General Tamil

9th Tamil Unit 8 Questions

9th Tamil Unit 8 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 9th Tamil Unit 8 Questions With Answers Uploaded Below.

1. கீழ்க்கண்டவற்றுள் எவை தமிழர் வழிபாடுகளாக திகழ்ந்தன?

1. இயற்கை வழிபாடு

2. நடுகல் வழிபாடு

3. தெய்வ வழிபாடு

4. ஓவிய வழிபாடு

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 2, 3, 4 சரி

ஈ) 1, 3, 4 சரி

2. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. குறிஞ்சி – திருமால்

2. முல்லை – முருகன்

3. மருதம் – இந்திரன்

4. நெய்தல் – வருணன்

5. பாலை – கொற்றவை

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 3, 4, 5 சரி

ஈ) 1, 4, 5 சரி

(விளக்கம்: 1. குறிஞ்சி – முருகன், 2. முல்லை – திருமால்)

3. பழந்தமிழர்களிடையே வெற்றியைக் கொண்டாட _____ என்னும் தெய்வத்தை வணங்குவது மரபாக இருந்தது.

அ) திருமால்

ஆ) வருணன்

இ) கொற்றவை

ஈ) இந்திரன்

(விளக்கம்: கொற்றவை – பெண் தெய்வம்

இயற்கைப் பொருள்களான ஞாயிறு, நிலவு, நெருப்பு முதலானவற்றையும் பழந்தமிழர்கள் வணங்கினர். வீரத்தை உணர்த்த வீரர்களுக்கு ‘ நடுகல் வழிபாடு ‘ செய்வதும் வழக்கத்தில ல் இருந்தது.)

4. ” நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் “

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) அகத்தியம்

ஈ) அகநானூறு

(விளக்கம்: அகநானூறு 67வது பாடல்)

5. பழந்தமிழர்கள் தைத்திங்கள் நோன்பு, தை நீராடல், கார்த்திகை திருநாள், திருவாதிரைவிழா, பங்குனி உத்திர விழா, இந்திர விழா, வேலன் வெறியாட்டு விழா, இளவேனில் விழா போன்ற விழாக்களைச் கொண்டாடினர் என கூறும் இலக்கியங்கள் எவை?

1. புறநானூறு

2. அகநானூறு

3. கலித்தொகை

4. பரிபாடல்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

6. ” அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி ”

இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) அகத்தியம்

ஈ) அகநானூறு

(விளக்கம்: அகநானூறு – 141வது பாடல்)

7. ” வெறியறி சிறப்பின் வெவ்வாய்வேலன்

வெறியாட்டு அயர்ந்த காந்தளும் “

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) அகத்தியம்

ஈ) அகநானூறு

(விளக்கம்: தொல்காப்பியம் – 63 வது பாடல்)

8. கீழ்க்கண்டவற்றுள் தவறானது தொடர் எது?

அ) சங்க காலத்தில் ஆடவர் இடையில் ஓர் ஆடையும், மேலே ஒரு துண்டும் அணிந்தனர்.

ஆ) ஆடவர் அணியும் மேற்சட்டை ‘ கஞ்சுகம் ‘ என அழைக்கப்பட்டது.

இ) பெண்கள் புடவை அணிந்தனர்.

ஈ) துணி தைப்பவர் ‘ தையல்காரர்’ என அழைக்கப் பட்டார்.

(விளக்கம்: துணி தைப்பவர் ‘ துன்னக்காரர் ‘ என அழைக்கப்பட்டார்.)

9. கீழ்க்கண்டவற்றுள் சங்ககாலப் பெண்கள் அணிந்த அணிகளன்கள் எவை?

1. சிலம்பு

2. மேகலை

3. குழை

4. மோதிரம்

5. கடகம்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 1, 2, 4

ஈ) 1, 3, 5

10. சங்ககாலத்தில் “ஐம்படைத்தாலி ” என்னும் கழுத்தணியை யார் அணிந்தனர்?

அ) பெண்கள்

ஆ) ஆண்கள்

இ) சிறுவர்

ஈ) சிறுமியர்

11. ” புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ

ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் ”

இவ்வரிகள் இடம்பெறும் நூல்

அ) தொல்காப்பியம்

ஆ) நன்னூல்

இ) அகத்தியம்

ஈ) புறநானூறு

(விளக்கம்: இவ்வரிகள் புறநானூற்றில் பெரும்பாணாற்றுப்படையில் (அடி: 469) அமைந்துள்ளது)

12. ____ நிலத்தில் ஏறுதழுவுதல் ஆண் மகனின் வீரத்தை புலப்படுத்துவதாக இருந்தது.

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) நெய்தல்

(விளக்கம்: மற்றொரு சிறந்த வீர விளையாட்டு மற்போரிடல்.)

13. கோழிச்சண்டையும் ஆட்டுக்கிடாய்ச் சண்டையும் எங்கு நடைபெற்றதாக சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன?

அ) கிராமப்புறம்

ஆ) நகர்ப்புறம்

இ) தலைநகரம்

ஈ) சந்தை

(விளக்கம்: யானைச் சண்டை நடைபெறுவதும் வழக்கத்தில் இருந்தது)

14. கீழ்க்கண்வற்றுள் சங்ககாலப் பெண்கள் ஈடுபட்ட விளையாட்டுகள் எவை?

1. கழங்காடல்

2. அம்மானை

3. பந்தாடுதல்

4. ஓரையாடுதல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 4

இ) 1, 2, 3

ஈ) 2, 3, 4

15. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. உயிர் காக்கும் அமுதம் ‘ உணவு ‘ என்பதை அறிந்தோர் பழந்தமிழர்.

2. காய்கனி, இறைச்சி என இருவகை உணவையும் உட்கொண்டனர்.

3. கடுகு இட்டுத் தாளிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

4. ஊறுகாய் போடும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது.

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3, 4

இ) 1, 3, 4

ஈ) 1, 2, 4

16. “ அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு

கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் ”

இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) பெரும்பாணாற்றுப்படை

ஆ) சிறுபாணாற்றுப்படை

இ) மலைபடுகடாம்

ஈ) நற்றிணை

(விளக்கம்: சிறுபாணாற்றுப்படை, அடி: 194, 195)

17. பழந்தமிழர்களின் அக வாழ்வைப் பாடுவது ______ எனப்பட்டது.

