General TamilTnpsc

General Tamil Model Question Paper 11

61. “கூவா முன்னம் இளையோன் குறுகி நீ

ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்”

– இச்செய்யுளடிகளில் “இறைஞ்சினான்” – யார்?

(அ) சுக்ரீவன்

(ஆ) குகன்

(இ) இலக்குவன்

(ஈ) அனுமன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) குகன்

கம்பராமாயணம்-அயோத்தியாக் காண்டம்.

குகப்படலம்

“கூவா முன்னம் இளையோன் குறுகி நீ

ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்”

பொருள்: இராமன் குகனை அழைக்கும் முன்னர், இளையனாகிய இலக்குவன் அவனை நெருங்கி “யார் நீ” என வினவினான். “இறைஞ்சினான்” என்பது குகனைக் குறிக்கிறது.

62. சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக:

(அ) அம்பி – 1. குஞ்சி

(ஆ) அல் – 2. பறை

(இ) துடி – 3. இருள்

(ஈ) தலைமுடி – 4. படகு

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 1 2 3 4

(இ) 2 3 4 1

(ஈ) 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 4 3 2 1

அம்பி-படகு (ஆயிரம் அம்பிக்கு குகன் சொந்தக்காரன்).

அல்-இருள்.

துடி-பறை (பாலை நிலத்தின் பறை “துடி”.

தலைமுடி-குஞ்சி (இருண்ட குஞ்சி மண்ணுறப் பணிந்து – இருள் போன்ற நீண்ட முடியுடைய தலை மண்ணில் பட விழுந்து வணங்கினான்)

63. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக:

(அ) விந்தன் – 1. குருதிப்புனல்

(ஆ) சு.சமுத்திரம் – 2. பெற்றமனம்

(இ) இந்திரா பார்த்தசாரதி – 3. சோற்றுப்பட்டாளம்

(ஈ) மு.வ. – 4. பாலும் பாவையும்

அ ஆ இ ஈ

(அ) 4 3 1 2

(ஆ) 4 1 3 2

(இ) 3 2 1 4

(ஈ) 2 4 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 3 1 2

64. சரியானவற்றைத் தேர்க:

உரிபொருள் திணை

1. ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம்

2. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் முல்லை

3. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல்

4. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் பாலை

(அ) 1, 2ம் சரி

(ஆ) 2, 3ம் சரி

(இ) 1,3ம் சரி

(ஈ) 3,4ம் சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 1,3ம் சரி

நிலம் உரிப்பொருள்

குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல் இரங்கல் இரங்கல் நிமித்தமும்

பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

65. சரியானவற்றைத் தேர்க:

தெய்வம் திணை

1. முருகன் குறிஞ்சி

2. இந்திரன் மருதம்

3. துர்க்கை நெய்தல்

4. திருமால் பாலை

(அ) 2,3ம் சரி

(ஆ) 1,2ம் சரி

(இ) 2,4ம் சரி

(ஈ) 1,4ம் சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) 1,2ம் சரி

நிலம் தெய்வம்

குறிஞ்சி முருகன் (சேயோன்)

முல்லை திருமால் (மாயோன்)

மருதம் இந்திரன்

நெய்தல் வருணன்

பாலை துர்க்கை

66. இலக்கணக்குறிப்புச் சொல்லை எழுதுக:

இன்னிசை அளபெடை

(அ) சாஅய்

(ஆ) குறீஇ

(இ) படூஉம்

(ஈ) தாங்குறூஉம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தாங்குறூஉம்

தாக்குறூஉம்-இன்னிசைஅளபெடை

இன்னிசை அளபெடை மூன்று அசைகளைக் கொண்ட காய்ச்சீராக இருக்கும். தாங்/கறூ/ உம்

செய்யுளிசை அளபெடை:

இவ்வளபெடை ஈரசைச் சீர்களாக இருக்கும். சா/அய். புடூ/உம்

செல்லிசை அளபெடை:

இவ்வளபெடை “இ” என்னும் எழுத்தில் முடிந்திருக்கும். குறீஇ

67. பின்வரும் இணைகளில் பொருந்தாத இணையைத் தெரிந்தெடுத்து எழுதுக:

(அ) சூரியகாந்தி-நா.காமராசன்

(ஆ) ஞானரதம்-பாரதியார்

(இ) எழுத்து-சி.சு.செல்லப்பா

(ஈ) குயில்பாட்டு-பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) குயில்பாட்டு-பாரதிதாசன்

குயில்பாட்டு-பாரதியார்

68. பின்வருவனவற்றுள் எது பொருந்தாதது?

(அ) நாககுமார காவியம்

(ஆ) உதயண குமார காவியம்

(இ) குண்டலகேசி

(ஈ) நீலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குண்டலகேசி

குண்டலகேசி-ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். ஏனைய மூன்றும் ஐஞ்சிறு காப்பியங்களாகும்.

69. ஈற்றயலடி முச்சீராக, ஏனைய அடிகள் நாற்சீசராக – அமையும் பா வகை – பின்வருவனவற்றுள் எது?

(அ) நேரிசை ஆசிரியப்பா

(ஆ) நிலைமண்டில ஆசிரியப்பா

(இ) அடிமறி மண்டில ஆசிரியப்பா

(ஈ) இணை குறளாசிரியப்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நேரிசை ஆசிரியப்பா

ஈற்றயலடி முச்சீராயும் ஏனைய அடிகள் நாற்சீராய் அமைந்திருப்பது நேரிசை ஆசிரியப்பா. அனைத்து அடிகளும் நாற்சீரடிகளாய் அமைந்திருப்பது நிலைமண்டில ஆசிரியப்பா. ஈற்றடியும் முதலடியும் நாற்சீரடிகளாய், இடையிலுள்ள அடிகள் இரு சீரடிகளாகவும், முச்சீரடிகளாவும் வருவது இணைக்குறள் ஆசிரியப்பா, பாடலில் உள்ள அடிகளை முன்பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவது அடிமறி மண்டிலய ஆசிரியப்பா அனைத்து அடிகளும் நாற்சீரடிகளாய் அமைந்திருக்கும்

70. பொருளறிந்து பொருத்துக:

சொல் பொருள்

(அ) கலாபம் – 1. கிளி

(ஆ) விவேகன் – 2. பொய்கை

(இ) வாவி – 3. ஞானி

(ஈ) அஞ்சுகம் – 4. தோகை

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 4 2 3 1

(இ) 4 2 1 3

(ஈ) 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 3 2 1

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin