TnpscTnpsc Current Affairs

9th & 10th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

9th & 10th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th & 10th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022இல் 5ஆவது BIMSTEC உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) இலங்கை 

இ) மியான்மர்

ஈ) பூடான்

  • ஐந்தாவது BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) உச்சி மாநாடு இலங்கையால் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநாட்டில் மெய்நிகராக கலந்துகொண்டார். மேலும், BIMSTEC செயலகத்தின் பட்ஜெட்டை மேம்படுத்து -வதற்காக $1 மில்லியன் டாலர்கள் நிதியுதவியையும் அவர் அறிவித்தார்.
  • Bimstec-Towards a Resilient Region, Prosperous Economies, Healthy Peoples” என்பது கொழும்புவில் நடந்த இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

2. ‘ஹுருன் உலகளாவிய U-40 தானே உருவான பில்லியனர்கள்-2022’இல் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) இரண்டாவது

ஆ) மூன்றாவது

இ) நான்காவது 

ஈ) ஆறாவது

  • ‘ஹுருன் உலகளாவிய U-40 தானே உருவான பில்லிய -னர்கள்-2022’ பட்டியலில், இந்தியா நான்காமிடத்தில் உள்ளது. 37 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்தி -லும், 25 பேருடன் சீனா இரண்டாமிடத்திலும், எட்டு பேருடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் 6 U-40 பில்லியனர்கள் உள்ளனர்.
  • $76 பில்லியன் டாலர்களுடன் 40 வயதுக்குட்பட்டோருள் மார்க் ஜூக்கர்பெர்க் (37) உலகின் நம்பர்.1ஆக உள்ளார். டிக்டாக் நிறுவனர் ஜாங் யிமிங் (39), $54 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

3. ‘ஹுரூன் தானே உருவான செல்வச் சீமாட்டிகள் – 2022’ பட்டியலில், இந்திய அளவில் முதலிடம் பிடித்த இந்திய சீமாட்டி யார்?

அ) கிரண் மஜும்தார்-ஷா

ஆ) பால்குனி நாயர் 

இ) இராதா வேம்பு

ஈ) மிருதுளா பரேக்

  • ‘ஹுரூன் தானே உருவான செல்வச் சீமாட்டிகள் – 2022’ பட்டியலின்படி, உலகில் தற்போது 124 செல்வச்சீமாட்டிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 6 குறைவாகும். இந்தப் பட்டியலில், நைக்காவைச் சேர்ந்த பால்குனி நாயர், பயோகானின் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் ஜோஹோவின் ராதா வேம்பு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
  • பால்குனி நாயர், நீண்டகாலமாக இந்தியாவின் நம்பர்.1 செல்வச்சீமாட்டியாக இருந்துவரும் கிரண் மஜும்தார் ஷாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் செல்வச் சீமாட்டி ஆனார்.

4. மாநில பல்லுயிர் உத்தி மற்றும் செயல்திட்டத்தை (SBSAP) உருவாக்க, WWF இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) அஸ்ஸாம்

இ) அருணாச்சல பிரதேசம் 

ஈ) கேரளா

  • மாநில பல்லுயிர் உத்தி & செயல்திட்டத்தை (SBSAP) உருவாக்க அருணாச்சல பிரதேசம் WWF இந்தியாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. SBSAP ஆனது 2020-க்குப் பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு மற்றும் பக்கே பிரகடனம் ஆகியவற்றுக்கு இணக்கமாக இருக்கும்.

5. இந்தியாவில் ஒளிபரப்பு தொடர்பான சேவைகளுக்காக தொடங்கப்பட்ட இணையதளத்தின் பெயர் என்ன?

அ) பிராட்காஸ்ட் சேவா போர்டல் 

ஆ) பாரத் பிராட்காஸ்ட்

இ) ஆத்மநிர்பர் பிராட்காஸ்ட்

ஈ) இ-பிராட்காஸ்ட் போர்டல்

  • ஒளிபரப்பு உரிமங்கள், அனுமதிகள் & பதிவுகளுக்கான விண்ணப்பங்களை விரைவாக தாக்கல்செய்வதற்கும் செயலாக்குவதற்கும் அரசாங்கம் புதிய ஒளிபரப்பு சேவை இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ‘பிராட்காஸ்ட் சேவா போர்டல்’ என்ற பெயரிலான இது செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள், டெலிபோர்ட் ஆபரேட்டர்கள், MSO-கள், சமூக வானொலி நிலையங்கள் மற்றும் தனியார் FM சேனல்களுக்கு உதவும். பயன்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், கட்டண -ங்களைக் கணக்கிடுவதற்கும், பணஞ்செலுத்துவதற்கும் இது பயன்படுகிறது.

6. விக்டர் ஓர்பன் என்பவர் கீழ்காணும் எந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ) உக்ரைன்

ஆ) ஹங்கேரி 

இ) பெலாரஸ்

ஈ) போலந்து

  • ஹங்கேரியின் தேசியவாத பிரதமரான விக்டர் ஓர்பன் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1989இல் பொதுவுடைமைத் தத்துவத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாட்டின் மிகநீண்ட காலம் பணியாற்றிய தலைவர் ஆவார் அவர்.

7. சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒருபகுதியாக, செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் கேமராக்களால் சூழப்பட்டிருக்கும் இந்திய நகரம் எது?

அ) சென்னை

ஆ) கோழிக்கோடு 

இ) மும்பை

ஈ) புது தில்லி

  • மாநில அளவிலான சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கேரளாவின் கோழிக்கோடு நகரைச் சுற்றி சுமார் அறுபது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேமராக்கள் நிறுவப்படவுள்ளன.
  • போக்குவரத்து விதிமீறல்களை வெளிப்படுத்தவும், உறுதி -யான டிஜிட்டல் ஆதாரங்களுடன் பதிவு செய்யவும் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக கேரள மாநில அரசு `225 கோடி செலவிடும்.

8. அஸ்ஸாம் மாநிலமானது சமீபத்தில், மாநில எல்லையில் உள்ள வேறுபாடுகளுக்குத் தீர்வுகாண்பதற்காக, எந்த மாநிலத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ) சிக்கிம்

ஆ) மேகாலயா 

இ) மணிப்பூர்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • மேகாலயா மற்றும் அஸ்ஸாம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 18.33 சதுர கிலோமீட்டர் மேகாலயாவுடனும், 18.46 சதுர கிலோ மீட்டர் அஸ்ஸாம் மாநிலத்துடனும் இருக்கும்.

9. இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் (IONS) முதல் கடல்சார் பயிற்சி – 2022 (IMEX-22) நடைபெற்ற இடம் எது?

அ) விசாகப்பட்டினம்

ஆ) கோவா 

இ) புனே

ஈ) டேராடூன்

  • இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கம் (IONS) அதன் முதலாவது கடல்சார் பயிற்சி – 2022 (IMEX-22)’ஐ கோவாவிலும் அரபிக்கடலிலும் நடத்தியது.
  • ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பிரான்ஸ், இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து உட்பட 15 IONS உறுப்பினர் கடற்படைகளைச் சேர்ந்த 22 பார்வையாளர்களும் பயிற்சியில் பங்கேற்றனர். IMEX – 22 ஆனது 2 கட்டங்களாக கோவாவின் மர்மகோவா துறைமுகத்திலும் அரபிக்கடலிலும் நடத்தப்பட்டது.

10. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ஷாஹி லிச்சி சார்ந்த இந்திய மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) உத்தர பிரதேசம்

இ) மத்திய பிரதேசம்

ஈ) உத்தரகாண்ட்

  • வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)மூலம் நடுவண் அரசு, இந்தியாவின் முதன்மையான புவிசார் குறியீடு பெறப்பட்ட உழவுப்பொருட்களை புதிய உலகளாவிய சந்தைகளில் சோதனை முறையில் ஏற்றுமதி செய்கிறது.
  • பீகாரின் GI குறியிடப்பட்ட ஷாஹி லிச்சி கடந்த ஆண்டு பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்திலிருந்து இலண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றுவரை, 417 பதிவுசெய்யப்பட்ட GI தயாரிப்புகள் உள்ளன. அவற்றுள் சுமார் 150 GI குறியிடப்பட்ட தயாரிப்புகள் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை முழங்கால்: சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடிப்பு

மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது பன்மைய செயற்கை முழங்காலை, சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.

‘கதம்’ எனப் பெயரிடப்பட்ட இந்தச் செயற்கை முழங்காலை, சொசைட்டி பார் பயோமெடிக்கல் டெக்னாலஜி, மொபிலிட்டி இந்தியா நிறுவனங்களுடன் இணைந்து சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.

2. வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி தொடர்ந்து 11ஆவது முறையாக வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாமல் பழைய நிலையிலேயே தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

நிதிக்கொள்கை தொடர்பான முடிவுகளை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டு பேசியதாவது:

ரெப்போ 4 சதவீதம்: ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழு எடுத்த முடிவுகளின்படி, இம்முறையும் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. இதை அடுத்து, ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதமான ‘ரெப்போ ரேட்’ முன்னெப்போதும் இல்லாத குறைந்தபட்ச அளவான 4 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கும்.

அதேபோன்று, வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ விகிதமும் முந்தைய அளவான 3.35 சதவீதமாகவே இருக்கும்.

இலக்கை விட அதிகம்: பன்னாட்டு அளவில் அதிகரித்து வரும் பதற்றங்களால் நடப்பு நிதியாண்டில் பணவீக்க விகிதம் ரிசர்வ் வங்கியின் இலக்கைக் காட்டிலும் (4.5 சதவீதம்), 5.7% என்ற அளவில் கணிசமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி: தற்போது நிலவும் கடினமான சூழலையடுத்து, நடப்பு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $100 டாலர் என்பதன் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

3. 2022 நிதியாண்டில் வரி வசூல் 34% அதிகரிப்பு

நிறுவன வரி, சுங்கவரி, ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு காரணமாக கடந்த மார்ச்.31 வரையிலான நிதியாண்டு முடிவின்படி, நாட்டின் மொத்த வரி வசூல் `27.07 லட்சம் கோடியை எட்டி 34% உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 1999-க்குப் பின்னர் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான வரி வீதம் 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2020-21 நிதியாண்டில் 10.3 சதவீதமாக இருந்தது.

4. 2021-22-இல் `3.72 இலட்சம் கோடிக்கு வேளாண் பொருள்கள் ஏற்றுமதி; சவால்களுக்கிடையே 19.92% உயர்வு

நாட்டில் ஒட்டு மொத்தமாக வேளாண் பொருள்கள், `3.72 லட்சம் கோடிக்கு ($50 பில்லியன் அமரிக்க டாலர்) ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையைப் புரிந்துள்ளது.

நோய்த்தொற்றுக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட பல்வேறு தளவாட வசதி சவால்களுக்கிடையேயும் சுமார் 19.92% ஏற்றுமதி உயர்ந்துள்ளாக மத்திய வர்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5. உலக ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப்: இந்தியா சாம்பியன்

உலக ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர், கலப்பு இரட்டையர் பிரிவில் முதன்முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதில் தீபிகா பல்லிக்கல் இரட்டை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்தியா உலக சாம்பியன்:

கலப்பு இரட்டைர் பிரிவு இறுதிச்சுற்றில் தீபிகா-சௌரவ் கோஷல் இணை 11-6, 11-8 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்தின் அட்ரியன் வாலர்-அலிஸன் வாட்டர்ஸ் இணையை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

அதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் தீபிகா-ஜோஷ்னா இணை 11-9, 4-11, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தின் சாரா ஜேன்-அலிஸன் வாட்டர்ஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்தியாவுக்கு இதுவே முதன்முறையாகும்.

1. Which country is the host of 5th BIMSTEC Summit in 2022?

A) India

B) Sri Lanka 

C) Myanmar

D) Bhutan

  • The 5th BIMSTEC (Bay of Bengal Initiative for Multi–Sectoral Technical and Economic Cooperation) Summit was hosted virtually by Sri Lanka, the current chair. Prime Minister Narendra Modi attended the conference virtually and announced USD 1 million in aid to promote the budget of the Bimstec secretariat.
  • The theme of the Colombo summit is “Bimstec–Towards a Resilient Region, Prosperous Economies, Healthy Peoples”.

2. What is the rank of India in the ‘Hurun global U–40 self–made billionaires 2022’?

A) Second

B) Third

C) Fourth

D) Sixth

  • In the ‘Hurun global U–40 self–made billionaires 2022’, India is ranked at fourth place. USA leads the list with 37 billionaires, China second with 25 and UK is at third with 8. India had 6 U–40 self–made billionaires.
  • Mark Zuckerberg (37) is the world’s no.1 under 40 years with USD 76bn. Tiktok founder Zhang Yiming (39) is the second with USD 54bn.

3. Which Indian billionaire topped the ‘Hurun Richest Self–Made Women in the World 2022’ in the country?

A) Kiran Mazumdar–Shaw

B) Falguni Nayar 

C) Radha Vembu

D) Mrudula Parekh

  • As per the ‘Hurun Richest Self–Made Women in the World 2022’, there are 124 self–made women billionaires in the world now, down 6 from last year. Three Indian women – Falguni Nayar of Nykaa, Kiran Mazumdar–Shaw of Biocon and Radha Vembu of Zoho feature in the latest Hurun list of women self–made billionaires.
  • Falguni Nayar overtook long–time India’s number one woman billionaire Kiran Mazumdar–Shaw to become the richest self–made woman in India.

4. Which Indian state signed a pact with WWF India to develop State Biodiversity Strategy and Action Plan (SBSAP)?

A) Karnataka

B) Assam

C) Arunachal Pradesh 

D) Kerala

  • Arunachal Pradesh signed a pact with WWF India to develop the State Biodiversity Strategy and Action Plan (SBSAP).
  • The SBSAP will be aligned with the post–2020 Global Biodiversity Framework and Pakke Declaration.

5. What is the name of the website launched for services related to broadcast in India?

A) Broadcast Seva Portal 

B) Bharat Broadcast

C) Atmanirbhar Broadcast

D) e–Broadcast Portal

  • The government has launched a new broadcast services website to ensure faster filing and processing of applications for broadcast licenses, permissions and registrations.
  • The ‘Broadcast Seva Portal’ will help satellite TV channels, teleport operators, MSOs, community radio stations (CRS) and private FM channels. It is also used for tracking applications, calculating fees and making payments.

6. Viktor Orban has been elected as the Prime Minister of which country?

A) Ukraine

B) Hungary 

C) Belarus

D) Poland

  • Viktor Orban, Hungary’s nationalist Prime Minister has been elected again for the successive fourth term. He is also the country’s longest–serving leader since the fall of communism in 1989.

7. Which Indian city is to be covered with Artificial Intelligence–based cameras, as part of Road Safety Project?

A) Chennai

B) Kozhikode 

C) Mumbai

D) New Delhi

  • About sixty Artificial Intelligence–based cameras are to be installed around the Kozhikode city of Kerala, as a part of the State–level road safety project.
  • This step is to be implemented for the purpose of exposing traffic rule violations and book them with solid digital evidence. The state government will spend ₹225 crore for the project.

8. Assam recently signed a MoU with which state, to resolve differences in the state border?

A) Sikkim

B) Meghalaya 

C) Manipur

D) Arunachal Pradesh

  • According to the Memorandum of Understanding (MoU) signed between Meghalaya and Assam, 18.33 square kilometer will be with Meghalaya while 18.46 sq km will be with Assam.

9. Which is the venue of the Indian Ocean Naval Symposium (IONS) maiden Maritime Exercise 2022 (IMEX–22)?

A) Visakhapatnam

B) Goa 

C) Pune

D) Dehradun

  • The Indian Ocean Naval Symposium (IONS) held its maiden Maritime Exercise 2022 (IMEX–22) at Goa and in Arabian Sea. 22 Observers from 15 IONS member navies, including Australia, Bangladesh, France, India, Sri Lanka, UAE and UK among others also participated in the exercise.
  • IMEX – 22 was conducted in two phases at Mormugao Port, Goa and in the Arabian Sea.

10. Shahi Litchi earned the GI tag from which Indian state?

A) Bihar 

B) Uttar Pradesh

C) Madhya Pradesh

D) Uttarakhand

  • The Centre through Agricultural and Processed Food Export Development Authority (APEDA) is facilitating trial shipments into new global markets for Indian niche G–I tagged agricultural products.
  • Bihar’s GI tagged Shahi Litchi was exported from Muzaffarpur district of Bihar to London last year. As on date, there are 417 registered GI products and of them, around 150 GI tagged products are agricultural and food products.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!