General Tamil

9th Tamil Unit 3 Questions

9th Tamil Unit 3 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 9th Tamil Unit 3 Questions With Answers Uploaded Below.

1. ” எழுந்தது துகள்

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு

கலங்கினர் பலர் ” என்ற அடிகள் இடம்பெற்ற நூல்

அ) நற்றிணை

ஆ) அகநானூறு

இ) கலித்தொகை

ஈ) குறுந்தொகை

(விளக்கம்: கலித்தொகை 102: அடி 21 – 24)

2. இயற்கையை சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்தும் சங்க காலத் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதை விளக்குவது

அ) ஏறு தழுவுதல்

ஆ) விவசாயம்

இ) சங்க இலக்கியங்கள்

ஈ) கல்வெட்டுகள்

3. எருது கட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை ____ பள்ளு பதிவு செய்துள்ளது.

அ) கண்ணுடையம்மன்

ஆ) முத்தாளம்மன்

இ) கித்தேரியம்மாள்

ஈ) முத்துக்குமாரசாமி

4. எருது பொருதார் கல் எம்மாவட்டத்தில் உள்ளது?

அ) சேலம்

ஆ) நாமக்கல்

இ) திருநெல்வேலி

ஈ) காஞ்சிபுரம்

5. வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுபவை____.

அ) வேளாண்மை

ஆ) மாடுகள்

இ) விலங்குகள்

ஈ) பறவைகள்

6. ஏறு தழுவுதல் பற்றி கீழ்க்கண்ட எந்த நூல்களில் கூறப்பட்டுள்ளது.

1. சிலப்பதிகாரம்

2. பள்ளு

3. புறப்பொருள் வெண்பாமாலை

4. கலித்தொகை

அ) 1, 4

ஆ) 1, 2, 4

இ) 2, 4

ஈ) அனைத்தும்

7. “எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு கவிந்தன மருப்பு, கலங்கினர் பலர் ” என்ற அடிகள் எதை பற்றி கூறுகின்றன

அ) ஏறு தழுவும் இளைஞர்கள்

ஆ) ஏறுதழுவுதல் களம்

இ) ஏறுதழுவுதலை காணும் மக்கள்

ஈ) ஏறுதழுவுதலில் ஈடுபடும் மாடுகள்

8. ” நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய் ” என்ற அடிகள் எதை பற்றியது

அ) ஏறு தழுவும். இளைஞர்கள்

ஆ) ஏறுதழுவுதல் களம்

இ) ஏறுதழுவுதலை காணும் மக்கள்

ஈ) ஏறுதழுவுதலில் ஈடுபடும் மாடுகள்

9. காளைப் போர் பற்றிய சித்திரங்கள் எங்குள்ளன?

அ) எகிப்து, கிரீட் தீவு

ஆ) எகிப்து, கிரீஸ்

இ) எகிப்து, மலேசியா

ஈ) எகிப்து, கிரேக்கம்

10. காளைப் போர் குறித்த பெனி – ஹாசன் சித்திரங்கள் எங்குள்ளன?

அ) கிரீட்

ஆ) சீனா

இ) எகிப்து

ஈ) பார்சிலோனியா

11. கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?

அ) நீலகிரி – கரிக்கையூர்

ஆ) மதுரை – கல்லூத்துமேட்டுப்பட்டி

இ) தேனி – சித்திரக்கல் புடவி

ஈ) சேலம் – கரிக்கையூர்

12. “நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டி பாய்பவையாய் ” இவ்வடி இடம் பெற்ற நூல்.

அ) சிலப்பதிகாரம்

ஆ) கலித்தொகை

இ) புறநானூறு

ஈ) பள்ளு

(விளக்கம்: கலி – 106: அடி 7-10)

13. திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ____ல் உள்ளது.

அ) நீலகிரி – கரிக்கையூர்

ஆ) மதுரை -கல்லூத்துமேட்டுப்பட்டி

இ) தேனி – சித்திரக்கல் புடவி

ஈ) சேலம் – கரிக்கையூர்

14. திமிலுடன் கூடிய காளை ஓவியம் உள்ள இடம்

அ) நீலகிரி – கரிக்கையூர்

ஆ) மதுரை -கல்லூத்துமேட்டுப்பட்டி

இ) தேனி – சித்திரக்கல் புடவி

ஈ) சேலம் – கரிக்கையூர்

15. ஏறுதழுவுதல் குறித்த தொல் சான்றுகள் பற்றிய செய்திகளை ஆராய்க.

1. ஏறு தழுவுதல் குறித்த நடுகற்கள், புடைப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.

2. கிரீட் தீவிலுள்ள கினோஸல் எனுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களில் காளைப்போர் குறித்த செய்தி உள்ளது.

3. எருது பொருதார் கல் சேலம் மாவட்டத்தில் உள்ளது.

4. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே சித்திரக் கல் புடவியில் திமில்டன் கூடிய காளை ஓவியம் உள்ளது.

அ) அனைத்தும் தவறு

ஆ) அனைத்தும் சரி

இ) 3 மட்டும் சரி

ஈ) 4 மட்டும் தவறு

16. சிந்துவெளி நாகரிக மக்கள் தெய்வமாக வழிபட்ட விலங்கு

அ) நாய்

ஆ) சிங்கம்

இ) பசு

ஈ) காளை

17. சிந்துவெளி அகழ்வாய்வில் கிடைத்த மாடு தழுவும் கல் முத்திரை தமிழர்களின் பண்பாடான ஏறு தழுவுதலை குறிப்பதாக கூறியவர் யார்?

அ) மாங்குடி மருதனார்

ஆ) ஐராவதம் மகாதேவன்

இ) பெனி – ஹாசன்

ஈ) ஐராவதீஸ்வரர்

18. ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் ____ உடனும், மருத நில மக்களின் _____ உடனும் பாலை நில மக்களின் ____ உடனும் பிணைந்தது.

அ) அடையாளம், தொழில் உற்பத்தி, போக்குவரத்துத் தொழில்

ஆ) தொழில் உற்பத்தி, அடையாளம், போக்குவரத்துத் தொழில்

இ) அடையாளம், போக்குவரத்து தொழில், தொழில் உற்பத்தி

ஈ) போக்குவரத்து தொழில், தொழில் உற்பத்தி, அடையாளம்

19. ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன.

1. எருதுகள்

2. ஏறுகள்

3. ஏர் விலங்கு

4. ஏர் மாடுகள்

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 1, 2, 4

ஈ) 1, 3, 4

20. கீழ்க்கண்டவற்றுள் ஏறுதழுவுதலின் வேறு பெயர்கள் யாவை?

1. மாடுபிடித்தல்

2. மாடு அணைதல்

3. மாடு விடுதல்

4. வேலி மஞ்சுவிரட்டு

5. ஏறு விடுதல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

21. உழவர்கள் பொங்கலன்று மாடுகளுக்கு _____ஊட்டிவிடுவர்.

அ) தளிகைப் பொங்கல்

ஆ) கரும்பு

இ) மாவிலை

ஈ) நெல்

22. வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்த மாடுகளுடன் அவர்களின் ____மரபாக உருவானது ஏறுதழுவுதல் ஆகும்.

அ) போட்டியிட்டு வெற்றி பெறும்

ஆ) சண்டையிடும்

இ) விளையாடி மகிழும்

ஈ) ஏர் ஓட்டும்

23. சல்லிக்கட்டு என்னும் சொல்லில் ‘ சல்லி ‘ என்பது எதை குறிக்கும்

அ) மாட்டின் திமில்

ஆ) கொம்பு

இ) கழுத்தில் கட்டப்பட்டுள்ள வளையம்

ஈ) கழுத்தில் உள்ள மாலை

24. ஏறுதழுவுதல் விளையாட்டில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள துணி முடிப்பில் ______ இருக்கும்.

அ) சல்லி நாணயங்கள்

ஆ) மலர்கள்

இ) வைரம்

ஈ) வெள்ளிக் கட்டிகள்

25. காளை சண்டையை தேசிய விளையாட்டாக கொண்ட நாடு

அ) ஸ்பெயின்

ஆ) கனடா

இ) பாரிஸ்

ஈ) இங்கிலாந்து

26. அன்பையும் வீரத்தையும் ஒரு சேர வளர்த்தெடுக்கும் விளையாட்டு

அ) கபடி

ஆ) மாடு அணைதல்

இ) நீர் விளையாட்டு

ஈ) ஓரையாடுதல்

27. எருது கட்டி எத்தனை ஆண்டுகள் தொன்மையுடைய விளையாட்டு

அ) 2500

ஆ) 1000

இ) 10000

ஈ) 2000

28. கூற்று: ஏறு தழுவுதல் விளையாட்டை பேணி பாதுகாக்க வேண்டும்.

காரணம்: இவ்விளையாட்டு விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டு குறியீடு.

அ) கூற்று சரி காரணம் தவறு

ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு

இ) கூற்று காரணம் இரண்டும் சரி

ஈ) கூற்று சரி காரணம் தவறு.

29. இந்திர விழா கீழ்க்கண்ட எந்த நகரோடு அதிகம் தொடர்புடையது?

அ) கொற்கை

ஆ) புகார்

இ) தொண்டி

ஈ) முசிறி

30. கீழ்க்கண்டவற்றுள் இந்திர விழா பற்றி கூறும் நூல்கள் எவை?

1. திருக்குறள்

2. சிலப்பதிகாரம்

3. மணிமேகலை

4. வளையாபதி

அ) அனைத்தும்

ஆ) 2, 3, 4

இ) 2, 3

ஈ) 1, 3, 4

31. இந்திர விழாவின் நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமையும் மணிமேகலையிலுள்ள காதை _____.

