 17, 1895 முதல் ஜீலை, 1, 1978 வரை.
சிறப்புகள்: பன்மொழி அறிஞர், மொழி பெயர்ப்பாளர், இதழாசிரியர், அறிவியல் தமிழின் முன்னோடி.
ஊர்: வெங்களத்தூர், (திருவண்ணாமலை மாவட்டம்)
கதைகள், நாடகங்கள், அரசியல் கட்டுரைகள், வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், பயணக் கட்டுரைகள் என 80-க்கும் மேற்பட்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்றுதான் “பர்மா வழி நடைப்பயணம்” ஆகும்.
45. “ஆனந்தத்தேன்” நூலின் ஆசிரியர்
(அ) வைரமுத்து
(ஆ) தமிழன்பன்
(இ) புதுமைப்பித்தன்
(ஈ) க.சச்சிதானந்தன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) க.சச்சிதானந்தன்
ஆனந்தத்தேன், அன்னபூரணி, தமிழ்ப்பசி ஆகியவை க.சச்சிதானந்தன் அவர்களின் படைப்புகளாகும். இவர் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
(அ) விடுதலைக்கவி – 1.அப்துல் ரகுமான்
(ஆ) திவ்வியகவி – 2. வாணிதாசன்
(இ) கவிஞரேறு – 3. பாரதியார்
(ஈ) கவிக்கோ – 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
அ ஆ இ ஈ
(அ) 2 4 1 3
(ஆ) 1 3 4 2
(இ) 3 4 2 1
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 3 4 2 1
47. பொருத்துக:
(அ) பூங்கொடி – 1. கண்ணதாசன்
(ஆ) கொடிமுல்லை – 2. சுரதா
(இ) ஆட்டனத்தி ஆதிமந்தி – 3. முடியரசன்
(ஈ) பட்டத்தரசி – 4. வாணிதாசன்
அ ஆ இ ஈ
(அ) 2 1 4 3
(ஆ) 1 2 3 4
(இ) 3 4 1 2
(ஈ) 4 3 2 1
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) 3 4 1 2
48. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ———-
(அ) திருமங்கையாழ்வார்
(ஆ) திருமழிசையாழ்வார்
(இ) குலசேகராழ்வார்
(ஈ) நம்மாழ்வார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குலசேகராழ்வார்
குலசேகர ஆழ்வார்: இவர் சேர நாட்டில் திருவஞ்சைக்களத்தில் மன்னர் குலத்தில் தோன்றியவர். இவர் தமிழ். வடமொழி இரண்டிலும் வல்லவர். வடமொழியில் “முகுந்தமாலை” என்னும் நூலினைப் படைத்துள்ளார். தமிழில் இவர் எழுதிய பாசுரங்கள் “பெருமாள் திருமொழி” என அழைக்கப்படுகிறது. அவை மொத்தம் 105 பாடல்களாகும்.
49. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
(அ) மணிமேகலை
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) சீவகசிந்தாமணி
(ஈ) பெரியபுரணம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) சிலப்பதிகாரம்
“ஊழிதொறு ஊழிதொறு உலகங் காக்க!
அடியில் தன்அளவு அரசர்க்கு உணர்த்தி,
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்ககத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”
சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம் – 15வது பாடல்
50. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்
(அ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
(ஆ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
(இ) சிவப்பிரகாசம்
(ஈ) மணிவாசகர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.