அ) அகத்திணை

ஆ) புறத்திணை

இ) அன்பின் ஐந்திணை

ஈ) அகநானூறு

18. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. பழந்தமிழர் வாழ்வு அகம், புறம் என இருதிறப்பட்டதாக இருந்தது.

2. பெண்ணுக்கு மணமகன் பரிசம் அளிப்பது வழக்கத்தில் இருந்தது.

3. மண நிகழ்வின்போது மணமக்களை நெல்லும் மலரும் கலந்த நீரால் நீராட்டி, தூய ஆடை அணிகலன்களை அணிவித்தனர்.

4. மணமுழவு ஒலிக்க மணமகளைத் தலைவனிடம் தந்து மூத்தோர் வாழ்த்துரை வழங்கினர்.

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3, 4

இ) 1, 3, 4

ஈ) 1, 2, 4

19. ” சிறுவளை விலையெனப் பெருந்தேர்

பண்ணிஎம்

முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே “

இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) பெரும்பாணாற்றுப்படை

ஆ) சிறுபாணாற்றுப்படை

இ) மலைபடுகடாம்

ஈ) நற்றிணை

(விளக்கம்: நற்றிணை 300 வது பாடல்)

20. கூற்று: குடும்ப வாழ்க்கை இல்லறம் என அழைக்கப்பட்டது.

காரணம்: அறத்தின் வழிப்பட்ட வாழ்க்கையைப் பழந்தமிழர் வாழ்ந்தனர்.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

ஆ) கூற்று சரி காரணம் தவறு

இ) கூற்று காரணம் இரண்டும் தவறு.

ஈ) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கம் அல்ல.

21. கீழ்க்கண்டவற்றுள் எவை இல்லறத்தாரின் கடமைகளாக இருந்தன.

1. விருந்தோம்பல்

2. சுற்றம் தழுவல்

3. வறியோர் துயர் துடைத்தல்

4. கடவுளை வழிபடுதல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 4 சரி

இ) 1, 3, 4 சரி

ஈ) 1, 2, 3 சரி

22. ” இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

அசையுடன் இருந்தோர்க்கு

அரும்புணர்வு இன்மென ”

இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) பெரும்பாணாற்றுப்படை

ஆ) சிறுபாணாற்றுப்படை

இ) மலைபடுகடாம்

ஈ) நற்றிணை

(விளக்கம்: நற்றிணை 214 வது பாடல்)

23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. தமிழர் தம் இல்வாழ்க்கை அன்பின் வழியது.

2. தலைவன் தலைவியர் செம்புல பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் கலந்தவர்கள்.

3. அறிவறிந்த மக்களைப் பெறுவது இல்லறத்தின் நற்பேறு என வாழ்ந்தனர்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

24. கீழ்க்கண்டவற்றுள் இசை நூல்கள் எவை?

1. முதுநாரை

2. முதுகுருகு

3. பெருநாரை

4. பெருங்குருகு

5. பஞ்சபாரதீயம்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 4

இ) 3, 4, 5

ஈ) 1, 3, 4

25. அக்காலக் கல்வியின் சிறப்பை விளக்கும் திருக்குறளின் அதிகாரங்கள் எவை?

1. கல்வி

2. கேள்வி

3. அறிவுடைமை

4. ஒழுக்கவியல்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

26. _____ நூல்களில் கல்வியின் சிறப்பு பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

அ) பதினெண் மேற்கணக்கு

ஆ) பதினெண் கீழ்க்கணக்கு

இ) தொல்காப்பியம்

ஈ) அகத்தியம்

27. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. சங்ககாலத்தில் வானியல், மருத்துவம் போன்றவையும் கற்பிக்கப்பட்டன.

2. கல்வி கற்கும் இடங்களாக மரத்தடியும் ஊர் மன்றமும் ஆசிரியர் வீடும் வீட்டுத் திண்ணைகளும் அமைந்திருந்தன.

3. பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் பழக்கம் இருந்தது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

28. “பல்கேள்வித் துறை போகிய

தொல்லாணை நல்லாசிரியர்

உறழ் குறித் தெடுத்த உருகெழுகொடியும் ”

அ) பெரும்பாணாற்றுப்படை

ஆ) சிறுபாணாற்றுப்படை

இ) மலைபடுகடாம்

ஈ) பட்டினப்பாலை

(விளக்கம்: பட்டினப்பாலை, அடி: 169 – 171)

29. ஊர் ஊராகச் சென்று உப்பு வணிகம் செய்பவர்கள் ___ எனப்பட்டனர்.

அ) பாணர்கள்

ஆ) உமணர்கள்

இ) தச்சர்கள்

ஈ) கொல்லர்கள்

30. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. பழந்தமிழர் சமூகத்தில் தச்சுத் தொழில் மேலோங்கி இருந்தது.

2. நெய்தல் தொழில் மேம்பட்டிருந்தது.

3. மீன்பிடித் தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

4. உழவுத் தொழில் மிகப்பெரும் தொழிலாக இருந்தது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 4 சரி

இ) 1, 3, 4 சரி

ஈ) 1, 2, 3 சரி

31. கீழ்க்கண்டவற்றுள் பழந்தமிழர் சமூகத்தில் செழித்திருந்த கலைகள் எவை?

1. இசை

2. நாட்டியம்

3. நாடகம்

4. ஓவியம்

5. சிற்பம்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 4

இ) 3, 4, 5

ஈ) 1, 3, 4

32. சங்க காலத் தமிழர்கள் எவற்றால் ஆன சிற்பங்களை அமைத்தனர்.

1. மண் 2. மரம்

3. தந்தம் 4. தங்கம்

5. இரும்பு

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 4

இ) 1, 3, 5

ஈ) 1, 2, 3

33. தமிழர்தம் தொன்மையான ஓவிய மரபிற்கு சான்றாக விளங்குபவை எவை?

அ) சிற்பங்கள்

ஆ) பாறை ஓவியங்கள்

இ) குடைவரைக் கோவில் ஓவியங்கள்

ஈ) ஆபரணங்கள்

34. பழந்தமிழர் சமூகத்தில் பாணன், பாடினி என்பது யாரை குறிக்கும்?

அ) ஓவியர்கள்

ஆ) உப்பு வியாபாரிகள்

இ) இசைக் கலைஞர்கள்

ஈ) கொல்லர்கள்

35. பழந்தமிழர் சமூகத்தில் மன்னருக்குரிய கூத்து ______ என்றும் மற்றவர்க்குரியவை_____ என்றும் அழைக்கப்பட்டன.

