General Tamil

8th Tamil Unit 9 Questions

8th Tamil Unit 9 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 8th Tamil Unit 9 Questions With Answers Uploaded Below.

1) அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு___________விருது வழங்கியது?

A) பத்ம ஸ்ரீ

B) பாரத ரத்னா

C) பத்மவிபூசண்

D) பத்மபூசன்

விளக்கம்: அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது. இவருக்கு 1990ஆம் வழங்கப்பட்டது. பாரத ரத்னா, தமிழில் இந்திய மாமணி என்று அழைக்கப்படுகிறது.

2) அம்பேத்கரின் இயற்பெயர் என்ன?

A) பீமாராவ் ராம்ஜி

B) ராம்ஜி சக்பால்

C) பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். இவருக்கு பெற்றோர் சூட்டியப் பெயர் பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்பதாகும்.

3) அடுத்தவர் வாழ்வைக் கண்டு_____________கொள்ளக்கூடாது.

A) உவகை

B) நிறை

C) அழுக்காறு

D) இன்பம்

விளக்கம்: அடுத்தவர் வாழ்வைக் கண்டு பொறாமை கொள்ளக் கூடாது. அழுக்காறு என்ற சொல்லி;ன் பொருள் பொறாமை என்பதாகும்.

உவகை – மகிழ்ச்சி

நிறை – மேன்மை

4) கன்னிப்பாவை என்னும் எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?

A) திருப்பாவை

B) திருவெம்பாவை

C) திருவாசகம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி கன்னிப்பாவை என்னும் நூல் எழுதப்பட்டுள்ளது.

5) கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் யார்?

A) சேசுராசா

B) ஆண்டாள்

C) மாணிக்கவாசகர்

D) எத்திராசலு

விளக்கம்: கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் இறையரசன் ஆவார். இவரின் இயற்பெயர் சே.சேசுராசா என்பதாகும். இவர் கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

6) நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று————–

A) பொச்சாப்பு

B) துணிவு

C) மானம்

D) எளிமை

விளக்கம்: நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று சோர்வு ஆகும். பொச்சாப்பு என்றால் சோர்வு என்று பொருள். இச்சொல்லாக்கத்தை இறையரசனின் கன்னிப்பாவை என்னும் நூலில் அறியலாம்.

7) இன்பதுன்பம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

A) இன்பம் + துன்பு

B) இன்பம் + துன்பம்

C) இன்ப + அன்பம்

D) இன்ப + அன்பு

விளக்கம்: இன்பதுன்பம் என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது இன்பம் + துன்பம் என்பதாகும்.

8) குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?

A) குணங்கள்எல்லாம்

B) குணமெல்லாம்

C) குணங்களில்லாம்

D) குணங்களெல்லாம்

விளக்கம்: குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் குணங்களெல்லாம் என்பதாகும்.

நிலைமொழியின் இறுதி எழுத்து ள் (மெய் எழுத்து) .

வருமொழியின் முதல் எழுத்து எ (உயிர் எழுத்து) .

குணங்கள் + எ + ல்லாம் = குணங்களெல்லாம் (உடல்மேல்உயிர் வந்து ஒன்றுவது இயல்பே) .

9) நட

நாளைமட்டுமல்ல

இன்றும்

நம்முடையதுதான் என்று நம்பிக்கையூட்டும் வகையில் பாடல் தந்தவர் யார்?

A) மீரா

B) சுரதா

C) கல்யாண்ஜி

D) மு. மேத்தா

விளக்கம்: செயல்படத் தொடங்கு, நாளை மட்டுமல்ல இன்றும் நமது நாள்தான் என்று பொருள் தரும் வகையில் மேற்கண்ட வரிகளை எழுதியவர் மு.மேத்தா.

10) உன்னுடன் நீயே__________கொள்.

A) சேர்ந்து

B) பகை

C) கைகுலுக்கி

D) நட்பு

விளக்கம்: உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள் என்று மு.மேத்தா தனது பாடல் வரிகள் மூலம் கூறுகிறார்.

ஓடிவந்து கைகுலுக்க

ஒருவருமில்லையா?

உன்னுடன் நீயே

கைகுலுக்கிக் கொள் – மு.மேத்தா.

11) திருப்பாவை என்ற நூலை எழுதியவர் யார்?

A) இறையரசன்

B) மாணிக்கவாசகர்

C) ஆண்டாள்

D) நம்மாழ்வார்

விளக்கம்: மார்கழித் திங்கள் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர். அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை ஆகும்.

12) நட

பாதங்கள்

நடக்கத்

தயாராய் இருந்தால்

பாதைகள்

மறுப்புச் சொல்லப்

போவதில்லை என்ற பாடல் வரிகளை பாடியவர்?

A) மீரா

B) சுரதா

C) கல்யாண்ஜி

D) மு. மேத்தா

விளக்கம்: உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப்போவதில்லை என்று பொருள் தரும் வகையில் மேற்கண்ட பாடல் வரிகளை எழுதியவர் – மு.மேத்தா ஆவார்.

13) விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

A) இராஜகோபாலச்சாரியார்

B) சர்தார் வல்லபாய் படேல்

C) இராஜேந்திரபிரசாத்

D) மேற்கண்ட யாருமில்லை

விளக்கம்: விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார்.

14) அன்னை பூமி என்னும் புதினத்தை எழுதிய கோமகளின் இயற்பெயர் என்ன?

A) இராஜலட்சுமி

B) ஜெயலட்சுமி

C) கல்யாணி

D) அங்கையற்கண்ணி

விளக்கம்: கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி ஆகும். இவர் சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.

15) அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போது ஓர் அமைப்பை நிறுவினார்?

A) 1929

B) 1924

C) 1923

D) 1927

விளக்கம்: அம்பேத்கர் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போரட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போராட வேண்டும் என்றும் முடிவு செய்தார். இவர் 1924ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.

16) படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) படுக்கை + யாகிறது

B) படுக்கையா + ஆகிறது

C) படுக்கையா + கிறது

D) படுக்கை + ஆகிறது

விளக்கம்: படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது படுக்கை + ஆகிறது.

17) இரட்டை வாக்குரியை எதிர்த்த பூனா ஒப்பந்தம் கீழ்க்கண்ட எதனை ஆதரித்தது?

A) ஒடுக்கப்பட்டோருக்கு தனித்தொகுதி

B) ஒடுக்கப்பட்டோருக்கு அமைச்சரவையில் இடம்

C) ஒடுக்கப்பட்டோருக்கு அரசியலமைப்பில் பிரதிநிதித்துவம்

D) ஒடுக்கப்பட்டோருக்கு தனிக்கட்சி

விளக்கம்: இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தியடிகள் உண்ணவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக 1931ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபதாம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதுவே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

18) திருவெம்பாவை என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆண்டாள்

B) மாணிக்கவாசகர்

C) நம்மாழ்வார்

D) சுந்தரர்

விளக்கம்: சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை, இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர் ஆவார்.

19) தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) தூக்கிகொண்டு

B) தூக்குக்கொண்டு

C) தூக்கிக்கொண்டு

D) தூக்குகொண்டு

விளக்கம்: தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் தூக்கிக்கொண்டு என்று கிடைக்கும்.

20) இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என போற்றப்படுபவரின் பெற்றோர் யார்?

A) பீமாராவ்-பீமாபாய்

B) ராம்ஜி சக்பால்-பீமாபாய்

C) பீமாராவ் அம்பேத்கர்- பீமாபாய்

D) பீமாராவ் ராம்ஜி-பீமாபாய்

விளக்கம்: விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் அம்பேத்கர் ஆவார். இவரின் பெற்றோர் பெயர் ராம்ஜி சக்பால்-பீமாபாய்.

21) நெய்யாய் திரியாய்

நீயே மாறினால்

தோல்வியும் உனக்கொரு

தூண்டுகோலாகும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) மீரா

B) சுரதா

C) கல்யாண்ஜி

D) மு. மேத்தா

விளக்கம்: நெய்யாய் திரியாய்

நீயே மாறினால்

தோல்வியும் உனக்கொரு

தூண்டுகோலாகும் – மு.மேத்தா.

22) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் எப்போது பிறந்தார்?

A) 1881 ஏப்ரல் 14

B) 1882 ஏப்ரல் 14

C) 1892 ஏப்ரல் 14

D) 1891 ஏப்ரல் 14

விளக்கம்: அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள் பிறந்தார். இவரே விடுதலைபெற்ற இந்தியாவில் முதல் சட்ட அமைச்சர் ஆவார் .

23) அ. வெண்ணிலா கீழ்க்கண்ட எந்த நூலை தொகுத்தார்?

A) அன்னை பூமி

B) மீதமிருக்கும் சொற்கள்

C) உயிர் அமுதாய்

D) நிலாக்கால நட்சத்திரங்கள்

விளக்கம்: அ. வெண்ணிலா, மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலைத் தொகுத்தார். இந்நூலிலிருந்து பால் மனம் என்னும் கதை தரப்பட்டது.

24) நிறை அழுக்காறு எளிமை நினைவுதுணிவு இன்பதுன்பம் – இவ்வரிகளில் அழுக்காறு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) அன்பு

B) தூய்மையின்மை

C) பொறாமை

D) பொறுமை

விளக்கம்: அழுக்காறு என்றால் பொறாமை என்று பொருள். பொறை என்றால் பொறுமை என்று பொருள்.

25) எங்கு இலட்சக்கணக்கான மக்களோடு அம்பேத்கர் புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்?

A) அம்பவாடே

B) மும்பை

C) நாக்பூர்

D) பவபுரி

விளக்கம்: அம்பேத்கர் புத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார். இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், உலகப் பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் இலட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

26) பொறைமதம் கடைப்பிடிகள்

பொச்சாப்பு மானம்அறம் – இதில் பொறை என்ற சொல்லின் பொருள்?

A) மேன்மை

B) பொறாமை

C) பொறுமை

D) பகை

விளக்கம்: பொறை என்றால் பொறுமை என்று பொருள்.

நிறை – மேன்மை

அழுக்காறு – பொறாமை

இகல் – பகை.

27) எப்போது அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?

A) 1990

B) 1988

C) 1956

D) 1957

விளக்கம்: இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990 ஆம் ஆண்டு அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அவர் 1956 டிசம்பர் 6 ஆம் நாள் காலமானார்.

28) யாருடைய அரண்மனையில் சிறிது காலம் உயர் அலுவலராக அம்பேத்கர் பணியாற்றினார்?

A) பரோடா மன்னர்

B) சதாரா மன்னர்

C) பூனே மன்னர்

D) மைசூர் மன்னர்

விளக்கம்: 1907ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த அம்பேத்கர், பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழத்தில் படித்து 1912ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் உயர் அலுவலராகவும் பணியாற்றினார்.

29) ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலை எழுதியவர் யார்?

A) மீரா

B) சுரதா

C) கல்யாண்ஜி

D) மு. மேத்தா

விளக்கம்: ஆகாயத்துக்கு அடுத்தவீடு என்னும் புதுக்கவிதை நூலை எழுதியவர் மு.மேத்தா. இந்நூலுக்கு சாகித்தய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

30) சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல்?

A) திருப்பாவை

B) திருவெம்பாவை

C) திருவாசகம்

D) தேவாரம்

விளக்கம்: சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை, இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர் ஆவார்.

31) பொறைமதம் கடைப்பிடிகள்

பொச்சாப்பு மானம்அறம் – இவ்வரியில் மதம் என்று குறிப்பிடப்படுவது?

A) இந்து மதம்

B) விருப்பம்

C) கொள்கை

D) சமயம்

விளக்கம்: இறையரசன் எழுதிய இவ்வரிகளில் மதம் என்றால் கொள்கை என்று பொருள்.

மையல் – விருப்பம்

32) நட

நாளைமட்டுமல்ல

இன்றும்

நம்முடையதுதான்

நட – என்று பாடியவர் யார்?

A) வாணிதாசன்

B) மீரா

C) மு.மேத்தா

D) பாரதிதாசன்

விளக்கம்: மேற்கண்ட பாடல் வரிகளை எழுதியவர் மு.மேத்தா ஆவார். இவர் புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் திரையிசைப்பாடல்களை எழுதியுள்ளார். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

33) அம்பேத்கர் உயர் கல்வி கற்க எந்த நாட்டிற்கு சென்றார்?

A) அமெரிக்கா

B) ரஷ்யா

C) பிரான்ஸ்

D) சீனா

விளக்கம்: 1912ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்ற அம்பேத்கர், உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார்.

34) எந்த பல்கலைக்கழத்தில் சேர்ந்து அம்பேத்கர் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்?

A) கேம்பிரிட்ஜ் பல்லைக்கழகம்

B) கொலம்பியா பல்கலைக்கழகம்

C) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

D) நியூயார்க் பல்கலைக்கழகம்

விளக்கம்: உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்ற அம்பேத்கர், கொலம்பியா பல்லைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

35) எந்த ஆண்டு அம்பேத்கர் பண்டையகால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்?

A) 1907

B) 1912

C) 1915

D) 1918

விளக்கம்: கொலம்பியா பல்லைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். இவர் 1915ல் பண்டையகால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.

36) யாருடைய உதவியினால் அம்பேத்கர் இளங்கலைப் பட்டம் பெற்றார்?

A) பரோடா மன்னர்

B) சதாரா மன்னர்

C) பூனே மன்னர்

D) மைசூர் மன்னர்

விளக்கம்: 1907ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த அம்பேத்கர், பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழத்தில் படித்து 1912ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.

37) கோமகளின் எந்த புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது?

A) உயிர் அமுதாய்

B) மீதமிருக்கும் சொற்கள்

C) நிலாக்கால நட்சத்திரங்கள்

D) அன்னை பூமி

விளக்கம்: இராஜலட்சுமி என்னும் இயற்பெயர் கொண்டவர் கோமகள் ஆவார். இவரின் அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.

38) நீ

விழித்தெழும் திசையே

பூமிக்குக் கிழக்கு

உன்

விரல்களில் ஒளிரும்

சூரியவிளக்கு – என்று பாடியவர் யார்?

A) மு.மேத்தா

B) மீரா

C) சுரதா

D) கல்யாண்ஜி

விளக்கம்: மேற்கண்ட பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மு.மேத்தா கவிதைகள் ஆகும். இந்நூலை எழுதியவர் மு. மேத்தா ஆவார். இவர் வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

39) திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?

A) திருப்பாவை

B) திருவெம்பாவை

C) நலாராயிரத்திவ்வியப்பிரபந்தம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: மார்கழித் திங்கள் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு. இதனைப் பாவை நோன்பு என்பர். அவ்வாறு திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூலே திருப்பாவை ஆகும்.

40) பொறைமதம் கடைப்பிடிகள்

பொச்சாப்பு மானம்அறம் – இவ்வரிகளில் பொச்சாப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) பொறுமை

B) பொறுமையின்மை

C) சோர்வு

D) சுறுசுறுப்பு

விளக்கம்: மேற்கண்ட வரிகள் இறையரசன் எழுதிய கன்னிப்பாவை என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இதில் பொச்சாப்பு என்றால் சோர்வு என்று பொருள் தரும் வகையில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இச்சொல்லின் எதிர்ச்சொல் சுறுசுறுப்பு.

41) புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?

A) அம்பேத்கர்

B) அசோகர்

C) யுவான் சுவாங்

D) வர்த்தமானர்

விளக்கம்: அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகம் அவரது மறைவுக்குப் பின் 1957ஆம் ஆண்டு வெளியானது.

42) விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) விழி + எழும்

B) விழித்து + எழும்

C) விழி + தெழும்

D) விழித் + தெழும்

விளக்கம்: விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விழித்து + எழும்.

43) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் எங்கு பிறந்தார்?

A) நாக்பூர்

B) புனே

C) வார்தா

D) அம்பவாதே

விளக்கம்: இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆவார். இவர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவாதே என்னும் ஊரில் பிறந்தார்.

44) கூற்று: அம்பேத்கர் 1924ல் ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.

காரணம்: ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: 1924ஆம் ஆண்டு அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார். இவ்வமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகப் போராடினார்.

45) கூற்றுகளை ஆராய்க.

1. 1937ல் அம்பேத்கர் சுதந்திரா கட்சியைத் தொடங்கினார்

2. தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றி பெற்றனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. 1935ல் அம்பேத்கர் சுதந்திரா கட்சியைத் தொடங்கினார்.

2. தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றி பெற்றனர்.

46) மு.மேத்தாவின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?

A) கண்ணீர்ப்பூக்கள்

B) ஊர்வலம்

C) சோழநிலா

D) ஆகாயத்துக்கு அடுத்தவீடு

விளக்கம்: ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலை எழுதியவர் மு.மேத்தா. இந்நூலுக்கு சாகித்தய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

47) என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன் என்று கூறியவர் யார்?

A) காந்தியடிகள்

B) அம்பேத்கர்

C) பாரதியார்

D) வ.உ.சி

விளக்கம்: அம்பேத்கர் 1930ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் “என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்”, அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழுமனதுடன் ஆதரிப்பேன் என்று கூறினார்.

48) எப்போது அம்பேத்கர் தன்னை பௌத்த சமயத்தில் இணைத்துக்கொண்டார்?

A) 1956 அக்டோபர் 14

B) 1956 டிசம்பர் 6

C) 1956 நவம்பர் 14

D) 1956 ஏப்ரல் 14

விளக்கம்: அம்பேத்கர் புத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார். இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், உலகப் பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் இலட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

49) அம்பேத்கர் அமெரிக்கா சென்று உயர்கல்வி கற்க உதவிய மன்னர் யார்?

A) மன்னர் சாயாஜிராவ்

B) மன்னர் சரபோஜி

C) மன்னர் அன்வாருதீன்

D) மேற்கண்ட யாருமில்லை

விளக்கம்: பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார் அம்பேத்கர். கொலம்பியா பல்லைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

50) இரட்டை வாக்குரிமையை பெற்றவர் யார்? ஏற்க மறுத்தவர் யார்?

A) காந்தியடிகள், அம்பேத்கர்

B) அம்பேத்கர், காந்தியடிகள்

C) சுபாஷ் சந்திரபோஸ், காந்தியடிகள்

D) இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர்

விளக்கம்: ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்தெடுக்க ஒரு வாக்கு, ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு என்ற இரட்டை வாக்குரிமை முறை வழங்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தார்.

51) கவலைகள்__________அல்ல என்று மு.மேத்தா கூறுகிறார்.

A) சுமைகள்

B) சுவைகள்

C) துன்பங்கள்

D) கைக்குழந்தைகள்

விளக்கம்: கவலைகளைத்

தூக்கிக்கொண்டு

திரியாதே….

அவை

கைக்குழந்தைகளல்ல – மு.மேத்தா

52) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை விருதினைப் பெற்றவர்?

A) கோமகள்

B) ஜெயலட்சுமி

C) மு.மேத்தா

D) மேற்கண்ட யாருமில்லை.

விளக்கம்: இராஜலட்சுமி என்னும் இயற்பெயர் கொண்டவர் கோமகள் ஆவார். இவரின் அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றுள்ளது. இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதை பெற்றுள்ளார்.

53) எப்போது அம்பேத்கர் பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார்?

A) 1915

B) 1912

C) 1907

D) 1920

விளக்கம்: 1915 – பண்டையக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்

1912 – மும்பைப் பல்லைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம்

1907 – பள்ளிப்படிப்பை முடித்தார்

1920 – பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார்

54) அம்பேத்கர் எந்த ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்றார்?

A) 1917

B) 1912

C) 1921

D) 1923

விளக்கம்: அயராத உழைப்பின் பயனாக 1921 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டமும் 1923ஆம் ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சினை என்னும் ஆராயச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டமும் பெற்றார். அதே ஆண்டில் சட்டப்படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

55) இந்தியாவில் இரட்டை வாக்குரிமை முறை ஆங்கிலேயர்களால் வழங்கப்பட எந்த வட்டமேசை மாநாடு காரணம்?

A) முதலாம்

B) இரண்டாம்

C) மூன்றாம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்தெடுக்க ஒரு வாக்கு, ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு என்ற இரட்டை வாக்குரிமை முறை வழங்கப்பட்டது.

56) வெறுப்புஉவப்பு ஊக்கம் மையல்

வென்றிஇகல் இளமை மூப்பு – இவ்வரிகளில் மையல் என்ற சொல்லின் பொருள்?

A) சோர்வு

B) விருப்பம்

C) பகை

D) பொறாமை

விளக்கம்: மையல் என்ற சொல்லின் பொருள் விருப்பம் என்பதாகும்.

பொச்சாப்பு – சோர்வு

இகல் – பகை

அழுக்காறு – பொறாமை.

57) அம்பேத்கர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

2. அரசியல் சாசனத்தின் தந்தை

3. 1891 ஏப்ரல் 14ல் பிறந்தார்.

4. இவருடைய தந்தை கல்லூரி பேராசிரியர்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. இவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

2. அரசியல் சாசனத்தின் தந்தை

3. 1891 ஏப்ரல் 14ல் பிறந்தார்.

4. இவருடைய தந்தை கல்லூரி இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

58) கீழ்க்கண்ட எந்த ஆய்விற்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?

A) பண்டையகால இந்தியாவில் வணிகம்

B) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

C) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார் அம்பேத்கர். அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

59) 1904ஆம் ஆண்டு அம்பேத்கருடைய குடும்பம் எங்கு குடிபெயர்ந்ததால் எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார்?

A) சதாரா

B) நாக்பூர்

C) மும்பை

D) பூனே

விளக்கம்: 1904ஆம் ஆண்டு அம்பேத்கருடைய குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்ததால் எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் தொடர்ந்தார்.

60) எந்த ஆண்டு அம்பேத்கர் தமது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்?

A) 1904

B) 1907

C) 1912

D) 1915

விளக்கம்: குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் தொடர்ந்தார் அம்பேத்கர். இவர் 1912ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.

61) பொருந்தாத நூல் ஒன்றை தெரிவு செய்க.

A) கண்ணீர்ப்பூக்கள்

B) ஊர்வலம்

C) சோழநிலா

D) ஆகாயத்துக்கு அடுத்த வீடு

விளக்கம்: மேற்கண்ட நூல்கள் அனைத்தும் மு.மேத்தா எழுதிய நூல் ஆகும். இதில் ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் நூல் மற்ற மூன்று நூல்களிலிருந்து வேறுபடுகிறது. இந்நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

62) கீழ்க்கண்ட எது அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையாகும்?

A) பண்டையகால இந்தியாவில் வணிகம்

B) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

C) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இந்தியாவில் சாதிகளில் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை அம்பேத்கர் படைத்தளித்தார். அதைச் சிறுப்புத்தகமாகவும் வெளியிட்டார். அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் இதுவே.

63) அம்பேத்கர் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கீழ்க்கண்ட எதனை வலியுறுத்தினார்?

A) சுயராஜ்ய கோரிக்கை

B) ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை

C) இந்தியாவிற்கு தனி அரசியலமைப்பு

D) இந்திய பிரிவினை கூடாது.

விளக்கம்: ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

64) மறவிஓர்ப்பு இன்னபிற

மன்னும் உயிர்க் குணங்கள்எல்லாம் – இவ்வரியில் இடம்பெற்றுள்ள மன்னும் என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கொடுக்கும்

B) ஆராய்ந்து தெளிதல்

C) விருப்பம்

D) நிலைபெற்ற

விளக்கம்: கன்னிப்பாவை என்ற பாடலில் இடம்பெற்ற இவ்வரிகளை எழுதியவர் இறையரசன் ஆவார். மன்னும் என்ற சொல்லின் பொருள் நிலைபெற்ற என்பதாகும்.

65) விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?

A) விழியெழும்

B) விழித்தெழும்

C) விழித்தழும்

D) விழித்துஎழும்

விளக்கம்: விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் விழித்தெழும் என்பதாகும்.

விழித்த் + எழும் (உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்) .

விழித் + த் + எ + ழும் = விழித்தெழும் (உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே) .

66) அம்பேத்கர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) அம்பேத்கர் மும்பையில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார்.

B) இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப் பருவத்திலேயே பல அவமதிப்புக்கு ஆளானவர்.

C) மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.

D) ராம்ஜி சக்பால் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

விளக்கம்: 1. அம்பேத்கர் மும்பையில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார்.

2. இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப் பருவத்திலேயே பல அவமதிப்புக்கு ஆளானவர்.

3. மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.

4. பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.

67) அம்பேத்கர் நூலகம் திறக்கும்போது முதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியேறுவார். இத்தகைய அயராத உழைப்பை அவர் எங்கு மேற்கொண்டார்?

A) அமெரிக்கா

B) இலண்டன்

C) சீனா

D) ரஷ்யா

விளக்கம்: 1920ஆம் ஆண்டு பொளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார் அம்பேத்கர். அங்கிருந்த பல நூலகங்களில் தமது பெயரைப் பதிவு செய்துகொண்டார். நூலகம் திறக்கும்போது முதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியேறுவார்.

68) கீழ்க்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) 1915 – பண்டையக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.

B) 1912 – மும்பைப் பல்லைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம்.

C) 1908 – பள்ளிப்படிப்பை முடித்தார்.

D) 1920 – பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார்.

விளக்கம்: 1915 – பண்டையக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்

1912 – மும்பைப் பல்லைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம்

1907 – பள்ளிப்படிப்பை முடித்தார்

1920 – பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார்.

69) கோமகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவரின் இயற்பெயர் இராஜலட்சுமி

2. இவர் சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.

3. இவரது தமிழன்னை என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.

4. மீதமிருக்கும் சொற்கள் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.

A) 1, 4 சரி

B) 1, 3 சரி

C) 2, 3 சரி

D) 1, 2 சரி

விளக்கம்: 1. இவரின் இயற்பெயர் இராஜலட்சுமி

2. இவர் சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.

3. இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.

4. மீதமிருக்கும் சொற்கள் என்னும் நூலைத் தொகுத்தவர் அ. வெண்ணிலா.

70) அம்பேத்கர் எந்த சமயக் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டார்?

A) சமணம்

B) பௌத்தம்

C) கிறித்துவம்

D) ஜொரஸ்டிரம்

விளக்கம்: அம்பேத்கர் புத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார். இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், உலகப் பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார்.

71) கீழ்க்கண்டவர்களில் பொருந்தாதவர் யார்?

A) கோபால்சாமி

B) அல்லாடி கிருஷ்ணமூர்த்தி

C) கே.எம். முன்ஷி

D) இராஜேந்திர பிரசாத்

விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.

1. கோபால்சாமி

2. அல்லாடி கிருஷ்ணமூர்த்தி

3. கே.எம். முன்ஷி

4. சையது முகமது சாதுல்லா

5. மாதவராவ்

6. டி.பி. கைத்தான்

7. அம்பேத்கர்

இராஜேந்திர பிரசாத் என்பவர் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ஆவார்.

அம்பேத்கர் வரைவுக் குழுவின் தலைவர் ஆவார்.

72) எந்த ஆண்டு அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும் என்ற புத்தகம் வெளியானது?

A) 1956

B) 1950

C) 1957

D) 1955

விளக்கம்: அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகம் அவரது மறைவுக்குப் பின் 1957ஆம் ஆண்டு வெளியானது.

73) கீழ்க்கண்ட எதன் ஆராய்ச்சிக்காக அம்பேத்கர் முதுகலைப் பட்டம் பெற்றார்?

A) பண்டையகால இந்தியாவில் வணிகம்

B) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

C) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: 1915ல் பண்டைய கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார் அம்பேத்கர். இவர் அமெரிக்கா சென்று உயர்கல்வி கற்க உதவியவர் பரோடா மன்னர் சாயாஜிராவ் ஆவார்.

74) அம்பேத்கர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) மிகச்சிறந்த பொருளியல் அறிஞர்

B) அரசியல் தத்துவமேதை

C) பகுத்தறிவு சிந்தனையாளர்

D) பெண்விடுதலை சிந்தனையாளர்

விளக்கம்: அம்பேத்கர் சமூகச் சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும் அரசியல் தத்துவமேதையாகவும் பகுத்தறிவுச் சிந்தனையாளராகவும் விளங்கினார்.

75) அம்பேத்கருக்கும் காந்தியடிகளுக்கும் இடையே கையெழுத்தான பூனா ஒப்பந்தம் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) சுயராஜ்யம்

B) இரட்டை வாக்குரிமை

C) அரசியலமைப்புச் சாசனம்

D) இரட்டை ஆட்சி

விளக்கம்: இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தியடிகள் உண்ணவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக 1931ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபதாம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பதந்தம் செய்து கொண்டனர். இதுவே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

76) அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது?

A) பண்டையகால இந்தியாவில் வணிகம்

B) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

C) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்தளித்தார். அதைச் சிறுபுத்தகமாகவும் வெளியிட்டார். அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் இதுவே.

77) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக, எந்த பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?

A) கொலம்பியா பல்லைக்கழம்

B) ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகம்

C) இலண்டன் பல்லைக்கழகம்

D) கேம்பிரிட்ஜ் பல்லைக்கழகம்

விளக்கம்: இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார் அம்பேத்கர். அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

78) கூற்று: அம்பேத்கர் சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார்

காரணம்: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை ஆங்கில அரசிடமிருந்து பெற

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: 1935ஆம் ஆண்டு மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத் தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார். சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டார்.

79) மறவிஓர்ப்பு இன்னபிற

மன்னும் உயிர்க் குணங்கள்எல்லாம் – இவ்வரியில் இடம்பெற்றுள்ள ஓர்ப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?

A) கொடுக்கும்

B) ஆராய்ந்து தெளிதல்

C) விருப்பம்

D) நிலைபெற்ற

விளக்கம்: கன்னிப்பாவை என்ற பாடலில் இடம்பெற்ற இவ்வரிகளை எழுதியவர் இறையரசன் ஆவார். ஓர்ப்பு என்ற சொல்லின் பொருள் ஆராய்ந்து தெளிதல் என்பதாகும்.

மையல் – விருப்பம்

மன்னும் – நிலைபெற்ற

80) அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிறுவிய அமைப்பு எது?

A) சமாஜ் சமாத சங்கம்

B) ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை

C) ஒடுக்கப்பட்டோர் நல சங்கம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: அம்பேத்கர் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போரட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போராட வேண்டும் என்றும் முடிவு செய்தார். இவர் 1924ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.

81) கோமகள் எழுதாத நூல் எது?

A) உயிர் அமுதாய்

B) நிலாக்கால நட்சத்திரங்கள்

C) அறிவின் சிதறல்

D) அன்னை பூமி

விளக்கம்: இராஜலட்சுமி என்னும் இயற்பெயர் கொண்ட கோமகள் எழுதிய நூல்கள்:

1. அன்னை பூமி

2. உயிர் அமுதாய்

3. நிலாக்கால நட்சத்திரங்கள்

4. அன்பின் சிதறல்.

82) அம்பேத்கர் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு எப்போது சென்றார்?

A) 1929

B) 1930

C) 1935

D) 1928

விளக்கம்: அம்பேத்கர் 1930ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் “என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்”, அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழுமனதுடன் ஆதரிப்பேன் என்று கூறினார்.

83) வெறுப்புஉவப்பு ஊக்கம் மையல்

வென்றிஇகல் இளமை மூப்பு – இவ்வரிகளில் இகல் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

A) இகழ்ச்சி

B) புகழ்ச்சி

C) பகை

D) நட்பு

விளக்கம்: இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் கன்னிப்பாவை ஆகும். இதன் ஆசிரியர் இறையரசன். இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள இகல் என்ற சொல்லின் பொருள் பகை என்பதாகும். இதன் எதிர்ச்சொல் நட்பு.

84) வெற்ற

உன்னைச்சுற்றி

வெளிச்சவிதை

விதைக்கும் – என்று பாடியவர் யார்?

A) பாரதியார்

B) வாணிதாசன்

C) மீரா

D) மு.மேத்தா

விளக்கம்: உலகத்திற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும். வெற்றி உன் அங்கமாகி, வாழ்வில் ஒளியேற்றும் என்பது மேற்கண்ட பாடலின் பொருளாகும். இதனை பாடியவர் மு.மேத்தா ஆவார்

85) அம்பேத்கருக்கு பொருந்தாதது எது?

A) எழுத்தாளர்

B) பேச்சாளர்

C) சமூகச் சீர்திருத்தவாதி

D) வரலாற்றறிஞர்

விளக்கம்: அம்பேத்கர் சமூகச் சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும் அரசியல் தத்துவமேதையாகவும் பகுத்தறிவுச் சிந்தனையாளராகவும் விளங்கினார். சிறந்த எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் மக்களால் போற்றப்பட்டார். வரலாற்றிஞர் என்பத அம்பேத்கருக்கு பொருந்தாது ஆகும்.

86) ஓடிவந்து கைகுலுக்க

ஒருவருமில்லையா?

உன்னுடன் நீயே

கைகுலுக்கிக் கொள் – என்று கூறியவர் யார்

A) கண்ணதாசன்

B) வாணிதாசன்

C) மு.மேத்தா

D) மீரா

விளக்கம்: மேற்கண்ட பாடல் வரிகளை எழுதியவர் மு.மேத்தா. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மு.மேத்தா கவிதைகள் ஆகும்.

87) ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று எந்த வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் கூறினார்?

A) முதலாம்

B) இரண்டாம்

C) மூன்றாம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

88) இரட்டை வாக்குரிமை என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கிறது?

A) ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்தெடுக்க ஒரு வாக்கு, ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு

B) ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்தெடுக்க ஒரு வாக்கு, கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு

C) ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரைத் தேர்தெடுக்க ஒரு வாக்கு, முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு

D) ஒரு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரைத் தேர்தெடுக்க ஒரு வாக்கு, ஆங்கில அரசு பிரதிநிதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு

விளக்கம்: ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்தெடுக்க ஒரு வாக்கு, ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கு என்ற இரட்டை வாக்குரிமை முறை வழங்கப்பட்டது.

89) தூங்கி விழுந்தால்

பூமி உனக்குப்

படுக்கையாகிறது

விழித்து நடந்தால்

அதுவே உனக்குப்

பாதையாகிறது – என்ற பாடல் வரிகளை எழுதியவரின் சாகித்தய அகாடதெமி பரிசு பெற்ற நூல் எது?

A) மு.மேத்தா கவிதைகள்

B) மகுடநிலா

C) ஆகாயத்துக்கு அடுத்தவீடு

D) பிசிராந்தையார்

விளக்கம்: மேற்கண்ட பாடல்வரிகளை எழுதியவர் மு.மேத்தா ஆவார். இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மு.மேத்தா கவிதைகள். இவரின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ஆகாயத்துக்கு அடுத்த வீடு.

90) போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) போவது + இல்லை

B) போ + இல்லை

C) போவது + தில்லை

D) போவது + தில்லை

விளக்கம்: போவதில்லை என்னும் செல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது போவது + இல்லை.

91) மு.மேத்தா பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்

2. மரபுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.

3. பள்ளித் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்

4. திரையிசைப்பாடல்களை எழுதியுள்ளார் .

A) 1, 4 தவறு

B) 2, 3 தவறு

C) 1, 2, 4 தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்

2. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்.

3. கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்

4. திரையிசைப்பாடல்களை எழுதியுள்ளார்.

92) தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

A) உவமை அணி

B) இல்பொருள் உவமை அணி

C) பிறிது மொழிதல் அணி

D) வேற்றுமை அணி

விளக்கம்: இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும். உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும்.

93) பொருத்துக.

அ. அரசியலமைப்பு – 1. Agreement

ஆ. ஒப்பந்தம் – 2. Constitution

இ. பல்கலைக்கழகம் – 3. Round Table Conference

ஈ. வட்டமேசை மாநாடு – 4. University

A) 1, 2, 3, 4

B) 2, 1, 4, 3

C) 2, 1, 3, 4

D) 1, 2, 4, 3

விளக்கம்: அரசியலமைப்பு – Constitution

ஒப்பந்தம் – Agreement

பல்கலைக்கழகம் – University

வட்டமேசை மாநாடு – Round Table Conference

94) அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் என்ன?

A) பீமாராவ் அம்பேத்கர்

B) சக்பால் அம்பேத்கர்

C) மகாதேவ் அம்பேத்கர்

D) ராம்ஜி அம்பேத்கர்

விளக்கம்: மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்.

95) கூற்று: அம்பேத்கர் பள்ளிப் பருவத்திலேயே பல அவமதிப்புகளுக்கு ஆளானார்.

காரணம்: இவர் ஏழ்மையான குடும்பத்தில் 14-வது பிள்ளையாகப் பிறந்தார்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார். இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப் பருவத்திலேயே பல அவமதிப்புகளுக்கு ஆளானார்.

96) எந்த ஆண்டு அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது?

A) 1902

B) 1903

C) 1904

D) 1912

விளக்கம்: 1904ஆம் ஆண்டு அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்தது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார்.

97) பூனா ஒப்பந்தம் யார் யாருக்கிடையே கையெழுத்தானது?

A) அம்பேத்கர் மற்றும் காந்தியடிகள்

B) அம்பேத்கர் மற்றும் ஆங்கிலேயர்

C) காந்தியடிகள் மற்றும் ஆங்கிலேயர்

D) அம்பேத்கர், காந்தியடிகள் மற்றும் ஆங்கிலேயர்

விளக்கம்: இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தியடிகள் உண்ணவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக 1931ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபதாம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதுவே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

98) 1930ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் அம்பேத்கர் கீழ்க்கண்ட எதனைக் கூறினார்?

A) இந்திய அரசுச் சட்டம் பற்றி விவாதித்தல்

B) சுயராஜ்ய கோரிக்கை

C) சைமன் குழு அறிக்கை

D) பூனே ஒப்பந்தம்

விளக்கம்: அம்பேத்கர் 1930ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புறப்படும் முன் “என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்”, அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழுமனதுடன் ஆதரிப்பேன் என்று கூறினார்.

99) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது. இதில் மொத்தம் எத்தனை பேர் இடம்பெற்றனர்?

A) 6

B) 7

C) 8

D) 10

விளக்கம்: 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.

100) கவலைகளைத் தூக்கிக்கொண்டு திரியாதே அவை கைக்குழந்தைகளல்ல என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) மு.மேத்தா கவிதைகள்

B) ஆகாயத்துக்கு அடுத்த வீடு

C) சோழநிலா

D) கண்ணீர்ப்பூக்கள்

விளக்கம்: மேற்கண்ட பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் மு.மேத்தா கவிதைகள் ஆகும். மு. மேத்தாவின் மற்ற நூல்கள்:

1. கண்ணீர்ப் பூக்கள்

2. ஊர்வலம்

3. சோழநிலா

4. மகுடநிலா

5. ஆகாயத்துக்கு அடுத்த வீடு

101) நிறைஅழுக்காறு எளிமை.

நினைவுதுணிவு இன்பதுன்பம் – என்ற வரியில் நிறை என்ற சொல்லின் பொருள் என்ன?

A) நிறைவு

B) மேன்மை

C) கொள்கை

D) நிலைபெற்ற

விளக்கம்: மேற்கண்ட வரிகள் இறையரசன் எழுதிய கன்னிப் பாவை என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது. இதில் நிறை என்ற சொல்லின் பொருள் மேன்மை என்பதாகும்.

102) கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை தேர்வு செய்க.

A) முதுகலைப்பட்டம் – பண்டையகால இந்திய வணிகம்

B) ஆய்வுக்கட்டுரை – இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

C) முனைவர் பட்டம் – இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

D) பாரிஸ்டர் பட்டம் – பொருளாதாரம்

விளக்கம்: முதுகலைப்பட்டம் – பண்டையகால இந்திய வணிகம்

ஆய்வுக்கட்டுரை – இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

முனைவர் பட்டம் – இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

பாரிஸ்டர் பட்டம் – சட்டம்

103) எந்த ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?

A) 1930

B) 1931

C) 1935

D) 1937

விளக்கம்: 1935ஆம் ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

104) அம்பேத்கர் எந்த கட்சியைத் தொடங்கினார்?

A) சுதந்திரா கட்சி

B) பாவார்டு பிளாக் கட்சி

C) சுதந்திரத் தொழிலாளர் கட்சி

D) சமத்துவ சுதந்திக் கட்சி

விளக்கம்: 1935ஆம் ஆண்டு மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத் தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார். சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டார்.

105) கூற்றுகளை ஆராய்க.

1. 1904 – குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.

2. 1912 – இளங்கலைப்பட்டம்

3. 1921 – முதுநிலை அறிவியல் பட்டம்

4. 1924 – முனைவர் பட்டம்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. 1904 – குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.

2. 1912 – இளங்கலைப்பட்டம்

3. 1921 – முதுநிலை அறிவியல் பட்டம்

4. 1923 – முனைவர் பட்டம்.

106) அம்பேத்கர் எந்த ஆண்டு தமது பள்ளிப்படிப்பை முடித்தார்?

A) 1904

B) 1912

C) 1907

D) 1915

விளக்கம்: குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் தொடர்ந்தார் அம்பேத்கர். இவர் 1907ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார்.

107) எங்கு நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் அம்பேத்கர் கலந்துகொண்டார்?

A) மலேசியா

B) இலங்கை

C) சீனா

D) ஜப்பான்

விளக்கம்: அம்பேத்கர் புத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார். இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், உலகப் பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார்.

108) நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இதில் பொருந்தாதது எது?

A) அறிவு

B) சமத்துவம்

C) சுயமரியாதை

D) நன்னடத்தை

விளக்கம்: நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு. இரண்டாவது தெய்வம் சுயமரியாதை. மூன்றாவது தெய்வம் நன்னடத்தை என அம்பேத்கர் கூறுகிறார்.

109) முதலாவது வட்டமேசை மாநாடு கீழ்க்கண்ட எந்த காரணத்திற்காக நடைபெற்றது?

A) இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவது பற்றி முடிவு செய்ய

B) இந்தியாவிற்கு அரசியல் சாசனம் எழுத குழு அமைப்பது பற்றி முடிவு செய்ய

C) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வழங்குவது பற்றி விவாதிக்க

D) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் பற்றி விவாதிக்க

விளக்கம்: இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது.

110) அம்பேத்கர் எப்போது ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை தொடங்கினார்?

A) 1924

B) 1927

C) 1930

D) 1932

விளக்கம்: விளக்கம்: அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார். இவர் ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927ஆம் ஆண்டு தொடங்கினார்.

111) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (எதிர்ச்சொல் பற்றி)

A) மையல் – விருப்பம்

B) பொச்சாப்பு – சுறுசுறுப்பு

C) இகல் – நட்பு

D) நிறை – மேன்மையற்ற

விளக்கம்: இங்கு தவறாக பொருந்தியுள்ளது மையல் என்ற சொல்லாகும். இதன் பொருள் விருப்பம். மற்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தரப்பட்டுள்ளது. ஆனால் மையல் என்ற சொல்லிற்கு மட்டும் பொருள் தரப்பட்டுள்ளது. இதன் எதிர்ச்சொல் விருப்பமற்ற என்பதாகும்.

மையல் – விருப்பம்

பொச்சாப்பு – சுறுசுறுப்பு

இகல் – நட்பு

நிறை – மேன்மையற்ற.

112) அம்பேத்கருக்கு கீழ்க்காணும் எதற்கு முனைவர் பட்டம் வழங்கபடவில்லை?

A) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

B) ரூபாய் பற்றிய பிரச்சினை

C) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்.

