9th Tamil Unit 6 Questions
9th Tamil Unit 6 Questions
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 9th Tamil Unit 6 Questions With Answers Uploaded Below.
1. ” சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமான் நன்கலம் ”
என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) கலித்தொகை
ஈ) மணிமேகலை
2. அரேபியர் சேரநாட்டு மிளகை கொண்டு போய் விற்ற இடங்கள் எவை
அ) செங்கடல் துறைமுகம், ரோம் நகர துறைமுகம்
ஆ) செங்கடல் துறைமுகம், அலெக்சாண்டிரியா துறைமுகம்
இ) ரோம் நகர துறைமுகம், அலெக்சாண்டிரியா துறைமுகம்
ஈ) எகிப்து, ரோம் நகர துறைமுகம்
3. முசிறி துறைமுகத்தில் யவனர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களில் அல்லாதது எது?
அ) பவளம்
ஆ) செம்பு
இ) கண்ணாடி
ஈ) இரும்பு
4. கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பதிவு செய்துள்ளவர் யார்?
அ) மார்க்கோபோலோ
ஆ) பிளினி
இ) யுவான்சுவாங்
ஈ) சாணக்கியர்
5. கீழ்க்கண்டவற்றுள் கொற்கை முத்தின் சிறப்பினை குறிப்பிடும் நூல் எது?
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) வர்ணசாஸ்திரம்
இ) வானசாஸ்திரம்
ஈ) மகாபாரதம்
6. திசையை அறிய பயன்படும் காந்தவூசி பற்றிய செய்தி எந்நூலில் உள்ளது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி
7. கீழ்க்கண்டவற்றுள் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் அல்லாதது எது?
1. மருங்கை 2. எயிற்பட்டினம்
3. அரிக்கமேடு 4. நறவு
5. மாந்தை
அ) 1, 5
ஆ) 1, 4, 5
இ) 4, 5
ஈ) 4 மட்டும்
(விளக்கம்: நறவு, மாந்தை ஆகியவை மேற்குக் கடற்கரை பகுதியில் புகழ் பெற்று விளங்கிய துறைமுகம்)
8. கீழ்க்கண்டவற்றுள் மேற்கு கடற்கரை பகுதியில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகம் எது?
அ) வைக்கரை
ஆ) மருங்கை
இ) கொற்கை
ஈ) கொல்லந்துரை
(விளக்கம்: மேற்கு கடற்கரை பகுதியில் புகழ்பெற்று விளங்கிய துறைமுகங்கள் மங்களூர், நறவு, தொண்டி, மாந்தை, முசிறி, வைக்கரை, விழிஞம்)
9. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் இயற்கையாக உருவான துறைமுகம் எது?
அ) நறவு
ஆ) மாந்தை
இ) வைக்கரை
ஈ) முசிறி
10. முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் யார் யாருக்கிடையே ஏற்பட்டது
அ) தமிழ் – கிரேக்க வணிகர்கள்
ஆ) தமிழ் – உரோமானிய வணிகர்கள்
இ) தமிழ் – சீன வணிகர்கள்
ஈ) தமிழ் – யவன வணிகர்கள்
11. முசிறி – அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தம் ஏற்பட்ட காலம்
அ) பொ. ஆ. பி 130
ஆ) பொ. ஆ. மு. 130
இ) பொ. ஆ. பி. 150
ஈ) பொ. ஆ. மு. 150
12. ” பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் ” எனும் வரி இடம்பெற்றுள்ள நூல்
அ) அகநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) புறநானூறு
ஈ) கலித்தொகை
13. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. பந்தர் பெயரிய பேரிசை மூதூர் – பாடல் 67, அடி 2
2. பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம் – பாடல் 74, அடி 6
3. நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பாடல் 55, அடி 4
அ) 3 மட்டும் சரி
ஆ) 3 மட்டும் தவறு
இ) அனைத்தும் சரி
ஈ) அனைத்தும் தவறு
14. காவிரிப்பூம்பட்டினம் எத்தனை கூறுகளாக பிரிக்கப்பட்டிருந்தது?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
15. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் ____ கரையில் காவிரிப்பூம்பட்டினம் இருந்தது.
அ) வடகரை
ஆ) தென்கரை
இ) துறைமுகம்
ஈ) பட்டினப்பாக்கம்
16. காவிரிப்பூம்பட்டினத்தின் இரண்டு கூறுகள் எவை?
அ) வடகரை, தென்கரை
ஆ) பட்டினப்பாக்கம், முத்துப்பாக்கம்
இ) மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாலை
ஈ) பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம்
17. துறைமுகத்தின் செயல்திறனை கணக்கிடுவதற்கு தற்போது பயன்படுத்தும் முறை _____.
அ) ஒற்றைச் சாளர முறை
ஆ) இரட்டை வழிப் பாதை
இ) ஏற்றுமதி, இறக்குமதி
ஈ) கப்பல்களின் எண்ணிக்கை
18. காவிரி பூம்பட்டின துறைமுகங்களில் பொருள்களுக்கு சுங்கத்தீர்வைகள் வசூலிக்கப்பட்டன என தெரிவிக்கும் நூல்
அ) புறனாநூறு
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) கலித்தொகை
19. புகார் நகரத்தில், சுங்கத் தீர்வை பெற்றுக் கொண்டு புலிச்சின்னம் அடையாளம் வைத்த பொருள்கள், ஏற்றுமதி செய்ய மலைபோல் குவிந்திருந்தன என கூறும் பட்டிப்பாலை அடிகள் எவை?
அ) அடி 125 – 134
ஆ) அடி 145 – 152
இ அடி 120 – 135
ஈ) அடி 124 – 135
20. கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை முதலானோர் ____ ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர்.
அ) நலங்கிள்ளி
ஆ) நெடுங்கிள்ளி
இ) கிள்ளிவளவன்
ஈ) நெடுஞ்செழியன்
21. கீழ்க்கண்டவற்றள் காவிரி பூம்பட்டினத்தில் வணிகத்தில் ஈடுபடாதவர்கள் யார்?
அ) சாவகர்கள்
ஆ) சீனர்கள்
இ) யவனர்கள்
ஈ) வட இந்தியர்கள்
22. சோழ நாட்டு வணிகர்கள் வணிகம் செய்த இடங்கள் எவை?
அ) சாவக நாடு, காழகம், கங்கை துறைமுகம்
ஆ) எகிப்து, காழகம், கங்கை துறைமுகம்
இ) சீனா, காழகம், எகிப்து
ஈ) சீனா, காழகம், கங்கை துறைமுகம்
23. முசிறி துறைமுகத்தில் ______ ஏற்றுமதி சிறப்பு பெற்றிருந்தது.
அ) முத்து
ஆ) தந்தம்
இ) பொன்
ஈ) மிளகு
24. கீழ்க்கண்டவற்றுள் ‘ யவனப்பிரியா ‘ என்பது _____.
அ) முத்து
ஆ) தந்தம்
இ) பொன்
ஈ) மிளகு
25. மிளகிற்கு மாற்றாக யவனர்கள் தந்த பொருள் எது?
அ) பொன்
ஆ) தந்தம்
இ) வெள்ளி
ஈ) வைரம்
26. கீழ்க்கண்டவற்றுள் ‘ பந்தர் ‘ என்பதன் பொருள் ______.
அ) அரச வீதி
ஆ) வணிகர்கள் வீதி
இ) கடைவீதி
ஈ) அந்தணர்கள் வீதி
27. தீழ்க்கண்டவற்றுள் சேரர்களின் புகழ்பெற்ற துறைமுகம் எது?
அ) முசிறி
ஆ) கொற்கை
இ) காவிரி பூம்பட்டினம்
ஈ) தொண்டி
28. கீழ்க்கண்டவற்றுள் பேரியாறு உருவான மலை எது?
அ) மேற்கு தொடர்ச்சி மலை
ஆ) கிழக்கு தொடர்ச்சி மலை
இ) இமயமலை
ஈ) ஆரவல்லி மலை
29. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேற்குக்கரையில் அமைந்த துறைமுகம் எது?
அ) முசிறி
ஆ) கொற்கை
இ) தொண்டி
ஈ) காவிரிப்பூம்பட்டினம்
30. பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாக விளங்கிய இடம் எது?
அ) கொற்கை
ஆ) முசிறி
இ) தொண்டி
ஈ) காவிரிப்பூம்பட்டினம்
31. பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் அறியணை ஏறியவர் யார்?
அ) அதிவீரராம பாண்டியன்
ஆ) சடையவர்மன் வீரபாண்டியன்
இ) வீரகேசரி
ஈ) வெற்றிவேற்செழியன்
32. பாண்டிய வம்சத்தில் ஆளும் மன்னரை அடுத்து அரசாளும் இளவரசர்கள் எந்நகரில் தங்கி நிருவாகம் கற்றனர்
அ) கொற்கை
ஆ) முசிறி
இ) தொண்டி
ஈ) காவிரி பூம்பட்டினம்
33. ” மாலை திங்கள் வழியோன் ஏறினான் ” எனும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
அ) பட்டினப்பாலை
ஆ) பதிற்றுப்பத்து
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
34. ” கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் ” என்பது சிலப்பதிகாரத்தின் எந்த காதையிலுள்ள பாடலடி
அ) வழக்குரை காதை
ஆ) வரந்தரு காதை
இ) மங்கல வாழ்த்துப்பாடல்
ஈ) நீர்ப்படைக் காதை
35. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் – அடி 127
2. மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – அடி 134
3. மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் – அடி 138
அ) 1 மட்டும் சரி
ஆ) 2, 3 சரி
இ) அனைத்தும் சரி
ஈ) அனைத்தும் தவறு.
(விளக்கம்: 2. மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – அடி 138
3. மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் – அடி 134)
36. கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) பட்டினப்பாலை
37. ‘ வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ‘ என்பது எந்நூலில் உள்ள பாடலடி
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) பட்டினப்பாலை
38. ” திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப்புரவிக் கால்வடுத் தபுக்கும்
நற்றேர் வழுதி கொற்கை முன்துறை ” என்ற பாடலை பாடியவர் யார்
அ) அகநானூறு – வெண்கண்ணனார்
ஆ) புறநானூறு – வெண்கண்ணனார்
இ) சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
ஈ) அகநானூறு – இளங்கோவடிகள்
39. கொற்கையில் ஆடவர்கள் முத்துக் குளிக்கவும், வலம்புரி சங்கு எடுக்கவும் கடலில் மூழ்கினர் என கூறும் அகநானூற்றின் பாடல்
அ) 300 வது பாடல்
ஆ) 530 வது பாடல்
இ) 350 வது பாடல்
ஈ) 325 வது பாடல்
40. இராமநாதபுரம் அழகன் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு எக்காலத்திற்கு முற்பட்டது
அ) 1000 ஆண்டுகள்
ஆ) 2000 ஆண்டுகள்
இ) 3000 ஆண்டுகள்
ஈ) 4000 ஆண்டுகள்
41. பொருத்துக
1. வடமலை – i) பொன், மணிக்கற்கள்
2. மேற்கு மலை – ii) சந்தனம், ஆரம்
3. தென்கடல் – iii) முத்து
4. கீழ்க்கடல் – iv) பவளம்
5. தரைவழி – v) கறி
அ) iii i ii v iv
ஆ) iii ii i iv v
இ) ii i iii v iv
ஈ) i ii iii iv v
42. கொற்கை துறைமுகத்தில் பொருள்கள் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் குவிந்திருந்தன எனும் செய்தி அகநானூற்றின் எத்தனையாவது பாடலில் இடம்பெற்றுள்ளது
அ) 130
ஆ) 310
இ) 131
ஈ) 132
43. பொ. ஆ. பி முதல் நூற்றாண்டில் யவனர் – தமிழர் வணிகத்தை விரிவுப்படுத்தியவர் யார்?
அ) ஹிப்பல்ஸ்
ஆ) அகஸ்தஸ் சீஸர்
இ) நெடுஞ்செழியன்
ஈ) யவனர்
44. கொற்கை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகள் சார்ந்த காலம்
அ) இரும்பு காலம்
ஆ) உலோகக்காலம்
இ) செம்பு கற்காலம்
ஈ) பெருங்கற்காலம்
45. “ சங்ககாலம் முதல் பிற்கால பாண்டியர் காலம் வரை பாண்டிய நாட்டு முத்துக்களை உரோம் நகரத்தினர் விரும்பி வாங்கினர்” என்று கூறிய வரலாற்று அறிஞர்
அ) அகஸ்டஸ்
ஆ) ஸ்டிராபோ
இ) ஹிப்பல்ஸ்
ஈ) சீஸர்
46. பாண்டிய மன்னர்கள் அகஸ்டஸ் மன்னன் அரசவைக்கு பரிசாக அளித்த பொருள் எது?
அ) வலம்புரி சங்கு
ஆ) வைரம்
இ) முத்து
ஈ) பவளம்
47. பாண்டிய மன்னனின் குதிரைப்படைக்காக
எத்தனை அரேபியக் குதிரைகள் ஆண்டுதோறும் கொற்கை துறைமுகத்தில் வந்திறங்கின.
அ) 15, 000
ஆ) 14, 000
இ) 17, 000
ஈ) 16, 000
48. பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த தெருவின் பெயர் _____.
அ) அஃகசாலை
ஆ) எஃகு சாலை
இ) நாணயசாலை
ஈ) பட்டறை சாலை
49. பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நடுக்கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் வழியை கண்டறிந்தவர் யார்?
அ) அகஸ்தஸ்
ஆ) ஸ்டிரோபா
இ) ஹிப்பல்ஸ்
ஈ) சீஸர்
50. _____ பருவக்காற்று வழியாக யவனக் கடல் வணிகம் பெருகியது.
அ) வியாபாரக்காற்று
ஆ) தென் மேற்கு பருவக்காற்று
இ) வடகிழக்கு பருவக்காற்று
ஈ) ஹிப்பல்ஸ் காற்று
51. ______ அரசர்களின் உருவ முத்திரை இடப்பட்ட நாணய புதையல்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.
அ) எகிப்திய
ஆ) யவனர்
இ) உரோமபுரி
ஈ) சீனர்
52. கீழ்க்கண்ட பாடல் வரிகளை ஆராய்க.
1. சுள்ளியம் பேர்யாற்று வெண்னுரை கலங்க – அகநானூறு
2. நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பதிற்றுப்பத்து
3. மாலைத் திங்கள் வழியோன் ஏறினான் – சிலம்பு
4. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு
அ) அனைத்தும் தவறு
ஆ) 1, 3, 4 சரி
இ) 3, 4 சரி
ஈ) அனைத்தும் சரி
53. மதுரை குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது
1. தமிழகத்தின் தொன்மையான நகரம்.
2. இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வரும் நகரங்களுள் ஒன்று.
3. கௌடில்யர், கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டு பயணிகளால் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்கது.
4. செவ்விலக்கியத்தின் தலைநகராக திகழ்கிறது.
அ) 3, 4
ஆ) 2, 4
இ) 3 மட்டும்
ஈ) எதுவுமில்லை
(விளக்கம்: கௌடில்யர் – பொ. ஆ. மு. 370
மெகஸ்தனிஸ் – பொ. ஆ. மு. 350)
54. “ எல்லா இனமும் மதமும் உண்டு – இங்கு
இறையருள் ஆலயம் ஏகமுண்டு!
பல்லாயிரம் ஆண்டு வரலாறு – இதைப்
பாடாத நாவில்லை பண்பாடு! ”
என்ற பாடலில் சிறப்பிக்கப்படும் நகரம்
அ) தஞ்சாவூர்
ஆ) கும்பகோணம்
இ) மதுரை
ஈ) திருச்சி
55. இலக்கணக் குறிப்புத் தருக.
செங்கோல், பேரழகு
அ) வினைத் தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உவமை தொகை
ஈ) உம்மை தொகை
(விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் ‘மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
56. இலக்கணக் குறிப்புத் தருக
எழுந்த, பாடு
அ) பெயரெச்சம், ஏவல்வினைமுற்று
ஆ) வினையெச்சம், பெயரெச்சம்
இ) வினைத் தொகை, பெயரெச்சம்
ஈ) வினையெச்சம், ஏவல்வினைமுற்று
(விளக்கம்: பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
• முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும். இது எதிர்காலத்தைக் காட்டி வரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.)
57. இலக்கணக் குறிப்புத் தருக – பாடாத
அ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ) எதிர்மறைப் பெயரெச்சம்
இ) வினைத்தொகை
ஈ) ஏவல்வினை முற்று
(விளக்கம்: எதிர்மறைப் பெயரெச்சம் காலம் காட்டுவதில்லை. முக்காலத்திற்கும் பொதுவானதாக அமையும்.)
58. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வாழ்ந்திருக்கும்
அ) வாழ்ந்து + இருக்கும்
ஆ) வாழ்ந்து + இரு + க் + க் + உம்
இ) வாழ்ந்திரு + க் + க் + உம்
ஈ) வாழ்ந்திரு + க் + உம்
59. ” வாழ்ந்திருக்கும் வாழ்ந்திரு + க் + க் + உம் ” இதில் ‘ க் + க் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
அ) சந்தி, எதிர்மறை இடைநிலை
ஆ) சந்தி, எதிர்கால இடைநிலை
இ) எதிர்கால இடைநிலை, சந்தி
ஈ) சந்தி, இறந்தகால இடைநிலை
60. சிந்து என்னும் பாவகை _____ பாடல் அமைப்பிலிருந்து தோன்றியது.
அ) தெம்மாங்கு
ஆ) ஆனந்தகளிப்பு
இ) சந்தப் பாடல்
ஈ) நாட்டுப்புறப் பாடல்
(விளக்கம்: சிந்து என்பது ஓசைநயத்துடன் பாடக் கூடிய பாவகை.)
61. சிந்து வகை பாடல்கள் ______, ______ அமைந்த கண்ணிகளை கொண்டவை.
அ) இலக்கணம், சந்தம்
ஆ) பாவகை, இலக்கணம்
இ) சந்தம், இயைபுத் தொடை
ஈ) சந்தம், பாவகை
62. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை பாடல் வடிவங்கள் சிந்து பாவகை வழக்கிலிருந்த காலத்தில் புதிய பாவடிவங்களாக தோன்றின.
1. ஆனந்தக்களிப்பு
2. தெம்மாங்கு
3. வழிநடைச் சிந்து
4. நொண்டிச்சிந்து
5. கும்மிப் பாடல்கள்
அ) அனைத்தும்
ஆ) 1, 2
இ) 1, 2, 5
ஈ) 3, 4
(விளக்கம்: காவடிச்சிந்து, வழிநடைச்சிந்து, நொண்டிச் சிந்து போன்றவை சந்தப்பாடல்கள். ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு முதலியவை நாட்டுப் பாடல் வடிவங்கள்)
63. ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது _____ பாவகை ஆகும்.
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) சிந்து
ஈ) கலிப்பா
64. கீழ்க்கண்டவர்களுள் சிந்து வகையினை அதிகமாக கையாண்டவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கடுவெளி சித்தர்
ஈ) கம்பர்
65. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
1. சிந்து என்பது இசைத்தமிழ்ப் பாகுபாடுகளில் ஒன்று.
2. பல்லவி, அனுப்பல்லவி, இன்றி சரணங்களுக்குரிய கண்ணிகளுடன் உடைய பாக்கள் சில வகைச் சிந்துகளில் காணப்படுகின்றன.
3. சித்தர் பாடல்கள் பல சிந்து வகையில் அமைந்துள்ளன.
அ) அனைத்தும் சரி
ஆ) 1, 2 சரி
இ) 1, 3 சரி
ஈ) 2, 3 சரி
66. “பாபம் செய்யாதிரு மனமே ” என்னும் சிந்து வகைப் பாடல் யாருடையது?
அ) திருமூலர்
ஆ) அகத்தியர்
இ) கடுவெளிச் சித்தர்
ஈ) தொல்காப்பியர்
67. ‘ சிந்துக்குத் தந்தை ‘ என போற்றப்படுபவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கடுவெளி சித்தர்
ஈ) கம்பர்
68. சரியான இணையைத் தேர்ந்தெடு
1. பல்லவி – எடுப்பு
2. அனுபல்லவி – தொடுப்பு
3. சரணம் – முடிப்பு
அ) அனைத்தும் சரி
ஆ) 1, 2 சரி
இ) 1, 3 சரி
ஈ) 2, 3 சரி
69. மதுரைக் காஞ்சி என்பது எவ்வகை நூல்களுள் ஒன்று?