அ) பொதுவியல், வேத்தியல்

ஆ) வேத்தியல், பொதுவியல்

இ) பொதுவியல், கூத்தியல்

ஈ) கூத்தியல், பொதுவியல்

36. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. உண்பது நாழி உடுப்பவை இரண்டு – எளிய வாழ்க்கை

2. செல்விருந்து ஓம்பி வருவிருந்து எதிர்பார்த்தல் – உயர் பண்பு

3. கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதுவும் குறைபடாது வாழ்தல் – கொள்கை சிறப்பு

4. களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே – வீரம்

5. அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை – இல்லறம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 4 சரி

இ) 1, 3, 5 சரி

ஈ) 1, 2, 3 சரி

37. பழந்தமிழர் இயற்கையுடன் இயைந்த சமூகமாக வாழ்ந்தனர் என்பதை விளக்குபவை எவை?

1. மரபு

2. தொழில்நுட்பம்

3. தொன்மை

4. கலைப் பண்பாட்டுக் கூறுகள்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 4

இ) 3, 4, 5

ஈ) 1, 3, 4

38. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?

1. சங்க இலக்கியங்கள் நிகழ்வுகளில் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களாக அமைந்தன.

2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவனவாய் இருந்தன.

3. காப்பியங்கள் அறக்கருத்துகளை கூறுவனவாக இருந்தன.

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 2, 3

ஈ) 1, 3

(விளக்கம்: 2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறக்கருத்துகளை கூறுவனவாக இருந்தன.

3. காப்பியங்கள் ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவனவாய் இருந்தன.)

39. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றிய காப்பியம் சீவக சிந்தாமணி.

2. இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும் என்பதே காப்பியத்தின் மையக் கருத்தாகும்.

3. ஏமாங்கத நாட்டின் வளத்தைத் திருத்தக்கத்தேவர் வருணிக்கும் பகுதி நாட்டின் சிறப்பை உணர்த்துகிறது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

40. சரியான பொருளைத் தேர்ந்தெடு

தெங்கு, வருக்கை

அ) தேங்காய், பாக்கு மரம்

ஆ) தேனடை, பாக்கு மரம்

இ) தேங்காய், பலாப்பழம்

ஈ) தேனடை, பலாப்பழம்

41. சரியான பொருளைத் தேர்ந்தெடு

இசை, நெற்றி

அ) புகழ், தென்னை

ஆ) வன்சொல், பாக்கு மரம்

இ) வன்சொல், உச்சி

ஈ) புகழ், உச்சி

42. ” வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரை “

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) பாய்ந்து

ஆ) குன்று

இ) பெரியமலை

ஈ) உச்சி

43. ” கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை ”

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) பெரிய மலை

ஆ) திரண்ட நிதி

இ) ஊர் மக்கள்

ஈ) பாய்ந்து

44. ” வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே ”

இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) அணை

ஆ) ஓங்கிய

இ) தேங்கிய

ஈ) பாய்ந்து

45. “ நெறி மருப்பு எருமையின் ” இதில் மருப்பு என்பதன் பொருள்

அ) வால்

ஆ) தந்தம்

இ) கொம்பு

ஈ) நெற்றி

46. சரியான பொருளைத் தேர்ந்தெடு

வெறி, கழனி

அ) ஆடல், மலை

ஆ) ஆடல், வயல்

இ) மணம், மலை

ஈ) மணம், வயல்

47. சரியான பொருளைத் தேர்ந்தெடு

செறி, இரிய

அ) வளைந்த, காத்திருந்து

ஆ) வளைந்த, ஓட

இ) சிறந்த, ஓட

ஈ) சிறந்த, காத்திருந்து

48. “ சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “

இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) சீவக சிந்தாமணி

ஈ) வளையாபதி

49. சரியான பொருளைத் தேர்ந்தெடு

மடிவு, வட்டம்

அ) மடிப்பு, எல்லை

ஆ) சோம்பல், எல்லை

இ) மடிப்பு, உருவம்

ஈ) பணிவு, எல்லை

50. சரியான பொருளைத் தேர்ந்தெடு

அடிசில், கொடியன்னார்

அ) எல்லை, ஆடவர்

ஆ) சோறு, ஆடவர்

இ) சோறு, மகளிர்

ஈ) எல்லை, சிறுமியர்

51. சரியான பொருளைத் தேர்ந்தெடு

நற்றவம், வெற்றம்

அ) கொடியதவம், காலியான

ஆ) பெருந்தவம், வெற்றி

இ) கொடியதவம், வெற்றி

ஈ) பெருந்தவம், செறுக்கு

52. ” நற்றவம் செய்வார்க்கு இடம்தவம் செய்வார்க்கும் அஃது இடம்

நற்பொருள் செய்வார்க்கு இடம்பொருள் அஃது இடம் ”

இவ்வளிகள் அந்நாட்டின் சிறப்பைக் கூறுகின்றன?

அ) புகார்

ஆ) மதுரை

இ) கும்பகோணம்

ஈ) ஏமாங்கத நாடு

53. இலக்கணக் குறிப்புத் தருக

தேமாங்கனி, செந்நெல், தண்கடல், நற்றவம்

அ) வினைத்தொகை

ஆ) உவமைத்தொகை

இ) பண்புத்தொகை

ஈ) உம்மைத் தொகை

(விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் ‘மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்.

• செந்நெல் – செம்மை + நெல்

• தண்கடல் -தன்மை + கடல்

• நற்றவம் – நன்மை + தவம்)

54. இலக்கணக் குறிப்புத் தருக – விளைக

அ) பெயரெச்சம்

ஆ) வியங்கோள் வினைமுற்று

இ) வினையெச்சம்

ஈ) வினைத்தொகை

(விளக்கம்: வியங்கோள் வினை பெரும்பாலும் நான்கு பொருள்களில் பயன்படுத்தப்பெறுகிறது. அவை வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாம். இச்சொல் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்பெறுகிறது.)

55. இலக்கணக் குறிப்புத் தருக – செய்கோலம்

அ) வினைத்தொகை

ஆ) உவமைத்தொகை

இ) பண்புத்தொகை

ஈ) உம்மைத் தொகை

(விளக்கம்: வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும்.

