General TamilTnpsc

General Tamil Model Question Paper 10

91. திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?

(அ) திருக்குறுந்தாண்டகம்

(ஆ) திருவெழுக்கூற்றிருக்கை

(இ) திருநெடுந்தாண்டகம்

(ஈ) திருவந்தாதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவெழுக்கூற்றிருக்கை

திருவெழுக்கூற்றிருக்கை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். சொல்லணியில் பாடப்படும் நூலாகும். திருவெழுக்கூற்றிருக்கை என்னும் பெயரில் திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நக்கீர தேவ நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடல்கள் இயற்றியுள்ளனர்.

92. விடைத்தேர்க: வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?

(அ) முதுமொழி மாலை

(ஆ) செந்தமிழ் இலக்கணம்

(இ) கொடுந்தமிழ் இலக்கணம்

(ஈ) தொன்னூல் விளக்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தொன்னூல் விளக்கம்

தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது. இவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: தேம்பாவணி-இயேசுவின் தந்தையான சூசையப்பரின் வாழ்க்கை வரலாறு, சதுரகராதி-தமிழ் மொழியில் தோன்றிய முதல் அகராதி நூல், தொன்னூல் விளக்கம்-எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களைக் கூறும் நூல். பரமார்த்த குரு கதை-நகைச்சுவைக் கதை. மேலும் ஞானோபதேசம், திருக்காவலூர்க் கலம்பகம், தமிழ், இலத்தீன், பிரெஞ்சு, போர்த்துகீசிய அகராதிகளையும் எழுதியுள்ளார்.

93. “ஏற்பாடு” என்பதன் பொருள்

(அ) சூரியன் உதிக்கும் நேரம்

(ஆ) ஏற்றப்பாட்டுப் பாடுதல்

(இ) சந்திரன் தோன்றும் நேரம்

(ஈ) சூரியன் மறையும் நேரம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சூரியன் மறையும் நேரம்

வினாவில் “ஏற்பாடு” என்று பிழையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எற்பாடு என்பதே சரியான சொல்லாகும். எற்பாடு என்பது நெய்தல் திணைக்குரிய சிறுபொழுதாகும். எற்பாடு-பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையாகும். ஏற்பாடு-எல்+பாடு. எல்-சூரியன். பாடு-மறையும் நேரம்

94. “க” – என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?

(அ) அரசன்

(ஆ) காற்று

(இ) மயில்

(ஈ) காத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) காத்தல்

க-அரசன், காற்று, மயில்; கா-காத்தல், சோலை

95. “சலவரைச் சாரா விடுதல் இனிதே”

“சலவர்” – என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்

(அ) Sorrow full Person

(ஆ) Importer

(இ) Violent Person

(ஈ) Deceit full Person

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) Deceit full Person

சலவரின் பொருள்-வஞ்சகர். வஞ்சகன்-Deceitful Person (வினாவில் Deceitful என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது). துயரமுடையோன் – Sorrowful Person (வினாவில் Sorrowfull என்று தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது). வன்முறையாளன்-Voilent Person. இறக்குமதியாளர்-Importer.

96. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

(அ) சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு

(ஆ) தாலாட்டு, சீராட்டு, பாராட்டு, நீராட்டு

(இ) நீராட்டு, பாராட்டு, சீராட்டு, தாலாட்டு

(ஈ) பாராட்டு, நீராட்டு, தாலாட்டு, சீராட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சீராட்டு, தாலாட்டு, நீராட்டு, பாராட்டு

97. செயப்பாட்டுவினைச்சொற்றொடரைக் காண்க:

(அ) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது

(ஆ) தச்சன் நாற்காலியைச் செய்தான்

(இ) நாற்காலியைச் செய்தவன் தச்சன்

(ஈ) நாற்காலியைத் தச்சன் செய்தான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது

நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது-செயப்பாட்டுவினை. B, C, D மூன்றுமே செய்வினை.

98. “கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல” என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?

(அ) இன்பம்

(ஆ) வருமுன் காத்தல்

(இ) மகிழ்ச்சி

(ஈ) துன்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) துன்பம்

99. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) வைகுதல் வைகறை வைகலும் வைகல்

(ஆ) வைகறை வைகுதல் வைகல் வைகலும்

(இ) வைகலும் வைகல் வைகுதல் வைகறை

(ஈ) வைகல் வைகலும் வைகறை வைகுதல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வைகல் வைகலும் வைகறை வைகுதல்

100. வாக்கியங்களைக் கவனி:

கூற்று (A) : எ.கா:”நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்.

காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது, மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலை பெயர்கள் இடம் பெறுவது நேர்க்கூற்று ஆகும்.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல

(ஆ) இவற்றுள் (A) தவறு ஆனால் (R) சரி

(இ) இவற்றுள் (A) சரி ஆனால் (R) தவறு

(ஈ) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.

வினாவானது தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கூற்று (A): “நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று பவானி காயத்திரியிடம் கூறினாள் என்பது நேர்க்கூற்றாகும்.

இவ்வாறு வினா அமைந்திருக்க வேண்டும். நேர்க்கூற்றில் மேற்கோள் குறிகள், தன்மை, முன்னிலைப் பெயர்களும் இங்கு, இப்போது, இவை என்ற கட்டுப்பெயர்களும், நேற்று, இன்று, நாளை என்ற காலப்பெயர்களும் வரும்.

Previous page 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin