General Tamil Model Question Paper 11
11. பின்வரும் பட்டியலில் வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் எழுதிய நூல் எது?
(அ) தமிழ் நாவலர் சரிதை
(ஆ) புலவர் புராணம்
(இ) தமிழ்ப் புலவர் சரித்திரம்
(ஈ) பாவலர் சரித்திரத் தீபகம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தமிழ்ப் புலவர் சரித்திரம்
சூரியநாராயண சாஸ்திரிகள் எழுதிய நூல்கள் தமிழ்ப்புலவர் சரித்திரம், ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சித்திரக்கவி போன்றவையாகும்.
12. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று A : 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம்.
காரணம் R : பலவகைப் பாக்களையும் கலந்து பாடுவது, கலம்பகம், அகமும் புறமும் கலந்து பாடப்படுவது கலம்பகம்.
(அ) A சரி ஆனால் R தவறு
(ஆ) A தவறு ஆனால் R சரி
(இ) A மற்றும் R இரண்டும் சரி
(ஈ) A மற்றும் R இரண்டும் தவறு
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) A மற்றும் R இரண்டும் சரி
கலம்பகம் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். பல்வகைப் பொருள்களைப் பற்றி பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும். 18 உறுப்புகளைக் கொண்டது. தமிழில் முதன் முதலில் தோன்றிய கலம்பக வகை நூல் கலம்பகம் ஆகும்.
13. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – இக்குறட்பாலில் “நுணங்கிய” என்னும் பொருளுணர்த்தும் ஆங்கிலச்சொல்
(அ) SILENCER
(ஆ) INTELLIGENT
(இ) SIGNOR
(ஈ) SILVER-TONGUED
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) INTELLIGENT
நுணங்கிய-நுட்பமான அறிவு. நுட்பமான அறிவு-Intelligent.
14. “மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்” – இப்பாடல் ஆசிரியரைக் கண்டறிந்து எழுதுக:
(அ) விளம்பி நாகனார்
(ஆ) சமண முனிவர்
(இ) முன்றுறை அரையனார்
(ஈ) நல்லாதனார்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(அ) விளம்பி நாகனார்
விளம்பிநாகனார் எழுதிய “நான்மணிக்கடிகை” என்ற நூலில் வினாவில் கொடுக்கப்பட்டுள்ள பாடலடிகள் அமைந்துள்ளன.
15. பின்வருவனவற்றுள் “ஈறுபோதல்” “முன் நின்ற மெய் திரிதல்” என்னும் விதிகளின் படி புணர்ந்தது
(அ) கருங்கல்
(ஆ) பெருங்குன்று
(இ) சிற்றூர்
(ஈ) செங்கதிரோன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) செங்கதிரோன்
செங்கதிரோன்-பண்புப்பெயர் புணர்ச்சி
செம்மை + கதிரோன்
“ஈறுபோதல்” விதிப்படி மை விகுதி கெட்டு செம் + கதிரோன் என்றானது. முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி வருமொழி முதலில் வந்த வல்லினத்திற்கு (க) இனமான ஙகரம் தோன்றி நிலைமொழி ஈற்று மெய் கெட்டு “செங்கதிரோன்” என்று புணர்ந்தது.
16. பின்வருவனவற்றுள் பொருந்தாத பொருள் எது?
(அ) புரம்-சிறந்த ஊர்
(ஆ) பாக்கம்-கடற்கரைச் சிற்றூர்
(இ) குப்பம்-குறிஞ்சி நில வாழ்விடம்
(ஈ) பட்டினம்-கடற்கரை நகரம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) குப்பம்-குறிஞ்சி நில வாழ்விடம்
குப்பம்-நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடம் ஆகும்.
(எ.கா) நொச்சிக்குப்பம், மஞ்சக்குப்பம், மந்தாரக்குப்பம்
17. அற நூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்துத் “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” – என்னும் நூலாகத் தொகுத்து விளக்கம் அளித்தவர்
(அ) H.A.கிருஷ்ணப்பிள்ளை
(ஆ) வீரமாமுனிவர்
(இ) ஜி.யூ.போப்
(ஈ) கால்டுவெல்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) ஜி.யூ.போப்
ஜி.யூ.போப் அவர்கள் உயர்ந்த பண்பாடுகளை விளக்கும் 600 செய்யுள்களை நீதிநூல்களில் இருந்து தேர்ந்தெடுத்து “தமிழ்ச் செய்யுட் கலம்பகம்” என்னும் நூலாகத் தொகுத்ததுடன் அதன் பாக்களுக்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
18. “சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” எனக் கூறியவர்.
(அ) அம்பேத்கர்
(ஆ) காந்தியடிகள்
(இ) ஈ.வெ.இராமசாமி
(ஈ) அண்ணாதுரை
விடை மற்றும் விளக்கம்
விடை: (அ) அம்பேத்கர்
19. பின்வருபவருள் யார் சைவ அடியாரில்லை?
(அ) வாகீசர்
(ஆ) ஆளுடைய பிள்ளை
(இ) தம்பிரான் தோழர்
(ஈ) பெரியவாச்சான் பிள்ளை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) பெரியவாச்சான் பிள்ளை
பெரியவாச்சான் பிள்ளை-வைணவர்
20. நூலாசிரியரோடு நூலைப் பொருத்துக:
(அ) சுத்தானந்த பாரதி – 1. ஞானரதம்
(ஆ) வ.வே.சு.ஐயர் – 2. ஏழைபடும் பாடு
(இ) சுப்பிரமணிய பாரதி – 3. விநோதரஸ மஞ்சரி
(ஈ) வீராசாமி செட்டியார் – 4. கமலவிஜயம்
அ ஆ இ ஈ
(அ) 2 4 3 1
(ஆ) 1 2 3 4
(இ) 1 3 2 4
(ஈ) 2 4 1 3
விடை மற்றும் விளக்கம்
விடை: (ஈ) 2 4 1 3