அ) பதினெண் கீழ்க்கணக்கு
ஆ) பதினெண் மேற்கணக்கு
இ) சிந்துப் பாடல்
ஈ) எட்டுத்தொகை
70. “ பாரதி போதிச்ச பாடசாலை – திருப்
பரங்குன்ற முருகன் நின்னசோலை ”
என்ற வரிகள் எந்த கவிதையில் இடம்பெற்றுள்ளன
அ) மதுரைக் காஞ்சி
ஆ) நான்மாடக்கூடல்
இ) காவடிச் சிந்து
ஈ) நொண்டிச்சிந்து
71. மதுரைக் காஞ்சியில் கீழ்க்கண்ட எந்தெந்த காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன.
1. கோட்டை கொத்தளம்
2. திருவிழாக்கள்
3. பலவகைப் பள்ளிகள்
4. நாற்பெருங்குழு
5. அந்தி வணிகம்
அ) அனைத்தும்
ஆ) 1, 3, 5
இ) 2, 3
ஈ) 1, 2, 3
72. “மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்உற ஓங்கிய பல் படைப்புரிசைத் தொல்வலி நிலைஇய ”
என்னும் வரிகளை இயற்றியவர் யார்?
அ) பாரதியார்
ஆ) கடுவெளி சித்தர்
இ) மாங்குடி மருதனார்
ஈ) பாரதிதாசன்
73. ” ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்
பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப”
இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
அ) நான்மாடக்கூடல்
ஆ) மதுரைக் காஞ்சி
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறநானூறு
74. ” பொறிமயிர் வாரணம். . .
கூட்டுறை வயமாப் புலியொடு குழும ”
என்ற வரிகள் மதுரையில் ______ இருந்ததை உணர்த்துகின்றன.
அ) வாரணங்கள்
ஆ) புலிகள்
இ) மாடங்கள்
ஈ) வனவிலங்கு சரணாலயம்
75. மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியை கூறும் மதுரைக் காஞ்சியின் அடிகள் _____.
அ) 637 – 639
ஆ) 693 – 697
இ) 673 – 677
ஈ) 637 – 677
76. பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலை இயற்றியவர் யார்?
அ) இராசவேல்
ஆ) இராசமாணிக்கனார்
இ) இராசேந்திரன்
ஈ) அரவிந்த் குப்தா
77. சரியான பொருளை தேர்ந்தெடு
புரிசை, பணை
அ) மதில், பனைமரம்
ஆ) சாளரம், பனைமரம்
இ) நீர்நிலை, சாளரம்
ஈ) மதில், முரசு
78. சரியான பொருளை தேர்ந்தெடு
சில்காற்று, மாகால்
அ) பெருங்காற்று, புயல்
ஆ) தென்றல், புயல்
இ) தென்றல், பெருங்காற்று
ஈ) தென்றல், சாளரம்
79. சரியான பொருளை தேர்ந்தெடு
முந்நீர், கயம்
அ) மூன்று வகையான நீர், கடல்
ஆ) கடல், நீர்நிலை
இ) கடல், முரசு
ஈ) கடல், சாளரம்
80. சரியான பொருளை தேர்ந்தெடு
அணங்கு, புழை
அ) ஒழுங்கு, சாளரம்
ஆ) தெய்வம், மதில்
இ) தெய்வம், சாளரம்
ஈ) மதில், சாளரம்
81. சரியான பொருளை தேர்ந்தெடு
ஓவு, நியமம்
அ) ஓய்வு, நியமனம்
ஆ) ஓய்வு, அங்காடி
இ) ஓவியம், அங்காடி
ஈ) ஓவியம், நியமனம்
82. இலக்கணக் குறிப்புத் தருக
நெடுநிலை, முந்நீர்
அ) வினைத் தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உவமை தொகை
ஈ) உம்மை தொகை
(விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் ‘மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
83. இலக்கணக் குறிப்புத் தருக
முழங்கிசை, இமிழிசை
அ) வினைத் தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உவமை தொகை
ஈ) உம்மை தொகை
(விளக்கம்: வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும்.)
84. இலக்கணக் குறிப்புத் தருக – மகிழ்ந்தோர்
அ) வினையாலணையும் பெயர்
ஆ) எதிர்மறைப் பெயரெச்சம்
இ) வினைத்தொகை
ஈ) ஏவல்வினை முற்று
(விளக்கம்: வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)
85. இலக்கணக் குறிப்புத் தருக – மாகால்
அ) உரிச்சொல் தொடர்
ஆ) பண்புத்தொகை
இ) உவமை தொகை
ஈ) ஏவல்வினை முற்று
(விளக்கம்: ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும். சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட ஆகியவை உரிச்சொற்களாக வரும்)
86. இலக்கணக் குறிப்புத் தருக – ஓங்கிய, வாயில்
அ) பெயரெச்சம், ஏவல்வினைமுற்று
ஆ) வினையெச்சம், பெயரெச்சம்
இ) பெயரெச்சம், இலக்கணப் போலி
ஈ) வினையெச்சம், ஏவல்வினைமுற்று
(விளக்கம்: பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.)
