General Tamil Model Question Paper 11
41. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி” – எனத் தமிழினத்தின் தென்மையைப் பற்றிக் கூறும் நூலின் பெயர்
(அ) புறநானூறு
(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை
(இ) பதிற்றுப்பத்து
(ஈ) தொல்காப்பியம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஆ) புறப்பொருள் வெண்பாமாலை
42. பொருந்தாத பெயரைச் சுட்டுக:
(அ) பிங்கலம்
(ஆ) திவாகரம்
(இ) சூளாமணி
(ஈ) சூடாமணி
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) சூளாமணி
சூளாமணி – ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. ஏனைய மூன்றும் நிகண்டு வகை நூல்களாகும். “நிகண்டு” என்பது சொற்பொருள் விளக்கம் தரும் அகராதியாகும்
43. பொருந்தாத இணையைக் கட்டுக:
(அ) கூறை-அறுவை
(ஆ) துகில்-அகில்
(இ) கலிங்கம்-காழகம்
(ஈ) சீலை-புடவை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) துகில்-அகில்
கூறை-ஆடை; அறுவை-ஆடை; கலிங்கம்-ஆடை; காழகம்-ஆடை; சீலை-ஆடை; புடவை-ஆடை; துகில்-ஆடை; அகில்-வாசனைக் கட்டையைத் தரும் ஒருவகையான மரம்.
44. “குளம் நிறைந்த நீர்த்தடம்போல் குளிர் தூங்கும் பரப்பின தாய்
வளம் மருவும் நிழல்தருதண் ணீர்ப் பந்தர் வந்தணைந்தார்” – “இப்பாடலுக்குரிய கதாநாயகன்”
(அ) திருநாவுக்கரசர்
(ஆ) ஞானசம்பந்தர்
(இ) சுந்தரர்
(ஈ) மணிவாசகர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) திருநாவுக்கரசர்
பெரியபுராணம்-அப்பூதியடிகள் புராணம்
“அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உ ளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றிக்
குளம்நிறைந்த நீர்த்தடம்போல் குளிர்த்தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல்தருதண் ணீர்ப்பந்தர் வந்தணைந்தார்
– சேக்கிழார்
பொருள்: அளவற்ற மக்கள் நடந்து செல்லும் வழியில், கோடையின் மிகுந்த வெப்பத்தினைப் போக்கியருளும் கருணைமிக்க பெரியோர் உள்ளம் போன்றும் நீர்த்தடாகம் போன்றும் அமைக்கப்ப பெற்ற குளிர்ச்சி நிறைந்த தண்ணீர்ப்பந்தல் அருகே திருநாவுக்கரசர் வந்து சேர்ந்தார்.
45. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
மணம்-மனம் என்ற சொல்லின் பொருள் யாது?
(அ) உள்ளம்-வாசனை
(ஆ) எண்ணம்-இதயம்
(இ) வாசனை-உள்ளம்
(ஈ) மணத்தல்-மானம்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) வாசனை-உள்ளம்
46. கீழ்க்காணும் ஒற்றளபெடைச் சொற்களுள் மாறுபட்டு நிற்பதை கண்டறிந்து எழுதுக:
(அ) வாழ்ழ்க்கை
(ஆ) சங்ங்கு
(இ) நெஞ்ஞ்சு
(ஈ) கண்ண்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) வாழ்ழ்க்கை
செய்யுளில் ஓசை குறையுமிடத்தில் ஒற்றொழுத்துகள் மிக்கு ஒலிப்பதே ஒற்றளபெடையாகும். ஓற்றளபெடையில் மிக்கு ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம் 11. அவையாவன:ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் மற்றும் ஃ எனவே “ழ்” அளபெடுக்காது.
47. பயணம் என்ற சொல்லிற்கு செலவு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
(அ) மறைமலை அடிகள்
(ஆ) பரிதிமாற்கலைஞர்
(இ) திரு.வி.கல்யாணசுந்தரனார்
(ஈ) பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
விடை மற்றும் விளக்கம்
விடை: (இ) திரு.வி.கல்யாணசுந்தரனார்
48. “அரியவற்றுள் எல்லாம் அரிதே – பெரியாரைப்” – இவ்வடியில் பயின்றுவரும் எதுகை.
(அ) இணை எதுகை
(ஆ) பொழிப்பு எதுகை
(இ) கீழ்க்கதுவாய் எதுகை
(ஈ) மேற்கதுவாய் எதுகை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) மேற்கதுவாய் எதுகை
அரியவற்றுள் எல்லாம் அரிதே – பெரியாரைப்
முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் இரண்டாமெழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் எதுகையாகும்.
49. அப்பாதான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
இதில் பயின்று வரும் இயைபுச் சொற்கள்
(அ) அப்பா-ஆருயிர்
(ஆ) அப்பா-அன்புசொல்
(இ) வேண்டுதல்-வேண்டும்
(ஈ) வேண்டும்-வேண்டும்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) வேண்டும்-வேண்டும்
இறுதிச்சீர் ஒன்றி வருவது இயைபுத் தொடை ஆகும்.
50. ஈற்றடியின் ஈற்றுச் சீரானது ஓரசை வாய்பாடுகளுள் ஒன்று கொண்டு முடியும் பா வகை.
(அ)வஞ்சிப்பா
(ஆ) கலிப்பா
(இ) வெண்பா
(ஈ) ஆசிரியப்பா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) வெண்பா
வெண்பா-ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் ஓரசை வாய்பாடுகளுள் ஏதேனும் ஒன்றால் முடிவு பெறும்.