• செய் கோலம் – செய்த கோலம், செய்கின்ற கோலம், செய்யும் கோலம்)

56. இலக்கணக் குறிப்புத் தருக – தேர்ந்த

அ) பெயரெச்சம்

ஆ) வியங்கோள் வினைமுற்று

இ) வினையெச்சம்

ஈ) வினைத்தொகை

(விளக்கம்: பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். காலம் காட்டுவதில்லை. முக்காலத்திற்கும் பொதுவானதாக அமையும்.

• தேர்ந்த –> (எ – கா) தேர்ந்த பையன். பையன் என்பது பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது)

57. இலக்கணக் குறிப்புத் தருக – இறைஞ்சி

அ) பெயரெச்சம்

ஆ) வியங்கோள் வினைமுற்று

இ) வினையெச்சம்

ஈ) வினைத்தொகை

(விளக்கம்: வினையெச்சம் என்பது ஒரு வினை முற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். இச்சொற்கள் உ, இ என முடிவு பெறும்

• இறைஞ்சி என்பது இ என்னும் விகுதியைக் கொண்டு முடிகிறது)

58. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – இறைஞ்சி

அ) இறை + ச் + இ

ஆ) இறைஞ்சு + இ

இ) இறை + ஞ் + சி

ஈ) இறை + ஞ் + ச் + இ

59. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – ஓம்புவார்

அ) ஓம்பு + வார்

ஆ) ஓம்பு + வ் + வ் + ஆர்

இ) ஓம்பு + வ் + ஆர்

ஈ) ஓம்பு + வ் + வார்

60. “இறைஞ்சி ” என்பதன் பகுபத உறுப்புகளில் ‘ இ ‘ என்பதன் பகுபத ஊறுப்பிலக்கணம்

அ) பெயரெச்சவிகுதி

ஆ) வினையெச்ச விகுதி

இ) ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

ஈ) பலவின்பால் வினைமுற்று விகுதி

(விளக்கம்: வினையெச்ச விகுதிகள் – இ, உ

• இறைஞ்சு – பகுதி)

61. ” ஓம்புவார்  ஓம்பு + வ் + ஆர் “ இதில் ‘ வ் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) இறந்தகால இடைநிலை

ஆ) நிகழ்கால இடைநிலை

இ) எதிர்கால இடைநிலை

ஈ) எதிர்மறை இடைநிலை

(விளக்கம்: எதிர்கால இடைநிலைகள் – ப், வ்

• ஓம்பு – பகுதி, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி)

62. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல்காப்பியம் எது?

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) சீவக சிந்தாமணி

ஈ) வளையாபதி

(விளக்கம்: சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.)

63. சீவக சிந்தாமணியிலுள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

அ) 10

ஆ) 11

இ) 12

ஈ) 13

(விளக்கம்: சீவக சிந்தாமணியில் இலம்பகம் என்ற உட்பிரிவு காணப்படுகிறது.)

64. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. சீவகசிந்தாமணி ‘ மணநூல் ‘ எனவும் அழைக்கப்படுகிறது.

2. இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை இயற்றினார்.

3. திருத்தக்கதேவரின் காலம் ஆறாம் நூற்றாண்டு.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 3 சரி

இ) 1, 3 தவறு

ஈ) 3 மட்டும் தவறு

(விளக்கம்: 3. திருத்தக்கதேவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு.)

65. சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவர் எந்த சமயத்தை சார்ந்தவர்?

அ) பௌத்தம்

ஆ) சமணம்

இ) சைவம்

ஈ) வைணவம்

66. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ______ என்னும் நூலை திருத்தக்கதேவர் பாடினார்.

அ) வளையாபதி

ஆ) குண்டலகேசி

இ) நாமகள் இலம்பகம்

ஈ) நரி விருத்தம்

67. ” அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்

கொடியனார் செய்கோலமும் வைகல்தோறும் ஆயிரம் “

இவ்வடிகள் சீவக சிந்தாமணியில் எந்த இலம்பகத்தில் அமைந்துள்ளன?

அ) குணமாலையார் இலம்பகம்

ஆ) கோவிந்தையார் இலம்பகம்

இ) காந்தருவதத்தையார் இலம்பகம்

ஈ) நாமகள் இலம்பகம்

(விளக்கம்: இப்பாடல் நாமகள் இலம்பகத்தில் நாட்டு வளம் என்னும் பகுதியில் பாடமாக அமைந்துள்ளது.)

68. ” அள்ளல் பழனத்து அரக்காம்பல்வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் ”

இவ்வரிகள் எந்நாட்டின் வளத்தைக் கூறுகின்றன?

அ) சேரநாடு

ஆ) சோழநாடு

இ) பாண்டிய நாடு

ஈ) வட நாடு

69. “ காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி

நாவலோஓ என்றழைக்கும் நாளோதை”

இந்நிகழ்ச்சி எந்நாட்டில் நடைபெறுவதாக முத்தொள்ளாயிரம் கூறுகிறது?

அ) சேரநாடு

ஆ) சோழநாடு

இ) பாண்டிய நாடு

ஈ) வட நாடு

70. “ நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித்

திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு ”

இப்பாடல் எந்நாட்டின் வளத்தை கூறுகிறது?

அ) சேரநாடு

ஆ) சோழநாடு

இ) பாண்டிய நாடு

ஈ) வட நாடு

71. சரியான பொருளைத் தேர்ந்தெடு

அள்ளல், பழனம்

அ) சேறு, நீர் மிக்க வயல்

ஆ) நீர் மிக்க வயல், சேறு

இ) துன்பம், சேறு

ஈ) துன்பம், நீர் மிக்க வயல்

72. சரியான பொருளைத் தேர்ந்தெடு

வெரீஇ, பார்ப்பு

அ) வெறுமை, பயந்து

ஆ) அஞ்சி, பார்த்தல்

இ) அஞ்சி, குஞ்சு

ஈ) வெறுமை, குஞ்சு

73. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. நாவலோ – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து

2. இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்

3. கமுகு – நாணல்

4. நந்து -நொந்து

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 3 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 2 சரி

(விளக்கம்: 3. கமுகு – பாக்கு

4. நந்து – சங்கு)

74. ” அள்ளல் பழனத்து அரக்காம்பல்வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு ”

இப்பாடலில் பயின்று வரும் அணி

அ) உவமையணி

ஆ) எடுத்துக்காட்டுவமையணி

இ) தற்குறிப்பேற்ற அணி

ஈ) பிறிது மொழிதல் அணி

(விளக்கம்: தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.)