87. இலக்கணக் குறிப்புத் தருக
நிலைஇய, குழாஅத்து
அ) செய்யுளிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
ஆ) சொல்லிசை அளபெடை, செய்யுளிசை அளபெடை
இ) எதிர்மறைப் பெயரெச்சம், செய்யுளிசை அளபெடை
ஈ) பெயரெச்சம், சொல்லிசை அளபெடை
(விளக்கம்: செய்யுளிசை அளபெடை செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும்.
• ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்)
88. பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – ஆழ்ந்த
அ) ஆழ்ந்து + அ
ஆ) ஆழ் + த் + அ
இ) ஆழ் + த்(ந்) + த் + அ
ஈ) ஆழ் + ந் + அ
89. பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – ஓங்கிய
அ) ஓங்கு + இய
ஆ) ஓங்கு + இ + அ
இ) ஓங்கு + ய் + அ
ஈ) ஓங்கு + இ(ன்) + ய் + அ
90. பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – மகிழ்ந்தோர்
அ) மகிழ்ந்து + ஓர்
ஆ) மகிழ்ந்து + ய் + ஓர்
இ) மகிழ் + த்(ந்) + த் + ஓர்
ஈ) மகிழ் + த் + ஓர்
91. ‘ ஆழ்ந்த ‘ என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ‘ அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
அ) வினையெச்ச விகுதி
ஆ) பெயரெச்ச விகுதி
இ) ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
ஈ) பலர்பால் வினை முற்று விகுதி
(விளக்கம்: பெயரெச்ச விகுதிகள் – அ, (உம்))
92. ‘ஓங்கிய ‘என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ‘ ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
அ) சந்தி
ஆ) சாரியை
இ) உடம்படுமெய்
ஈ) இறந்தகால இடைநிலை
93. ‘ மகிழ்ந்தோர் ‘என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ‘ ஓர் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
அ) பலர்பால் வினைமுற்று விகுதி
ஆ) ஆண்பால் வினைமுற்று விகுதி
இ) பெண்பால் வினைமுற்று விகுதி
ஈ) ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
(விளக்கம்: பலர்பால் வினைமுற்று விகுதிகள் – அர், ஆர், ப, மார்)
94. மதுரைக் காஞ்சி மொத்தம் எத்தனை அடிகளைக் கொண்டது?
அ) 872
ஆ) 782
இ) 354
ஈ) 534
95. மதுரைக் காஞ்சியிலுள்ள பாடல்களில் எத்தனை அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன?
அ) 872
ஆ) 782
இ) 354
ஈ) 534
96. மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?
அ) சேரன் செங்குட்டுவன்
ஆ) இளம்பெருவழுதி
இ) தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ) நலங்கிள்ளி
97. மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
அ) கணிமேதாவியர்
ஆ) மாங்குடி மருதனார்
இ) ஒளவையார்
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
(விளக்கம்: மாங்குடி மருதனார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்)
98. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்?
அ) 11
ஆ) 12
இ) 13
ஈ) 14
99. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?
1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி.
2. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
3. மதுரையின் சிறப்புகளை பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக் காஞ்சி எனப்பட்டது.
4. இதை ‘பெருகுவள மதுரைக்காஞ்சி ‘ எனவும் அழைக்கப்படுகிறது.
அ) அனைத்தும் சரி
ஆ) 2, 3, 4 சரி
இ) 1, 3, 4 சரி
ஈ) 3, 4 சரி
(விளக்கம்: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி.)
100. கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
1. மால் என்பதன் தமிழ்ச் சொல் பல்லங்காடியகம்.
2. பகலில் செயல்படும் கடை வீதிகள் ‘ நாளங்காடி ‘ எனப்படும்.
3. இரவில் செயல்படும் கடை வீதிகள் ‘ அல்லங்காடி ‘ எனப்படும்.
அ) அனைத்தும் சரி
ஆ) 2, 3 சரி
இ) 2, 3 தவறு
ஈ) 1, 3 சரி
(விளக்கம்: நாள் – பகல், அல் – இரவு)
101. உள்ளுர்த் தேவைக்கு ஏற்றார் போல், அங்கு விளைகிற உணவுப் பொருள்களையும் விவசாயம், சமையல், வீடு ஆகியவற்றுக்குத் தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கும் சிறு வணிக செயல்பாடு ____ எனப்படும்.
அ) சந்தை
ஆ) கிராமச் சந்தை
இ) வியாபாரம்
ஈ) சிறு வியாபாரம்
102. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிச் சந்தை எத்தனை கடைகளுடன் எவ்வளவு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அ) 1000, 18 ஏக்கர்
ஆ) 8000, 81 ஏக்கர்
இ) 8000, 18 ஏக்கர்
ஈ) 1000, 81 ஏக்கர்
103. போச்சம்பள்ளிச் சந்தை வாரந்தோறும் எந்தக் கிழமைகளில் கூடுகிறது?
அ) சனி
ஆ) ஞாயிறு
இ) திங்கள்
ஈ) செவ்வாய்
104. போச்சம்பள்ளிச் சந்தை எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது?