அ) வரந்தருக்காதை

ஆ) ஊர் சூழ்வரிக்காதை

இ) விழாவறை காதை

ஈ) கடவுள் வாழ்த்து

32. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

சமயக் கணக்கர், பாடைமாக்கள்

அ) கணக்காளர், படை வீரர்கள்

ஆ) சமயத் தத்துவவாதிகள், பல மொழிபேசும் மக்கள்

இ) கணக்காளர், பல மொழிபேசும் மக்கள்

ஈ) சமயத் தத்துவவாதிகள், படை வீரர்கள்

33. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

குழீஇ, தோம்

அ) பள்ளம், இசை

ஆ) ஒன்றுகூடி, இசை

இ) ஒன்றுகூடி, குற்றம்

ஈ) பள்ளம், குற்றம்

34. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

கோட்டி, பொலம்

அ) கொடி, குற்றம்

ஆ) மன்றம், பொன்

இ) கொடி, பொன்

ஈ) மன்றம், குற்றம்

35. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

வேதிகை, தூணம்

அ) திண்ணை, தூண்

ஆ) வேதங்கள், தூசு

இ) வேதங்கள், தூண்

ஈ) திண்ணை, தூசு

36. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

தாமம், கதலிகைக் கொடி

அ) தாமதம், துணியாலான கொடி

ஆ) போர், துணியாலான கொடி

இ) மாலை, சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது

ஈ) போர், சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது

37. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

காழூன்று, விலோதம்

அ) சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது, துணியாலான கொடி

ஆ) துணியாலான கொடி, சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது

இ) கொம்புகளில் கட்டும் கொடி, துணியாலான கொடி

ஈ) சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது, மரத்தின் மீது படர்ந்த கொடி

38. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

செற்றம், கலாம்

அ) படை, வாழ்க்கை

ஆ) சினம், போர்

இ) படை, போர்

ஈ) சினம், வாழ்க்கை

39. சரியான பொருளைத் தேர்ந்தெடு.

வசி, துருத்தி

அ) வசீகரம், சென்று

ஆ) வசீகரம், ஆற்றிடைக்குறை

இ) மழை, ஆற்றிடைக்குறை

ஈ) மழை, சென்று

40. மணிமேகலையின் விழாவறை காதையில் இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது

அ) 27

ஆ) 28

இ) 47

ஈ) 48

41. ” ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் ”

என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) வளையாபதி

ஈ) குண்டலகேசி

42. “காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் ”

இவ்வரிகள் மணிமேகலை நூலில் இடம்பெறும் காதை

அ) வரந்தருக்காதை

ஆ) ஊர் சூழ்வரிக்காதை

இ) விழாவறை காதை

ஈ) கடவுள் வாழ்த்து

43. கீழ்க்கண்டவற்றுள் ஐம்பெருங்குழுவில் அல்லாதது எது?

1. அமைச்சர்

2. சடங்கு செய்விப்போர்

3. படைத் தலைவர்

4. தூதர்

5. சாரணர்

அ) 1, 5

ஆ) 2, 3

இ) 2, 4

ஈ) எதுவுமில்லை

44. கீழ்க்கண்டவற்றுள் எண் பேராயத்தில் இடம்பெறுவது எது?

அ) சடங்கு செய்விப்போர்

ஆ) ஒற்றர்

இ) யானை வீரர்

ஈ) அமைச்சர்

(விளக்கம்: எண் பேராயம்

1. கரணத்தியலவர் 5. நகர மாந்தர்

2. கரும விதிகள் 6. படைத்தலைவர்

3. கனகச் சுற்றம் 7. யானை வீரர்

4. கடைக்காப்பாளர் 8. இவுளி மறவர்)

45. இலக்கணக் குறிப்புத் தருக.

தோரணவீதியும், தோமறு கோட்டியும்

அ) உம்மைத் தொகை

ஆ) உவமைத்தொகை

இ) எண்ணும்மை

ஈ) பண்புத்தொகை

(விளக்கம்: கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’ எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.)

46. இலக்கணக் குறிப்புத் தருக.

காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம்

அ) 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்

ஆ) 2 ம் வேற்றுமை தொகைகள்

இ) 3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைகள்

ஈ) 3 ம் வேற்றுமை தொகைகள்

(விளக்கம்: சொற்றொடர்களில் ‘ ஐ ‘ என்னும் வேற்றுமை உருபு மறைந்து, பொருள் நிறைவு பெறும் பொருட்டு வேற்றுமை உருபுடன் வேறு சொல்லும் தொக்கி (மறைந்து) வருவதால் இவை 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.)

47. இலக்கணக் குறிப்புத் தருக.

மாற்றுமின், பரப்புமின்

அ) ஏவல் ஒருமை வினை முற்று

ஆ) ஏவல் பன்மை வினைமுற்று

இ) முன்னிலை ஒருமை வினைமுற்று

ஈ) முன்னிலை பன்மை வினை முற்று

(விளக்கம்: ஏவல் பன்மை வினை முற்று விகுதி – மின்)

48. இலக்கணக் குறிப்புத் தருக – உறுபொருள்

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) உரிச்சொல் தொடர்

ஈ) வினையெச்சம்

(விளக்கம்: ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும். சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட போன்றவை உரிச்சொற்களாக வரும்)

49. இலக்கணக் குறிப்புத் தருக – தாழ்பூந்துறை

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) உரிச்சொல் தொடர்

ஈ) வினையெச்சம்

(விளக்கம்: வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும்.)

50. இலக்கணக் குறிப்புத் தருக

நன்பொருள், தண்மணல், நல்லுரை

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) உரிச்சொல் தொடர்

ஈ) வினையெச்சம்

(விளக்கம்: இரு சொற்களுக்கிடையில் ‘மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)

51. இலக்கணக் குறிப்புத் தருக – பாங்கறிந்து

அ) 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

ஆ) 2 ம் வேற்றுமை தொகை

இ) 3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

ஈ) 3 ம் வேற்றுமை தொகை

(விளக்கம்: இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ ‘ மறைந்து வந்துள்ளது)

52. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பரப்புமின்

அ) பரப்பு + ம் + இன்

ஆ) பரப்பு + ம் + ம் + இன்

இ) பரப்பு + மின்

ஈ) பரப்பு + ம் + மின்

53. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அறைந்தனன்

அ) அறைந்து + அன்

ஆ) அறை + த் + அன் + அன்

இ) அறை + த்(ந்) + த் + அன் + அன்

ஈ) அறைந்து + அன் + அன்

54. ” அறைந்தனன் –> அறை + த்(ந்) + த் + அன் + அன்” இதில் ‘ த் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) இறந்தகால இடைநிலை

ஆ) எதிர்கால இடைநிலை

இ) நிகழ்கால இடைநிலை

ஈ) எதிர்மறை இடைநிலை

(விளக்கம்: இறந்தகால இடைநிலைகள் – த், ட், ற், இன்)

55. இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை எவை?

1. சிலப்பதிகாரம்

2. மணிமேகலை

3. வளையாபதி

4. குண்டலகேசி

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 3, 4

ஈ) 1, 4

56. தொடர் நிலை செய்யுள் வரிசையில் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்பவை எவை?

1. சிலப்பதிகாரம்

2. மணிமேகலை

3. வளையாபதி

4. குண்டலகேசி

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 3, 4

ஈ) 1, 4

57. கூற்று: ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை, மணிமேகலைத் துறவு எனவும் அழைக்கப்படுகிறது.

காரணம்: மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுகிறது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

ஆ) கூற்று சரி காரணம் தவறு

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கமல்ல

58. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை ____மதச்சார்புடையது.

அ) சமணம்

ஆ) பெளத்தம்

இ) வைணவம்

ஈ) சைவம்

59. கீழ்க்கண்ட மணிமேகலை குறித்த கூற்றுகளுள் எது தவறானது.

அ) இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்.

ஆ) பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க் காப்பியம்.

இ) சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது

ஈ) கதை அடிப்படையில் சிலப்பதிகாரத்தை மணிமேகலையின் தொடர்ச்சி என கூறுவர்.

(விளக்கம்: கதை அடிப்படையில் மணிமேகலையை சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என கூறுவர்.)

60. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

அ) 20

ஆ) 30

இ) 40

ஈ) 50

61. மணிமேகலையில் முதல் காதையாக அமையப்பெற்றது எது?

அ) வரந்தருக்காதை

ஆ) ஊர் சூழ்வரிக்காதை

இ) விழாவறை காதை

ஈ) கடவுள் வாழ்த்து

62. மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் யார்?

அ) இளங்கோவடிகள்

ஆ) சீத்தலைச் சாத்தனார்

இ) கம்பர்

ஈ) கபிலர்

63. சீத்தலைச் சாத்தனார் குறித்த கூற்றுகளுள் எது சரியானது?

1. சாத்தன் என்பது இயற் பெயர்.

2. மதுரையை சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து திருச்சியில் வாழ்ந்தவர்.

3. கூல வாணிகம் செய்தவர்.

4. நன்னூற் புலவன் என அழைக்கப்படுகிறார்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 1, 3 சரி

ஈ) 1, 3, 4 சரி

(விளக்கம்: திருச்சியை சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.)

64. கீழ்க்கண்டவர்களுள் சீத்தலை சாத்தனாரின் சமகாலத்தவர் யார்?

அ) கம்பர்

ஆ) கபிலர்

இ) இளங்கோவடிகள்

ஈ) நாதகுத்தனார்

65. ‘ தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன் ‘ என்று சாத்தனாரை அழைத்தவர் யார்?

அ) திரு. வி. க.

ஆ) இளங்கோவடிகள்

இ) கால்டுவெல்

ஈ) கம்பர்

66. ” அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்”

இப்பாடல் இடம்பெறும் நூல் எது?

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) வளையாபதி

ஈ) குண்டலகேசி

67. ” பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து

முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் “

இவ்வரிகளை இயற்றியவர் யார்?

அ) இளங்கோவடிகள்

ஆ) சீத்தலைச் சாத்தனார்

இ) கம்பர்

ஈ) கபிலர்

(விளக்கம்: இவ்வரிகள் மணிமேகலையில் விழாவறை காதையில் இடம் பெற்றுள்ளன)

68. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ____ எனப்படும்.

அ) கல்வெட்டு

ஆ) சிலை செய்தல்

இ) அகழாய்வு செய்தல்

ஈ) சிலை செதுக்குதல்

69. ______ நகருக்கு அருகே கீழடி அமைந்துள்ளது.

அ) தஞ்சாவூர்

ஆ) வேலூர்

இ) திருநெல்வேலி

ஈ) மதுரை

70. கீழடி அகழாய்வில் ____ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அ) தமிழ்- கிரேக்க எழுத்துக்கள்

ஆ) கிரேக்க எழுத்துக்கள்

இ) தமிழ் – பிராமி எழுத்துக்கள்

ஈ) தமிழ்-சின எழுத்துக்கள்

71. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் எத்தனை வகையான காலகட்டத்தை சேர்ந்தவை.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 1

72. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களுள் தொன்மையான காலத்தை சேர்ந்த பொருள்கள் எக்காலக் கட்டத்தை சேர்த்தவை?

அ) 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை

ஆ) 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை

இ) 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை

ஈ) 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டவை

73. ‘ அறிவை விரிவு செய் ‘ என்று கூறியவர் யார்?

அ) பாவேந்தர்

ஆ) முண்டாசுக் கவி

இ) கவிமணி

ஈ) ஒளவையார்

74. 1863 ஆம் ஆண்டு ____ என்பவர் சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார்.

அ) எர்னஸ்ட் காசிரர்

ஆ) பாப்லோ நெருடோ

இ) இராபர்ட் புரூஸ்புட்

ஈ) மல்லார்மே

75. ___ என்ற இடத்தில் இந்தியாவின் முதல் கல்லாயுதம் கண்டெடுக்கப்பட்டது.

அ) கோவை

ஆ) சென்னை – பல்லாவரம்

இ) மதுரை

ஈ) கீழடி

76. தமிழகத்தில் ரோமானிய்ர்களின் பழங்காசுகள் கண்டெடுக்கப்பட்ட இடம்

அ) கோவை

ஆ) சென்னை – பல்லாவரம்

இ) மதுரை

ஈ) கீழடி

77. ரோமானியர்களுக்கும் தமிழர்களுக்கும் இருந்த வணிகத்தொடர்பை உறுதிப்படுத்தும் ரோமானிய மட்பாண்டங்கள் எங்கு கிடைத்துள்ளன?

அ) கோவை

ஆ) சென்னை – பல்லாவரம்

இ) அரிக்கமேடு

ஈ) கீழடி

78. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

அ) 1863

ஆ) 1836

இ) 1941

ஈ) 1914

79. “ மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் “ என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) திருவாசகம்

ஈ) கம்பராமாயணம்

80. ” பட்டிமண்டபத்துப்பாங்கு அறிந்து ஏறுமின் “ என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) திருவாசகம்

ஈ) கம்பராமாயணம்

81. ” பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே ” என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) திருவாசகம்

ஈ) கம்பராமாயணம்

82. “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் ” என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) திருவாசகம்

ஈ) கம்பராமாயணம்

83. கம்பராமாயணத்தில் கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வருகிறது

அ) அயோத்யா காண்டம் – நகரப் படலம்

ஆ) அயோத்யா காண்டம் – குகப் படலம்

இ) பாலகாண்டம் – குகப்படலம்

ஈ) பாலகாண்டம் – நகரப்படலம்

84. சிலப்பதிகாரத்தில் பட்டிமண்டம் என்ற சொல் எத்தனையாவது காதையில் இடம்பெற்றுள்ளது?

அ) காதை 1 – அடி 102

ஆ) காதை 41 – அடி 16

இ) காதை 5 – அடி 102

ஈ) காதை 6 – அடி 102

85. மணிமேகலையில் பட்டிமண்டம் என்ற சொல் எத்தனையாவது காதையில் இடம்பெற்றுள்ளது?

அ) காதை 1 – அடி 16

ஆ) காதை 41 – அடி 16

இ) காதை 1 – அடி 10

ஈ) காதை 6 – அடி 12

86. திருவாசகத்தில் பட்டிமண்டம் என்ற சொல் எத்தனையாவது சதகத்தில் இடம்பெற்றுள்ளது?

அ) சதகம் 14

ஆ) சதகம் 41

இ) சதகம் 12

ஈ) சதகம் 42

87. நமது முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை வகைப்படுத்தித் தொகுத்து பார்ப்பதற்கு _____ பெரும் கல்வியாக அமைகின்றது.

அ) கல்வெட்டு

ஆ) ஓவியம்

இ) தொல்லியல் ஆய்வு

ஈ) சிற்பங்ள்

88. கீழ்க்கண்டவற்றுள் அறிவியலின் இரண்டு வகைகள் எவை?

1. மக்கள் அறிவியல்

2. உற்பத்தி அறிவியல்

3. வணிக அறிவியல்

அ) 1, 2

ஆ) 1, 3

இ) 2, 3

ஈ) எதுவுமில்லை

89. _____ மூலதனத்தைப் பெருக்குவதற்காக பெருக்குவதற்காக பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.

அ) மக்கள் அறிவியல்

ஆ) உற்பத்தி அறிவியல்

இ) வணிக அறிவியல்

ஈ) அரசியல் அறிவியல்

90. வல்லெழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு ____ல் வரும்.

அ) முதல்

ஆ) இடை

இ) கடை

ஈ) எதுவுமில்லை

91. க, ச, த, ப ஆகியவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய் எழுத்துகள் தோன்றிப் புணருவது ____ எனப்படும்.

அ) சந்தி

ஆ) புணர்ச்சி

இ) வல்லினம் மிகுதல்

ஈ) சொல்

92. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

93. கீழ்க்கண்டவற்றுள் விகாரப் புணர்ச்சியின் வகைகள் யாவை?

1. தோன்றல்

2. திரிதல்

3. கெடுதல்

4. வல்லினம் மிகுதல்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

94. வல்லினம் மிகுந்து வருதல் _____விகாரப் புணர்ச்சியின்பாற்படும்

அ) தோன்றல்

ஆ) திரிதல்

இ) கெடுதல்

ஈ) வல்லினம் மிகுதல்

95. கீழ்க்கண்டவற்றுள் வல்லின எழுத்துகளின் புணர்ச்சி இலக்கணம் எதற்காக தேவைப்படுகிறது?

1. சொல்லமைப்பின் கட்டுப்பாடுகளை பேண

2. பொருள் மயக்கத்தை தவிர்க்க

3. பேச்சின் இயல்பை பேண

4. இனிய ஓசைக்காக

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3, 4

இ) 1, 3, 4

ஈ) 1, 2, 3

96. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?

அ) அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்

ஆ) அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்

இ) இரண்டாம் வேற்றுமைத் தொகையில்

ஈ) கு என்னும் 4ஆம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில்

(விளக்கம்: ஐ என்னும் 2 ம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்)

97. கீழ்க்கண்டவற்றுள் தவறான தொடரைத் தேர்ந்தெடு.

அ) முதியவருக்கு கொடு

ஆ) தகவல்களைத்திரட்டு

இ) மெட்டுக்குப்பாட்டு

ஈ) எனக் கேட்டார்.

(விளக்கம்: முதியவருக்குக் கொடு-4ஆம் வேற்றுமை உருபு வெளிப்படுகிறது)

98. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?

அ) எ என்னும் வினாவெழுத்தின் பின்

ஆ) எந்த என்னும் வினாச் சொல்லின பின்

இ) மென்தொடர்க்குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணரும்போது

ஈ) என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின்

99. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் சரியானது எது?

1. அதற்கு, இதற்கு எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

2. இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்

3. மிக என்னும் சொல்லின் பின் வல்லினம் மிகும்

4. எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 2, 3, 4 சரி

ஈ) 1, 3, 4 சரி

100. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?

1. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின்

3. வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில்

4. (அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3

ஈ) எதுவுமில்லை.

101. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?

1. ஆறாம் வேற்றுமைத் தொகை

2. திசைப் பெயர்களின் பின்

3. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

4. உவமைத்தொகை

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3

ஈ) எதுவுமில்லை.

102. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் சரியானது எது?

1. சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின்

2. தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின்

3. சில உருவகச் சொற்களில்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

103. கீழ்க்கண்டவற்றுள் தவறான தொடரைத் தேர்ந்தெடு.

1. தீப்பிடித்தது

2. ஓடாக் குதிரை

3. ஓடிப்போனார்

4. புலித்தோல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3 சரி

இ) 2, 3, 4 சரி

ஈ) 1, 3, 4 சரி

104. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. கடைபிடித்தல் –பின்பற்றுதல்

2. கடைப்பிடித்தல் – கடையைப்பிடித்தல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

(விளக்கம்: 1. கடைபிடித்தல் – கடையைப்பிடித்தல்

2. கடைப்பிடித்தல் –பின்பற்றுதல்)

105. பொருந்தாத இணை எது?

அ) ஏறுகோள் – எருதுகட்டி

ஆ) திருவாரூர் – கரிக்கையூர்

இ) ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு

ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

106. முறையான தொடர் அமைப்பினைத் தேர்ந்தெடு

அ) தமிழர்களின் வீர விளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

ஆ) தமிழர்களின் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.

இ) தொன்மையான வீர விளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.

ஈ) தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல்

107. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று

அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

108. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

அ) திசைச் சொற்கள்

ஆ) வடசொற்கள்

இ) உரிச்சொற்கள்

ஈ) தொகைச் சொற்கள்

109. சொற்றொடர்களை முறைப்படுத்துக.

1. ஏறுதழுவுதல் என்பதை

2. தமிழ் அகராதி

3. தழுவிப் பிடித்தல் என்கிறது

அ) 2 – 1 – 3

ஆ) 2 – 3 – 1

இ) 3 – 2 – 1

ஈ) 3 – 1 – 2

110. ” ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

தூங்காத கண்ணே உனைத் தூங்க வைப்பேன் ஆரிராரோ ”

என்பது எவ்வகைப் பாட்டு

அ) நாட்டுப்புறப்பாட்டு

ஆ) செய்யுள்

இ) கவிதை

ஈ) இலக்கியம்

111. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று எந்தெந்த மாவட்டங்கள் அறியப்படுகின்றன?

அ) கரூர், தஞ்சாவூர்

ஆ) கரூர், பெரம்பலூர்

இ) அரியலூர், பெரம்பலூர்

ஈ) நாமக்கல் பெரம்பலூர்

112. உலகின் மிகப் பெரிய கல்மரப்படிமம் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது

அ) கரூர், தஞ்சாவூர்

ஆ) கரூர், பெரம்பலூர்

இ) அரியலூர், பெரம்பலூர்

ஈ) நாமக்கல் பெரம்பலூர்

113. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என கருதப்படுவது எது?

அ) ஜெர்சி

ஆ) காங்கேயம்

இ) சிந்து

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

114. காங்கேயம்மாடுகள் பிறக்கும் போது ____ நிறத்திலும் ஆறு மாதம் வளர்ந்த பிறகு ___ நிறத்திலும் மாறி விடுகின்றன.

அ) சாம்பல், சிவப்பு

ஆ) சிவப்பு, சாம்பல்

இ) வெள்ளை, சாம்பல்

ஈ) அடர் சிவப்பு, சிவப்பு

115. காங்கேயம் பசுக்கள் ___ அல்லது ___ நிறத்தில் இருக்கின்றன.

அ) சாம்பல், சிவப்பு

ஆ) சிவப்பு, சாம்பல்

இ) வெள்ளை, சாம்பல்

ஈ) அடர் சிவப்பு, சிவப்பு

116. கடுமையாக உழைக்கக் கூடிய காங்கேயம் மாடுகள் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தவரால் விரும்பி வாங்கி செல்லப்படுகின்றன.

1. ஒடிசா

2. கேரளா

3. கர்நாடகம்

4. ஆந்திரம்

5. மஹாராஷ்டிரம்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 3, 4, 5

117. காங்கேயம் மாடுகள் கீழ்க்கண்ட எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

1. இலங்கை

2. பிலிப்பைன்ஸ்

3. பிரேசில்

4. மலேசியா

அ) அனைத்தும்

ஆ) 2, 3, 4

இ) 1, 3, 4

ஈ) 1, 2, 3

118. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் கண்டெடுக்கப்பட்ட காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த சேரர் கால நாணயங்கள் எந்நூற்றாண்டை சேர்ந்தவை?

அ) கி. மு 1

ஆ) கி. பி 1

இ) கி. மு 10

ஈ) கி. பி 10

119. மிடுக்கும் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?

அ) ஜெர்சி

ஆ) காங்கேயம்

இ) சிந்து

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

120. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

அ) கர்நாடகம்

ஆ) கேரளா

இ) இலங்கை

ஈ) ஆந்திரா

121. பிரித்து எழுதுக – கண்டெடுக்கப்பட்டுள்ளன

அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன

ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன

இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன

ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன

122. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?

அ) வினாத் தொடர்

ஆ) கட்டளைத் தொடர்

இ) செய்தித் தொடர்

ஈ) உணர்ச்சித் தொடர்

123. சரியான பொருளை தேர்ந்தெடு

இயவை, சிட்டம்

அ) இசைவு, வழி

ஆ) வழி, பெருமை

இ) வழி, இசைவு

ஈ) பெருமை, வழி

124. மணிமேகலையில் விழாவறை காதை குறிப்பிடும் விழா எது?

அ) சித்திரைத் திருவிழா

ஆ) இந்திர விழா

இ) புனல் விழா

ஈ) கானல் விழா

125. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – மா. இராசமாணிக்கனார்

2. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி

3. தமிழர் சால்பு – கா. ராஜன்

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைத்தும் தவறு

(விளக்கம்:

1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி

2. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா. இராசமாணிக்கனார்

3. தமிழர் சால்பு – சு. வித்யானந்தன்)

126. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க. ரத்னம்

2. தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா. ராஜன்

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைத்தும் தவறு

127. “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை ”

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) எடுத்துக்காட்டுவமை அணி

ஆ) உவமையணி

இ) பிறிது மொழிதல் அணி

ஈ) இல்பொருள் உவமை அணி

(விளக்கம்: போல என்னும் உவம உருபு வெளிப்பட்டு வருகிறது)

128. “மிக்கவை செய்தாரைத் தாம்தம் மிகுதியான்

வென்று விடல் தகுதியான்”

சரியான வரிசையில் முறைப்படுத்தி எழுதுக.

அ) செய்தாரைத் தாம்தம் மிக்கவை மிகுதியான்

வென்று விடல் தகுதியான்

ஆ) மிக்கவை செய்தாரைத் தாம்தம் மிகுதியான்

தகுதியான் வென்று விடல்

இ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்

ஈ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

வென்று விடல் தகுதியான்

129. “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை “

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) எடுத்துக்காட்டுவமை அணி

ஆ) சொல் பின்வருநிலையணி

இ) பொருள் பின்வருநிலையணி

ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி

(விளக்கம்: செல்வம் என்ற சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளது)

130. “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல் ”

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) எடுத்துக்காட்டுவமை அணி

ஆ) சொல் பின்வருநிலையணி

இ) பொருள் பின்வருநிலையணி

ஈ) சொற்பொருள் பின்வருநிலையணி

(விளக்கம்: நாடி என்னும் சொல் ஆராய்ந்து என்னும் பொருளில் பல முறை வந்துள்ளது)

131. ” பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல் “

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) எடுத்துக்காட்டுவமை அணி

ஆ) உவமையணி

இ) பிறிது மொழிதல் அணி

ஈ) ஏகதேச உருவக அணி

(விளக்கம்: ஏகதேச உருவக அணி என்பது தொடர்புடைய இரு பொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டு விடுவது ஆகும்.)

132. “சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துநீர் பெய்திரீஇ யற்று ”

இக்குறளில் பயின்று வரும் அணி

அ) எடுத்துக்காட்டுவமை அணி

ஆ) உவமையணி

இ) பிறிது மொழிதல் அணி

ஈ) ஏகதேச உருவக அணி

(விளக்கம்: அற்று என்னும் உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளது)

133. உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல் எது?

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) திருக்குறள்

ஈ) தொல்காப்பியம்

134. கீழ்க்கண்டவற்றுள் திருக்குறளை குறிக்கும் வேறு பெயர்கள் எவை?

1. பொது மறை

2. தமிழ் மறை

3. பொருளுறை

4. முதுமொழி

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

135. கீழ்க்கண்டவர்களுள் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் யார்?

1. நச்சர்

2. மல்லர்

3. காளிங்கர்

4. தாமத்தர்

5. தருமர்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 2, 5

136. முற்காலத்தில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் எத்தனை பேர்?

அ) அறுவர்

ஆ) எழுவர்

இ) எண்மர்

ஈ) பதின்மர்

137. திருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகளுள் சிறந்த உரை எது?

அ) தருமர் உரை

ஆ) நச்சர் உரை

இ) பரிமேலழகர் உரை

ஈ) பரிபெருமாள் உரை

138. திருக்குறளின் பெருமையைப் போற்றும் பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) திருக்குறள் உரை

ஆ) திருவள்ளுவ உரை

இ) திருவள்ளுவ மாலை

ஈ) திருக்குறள் மாலை

139. திருக்குறள் _____ வகை நூல்களுள் ஒன்று.

அ) பதினெண்மேல்கணக்கு

ஆ) பதினெண்கீழ்க்கணக்கு

இ) எட்டுத்தொகை

ஈ) பத்துப்பாட்டு

140. தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் என அழைக்கப்படுவது எந்நூல்?

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) திருக்குறள்

ஈ) தொல்காப்பியம்

141. கீழ்க்கண்டவற்றுள் திருவள்ளுவரைக் குறிக்கும் வேறு பெயர்கள் எவை?

1. நான்முகனார்

2. நாயனார்

3. தேவர்

4. மாதானுபங்கி

5. பெருநாவலர்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 2, 5

142. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று – சுடாத மண்கலத்தில் நீருற்றி வைப்பதைப் போல

2. தத்தம் கருமமே கட்டளைக்கல் – ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்

3. அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 3 சரி

ஈ) 2, 3 சரி

143. தீரா இடும்பை தருவது எது?

அ) ஆராயாமை, ஐயப்படுதல்

ஆ) குணம், குற்றம்

இ) பெருமை, சிறுமை

ஈ) நாடாமை, பேணாமை

144. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு ____

அ) 1821

ஆ) 1812

இ) 1818

ஈ) 1817

145. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் யாவை?

அ) அனிச்சம், நெருஞ்சி

ஆ) நெருஞ்சி, குவளை

இ) அனிச்சம், குவளை

ஈ) நெருஞ்சி, குன்றிமணி

146. திருக்குறளில் இடம்பெறும் ஒரேபழம் எது?

அ) அனிச்சம் பழம்

ஆ) குவளை பழம்

இ) நெருஞ்சிப் பழம்

ஈ) குன்றிமணி

147. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை எது?

அ) அனிச்சம்

ஆ) குவளை

இ) நெருஞ்சி

ஈ) குன்றிமணி

148. திருக்குறளில் இடம்பெறும் இருமரங்கள் எவை?

அ) பனை, தென்னை

ஆ) பனை, மூங்கில்

இ) தென்னை, மூங்கில்

ஈ) அனிச்சம், மூங்கில்

149. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்

அ) குறிப்பறிதல்

ஆ) ஒழுக்கமுடைமை

இ) பண்புடைமை

ஈ) அறிவுடைமை

150. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் யார்?

அ) மணக்குடவர்

ஆ) பரிமேலழகர்

இ) தருமர்

ஈ) தஞ்சை ஞானபிரகாசர்

151. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?

அ) மணக்குடவர்

ஆ) பரிமேலழகர்

இ) தருமர்

ஈ) மல்லர்

152. திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளது?

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

153. திருக்குறளில் ஏழு என்ற சொல் எத்தனைக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

154. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்?

அ) கால்டுவெல்

ஆ) ஜி. யு. போப்

இ) உ. வே. சா

ஈ) ஆறுமுக நாவலர்

155. பொருத்துக.

1. அகழாய்வு – i) Excavation

2. கல்வெட்டியல் – ii) Epigraphy

3. நடுகல் – iii) Hero Stone

4. பொறிப்பு – iv) Inscription

அ) i ii iii iv

ஆ) ii iii iv i

இ) iv iii ii i

ஈ) iii ii iv i

156. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol

2. புடைப்புச் சிற்பம் – Embossed Sculpture

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) அனைத்தும் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!