75. “ காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி

நாவலோஓ என்றழைக்கும் நாளோதை – காவலன்தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

நல்யானைக்கோக்கிள்ளி நாடு ”

இப்பாடலில் பயின்று வரும் அணி

அ) உவமையணி

ஆ) எடுத்துக்காட்டுவமையணி

இ) தற்குறிப்பேற்ற அணி

ஈ) பிறிது மொழிதல் அணி

(விளக்கம்: உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது.)

76. “ நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித்

திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு ”

இப்பாடலில் பயின்று வரும் அணி

அ) உவமையணி

ஆ) எடுத்துக்காட்டுவமையணி

இ) தற்குறிப்பேற்ற அணி

ஈ) பிறிது மொழிதல் அணி

77. இலக்கணக் குறிப்பு தருக – அஞ்சி

அ) பெயரெச்சம்

ஆ) வியங்கோள் வினைமுற்று

இ) வினையெச்சம்

ஈ) வினைத்தொகை

(விளக்கம்: பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். காலம் காட்டுவதில்லை. முக்காலத்திற்கும் பொதுவானதாக அமையும்.)

78. இலக்கணக் குறிப்பு தருக

வெண்குடை, இளங்கமுகு

அ) வினைத்தொகைகள்

ஆ) உவமைத்தொகைகள்

இ) பண்புத்தொகைகள்

ஈ) உம்மைத் தொகைகள்

(விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் ‘மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்.

• வெண்குடை – வெண்மை + குடை

• இளங்கமுகு – இளமை + கமுகு)

79. இலக்கணக் குறிப்பு தருக

கொல்யானை, குவிமொட்டு

அ) வினைத்தொகைகள்

ஆ) உவமைத்தொகைகள்

இ) பண்புத்தொகைகள்

ஈ) உம்மைத் தொகைகள்

(விளக்கம்: வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும்.

• கொல்யானை, குவி மொட்டு ஆகியவை முக்காலத்தையும் உணர்த்துகிறது)

80. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – கொண்ட

அ) கொண் + ட் + அ

ஆ) கொள்(ண்) + ட் + அ

இ) கொள் + ண் + ட

ஈ) கொள் + ண் + ட் + அ

81. ” கொண்ட ” என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ‘அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் யாது?

அ) பெயரெச்சவிகுதி

ஆ) வினையெச்ச விகுதி

இ) ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

ஈ) பலவின்பால் வினைமுற்று விகுதி

(விளக்கம்: பெயரெச்சவிகுதிகள் – அ, (உம்)

• கொள் – பகுதி (ண் ஆனது விகாரம்), ட்- இறந்த கால இடைநிலை)

82. முத்தொள்ளாயிரம் எவ்வகை பாவால் எழுதப்பட்ட நூல்?

அ) ஆசிரியப்பா

ஆ) வெண்பா

இ) கலிப்பா

ஈ) வஞ்சிப்பா

83. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து ____ செய்யுள்கள் கிடைத்துள்ளன.

அ) 105

ஆ) 107

இ) 108

ஈ) 110

(விளக்கம்: சேர, சோழ, பாண்டியர்களை பற்றி பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. நூல் முழுமையாக கிடைக்கவில்லை. கிடைத்த 108 செய்யுள்களும் முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.)

84. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ____ நூற்றாண்டை சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7

(விளக்கம்: முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.)

85. இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாக திகழ்ந்தவர்கள் யார்?

அ) வட இந்தியர்கள்

ஆ) தமிழர்கள்

இ) சீக்கியர்கள்

ஈ) மராத்தியர்கள்

86. இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேய படைகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்த நாள்

அ) 1941 பிப்ரவரி 15

ஆ) 1942 பிப்ரவரி 15

இ) 1941 ஏப்ரல் 15

ஈ) 1942 ஏப்ரல் 15

87. இரண்டாம் உலகப்போரின் போது ஆங்கிலேய படைகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்த இடம்

அ) ரஷ்யா

ஆ) மியான்மர்

இ) மலேயா

ஈ) இலங்கை

88. இரண்டாம் உலகப்போரின் போது சரணடைந்த வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் யார் தலைமையில் ஐ. என். ஏ என்ற படையை உருவாக்கினர்?

அ) நேதாஜி

ஆ) தில்லான்

இ) மோகன்சிங்

ஈ) முத்துராமலிங்கர்

(விளக்கம்: ஐ. என். ஏ – இந்திய தேசிய இராணுவம்)

89. இந்திய தேசிய இராணுவம் தொடங்கப்பட்ட போது தமிழகத்தில் இருந்து எந்தெந்த நாடுகளுக்கு பிழைப்பிற்காகச் சென்ற தமிழர்கள் பலர் அதில் சேர்ந்தனர்.

1. இலங்கை

2. பர்மா

3. ரஷ்யா

4. மலேயா

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 3, 4

ஈ) 2, 4

90. ஜப்பானியர்கள் ஐ. என். ஏ வின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை, இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தை பற்றி ஒற்றிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் எங்கு அனுப்பினர்?

அ) கேரளா, தமிழ்நாடு

ஆ) ஆந்திரா, தமிழ்நாடு

இ) கேரளா, குஜராத்

ஈ) குஜராத், தமிழ்நாடு

(விளக்கம்: சிலரைத் தரைவழியில் பர்மா காடுகள் வழியாக இந்தியாவிற்கு அனுப்பினர்)

91. இந்திய இராணுவம், இந்தியாவிற்குள் நுழைந்த ஐ. என். ஏ வின் ஒற்றர் படை வீரர்களை கைது செய்து எந்த சிறைக்கு அனுப்பியது?

அ) மும்பை

ஆ) கல்கத்தா

இ) டெல்லி

ஈ) சென்னை

92. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூருக்கு எத்தனை நாள்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தார்?

அ) 19

ஆ) 91

இ) 18

ஈ) 81

93. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் தலைவராக பதவியேற்ற நாள் ___.

அ) 1942 சூன் 9

ஆ) 1943 சூன் 10

இ) 1943 சூலை 10

ஈ) 1943 சூலை 9

94. “டெல்லி சலோ“ என்று போர் முழக்கம் செய்தவர் யார்?

அ) காந்தி

ஆ) நேரு

இ) முத்துராமலிங்கர்

ஈ) நேதாஜி

95. ”நேதாஜியே தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்“ என்று கூறியவர் யார்?

அ) தில்லான்

ஆ) பாரதியார்

இ) வ. உ. சி

ஈ) முத்துராமலிங்கனார்

96. “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்“ என்று கூறியவர் யார்?

அ) தில்லான்

ஆ) பாரதியார்

இ) நேதாஜி

ஈ) முத்துராமலிங்கனார்

(விளக்கம்: தில்லான் என்பவர் இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராக இருந்தார்.)

97. ஐ. என். ஏ வில் இருந்து எத்தனை வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான் படைத் தாக்குதலுக்கான சிறப்பு பயிற்சி பெறுவதற்காக ஜப்பானிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அ) 32

ஆ) 54

இ) 45

ஈ) 23

(விளக்கம்: இச்செய்தி பசும்பொன் மடல், மடல் 32, இதழ் 8, ஜனவரி 2018, ப. 14 – 16ல் அமைந்துள்ளது.)

98. ஐ. என். ஏ வில் இருந்த வீரர்களுக்கு வான்படை தாக்குதலுக்கான சிறப்பு பயிற்சி ஜப்பானில் உள்ள எந்த அகாடமியில் வழங்கப்பட்டது.

அ) டோக்கியோ அகாடமி

ஆ) டோக்கியோ கேடட்ஸ் அகாடமி

இ) ஐ. என். ஏ அகாடமி

ஈ) இம்பீரியல் மிலிட்டரி அகாடமி

(விளக்கம்: இச்செய்தி பசும்பொன் மடல், மடல் 32, இதழ் 8, ஜனவரி 2018, ப. 14 – 16ல் அமைந்துள்ளது.)

99. வான்படைத் தாக்குதல் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக ஜப்பானிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர் ____.

அ) மிலிட்டரி கேடட்ஸ்

ஆ) ஐ. என். ஏ கேடட்ஸ்

இ) டோக்கியோ கேடட்ஸ்

ஈ) இம்பீரியல் கேடட்ஸ்

(விளக்கம்: இச்செய்தி பசும்பொன் மடல், மடல் 32, இதழ் 8, ஜனவரி 2018, ப. 14 – 16ல் அமைந்துள்ளது.)

100. ஜப்பானின் ___ தீவில் கடற்படைக்கான பயிற்சிகள் நடைபெற்றன என பசும்பொன் மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ) மலேயா

ஆ) இம்பீரியல்

இ) கியூசு

ஈ) டோக்கியோ

(விளக்கம்: ஐ. என். ஏ வீரர்கள் டோக்கியோ செல்ல பர்மாவில் இருந்து காட்டு வழியாகப் பயணம் செய்து சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து அங்கிருந்து படகு வழியாக தப்பி சென்று கியூசு தீவை அடைந்தனர்.)

101. இந்திய தேசிய இராணுவத்தில் யாருடைய பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது?

அ) ஜானகி

ஆ) ராஜாமணி

இ) டாக்டர் லட்சுமி

ஈ) ஜான்சிராணி

102. ஐ. என். ஏ வின் பெண்கள் படைப்பிரிவின் தலைவராக இருந்தவர் யார்?

அ) இந்திரா

ஆ) முத்துலட்சுமி

இ) டாக்டர் லட்சுமி

ஈ) ஜான்சிராணி

103. கீழ்க்கண்டவர்களுள் ஐ. என். ஏ வின் பெண்கள் படைப்பிரிவின் தலை சிறந்த தலைவர்களாக திகழ்ந்த தமிழ்ப் பெண்கள் யார்?

1. ஜான்சி

2. ஜானகி

3. இராஜாமணி

4. முத்துலெட்சுமி

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 3, 4

ஈ) 1, 4

104. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் அமைச்சர்களாக இருந்த தமிழர்கள் யார்?

1. ஜானகி

2. இராஜாமணி

3. லட்சுமி

4. சிதம்பரம் லோகநாதன்

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 3, 4

ஈ) 1, 4

105. நேதாஜி டோக்கியோவிற்கு அனுப்பிய 45 இளைஞர்களுள் ஒருவரான கேப்டன் தாசன் என்பவர் சுதந்திர இந்தியாவின் எந்நாட்டு தூதுவராகப் பணியாற்றினார்?

அ) ரஷ்யா

ஆ) செசல்ஸ்

இ) சீனா

ஈ) ஜப்பான்

106. இரண்டாம் உலகப்போரின் போது இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டின் இராணுவத்தோடு சேர்ந்து ஆங்கிலேயரோடு போரிட திட்டமிட்டனர்.

அ) ரஷ்யா

ஆ) செசல்ஸ்

இ) சீனா

ஈ) ஜப்பான்

107. ” மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது “ என்று கூறியவர் யார்?

அ) வெல்லஸ்லி

ஆ) சர்ச்சில்

இ) வில்லியம் ஜோன்ஸ்

ஈ) காந்தி

108. “அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும்“ என்பது யாருடைய பொன்மொழி

அ) காந்தி

ஆ) நேரு

இ) முத்துராமலிங்கனார்

ஈ) நேதாஜி

(விளக்கம்: “எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச் சிறந்த நற்குணமாகும். மனதை மலர வைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் ” எனவும் நேதாஜி கூறியுள்ளார்)

109. “விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனத்திருப்தியும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான்.“ என்று கூறியவர் யார்?

அ) வ. உ. சி

ஆ) நேரு

இ) முத்துராமலிங்கனார்

ஈ) நேதாஜி

110. ஐ. என். ஏ எந்த ஆண்டு ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் ‘ மொய்ராங் ‘ என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.

அ) 1944 மார்ச் 8

ஆ) 1942 மார்ச் 8

இ) 1942 மார்ச் 18

ஈ) 1944 மார்ச் 18

(விளக்கம்: இப்போரில் ஒரு இலட்சம் இந்தியரும் ஜப்பானியரும் வீரமரணம் எய்தினர்.)

111. இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் 1943-45 ஆம் ஆண்டுகளில் சென்னை சிறையில் தூக்கிலிடப்பட்டனர்?

அ) 17

ஆ) 18

இ) 19

ஈ) 20

112. இந்திய தேசிய இராணுவத்தை சேர்ந்த இராமு என்ற இளைஞர் எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார்?

