Babur – Tnpsc History Study Materials
முகலாயப் பேரரசு :-
பாபர் [ ஜாகிருதின் முகமது பாபர் ] –> 1526 – 1530:
* பாபர் பிறந்த வருடம் – 1483.
* இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர். இவரது இயற்பெயர் ஜாகிருதின் முகமது.
* பாபர், தனது தந்தை வழியில் தைமூருக்கும், தாய் வழியில் செங்கிஸ்கானுக்கும் உறவினர்.
* பாபர் தனது 11ஆம் வயதில் தந்தை உமர்சேக் மிர்சாவின் பர்கானாவிற்கு வாரிசாகப் பொறுப்பேற்றார். ஆனால் தூரத்து உறவினரால் அந்தப் பதவி தட்டிப் பறிக்கப்படவே, பாபர் தனது ஆட்சிப்பகுதியை இழந்தார். சிறிது காலம் நாடோடியாகத் திரிந்த அவர், தனது மாமன்கள் ஒருவரிடமிருந்து காபூலைக் கைப்பற்றினர். பின்னர் இந்தியாவைக் கைப்பற்றும் ஆசையை வளர்த்துக் கொண்ட பாபர் 1519 – 1523 வரையிலான காலத்தில் நான்கு படையெடுப்புகளை மேற்கொண்டார்.
* பாபர் படையெடுப்பின் போது இந்தியாவின் நிலை :
* டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் இப்ராகிம் லோடி. இவரால் பிரபுக்களை கட்டுப்படுத்த இயலவில்லை. இராஜபுத்திரர்களின் தலைவரான இராணாசங்கா அதிக வலிமை பெற்று விளங்கியதோடு டெல்லியைக் கைப்பற்றும் ஆர்வத்துடன் காணப்பட்டார்.
* இச்சமயத்தில் பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வரும்படி
[1] ஆலம்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும்,
[2] பஞ்சாபின் ஆளுநர் தெளலத்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது.