TnpscTnpsc Current Affairs

9th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

9th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 9th November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘இந்தியாவின் தாய்மொழி’ குறித்த ஆய்வை நடத்திய நடுவண் அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. கலாச்சார அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உள்துறை அமைச்சகம்

  • நடுவண் உள்துறை அமைச்சகமானது 576 மொழிகளின் புல காணொளியியலுடன் இந்திய தாய்மொழி ஆய்வை நிறைவுசெய்துள்ளது. 576 மொழிகளின் ஆய்வான MHA தாய்மொழி குறித்த ஆய்வானது தேசிய தகவலியல் மையத்தில், ஒவ்வொரு தாய்மொழியின் அசல் சுவையையும் பாதுகாக்கும் நோக்கோடு ஓர் இணைய ஆவணக் கோப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 2011 மொழிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் பகுப்பாய்வின்படி, இந்தியாவில் 19,500 மொழிகள் அல்லது கிளைமொழிகள் தாய் மொழிகளாகப் பேசப்பட்டு வருகின்றன.

2. 2022இல் இந்தியாவின் தலைமையில் இருக்கும் G20 அமைப்பின் கருப்பொருள் என்ன?

அ. ஜன் பகிதாரி

ஆ. வசுதைவ குடும்பகம்

இ. வாழ்க்கை (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை)

ஈ. பாரத மாதா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வசுதைவ குடும்பகம்

  • ஜி–20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை இந்தியப்பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார். இந்திய தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ள நிறங்களிலிருந்து ஜி–20 இலச்சினை வரையப்பட்டுள்ளது. இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான இந்தியாவின் புவிசார் அணுகுமுறையை பூமிச்சின்னம் பிரதிபலிக்கிறது. G20 இலச்சினைக்குக் கீழே எழுதப்பட்டுள்ள “பாரத்” என்ற சொல் தேவநாகிரி முறையில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் G20 தலைமைத்துவத்திற்கான கருப்பொருள் – வசுதைவக் குடும்பகம் அல்லது ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் – என்பது மகா உபநிஷத்தின் பழமையான சமற்கிருத உரையில் இருந்து எடுக்கப்பட்டது.

3. ‘தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளானது’ கீழ்க்காணும் எத்துறையில் செய்த சிறந்த சேவைகளுக்கான அங்கீகாரமாக வழங்கப்படுகின்றன?

அ. பொருளாதாரம்

ஆ. கலை மற்றும் கலாச்சாரம்

இ. செவிலிப்பணி

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. செவிலிப்பணி

  • கடந்த 2021ஆம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங் கேல் (கைவிளக்கேந்திய காரிகை) விருதுகளை செவிலியர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். செவிலியர்கள் மற்றும் செவிலிப்பணிகளில் ஈடுபடுவோர் சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் கடந்த 1973ஆம் ஆண்டு தேசிய புளோரன்ஸ் நைட்டிங் கேல் விருதுகளை ஏற்படுத்தியது.

4. இந்தியா, அண்மையில் எந்த நாட்டுடன் இணைந்து, ‘இளம் ஆராய்ச்சியாளர்களின் வாரம் – 2022’ நிகழ்ச்சியை நடத்தியது?

அ. அமெரிக்கா

ஆ. ஜெர்மனி

இ. பிரான்ஸ்

ஈ. இங்கிலாந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜெர்மனி

  • இளம் ஆராய்ச்சியாளர்கள் – 2022இன் இந்தியா–ஜெர்மனி வாரம் தொடங்கப்பட்டது. இந்த இரு நாடுகளைச் சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தை பகிர்வதும், நீண்டகால ஆராய்ச்சி பங்களிப்பை கட்டமைப்பதும் இதன் நோக்கமாகும். இதனை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமும் இந்தியா மற்றும் ஜெர்மன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடுசெய்தன. இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த 30 நம்பிக்கைக்குரிய இளம் ஆராய்ச்சியாளர்கள் இரசாயன அறிவியலில் சமகால விஷயங்களைப்பற்றி விவாதிப்பார்கள். இந்த மாநாட்டின் முதன்மை குறிக்கோள், ஆரம்ப மற்றும் இடைக்கால ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதாகும்.

5. ‘தேசிய உயிரி ஆற்றல் திட்டத்தை’ அறிவித்துள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஆ. எரிசக்தி அமைச்சகம்

இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

  • நடுவண் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தின் அறிவிக்கையை வெளியிட்டது. நிதியாண்டு 2021–22 முதல் 2025–26 வரையிலான காலகட்டத்திற்கு இத்திட்டத்தை அமைச்சகம் தொடர்ந்துள்ளது. இத்திட்டத்தை இரண்டு கட்டங்களில் அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. `858 கோடியில் முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கழிவிலிருந்து எரிசக்தித் திட்டம், உயிர்மம் திட்டம் மற்றும் உயிரி எரிவாயு திட்டம் ஆகிய துணைத்திட்டங்கள் தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

6. 2022– உலக உணவுப் பாதுகாப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Safer Food, Better Health

ஆ. Leave No one Behind

இ. Sustainable Food Options

ஈ. Food and Co–existence

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Safer Food, Better Health

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.7 அன்று உலக உணவுப் பாதுகாப்பு நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உணவினால் ஏற்படும் இடர்களைத் தடுத்தற்கும், கண்டறிதற்கும், நிர்வகிப்பதற்கும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும். உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2018ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையால் இந்த நாள் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு, உலக உணவு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள், “பாதுகாப்பான உணவு, சிறந்த நலம்” என்பதாகும். உலக நலவாழ்வு அமைப்பின் அறிக்கையின்படி, உலகில் ஆண்டுதோறும் 600 மில்லியனுக்கும் அதிகமான நோய் பாதிப்புகள் உணவுப்பொருட்களால் பரவுகின்றன.

7. 2022 – உலக உணவு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Safer Food, Better Health

ஆ. Leave No one Behind

இ. Sustainable Food Options

ஈ. Food and Co–existence

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Leave No one Behind

  • சத்தான உணவுகளை முறையாகப் பெறுவதன் அவசியத்தை எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் அக்.16 அன்று உலக உணவு நாள் அனுசரிக்கப்படுகிறது. உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) தலைமையில் இந்த நாள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, உலக உணவு நாளுக்கானக் கருப்பொருள், “Leave No one Behind” என்பதாகும்.

8. 2023இல் 14ஆவது உலக நறுமணப் பொருட்கள் மாநாட்டை நடத்தும் மாநிலம் எது?

அ. புது தில்லி

ஆ. மகாராஷ்டிரா

இ. கர்நாடகா

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மகாராஷ்டிரா

  • 14ஆவது உலக நறுமணப் பொருட்கள் மாநாடானது 2023 பிப்ரவரியில் மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக நறுமணப் பொருட்கள் மாநாடு, இந்தியாவின் G20 தலைவர் பதவியேற்பை ஒட்டி நடத்தப்படும். உலக நறுமணப் பொருட்கள் மாநாட்டின் தற்போதைய பதிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள், “Vision 2030: SPICES (Sustainability– Productivity – Innovation – Collaboration– Excellence and Safety)” என்பதாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வு நறுமணப் பொருட்கள் துறைக்கான மிகப்பெரிய பிரத்யேக வணிகத்தளமாக உள்ளது.

9. CII மற்றும் IOCL ஆகியவை கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், ‘வாயு அம்ரித்’ என்ற பயிர் உயாவு மேலாண்மை முனைவைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன?

அ. தமிழ்நாடு

ஆ. உத்தர பிரதேசம்

இ. பஞ்சாப்

ஈ. மத்திய பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பஞ்சாப்

  • இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாபின் சங்ரூரில் ‘வாயு அம்ரித்’ என்னும் பயிர் உயாவு மேலாண்மை முனைவான தொடங்கப்பட்டது. CII ஏற்கனவே பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வளிமாசைக் குறைப்பதற்காக பயிர்த்தூர்களை எரிப்பதைக் குறைப்பதற்காக பயிர் உயாவு (crop residue) மேலாண்மை முனைவை நடத்தி வருகிறது.

10. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின், ‘மிகவும் பிரபலமான GI’ விருதை வென்ற உணவுப்பொருள் எது?

அ. பழனி பஞ்சாமிர்தம்

ஆ. ஹைதராபாத் ஹலீம்

இ. மேற்கு வங்க இரஸகுல்லா

ஈ. இரத்லாமி சேவ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹைதராபாத் ஹலீம்

  • நாடு முழுவதும் 15–க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களுடன் நடந்த போட்டியில், ‘மிகவும் பிரபலமான GI’ விருதை புவிசார் குறியீட்டுடன் (GI) கூடிய புகழ்பெற்ற ஹைதராபாத் ஹலீம் பெற்றுள்ளது. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த விருது பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஹைதராபாத் ஹலீம் என்பது இரமலான் மாதத்தில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும். இதற்கு கடந்த 2010ஆம் ஆண்டில் GI தகுதி கிடைத்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புதிய சரணாலயமாக உருவெடுத்தது காவிரி தெற்கு வனவுயிரின சரணாலயம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் புதிய சரணாலயமாக, காவிரி தெற்கு வனவுயிரின சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

இதுகுறித்து அரசின் செய்திக்குறிப்பு: காவிரி தெற்கு வனவுயிரின சரணாலயமானது, தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வனவுயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வனவுயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரிய பகுதியாக அமைந்துள்ளது. இந்தப் பகுதி சூழலியல் பாதுகாப்பு மற்றும் தாவர இனங்கள், விலங்குகளின் வாழ்விடப்பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியப்பகுதியாக உள்ளது. இப்பகுதியானது, தென்னிந்தியாவில் யானைகள் வாழ்விடங்களில் முக்கியமானதாகவும், காவிரி ஆற்றுப்படுகையில் வனவுயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் அமைகிறது.

காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமானது, நீலகிரி உயிர்கோளக்காப்பகப்பகுதி வரை, தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வனவுயிரின வாழ்விடத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஏற்கெனவே கணக்கெடுப்புகளின்மூலம் தெரியவந்துள்ளது. இப்போது சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. 50ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் பதவியேற்றார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு யு லலித்தின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட்டுக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

நீண்ட கால தலைமை நீதிபதியின் மகன்

கடந்த 1978ஆம் ஆண்டு பிப்.22-ஆம் தேதிமுதல் 1985-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வரை, நாட்டில் நீண்ட காலம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ஒய் வி சந்திரசூட். அவரின் மகன் டி ஒய் சந்திரசூட்.

தீர்ப்பளித்த முக்கிய வழக்குகள்

கடந்த 2019 நவ.9-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சச்சரவுக்குரிய நிலத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை அளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் சந்திரசூட் இடம்பெற்றிருந்தார்.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை அமர்வில் இடம்பெற்றிருந்த சந்திரசூட் உள்பட 4 நீதிபதிகள் வழங்கினர். முன்னாள் நீதிபதி ஹிந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்கவேண்டும் என சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டப்படி ஆதார் எண் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். எனினும் அந்த அமர்வில் இடம்பெற்ற சந்திரசூட், அரசமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆதார் என்று தீர்ப்பளித்தார்.

சட்டப்பிரிவு 377-ஐ இரத்துசெய்து, தன் பாலின சேர்க்கை குற்றமல்ல என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் இருந்த நீதிபதிகளில் சந்திரசூட்டும் ஒருவர்.

சட்டப்பிரிவு 497-ஐ இரத்துசெய்து, திருமணம் தாண்டிய முறையற்ற உறவு குற்றமல்ல என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் சந்திரசூட் இடம்பெற்றிருந்தார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2024 நவ.10ஆம் தேதி வரை சந்திரசூட் பதவி வகிப்பார்.

3. விண்ணில் செலுத்த தயார்நிலையில் முதல் தனியார் இராக்கெட்!

நாட்டின் முதல் தனியார் இராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ விண்ணில் செலுத்துவதற்கான தயார்நிலையில் உள்ளது. ஸ்கைரூட் ஏர்ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் இந்த இராக்கெட்டை வடிவமைத்துள்ளது. நாட்டில் தனியார் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல் ராக்கெட் இதுவாகும்.

4. எண்ம ரூபாய்: செலாவணி சந்தையின் பலம்!

கிரிப்டோகரன்சி என்பது…

மற்ற செலாவணிகள், சம்பந்தப்பட்ட நாட்டின் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கிரிப்டோ கரன்சிகள் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதை மையமாக வைத்தே கிரிப்டோ கரன்சிகள் அதிக அளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. அதிக லாபம் கிடைக்கும் என நம்பி பலரும் கிரிப்டோகரன்சிகள் மீது முதலீடுகளை மேற்கொண்டனர்.

கிரிப்டோகரன்சியின் சவால்கள்

‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கிரிப்டோகரன்சிகளில் தரவுப் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அதே வேளையில், அவை தனியாரால் நிர்வகிக்கப்படுவதால் அரசின் முடிவுகளுக்கு மாறாக பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கிரிப்டோகரன்சிகளை பயங்கரவாதக் குழுக்களும் அரசுக்கு எதிராக செயல்படும் குழுக்களும் தவறான நடவடிக்கை -களுக்காகப் பயன்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது. கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவது அரசுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

எண்ம செலாவணி

கிரிப்டோகரன்சிகள் மீதான முதலீடுகள் அதிகரித்ததையடுத்து, அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு எழுந்தது. அதையடுத்து, நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் எண்ம செலாவணியை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் என மத்திய அரசு பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தது.

எண்ம ரூபாய்

பட்ஜெட்டில் அறிவித்தபடியே எண்ம ரூபாயை ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்த விலை அடிப்படையிலான எண்ம ரூபாயானது சோதனை அடிப்படையில் நவ.1-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாயைப் போன்றதே எண்ம ரூபாயும். ஒரே ஒரு வித்தியாசம் அது எண்ம வடிவில் இருக்கும். அவ்வளவே.

கிரிப்டோகரன்சியும் எண்ம ரூபாயும்

கிரிப்டோகரன்சியையும் எண்ம ரூபாயையும் தொடர்புபடுத்த முடியாது. கிரிப்டோகரன்சியை தனியாரே நிர்வகித்து வரும் நிலையில், எண்ம ரூபாய் ஆர்பிஐ-இன் அங்கீகாரத்தைப் பெற்றது. கிரிப்டோகரன்சிகளால் நாட்டின் நிதி நிலைமையில் சீரற்ற தன்மை நிலவ வாய்ப்புள்ளது. ஆனால், எண்ம ரூபாயானது நாட்டின் நிதிநிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.

கிரிப்டோகரன்சிகளை தேசப்பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஆனால், எண்ம ரூபாயின் பரிவர்த்தனையை RBI தொடர்ந்து கண்காணிக்கும் என்பதால், தேசப்பாதுகாப்பு சார்ந்த சவால்கள் அதில் இல்லை.

எண்ம ரூபாயின் பயன்

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் செலாவணிகளுக்குக் கூடுதல் வலுசேர்க்கும் வகையில் எண்ம ரூபாய் செயல்படும். தற்போதைய செலாவணிகளுக்கு மாற்றாக எண்ம ரூபாய் இருக்காது. செலாவணி சந்தையையும் எண்ம ரூபாய் வலுப்படுத்தும்.

ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான காகிதமும், மையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மக்களிடையே எண்ம ரூபாயின் பயன்பாடு அதிகரித்தால், ரூபாய் நோட்டு அச்சிடுவதற்கான தேவை குறைவதோடு அதற்கான செலவும் பெருமளவில் குறையும். அதைக் கருத்தில்கொண்டு எண்ம ரூபாயின் பயன்பாட்டை RBI ஊக்குவித்து வருகிறது.

எண்ம ரூபாயின் வகைகள்

  1. சில்லறை விலை அடிப்படையிலான எண்ம ரூபாயை அனைவராலும் பயன்படுத்த முடியும்.
  2. மொத்த விலை அடிப்படையிலான எண்ம ரூபாயை அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மொத்த விலை எண்ம ரூபாயின் பயன்பாடு

முதற் கட்டமாக அரசின் நிதிப்பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் எண்ம ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நிதிப்பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வங்கிகள் சோதனை அடிப்படையில் எண்ம ரூபாயைப் பயன்படுத்தலாம்.

அனுமதிக்கப்பட்டுள்ள வங்கிகள்

பாரத வங்கி, பரோடா வங்கி, யூனியன் வங்கி, HDFC, ICICI, கோட்டக் மகிந்திரா, YES வங்கி, IDFC, HSBC ஆகிய 9 வங்கிகளுக்கு சோதனை அடிப்படையிலான எண்ம ரூபாயின் பயன்பாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விலை எண்ம ரூபாயின் பயன்பாடு

சில்லறை வாடிக்கையாளர்களுக்கான எண்ம ரூபாயின் சோதனை பயன்பாடு நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படவுள்ளது. இந்தச் சோதனைகளின் அடிப்படையில் எண்ம ரூபாயின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டு, முழு நேரப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ரூபாய்-எண்ம ரூபாய் பரிவர்த்தனை

நாம் தற்போது பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளைக்கொண்டு எண்ம ரூபாயைப் பரிமாறிக்கொள்ள முடியும். எண்ம ரூபாயானது ஆர்பிஐ-இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதால், ரூபாயை வழக்கமாகப் பயன்படுத்துவதைப் போலவே எண்ம ரூபாயையும் பயன்படுத்த முடியும்.

9th November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which Union Ministry conducted the ‘Mother Tongue Survey of India (MTSI)’?

A. Ministry of Education

B. Ministry of Home Affairs

C. Ministry of Culture

D. Ministry of External Affairs

Answer & Explanation

Answer: B. Ministry of Home Affairs

  • The Ministry of Home Affairs (MHA) has completed the Mother Tongue Survey of India (MTSI) with field videography of 576 languages. MHA Mother Tongue Survey of 576 languages, a web archive at the National Informatics Centre (NIC) to preserve the original flavour of every Mother Tongue. As per analysis of 2011 linguistic census data in 2018, over 19,500 languages or dialects are spoken in India as mother tongues.

2. What is the theme of India’s G20 Presidency in 2022?

A. Jan Bhagidari

B. Vasudhaiva Kutumbakam

C. LiFE (Lifestyle for Environment)

D. Bharat Mata

Answer & Explanation

Answer: B. Vasudhaiva Kutumbakam

  • The Indian Prime Minister launched the logo, theme and website for the Indian G–20 Presidency. The G20 Logo draws inspiration from the colours of India’s national flag. The Earth reflects India’s pro–planet approach to life and below the G20 logo is ‘Bharat’. The logo has various components from an open competition held through myGov portal. The theme of India’s G20 Presidency is “Vasudhaiva Kutumbakam” or “One Earth One Family One Future”. It is drawn from the ancient Sanskrit text of the Maha Upanishad.

3. ‘National Florence Nightingale Awards’ are awarded in recognition for meritorious services rendered in which field?

A. Economics

B. Art and Culture

C. Nursing

D. Science and Technology

Answer & Explanation

Answer: C. Nursing

  • The President of India Droupadi Murmu presented the National Florence Nightingale Awards for the year 2021 to the Nursing professionals. The National Florence Nightingale Awards were instituted in the year 1973 by the Ministry of Health and Family Welfare, as a mark of recognition for the meritorious services rendered by the nurses and nursing professionals to the society.

4. India recently held ‘Week of the Young Researchers 2022’ program with which country?

A. USA

B. Germany

C. France

D. UK

Answer & Explanation

Answer: B. Germany

  • The Indo–German Week of the Young Researchers 2022 was jointly organised by the Science and Engineering Research Board (SERB) India, and German Research Foundation (DFG). 30 promising young researchers from India and Germany will discuss and interact closely on contemporary matters in chemical sciences. The main goal of the conclave is to promote collaboration among early and mid–career researchers and scientists.

5. Which Union Ministry has notified the ‘National Bioenergy Programme’?

A. Ministry of New and Renewable Energy

B. Ministry of Power

C. Ministry of Commerce and Industry

D. Ministry of MSME

Answer & Explanation

Answer: A. Ministry of New and Renewable Energy

  • The Ministry of New and Renewable Energy (MNRE), Government of India has notified the National Bioenergy Programme. The Ministry has continued the National Bio–energy Programme for the period from FY 2021–22 to 2025–26. The Programme has been recommended for implementation in two phases and the Phase–I of the Programme has been approved with a budget outlay of Rs. 858 crores. It consists of three sub–schemes: Waste to Energy Programme, Biomass Programme and Biogas Programme.

6. What is the theme of the ‘World Food Safety Day 2022’?

A. Safer Food, Better Health

B. Leave No one Behind

C. Sustainable Food Options

D. Food and Co–existence

Answer & Explanation

Answer: A. Safer Food, Better Health

  • Every year, June 7 is observed as World Food Safety Day across the world. The objective behind the day is to promote awareness to prevent, detect and manage food–borne risks. The day was declared by the United Nations in 2018 to raise awareness of food safety. This year, the theme of World Food Safety Day is, “Safer Food, Better Health”. As per a report by WHO, the world records over 600 million cases of food–borne diseases annually.

7. What is the theme of the ‘World Food Day 2022’?

A. Safer Food, Better Health

B. Leave No one Behind

C. Sustainable Food Options

D. Food and Co–existence

Answer & Explanation

Answer: B. Leave No one Behind

  • World Food Day is observed annually on 16 October to highlight need for regular access to nutritious food. The Day is led by The Food and Agriculture Organization (FAO) and the theme for 2022 is Leave NO ONE behind.

8. Which state is host to the 14th World Spice Congress in 2023?

A. New Delhi

B. Maharashtra

C. Karnataka

D. Kerala

Answer & Explanation

Answer: B. Maharashtra

  • The 14th World Spice Congress will be held in February 2023 at Navi Mumbai, Maharashtra. The World Spice Congress, which is organized by Spices Board India, will be conducted on the sidelines of India’s G20 presidency. The theme chosen for the current edition of WSC is ‘Vision 2030: SPICES’ (Sustainability– Productivity – Innovation – Collaboration– Excellence and Safety).” The biennial event is the largest exclusive business platform for the spice sector.

9. CII and IOCL has announced to launch a crop residue management initiative ‘Vayu Amrit’ in which state?

A. Tamil Nadu

B. Uttar Pradesh

C. Punjab

D. Madhya Pradesh

Answer & Explanation

Answer: C. Punjab

  • The Confederation of Indian Industry partnered with Indian Oil Corporation to launch ‘Vayu Amrit’, a crop residue management initiative, in Punjab’s Sangrur. The CII already runs a crop residue management programme in Punjab and Haryana to mitigate stubble burning to reduce air pollution.

10. Which food product won the ‘Most Popular GI’ award of the Commerce and Industry Ministry?

A. Palani Panchamirtham

B. Hyderabadi Haleem

C. West Bengal Rasgulla

D. Ratlami Sev

Answer & Explanation

Answer: B. Hyderabadi Haleem

  • The famous Hyderabadi Haleem has bagged the ‘Most Popular GI’ award, in a competition with more than 15 food items across the country with Geographical Indication (GI) status. Awarded by the Ministry of Commerce and Industry, the winner was chosen based on public opinion. Hyderabadi Haleem is a traditional dish made during the month of Ramadan, it was accorded GI status in 2010.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!