அ) 1941

ஆ) 1942

இ) 1943

ஈ) 1944

113. தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் இரவு ” நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை ” என்று கூறிய இளைஞர் யார்?

அ) அப்துல்காதர்

ஆ) இராமு

இ) நேதாஜி

ஈ) வேலன்

114. “வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழு நில்வினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்தி தான் ” என்று கூறிய இளைஞர் யார்?

அ) அப்துல்காதர்

ஆ) இராமு

இ) நேதாஜி

ஈ) வேலன்

115. “ இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு “ என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர் யார்?

அ) அரவிந்த் குப்தா

ஆ) முத்துராமலிங்கனார்

இ) மா. சு. அண்ணாமலை

ஈ) கல்கி

(விளக்கம்: இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசு பெற்றன)

116. ____, ____ ஆகியவை மொழியின் அமைப்பையும், பயன்பாட்டையும் கூறுகின்றன.

அ) எழுத்து, இலக்கணம்

ஆ) சொல், இலக்கணம்

இ) எழுத்து, சொல்

ஈ) இலக்கணம், யாப்பு

117. ____ தமிழர் வாழ்க்கையிலிருந்து பிறந்த இலக்கியத்தின் கொள்கைகள் பற்றிக் கூறுகின்றது.

அ) எழுத்திலக்கணம்

ஆ) சொல்லிலக்கணம்

இ) பொருளிலக்கணம்

ஈ) யாப்பிலக்கணம்

118. பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(விளக்கம்: வகைகள் – 1. அகப்பொருள் 2. புறப்பொருள்)

119. கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.

1. தலைவனுக்கும், தலைவிக்கும் இடையில் உள்ள அன்பையும், வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவதே அகப்பொருள்.

2. அகம் சாராத அறம், பொருள், வீடு, கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியவற்றைப் பற்றி கூறுவது புறப்பொருள்.

3. அகப்பொருள் ஒழக்கத்தைப் பற்றிக் கூறும் இலக்கணம் அகத்திணை எனப்படும்.

4. புறப்பொருள் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் இலக்கணம் புறத்திணை எனப்படும்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 2 தவறு

ஈ) 2, 3 தவறு

120. ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் அன்பு ஒழுக்கத்தை முதல், கரு, உரி என்னும் முப்பொருள்களின் வழி அகப்பொருள் இலக்கணமாக கூறியவர் யார்?

அ) அகத்தியர்

ஆ) தொல்காப்பியர்

இ) கபிலர்

ஈ) கம்பர்

121. தொல்காப்பியர் காட்டும் அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) 2

ஆ) 3

இ) 5

ஈ) 7

122. கீழ்க்கண்டவற்றுள் தொல்காப்பியர் காட்டும் அகத்திணைகளில் அல்லாதது எது?

1. கைக்கிளை 2. முல்லை

3. குறிஞ்சி 4. பாலை

5. மருதம் 6. நெய்தல்

7. பெருந்திணை

அ) 3, 4, 5, 6

ஆ) 3, 4

இ) 4, 5, 6

ஈ) எதுவுமில்லை

123. வாழ்வியல் நிகழ்வுகள் நடைபெறுவதற்கு அடிப்படையாய் அமைந்த நிலமும், பொழுதும் ____ எனப்படும்.

அ) முதற்பொருள்

ஆ) உரிப்பொருள்

இ) கருப்பொருள்

ஈ) அகப்பொருள்

124. அகப்பாட்டுக்கு உரிய மூன்று பொருள்களுள் முதன்மை வாய்ந்தது எது?

அ) முதற்பொருள்

ஆ) உரிப்பொருள்

இ) கருப்பொருள்

ஈ) எதுவுமில்லை

125. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. உரிப்பொருள் என்பது அந்தந்த திணைக்குரிய ஒழுக்கம்.

2. உரிப்பொருளை உணர்த்துவதற்கு ஒரு பின்னணி தேவைப்படுகிறது.

3. இடமும் நேரமும் நிலம், பொழுது என அழைக்கப்படுகின்ற முதற்பொருள்களாகும்.

4. நிலமும், பொழுதும் இன்றி செயல்கள் நடைபெறுவதில்லை.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 தவறு

இ) 3, 4 தவறு

ஈ) 2, 3 சரி

126. கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?

அ) தலைவனும், தலைவியும் உள்ளத்தால் இணைவது குறிஞ்சித் திணை.

ஆ) தலைவன் வருகைக்காகக் காத்திருத்தல் முல்லைத் திணை.

இ) தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சிறுபிணக்காகிய ஊடல் பாலைத் திணை

ஈ) கடலுக்குச் சென்ற தலைவன் பொழுதோடு திரும்பாததற்குத் தலைவி வருந்தியிருத்தல் நெய்தல் திணை.

(விளக்கம்:

• தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சிறுபிணக்காகிய ஊடல் மருதத் திணை.

• தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல் பாலைத் திணை)

127. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. புறம் – வெளியே, பக்கம்

2. புரம் – நகரம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் தவறு

இ) 2 மட்டும் தவறு

ஈ) இரண்டும் தவறு

(விளக்கம்: புறம் (வெளியே) – புறநானூறு, புறநகர்

புறம் (பக்கம்) – உட்புறம், வெளிப்புறம், வலப்புறம், மேற்புறம்

புரம் (நகரம்) – காஞ்சிபுரம், விழுப்புரம்)

128. தமிழர்கள் காலத்தை எத்தனை வகையாகப் பிரித்தனர்?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(விளக்கம்: பொழுது என்பது நிகழ்ச்சி நடைபெறும் காலம் ஆகும். வகைகள் – 1. பெரும்பொழுது 2. சிறுபொழுது)

129. ஒரு கவிதை நிகழ்வை உருவாக்கப் பயன்படும் வாழ்வியல் சார்ந்த பின்னணிப் பொருள்கள் ____ ஆகும்.

அ) முதற்பொருள்

ஆ) உரிப்பொருள்

இ) கருப்பொருள்

ஈ) பெரும்பொழுது

(விளக்கம்: ஒவ்வொரு திணைக்கும் இன்னின்ன கருப்பொருள்கள் அமையலாம் என்பதை தொல்காப்பியர் முதலான இலக்கண நூலார் கூறுகின்றனர். அவை தெய்வம், மக்கள், உணவு, விலங்குகள், மரம், பறவை, பண், பறை, தொழில், யாழ், ஊர், நீர், பூ என்பனவாகும்.)

