General Tamil Model Question Paper 1
10. உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
(அ) உலகு
(ஆ) உலவு
(இ) உளது
(ஈ) உளம்
விடை மற்றும் விளக்கம்
(அ) உலகு
11. ஒருமைப்பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(அ) அவன் கவிஞன் அல்லர்
(ஆ) அவன் கவிஞன் அன்று
(இ) அவன் கவிஞன் அல்லன்
(ஈ) அவன் அல்லன் கவிஞன்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) அவன் கவிஞன் அல்லன்
அன்று – ஒருமை அஃறிணை, அல்ல – பன்மை அஃறிணை, அல்லன் – ஒருமை உயர்திணை, அல்லர் – பன்மை உயர்திணை, “அவன் கவிஞன் அல்லன்” என்பதே சரியான தொடராகும்.
12. ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை ——–
(அ) துளசி
(ஆ) கீழாநெல்லி
(இ) தூதுவளை
(ஈ) கற்றாழை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) தூதுவளை
தூதுவளையின் வேறுபெயர்கள்: தூதுளை, சிங்கவல்லி. இதனை வள்ளலார் “ஞானப்பச்சிலை” எனப்போற்றுகிறார்.
13. பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க:
வினைத்தொகை.
(அ) செந்நாய்
(ஆ) சூழ்கழல்
(இ) வெண்மதி
(ஈ) கண்ணோட்டம்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) சூழ்கழல்
சூழ்கழல் – வினைத்தொகை. சூழ்ந்த கழல், சூழ்கின்ற கழல், சூழும் கழல் என மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருவதால் இது வினைத்தொகையாகும். செந்நாய், வெண்மதி-பண்புத்தொகை. கண்ணோட்டம்-தொழிற்பெயர்.
14. தில்லையாடி வள்ளியம்மை – நாட்டில் பிறந்தார்
(அ) அமெரிக்கா
(ஆ) இத்தாலி
(இ) இந்தியா
(ஈ) தென்னாப்பிரிக்கா
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) தென்னாப்பிரிக்கா
தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898-ஆம் ஆண்டு முனுசாமி-மங்களம் இணையருக்கும் மகளாய்ப் பிறந்தார்.
15. “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?
(அ) அசதிக்கோவை
(ஆ) ஆசாரக்கோவை
(இ) திருக்கோவையார்
(ஈ) மும்மணிக் கோவை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(இ) திருக்கோவையார்
“திருக்கோவையார்” என்ற நூலின் ஆசிரியர் மாணிக்கவாசகர். இவர் எழுதிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையில் அமைந்துள்ளன. இவர் தன்னை நாயகியாகக் பாவித்து, ‘திருவெம்பாவை” என்ற நூலை இயற்றினார். அதனால் மனம் மகிழ்ந்த இறைவனார் (சிவபெருமான்) மாணிக்கவாசகரிடம் “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று கூறினார். அதனால் இயற்றப்பட்டதுதான் “திருக்கோவையார்” என்னும் நூலாகும்.
16. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக:
(அ) வெண்பா
(ஆ) விருத்தப்பா
(இ) கலி விருத்தம்
(ஈ) கலித்தாழிசை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) கலித்தாழிசை
17. பொருத்துக:
பட்டியல் I – பட்டியல் II
(அ) களவழி நாற்பது – 1. நிலையாமை
(ஆ) முதுமொழிக் காஞ்சி – 2. வேளாண் வேதம்
(இ) நாலடியார் – 3. ஆறு மருந்து
(ஈ) ஏலாதி – 4. புறப்பொருள்
குறியீடுகள்:
அ ஆ இ ஈ
(அ) 3 1 2 4
(ஆ) 2 3 4 1
(இ) 1 3 4 2
(ஈ) 4 1 2 3
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஈ) 4 1 2 3
களவழி நாற்பது, போர்க்கள கொடுமைகளைப் பற்றி விளக்கும் புறப்பொருள் நூலாகும். முதுமொழிக்காஞ்சி வாழ்க்கையின் நிலையாமை பற்றிக் கூறுகிறது. நாலடியாரின் மற்றொரு பெயர் “வேளாண் வேதம்”. ஏலாதி கூறும் ஆறு மருந்துப் பொருள்களாவன. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு.
18. பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள் – இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
(அ) பிறவினை
(ஆ) தன்வினை
(இ) கலவை
(ஈ) செயப்பாட்டு வினை
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) தன்வினை
கற்றாள் – தன்வினை ; கற்பித்தாள் – பிறவினை
19. பொருந்தாத தொடரைக் கண்டறிக:
(அ) ஒறுத்தார் – பொறுத்தார்
(ஆ) அஞ்சாமை – துஞ்சாமை
(இ) அறிவுடையார் – அறிவிலார்
(ஈ) வையார் – வைப்பர்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) அஞ்சாமை – துஞ்சாமை
எதிர்ப்பதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அஞ்சாமை x அஞ்சுவது என்பதே சரியான எதிர்ப்பதமாகும்.
20. காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாகக் கொண்டாடுகிறோம்?
(அ) கல்விப் பணி ஆற்றிய நாள்
(ஆ) கல்வி வளர்ச்சி நாள்
(இ) தொழில் முன்னேற்ற நாள்
(ஈ) தேசிய கல்வி நாள்
விடை மற்றும் விளக்கம்
விளக்கம்:
(ஆ) கல்வி வளர்ச்சி நாள்
காமராஜரின் பிறந்தநாளான ஜீலை 15-ம் நாளை ஆண்டுதோறும் தேசிய கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.