அ) 152
ஆ) 251
இ) 125
ஈ) 215
(விளக்கம்: இச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது.)
105. தவறான இணையைத் தேர்ந்தெடு.
அ) மணப்பாறை – மாட்டுச்சந்தை
ஆ) அய்யலூர் – ஆட்டுச்சந்தை
இ) ஒட்டன்சத்திரம் – காய்கறிச்சந்தை
ஈ) நாகர்கோவில் தோவாளை – கருவாட்டுச் சந்தை
(விளக்கம்: நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை)
106. சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. ஈரோடு – ஜவுளிச்சந்தை
2. காராமணி குப்பம் (கடலூர்) – கருவாட்டுச் சந்தை
3. நாகப்பட்டினம் – மீன் சந்தை
அ) அனைத்தும் சரி
ஆ) 1, 2 சரி
இ) 2, 3 சரி
ஈ) 1, 3 சரி
107. சரியான இணையை தேர்ந்தெடு.
1. ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும்.
2. தொல்காப்பியர் ஆகுபெயர்களை பதினைந்தாகவும் நன்னூலார் ஏழாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர்.
அ) அனைத்தும் சரி
ஆ) 1 மட்டும் சரி
இ) 2 மட்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
(விளக்கம்: தொல்காப்பியர் ஆகுபெயர்களை ஏழாகவும் நன்னூலார் பதினைந்தாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர்.)
108. ‘ முல்லையைத் தொடுத்தாள் ‘ எவ்வகை ஆகுபெயர்
அ) பொருளாகு பெயர்
ஆ) இடவாகு பெயர்
இ) காலவாகு பெயர்
ஈ) சினையாகுபெயர்
(விளக்கம்: முதற் பொருளாகிய முல்லைக் கொடி, அதன் சினையாகிய பூவுக்கு ஆகி வந்தது.)
109. ‘ வகுப்பறை சிரித்தது ‘ எவ்வகை ஆகுபெயர்
அ) பொருளாகு பெயர்
ஆ) இடவாகு பெயர்
இ) காலவாகு பெயர்
ஈ) சினையாகுபெயர்
(விளக்கம்: வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது)
110. கீழ்க்கண்டவற்றுள் சினையாகுபெயரை குறிக்கும் தொடர் எது?
அ) கார் அறுத்தான்
ஆ) மருக்கொழுந்து நட்டான்
இ) மஞ்சள் பூசினாள்
ஈ) வற்றல் தின்றான்
(விளக்கம்: மருக்கொழுந்து என்னும் சினைப் பெயர் அதன் செடிக்கு ஆகிவந்தது)
111. கீழ்க்கண்டவற்றுள் பண்பாகு பெயரை குறிக்கும் தொடர் எது?
அ) கார் அறுத்தான்
ஆ) மருக்கொழுந்து நட்டான்
இ) மஞ்சள் பூசினாள்
ஈ) வற்றல் தின்றான்
(விளக்கம்: மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்தது)
112. ‘ கார் அறுத்தான் ‘ எவ்வகை ஆகுபெயர்
அ) பொருளாகு பெயர்
ஆ) இடவாகு பெயர்
இ) காலவாகு பெயர்
ஈ) சினையாகுபெயர்
(விளக்கம்: கார் என்னும் காலப் பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது)
113. கீழ்க்கண்டவற்றுள் தொழிலாகுபெயரை குறிக்கும் தொடர் எது?
அ) கார் அறுத்தான்
ஆ) மருக்கொழுந்து நட்டான்
இ) மஞ்சள் பூசினாள்
ஈ) வற்றல் தின்றான்
(விளக்கம்: வற்றல் என்னும் தொழில் பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகி வந்தது.)
114. சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. வானொலி கேட்டு மகிழ்ந்தனர் – கருவியாகு பெயர்
2. பைங்கூழ் வளர்ந்தது – காரியவாகு பெயர்
3. அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் – கருத்தாவாகுபெயர்
அ) அனைத்தும் சரி
ஆ) 1 மட்டும் சரி
இ) 2, 3 சரி
ஈ) 2 மட்டும் சரி
(விளக்கம்:
1. வானொலி கேட்டு மகிழ்ந்தனர் – வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.
2. பைங்கூழ் வளர்ந்தது – கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது.
3. அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன் – அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது.)
115. தவறான இணையைத் தேர்ந்தெடு
1. ஒன்று பெற்றால் ஒளிமயம் – எண்ணலளவை ஆகுபெயர்
2. இரண்டு கிலோ கொடு – முகத்தலளவை ஆகுபெயர்
3. அரை லிட்டர் வாங்கு – எடுத்தலளவை ஆகுபெயர்
4. ஐந்து மீட்டர் வெட்டினான் – நீட்டலளவை ஆகுபெயர்
அ) அனைத்தும்
ஆ) 2, 3
இ) 1, 4
ஈ) எதுவுமில்லை
(விளக்கம்: 2. இரண்டு கிலோ கொடு – எடுத்தலளவை ஆகுபெயர்
3. அரை லிட்டர் வாங்கு – முகத்தலளவை ஆகுபெயர்)
116. கூற்று 1: காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும்.