130. தொல்காப்பியர் காட்டும் புறத்த்திணைகள் எத்தனை வகைப்படும்?

அ) 2

ஆ) 3

இ) 5

ஈ) 7

131. கீழ்க்கண்டவற்றுள் தொல்காப்பியர் கூறும் புறத்திணைகளில் அல்லாதது எது?

1. வஞ்சி

2. பாடாண்

3. பொதுவியல்

4. கைக்கிளை

5. பெருந்திணை

அ) 1, 2

ஆ) 3, 4

இ) 3, 4, 5

ஈ) எதுவுமில்லை

(விளக்கம்: தொல்காப்பியர் கூறும் புறத்திணைகள் – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்)

132. புறத்திணைகளைப் பன்னிரண்டாக வகைப்படுத்தியுள்ள நூல் எது?

அ) தொல்காப்பியம்

ஆ) அகத்தியம்

இ) புறநானூறு

ஈ) புறப்பொருள் வெண்பாமாலை

(விளக்கம்: அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை)

133. திணையின் உட்கூறு ____ எனப்படும்.

அ) வெண்பா

ஆ) நிலம்

இ) பொழுது

ஈ) துறை

134. மன்னரின் ஆணைப்படி, வீரர்கள் பகை நாட்டுப் பசுக் கூட்டங்களைக் கவர்தலும் கவர்ந்தவற்றை மீட்டலும் _____ திணை.

அ) வெட்சி

ஆ) உழிஞை

இ) வஞ்சி

ஈ) தும்பை

135. மண்ணாசை கொண்டு அரசன் போர் தொடுத்தலும் மண்ணாசையுடன் வரும் பகையரசனோடு எதிர்நின்று போரிடுதலும் ___ திணை.

அ) வெட்சி

ஆ) உழிஞை

இ) வஞ்சி

ஈ) தும்பை

136. பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன் காத்தலும் _____ திணை.

அ) வெட்சி

ஆ) உழிஞை

இ) வஞ்சி

ஈ) தும்பை

137. தனது வலிமையை நம்பி வந்த மன்னனை, எதிர்த்து வலிமையுடன் போரிடுதல் ____ திணை.

அ) வெட்சி

ஆ) உழிஞை

இ) வஞ்சி

ஈ) தும்பை

138. போர்வீரம் மட்டுமல்லாமல் பல்வேறு ஒழுக்கங்களிலும் மற்றவரிலிருந்து மேம்பாடு மிக்கவராக தனித்து நிற்றல் ஆகியவற்றை பாடும் திணை எது?

அ) வெட்சி

ஆ) உழிஞை

இ) வாகை

ஈ) தும்பை

139. நிலையாமையை உணர்த்தும் திணை எது?

அ) வெட்சி

ஆ) காஞ்சி

இ) வாகை

ஈ) தும்பை

(விளக்கம்: சிறப்புடைய வீட்டின்பம் காரணமாக, பல வழிகளிலும் நிலையற்ற உலகில் பொருந்திய நல்ல நெறியினை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை பற்றிக் கூறுகிறது)

140. ஒருவர் பெற்ற கல்வி, புகழ், ஈகை போன்ற மேம்பாடுகளைப் போற்றி பாடுதல் ___ திணை.

அ) வெட்சி

ஆ) உழிஞை

இ) வாகை

ஈ) பாடாண்

141. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?

அ) வெட்சி -14 துறை

ஆ) வஞ்சி – 13 துறை

இ) உழிஞை – 8 துறை

ஈ) தும்பை – 18 துறை

(விளக்கம்: தும்பை – 12 துறை)

142. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. வாகை – 18 துறை

2. காஞ்சி – 20 துறை

3. பாடாண் -10 துறை

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

143. வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.

அ) சிலம்பு, மேகலை, குழை, கடகம்

ஆ) நோம்பு, நீராடல், திருநாள், விழா

இ) ஊசல், கழங்காடல், ஓரையாடல், அம்மானை

ஈ) கூத்து, பாடினி, இசை, சிற்பம்

144. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

அ) வருக்கை – இருக்கை

ஆ) புள் – தாவரம்

இ) அள்ளல் – சேறு

ஈ) மடிவு – தொடக்கம்

(விளக்கம்:

• வருக்கை – ஒழுங்கு

• புள்- பறவை)

145. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக

அ) உருவகத் தொடர், வினைத் தொகை

ஆ) உவமைத் தொடர், வினைத் தொகை

இ) வினைத் தொகை, பண்புத்தொகை

ஈ) வினைத்தொகை, உருவகத் தொடர்

146. நக்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

அ) பாண்டிய நாடு, சேர நாடு

ஆ) சோழ நாடு, சேர நாடு

இ) சேர நாடு, சோழநாடு

ஈ) சோழநாடு, பாண்டிய நாடு

147. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.

ஆ) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்.

இ) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர்.

ஈ) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்.

148. ” வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்

வளைந்துசெல் கால்களால் ஆறே! “

என்ற வரிகளை இயற்றியவர் யார்?

அ) கண்ணதாசன்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) வாணிதாசன்

149. பொருத்துக

1. ஈகை – i) அரசன்

2. புகல் – ii) வலிமை

3. குறும்பு – iii) தொந்தரவு

4. மொய்ம்பு – iv) அடைக்கலம்

5. கோன் – v) கொடை

அ) i ii iii iv v

ஆ) ii v iii iv i

இ) iii ii i iv v

ஈ) v iv iii ii i

150. பொருத்துக.

1. மற்போர் – i) Wrestling

2. இந்திய தேசிய இராணுவம் – ii) Indian National Army

3. செம்மொழி இலக்கியம் – iii) Classical Literature

4. நாட்டுப்புற இலக்கியம் – iv) Folk Literature

அ) i ii iii iv

ஆ) ii iii iv i

இ) iii ii i iv

ஈ) iv ii iii i

151. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. தமிழர் உணவு – பத்தவச்சல பாரதி

2. ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு. மேத்தா

3. தமிழ்ப் பழமொழிகள் – ஜெயகாந்தன்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 தவறு

இ) 1, 2 சரி

ஈ) 1, 3 சரி

(விளக்கம்: தமிழ்ப் பழமொழிகள் – கி. வா. ஜகந்நாதன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!