D) A மற்றும் B

விளக்கம்: இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் – முனைவர் பட்டம்

ரூபாய் பற்றிய பிரச்சினை – முனைவர் பட்டம்

இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும். – ஆய்வுக்கட்டுரை.

113) எந்த ஆண்டு அம்பேத்கர் பொருளாதார படிப்பிற்காக இலண்டன் சென்றார்?

A) 1920

B) 1918

C) 1921

D) 1923

விளக்கம்: 1920ஆம் ஆண்டு பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார் அம்பேத்கர். அங்கிருந்த பல நூலகங்களில் தமது பெயரைப் பதிவு செய்துகொண்டார். நூலகம் திறக்கும் போது முதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியேறுவார்.

114) எந்த ஆண்டு அம்பேத்கர் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்?

A) 1920

B) 1921

C) 1923

D) 1924

விளக்கம்: இலண்டன் சென்ற அம்பேத்கர், அங்கிருந்த பல நூலகங்களில் தமது பெயரைப் பதிவு செய்துகொண்டார். நூலகம் திறக்கும் போது முதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியேறுவார். இத்தகைய அயராத உழைப்பின் பயனாக 1921ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.

115) அம்பேத்கர் 1923ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். கீழ்க்காணும் எது பற்றிய ஆராய்ச்சிக்காக அவருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது?

A) ரூபாய் பற்றிய பிரச்சினை

B) சாதி பற்றிய பிரச்சினை

C) சட்டம் சார்ந்த ஆய்வு

D) பண்டையகால இந்திய வணிகம்

விளக்கம்: 1923ஆம் ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சினை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

116) இரட்டை வாக்குரிமையை எதிர்க்கும் பூனா ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

A) 1930 செப்டம்பர் 20

B) 1931 செப்டம்பர் 20

C) 1932 செப்டம்பர் 20

D) 1933 செப்டம்பர் 20

விளக்கம்: இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தியடிகள் உண்ணவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக 1931ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் இருபதாம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பதந்தம் செய்து கொண்டனர். இதுவே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

117) கூற்றுகளை ஆராய்க

1. 1924ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பு நிறுவப்பட்டது.

2. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகப் பேராடியது

3. 1930ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் கலந்து கொண்டார்.

4. முதல் வட்டமேசை மாநாட்டிற்கு செல்வதற்கு முன் சுயராஜ்ய கோரிக்கைகளை முழுமனதுடன் ஆதரிப்பேன் என்று கூறினார்.

A) 1, 3 தவறு

B) 2, 4 தவறு

C) 2, 3, 4 தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. 1924ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பு நிறுவப்பட்டது.

2. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகப் பேராடியது

3. 1930ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் கலந்து கொண்டார்.

4. முதல் வட்டமேசை மாநாட்டிற்கு செல்வதற்கு முன் சுயராஜ்ய கோரிக்கைகளை முழுமனதுடன் ஆதரிப்பேன் என்று கூறினார்.

118) இரண்டாம் வட்டமேசை மாநாட்டிற்கு பொருந்தாது எது?

A) ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என அம்பேத்கர் கோரிக்கை வைத்தார்.

B) ஒடுக்கப்பட்டோருக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் என காந்தியடிகள் கூறினார்

C) ஆங்கில அரசு இரட்டை வாக்குரிமை வழங்கியது.

D) இரண்டாம் வட்டமேசை மாநாடு தொடர்பாக அம்பேத்கர் மற்றும் காந்தியடிகள் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது.

விளக்கம்: 1. ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என அம்பேத்கர் கோரிக்கை வைத்தார்.

2. ஒடுக்கப்பட்டோருக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் வேண்டும் என அம்பேத்கர் கோரிக்கை வைத்தார்

3. ஆங்கில அரசு இரட்டை வாக்குரிமை வழங்கியது.

4. இரண்டாம் வட்டமேசை மாநாடு தொடர்பாக அம்பேத்கர் மற்றும் காந்தியடிகள் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது.

119) பொருத்துக

அ. குறிக்கோள் – 1. Agreement

ஆ. நம்பிக்கை – 2. Doctorate

இ. முனைவர் பட்டம் – 3. Confidence

ஈ. ஒப்பந்தம் – 4. Objective

A) 4, 3, 2, 1

B) 1, 2, 3, 4

C) 4, 2, 3, 1

D) 4, 1, 2, 3

விளக்கம்: குறிக்கோள் – Objective

நம்பிக்கை – Confidence

முனைவர் பட்டம் – Doctorate

ஒப்பந்தம் – Agreement

120) இரட்டை வாக்குரிமை என்பதன் ஆங்கில மொழியாக்கம் என்ன?

A) Doubel Vote

B) Double Voting

C) Dual Vote

D) Dual Voting

விளக்கம்: இரட்டை வாக்குரிமை என்பதன் ஆங்கில மொழியாக்கம் – Double Voting

121) அம்பேத்கர் எங்கு தனது பள்ளிப் படிப்பை தொடங்கினார்?

A) அம்பவாதே

B) இரத்தினகிரி

C) சதாரா

D) பூனே

விளக்கம்: விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பின்னர் பொறுப்பேற்ற அம்பேத்கர் தனது பள்ளிப் படிப்பை சதாராவில் தொடங்கினார்.

122) வட்ட மேசை மாநாடு என்பதன் ஆங்கில மொழியாக்கம் என்ன?

A) Round Table Conference

B) Round Table Meeting

C) Round Table Discussion

D) Round Table Meet

விளக்கம்: வட்ட மேசை மாநாடு என்பதன் ஆங்கில மொழியாக்கம் – Round Table Conference என்பதாகும். வட்ட மேசை மாநாடு இலண்டனில் நடைபெற்றது.

முதல் வட்ட மேசை மாநாடு – 1930

இரண்டாம் வட்ட மேசை மாநாடு – 1931

மூன்றாம் வட்ட மேசை மாநாடு – 1932

123) முதல் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர் யார்?

A) இராஜாஜி

B) இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசன்

C) சத்தியமூர்த்தி

D) தந்தை பெரியார்

விளக்கம்: இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.

124) கூற்றுகளை ஆராய்க.

1. அம்பேத்கர் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்தவில்லை.

2. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகாரம் கிடைக்கப் போராட வேண்டும் என்று முடிவுசெய்த அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. அம்பேத்கர் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.

2. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகாரம் கிடைக்கப் போராட வேண்டும் என்று முடிவுசெய்த அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை நிறுவினார்.

125) இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்?

A) இராஜேந்திரப் பிரசாத்

B) அம்பேத்கர்

C) ஜவஹர்லால் நேரு

D) இராதாகிருஷ்ணன்

விளக்கம்: விடுதலை இந்தியாவில் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். .

126) எப்போது அரசியல் நிர்ணய மன்றம் அரசியலமைப்புச் சட்டத்தை எழுத தீர்மானம் நிறைவேற்றியது?

A) 1947 ஆகஸ்டு 15

B) 1947 ஆகஸ்டு 27

C) 1947 ஆகஸ்டு 29

D) 1947 ஆகஸ்டு 14

விளக்கம்: 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.

127) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) நிறை – மேன்மை

B) அழுக்காறு – தூய்மையின்மை

C) பொறை – பொறுமை

D) மதம் – கொள்கை

விளக்கம்: நிறை – மேன்மை

அழுக்காறு – பொறாமை

பொறை – பொறுமை

மதம் – கொள்கை.

128) கீழ்க்கண்ட யார் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம்பெறவில்லை?