கூற்று 2: வண்டியூர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில் அமைந்துள்ளது.
அ) கூற்று 1, 2 சரி
ஆ) கூற்று 1, 2 தவறு
இ) கூற்று 2 சரி, 1 தவறு
ஈ) கூற்று 1 சரி, 2 தவறு
117. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
அ) பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
ஆ) குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
இ) மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
ஈ) மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
118. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க
காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்.
அ) காவிரியாற்றின் கழிமுகம் எதற்காக அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்விதம் அழைக்கப்பட்டன?
ஆ) காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
இ) காவிரியாற்றின் கழிமுகம் எங்கு அமைந்துள்ளது – பகலில் கடைகள் எவ்வாறு இயங்கின.
ஈ) காவிரியாற்றின் கழிமுகம் எதனால் அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எப்படி அழைக்கப்பட்டன?
119. ” மாகால் எடுத்த முந்நீர் போல் ” இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.
அ) நான்மாடக்கூடல்
ஆ) மதுரைக்காஞ்சி
இ) புறநானூறு
ஈ) அகநானூறு
120. சோழநாட்டின் தலைநகராகிய காவிரி பூம்பட்டினத்திலும், பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் ” கூலங் குவித்த கூல வீதிகள் “ இருந்தன எனக் கூறும் நூல் எது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) புறநானூறு
ஈ) மதுரைக் காஞ்சி
121. சரியான தொடரை தேர்ந்தெடு.
அ) மலையேறிய மக்கள் மாலையின் வேகவேகமாய்க் கீழிறங்கின.
ஆ) எங்கள் ஊர் சந்தையில் காய்கறிகள் கிடைக்கும்.
இ) பண்டை துறைமுகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது.
ஈ) சிட்டுக்கு சிறகுகள் முளைத்தது.
(விளக்கம்:
• மலையேறிய மக்கள் மாலையில் வேகவேகமாய்க் கீழிறங்கின.
• பண்டை துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
• சிட்டுக்கு சிறகுகள் முளைத்தன.)
122. கீழ்வருவனவற்றுள் கூலம் எனக் குறிப்பிடப்படுபவை எவை
1. நெல்லும் புல்லும்
2. வரகும் தினையும்
3. எள்ளும் கொள்ளும்
4. அவரையும் துவரையும்
5. பயறும் உளுந்தும்
அ) அனைத்தும் சரி
ஆ) 1, 3, 5
இ) 1, 2, 3
ஈ) 3, 4, 5
123. பொருத்துக.
1. கழிமுகங்கள் – i) Estuaries
2. கலங்கரை விளக்கம் – ii) Light house
3. துறைமுகங்கள் – iii) Ports
4. பண்டமாற்றுமுறை – iv) Commodity Exchange
அ) i ii iii iv
ஆ) iii ii i iv
இ) iv iii ii i
ஈ) iv ii i iii
124. பொருத்துக
1. இளநீர் – i) Vegetable Soup
2. அகழி – ii) Sugar Cane juice
3. கரும்புச்சாறு – iii) Moat
4. காய்கறி வடிச் சாறு – iv) Tender coconut
அ) i ii iii iv
ஆ) iii ii i iv
இ) iv iii ii i
ஈ) iv ii i iii
125. சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் – முனைவர் சு. சக்திவேல்
2. தரங்கம்பாடி தங்கப் புதையல் – பெ. தூரன்
3. இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – ச. தமிழ்ச்செல்வன்
அ) அனைத்தும் சரி
ஆ) 2, 3 சரி
இ) 1, 3 சரி
ஈ) 1, 2 சரி
126. “அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண் “
இக்குறளில் பயின்று வரும் அணி
அ) உவமை அணி
ஆ) எடுத்துக்காட்டுவமை அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) உருவக அணி
127. ” ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார் “
இக்குறளில் பயின்று வரும் அணி
அ) உவமை அணி
ஆ) எடுத்துக்காட்டுவமை அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) உருவக அணி
128. ” உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து ”
இக்குறளில் பயின்று வரும் அணி
அ) உவமை அணி
ஆ) எடுத்துக்காட்டுவமை அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) உருவக அணி
129. பொருளுக்கேற்ற அடியை சரியாக பொருந்தியுள்ளதா என ஆராய்க.
1. கண்டானாம் தான்கண்டவாறு – தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
2. அறம் நாணத்தக்கது உளடைத்து – அறம் வெட்கப்பட்ட அவனை விட்டு விலகிப் போகும்.
3. மாற்றாரை மாற்றும் படை – பகைவரையும் நட்பாக்கும் கருவி
அ) அனைத்தும் சரி
ஆ) 2, 3 சரி
இ) 1, 3 சரி
ஈ) 1, 2 சரி
130. ஐந்து சால்புகளில் இரண்டு ____.
அ) வானமும் நாணமும்
ஆ) நாணமும் இணக்கமும்
இ) இணக்கமும் சுணக்கமும்
ஈ) இணக்கமும் பிணக்கமும்
131. அன்புநாண் ஒப்புரவு ___ வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய ____.
அ) பணிதல், படை
ஆ) பணிதல், தூண்
இ) கண்ணோட்டம், தூண்
ஈ) கண்ணோட்டம், படை