A) கோபால்சாமி

B) அல்லாடி கிருஷ்ணமூர்த்தி

C) கே.எம். முன்ஷி

D) இராஜேந்திர பிரசாத்

விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள்.

1. கோபால்சாமி

2. அல்லாடி கிருஷ்ணமூர்த்தி

3. கே.எம். முன்ஷி

4. சையது முகமது சாதுல்லா

5. மாதவராவ்

6. டி.பி. கைத்தான்

7. அம்பேத்கர்.

இதில் ரஜேந்திரபிரசாத் இடம்பெறவில்லை. அவர் அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

129) அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு எப்போது தனது அறிக்கையை சமர்ப்பித்தது?

A) 1948 பிப்ரவரி 21

B) 1948 ஜனவரி 22

C) 1948 ஜனவரி 23

D) 1947 டிசம்பர் 26

விளக்கம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 1948 பிப்ரவரி 21ல் சமர்பித்தது.

130) கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

A) மாடுகள் தமது தலையை ஆட்டின

B) கன்று தனது தலையை ஆட்டியது.

C) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்

D) மாணவன் தமது கையால் பெற்றுக் கொண்டான்.

விளக்கம்: தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது – ஒருமைத் தொடர்

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது – பன்மைப் தொடர்

மேற்கண்ட தொடரில் தவறான தொடர் – மாணவன் தமது கையால் பெற்றுக் கொண்டான்.

மாணவன் தனது கையால் பரிசு பெற்றுக் கொண்டான் என்பதே சரி. மாணவன் என்பது ஒருமை. எனவே தனது என்று தான் வர வேண்டும். மாணவர்கள் என்று வந்தால், தமது என்று பன்மையாக குறிப்பிடலாம்.

தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார். இங்கு தலைவர் என்பது ஒருமை. எனவே தனது என்று தான் வரவேண்டும். ஆனால் அவ்வாறு குறிப்பிடுவது தவறு. மரியாதைப் பன்மையாக தமது என்று பயனபடுத்துவதே சரி.

131) உவமையை மட்டும் கூறி அதன்மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது__________அணி?

A) உவமை அணி

B) இல்பொருள் உவமை அணி

C) பிறிது மொழிதல் அணி

D) வேற்றுமை அணி

விளக்கம்: உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.

132) முதலாவது வட்ட மேசை மாநாடு 1930ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் கீழ்க்கண்ட எதன் சார்பாக கலந்து கொண்டார்?

A) தமிழகம்

B) இந்திய அரசு

C) ஒடுக்கப்பட்டோர்

D) பிற்படுத்தப்பட்டோர்

விளக்கம்: இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் கலந்துகொண்டார்.

133) அம்பேத்கரால் தொடங்கப்பட்ட இதழ் எது?

A) ஒடுக்கப்பட்ட பாரதம்

B) குடியரசு

C) சமத்துவ பாரதம்

D) விடுதலை

விளக்கம்: அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார். இவர் ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927ஆம் ஆண்டு தொடங்கினார்.

134) கூற்று: அம்பேத்கர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

காரணம்: சமத்துவ சமுதாயத்தை அமைத்தல் என்பது இதன் நோக்கமாகும்

காரணம்: இவர் ஏழ்மையான குடும்பத்தில் 14-வது பிள்ளையாகப் பிறந்தார்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: அம்பேத்கர் சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

135) எந்த ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார் அம்பேத்கர்?

A) 1927

B) 1924

C) 1930

D) 1934

விளக்கம்: அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார். இவர் 1930ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.

136) கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாவாயும் ஓடா நிலத்து – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?

A) உவமை அணி

B) இல்பொருள் உவமை அணி

C) பிறிது மொழிதல் அணி

D) வேற்றுமை அணி

விளக்கம்: இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி பிறிது மொழிதல் அணியாகும். நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது என்று உவமையை மட்டும் கூறுகிறது. இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும். தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்தை நாம் உணர்ந்துகொள்கிறோம். எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.

137) இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது எந்த அணி?

A) உவமை அணி

B) இல்பொருள் உவமை அணி

C) பிறிது மொழிதல் அணி

D) வேற்றுமை அணி

விளக்கம்: இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி ஆகும்.

138) அம்பேத்கர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) இவர் 1891 டிசம்பர் 6ஆம் நாள் பிறந்தார்

B) இவரின் பெற்றோர் ராம்ஜி சக்பால்-பீமாபாய்

C) 14-வது குழந்தையாக அம்பேத்கர் பிறந்தார்

D) இவர் பிறந்த ஊர் இரத்தினகிரி மாவட்டத்திலுள்ள அம்பவாதே என்பதாகும்.

விளக்கம்: அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் ராம்ஜி சக்பால்-பீமாபாய் இணையாருக்குப் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இவரது ஊர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பவர்தே என்பதாகும். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

139) கீழ்க்கண்டவற்றில் எந்த நூலை மு.மேத்தா எழுதவில்லை?

A) சோழநிலா

B) மகுடநிலா

C) நகர்வலம்

D) ஆகாயத்துக்கு அடுத்த வீடு

விளக்கம்: மு.மேத்தா எழுதிய நூல்கள்:

1. கண்ணீர்ப் பூக்கள்

2. ஊர்வலம்

3. சோழநிலா

4. மகுடநிலா

5. ஆகாயத்துக்கு அடுத்த வீடு

140) ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது________எனப்படும்.

A) சிலேடை

B) பிறிதுமொழிதல் அணி

C) வேற்றுமை அணி

D) உவமை அணி

விளக்கம்: ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் எனப்படும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.

141) பிறிதுமொழிதல் அணியில்__________மட்டும் இடம்பெறும்?

A) உவமை

B) உவமேயம்

C) தொடை

D) சந்தம்

விளக்கம்: உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும். எனவே பிறிதுமொழிதல் அணியில் உவமை மட்டும் இருக்கும்.

142) கூற்றுகளை ஆராய்க.

1. இந்தியாவிற்கு அரசியல் நிர்ணய சபை அமைப்பது பற்றி முடிவு செய்ய 1930ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது.

2. முதலாவது வட்டமேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டை மலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது.

2. முதலாவது வட்டமேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டை மலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.

143) கூற்றுகளை ஆராய்க.

1. அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்க்க சமாஜ் சமாத சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்

2. அம்பேத்கர் 1930 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழைத் தொடங்கினார்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. அம்பேத்கர் சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் சமாஜ் சமாத சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்

2. அம்பேத்கர் 1927 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழைத் தொடங்கினார்.

144) கீழ்க்கண்ட சொற்றொடரில் சரியானது எது?

A) தலைவர் தனது கையால் பரிசு வழங்கினார்

B) மாணவன் தனது கையால் பரிசு பெற்றுக் கொண்டான்

C) தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

D) தமக்கு எதுவும் நடக்காது என்று இராமன் கூறினார்

விளக்கம்: தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது – ஒருமைத் தொடர்

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது – பன்மைப் தொடர்

மேற்கண்ட தொடரில் சரியான தொடர் – மாணவன் தனது கையால் பரிசு பெற்றுக் கொண்டான்.

தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார். இங்கு தலைவர் என்பது ஒருமை. எனவே தனது என்று தான் வரவேண்டும். ஆனால் அவ்வாறு குறிப்பிடுவது தவறு. மரியாதைப் பன்மையாக தமது என்று பயன்படுத்துவதே சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin