General Tamil

8th Tamil Unit 7 Questions

8th Tamil Unit 7 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 8th Tamil Unit 7 Questions With Answers Uploaded Below.

1) நான் இதுவரை போரைக் கண்டதில்லை. ஆனால் அதியமான் பல போர்களை நடத்தி வெற்றி கண்டவன் என்று கூறியவர்?

A) ஒளவையார்

B) தொண்டைமான்

C) இராசராசன்

D) விக்கிரமசோழன்

விளக்கம்: நான் இதுவரை போரைக் கண்டதில்லை. ஆனால் அதியமான் பல போர்களை நடத்தி வெற்றி கண்டவன் என்று அதியமானிடமிருந்து தூது வந்த ஒளவையிடம் தொண்டைமான் கூறினார்.

2) செயங்கொண்டார் எந்த ஊரினைச் சார்ந்தவர்?

A) தீபங்குடி

B) திருப்பத்தூர்

C) மருதூர்

D) எட்டையபுரம்

விளக்கம்: செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர். இவர் கலிங்கத்துப்பரணி என்னும் நூலை எழுதியுள்ளார். பரணி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.

3) எதுகொல் இது மாயை ஒன்றுகொல்

எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மறலி என்ற சொல்லின் பொருள்?

A) வீரர்

B) காலன்

C) கலிங்கர்

D) சோழர்

விளக்கம்: மறலி என்றால் காலன் என்று பொருள். சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர். இது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர். தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணினர்.

4) சிங்கம் வாழுமிடத்திற்கு பொருத்தமானது எது?

A) மாயை

B) ஊழி

C) முழை

D) அலை

விளக்கம்: சிங்கம் முழையில் வாழும். முழை என்றால் மலைக்குகை என்று பொருள். பிலம் என்ற சொல்லின் பொருளும் மலைக்குகை.

5) கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு எது?

A) வீரம்

B) அச்சம்

C) நாணம்

D) மகிழ்ச்சி

விளக்கம்: கலிங்க வீரர்களிடையே அச்சம் என்னும் உணர்வு தோன்றி போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஓடினர் என்று செயங்கொண்டார் தம் நூலான கலிங்கத்துப் பரணியில் குறிப்பிட்டுள்ளார்.

6) வெங்கரி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) வெம் + கரி

B) வெம்மை + கரி

C) வெண் + கரி

D) வெங் + கரி

விளக்கம்: வெங்கரி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது வெம்மை + கரி. பண்புப் பெயர் புணர்ச்சி விதிப்படி, வெம்மை + கரி என்னும் சொல்லை வெங்கரி என சேர்த்து எழுதலாம்.

7) என்றிருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) என் + இருள்

B) எட்டு + இருள்

C) என்ற + இருள்

D) என்று + இருள்

விளக்கம்:என்றிருள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்று + இருள் ஆகும்.

8) போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) போன்றன

B) போலன்றன

C) போலுடன்றன

D) போல்உடன்றன

விளக்கம்:போல் + உடன்றன என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது போலுடன்றன. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து ல். வருமொழியின் முதல் எழுத்து உ. உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ல் + உ = லு எனப் புணர்ந்து போலுடன்றன என கிடைக்கும்.

9) சீவனில் லாமல்

மொத்தமாய்த் தேசத்தை

முற்றுகையிட்ட

மூட மூட

நிர் மூட உறக்கத்தை_______இவ்வரியில் சீவன் என்று குறிப்பிடப்படும் சொல்லின் பொருள் என்ன?

A) உண்மை

B) உலகம்

C) சிவபெருமான்

D) உயிர்

விளக்கம்: இவ்வரிகளில் சீவன் என்று குறிப்பிடப்படுவது உயிர் ஆகும். நம் நாடு ஆங்கிலேயருக்கு கீழ் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்ததை மீரா தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

10) இதந்தரும் இந்தச்

சுதந்திர நாளைச்

சொந்தம் கொண்டாடத்

தந்த பூமியைத்

தமிழால் வணங்குவோம் என்று பாடியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) மு.வ

D) மீரா

விளக்கம்: இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம் என்று பாடியவர் மீரா.

11) வானில் முழுநிலவு அழகாகத்__________அளித்தது?

A) தயவு

B) தரிசனம்

C) துணிவு

D) தயக்கம்

விளக்கம்: வானில் முழுநிலவு அழகாகத் தரிசனம் அளித்தது. தரிசனம் என்றால் காட்சி என்று பொருள்.

12) இந்த___________முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

A) வையம்

B) வானம்

C) ஆழி

D) கானகம்

விளக்கம்: இந்த வையம் முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு. வையம் என்றால் உலகம் என்று பொருள்.

13) ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) சீவ + நில்லாமல்

B) சீவன் + நில்லாமல்

C) சீவன் + இல்லாமல்

D) சீவ + இல்லாமல்

விளக்கம்: சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது சீவன் + இல்லாமல் என்பதாகும்.

14) எதுகொல் இது மாயை ஒன்றுகொல்

எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் ஊழியின் கடை என்ற சொல்லின் பொருள்?

A) நல்லகாலம்

B) இறுதிகாலம்

C) போர் காலம்

D) உழைக்கத் தகுந்த காலம்

விளக்கம்: ஊழியின் கடை என்றால் இறுதிகாலம் என்று பொருள். சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர். இது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனே என அஞ்சினர். தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணினர்.

15) ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) விலம் + கொடித்து

B) விலம் + ஒடித்து

C) விலன் + ஒடித்து

D) விலங்கு + ஒடித்து

விளக்கம்: விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது விலங்கு + ஒடித்து ஆகும்.

16) எம்.ஜி.ஆர் எப்போது பிறந்தார்?

A) 1917 ஜனவரி 17

B) 1910 ஜனவரி 17

C) 1918 ஜனவரி 17

D) 1915 ஜனவரி 17

விளக்கம்: எம்.ஜி.ஆர் 1917 ஜனவரி 17-ஆம் இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்தார். இவரின் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

17) காளியாய்ச் சீறிக்

கைவிலங் கொடித்து

பகையைத் துடைத்து

சத்திய நெஞ்சின்

சபதம் முடித்து

கூந்தல் முடித்துக்

குங்குமப் பொட்டு வைத்து

ஆனந்த தரிசனம்

அளித்து நின்றது – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) ஆங்கிலேயர்கள்

B) மீரா

C) இந்தியா

D) பாரத அன்னை

விளக்கம்: அடிமையாய் தவித்துக் கொண்டிருந்து இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று என்று பாரத அன்னையை தன் பாடலில் கூறியுள்ளார் மீரா.

18) வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி – இவ்வரிகளில் கரி என்ற சொல்லின் பொருள்?

A) யானை

B) குதிரை

C) கருமை நிறம்

D) ஊண்

விளக்கம்: கரி என்றால் யானையைக் குறிக்கும். வேழம் என்றாலும் யானை ஆகும்.

களிறு – ஆண் யானை

பிடி – பெண் யானை

19) காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) காட்டைஎரித்து

B) காட்டையெரித்து

C) காடுஎரித்து

D) காடுயெரித்து

விளக்கம்: காட்டை + எரித்து என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – காட்டையெரித்து. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து டை. வருமொழியின் முதல் எழுத்து எ. டை என்னும் எழுத்தை பிரித்தால் டை = ட் + ஐ.

காட் + ட் + எரித்து (உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்)

கட்டையெரித்து (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)

20) இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) இதந்தரும்

B) இதம்தரும்

C) இதத்தரும்

D) இதைத்தரும்

விளக்கம்: இதம் + தரும் என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இதந்தரும்..

21) இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்

இருவர் ஒருவழி போகல் இன்றியே – இவ்வரிகளில் தூறு என்ற சொல்லின் பொருள்?

A) மழைச்சாரல்

B) யானைக் கூட்டம்

C) புதர்

D) காலன்

விளக்கம்: தூறு என்றால் புதர் என்று பொருள். கலிங்கர்களுக்கு எதிரான போரில் சோழர்களின் படையைப் பார்த்து அஞ்சி கலிங்கர்கள் எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

22) முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட அந்நிய இருட்டின் அரக்கக் கூத்து முடிந்தது – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) மன்னர்கள்

B) இந்திய மக்கள்

C) ஆங்கிலேயர்கள்

D) இந்திய அரசு

விளக்கம்: முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்று ஆங்கிலேயர்களின் ஆட்சி பற்றி மீரா குறிப்பிடுகிறார்.

23) பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத்திட்டமாக மாற்றியவர்?

A) காமராசர்

B) அண்ணாதுரை

C) எம்.ஜி ராமச்சந்திரன்

D) கலைஞர் மு. கருணாநிதி

விளக்கம்: பள்ளிக்குழந்தைகளுக்குக் காய்கறிகள், பருப்பு முதலியவற்றுடன் கூடிய உணவு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை சத்துணவுத் திட்டம் என அழைக்கப்படும் என்ற அறிவித்தார் எம்.ஜி. ராமச்சந்திரன். காமராசர் தான் மதிய உணவுத்திட்டத்தை தொடங்கினார்.

மதிய உணவுத்திட்டம் – காமராசர்

சத்துணவுத்திட்டம் – எம்.ஜி.ஆர்.

24) கூற்று: மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் – எம்.ஜி. ஆர்

காரணம்: பள்ளிகளில் பசியுடன் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் எம்.ஜி. ராமச்சந்திரன்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காணரம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

விளக்கம்: மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் – எம்.ஜி. ஆர். காரணம் தாம் ஏற்று நடித்த கதைமாந்தர்கள் மூலம் ஏழை, எளியோர், உழவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்கு உரிய கருத்துக்களை எடுத்துரைத்தார்.

25) மூச்சுக் காற்றை

மோகித்து நுழைத்து

புரட்சிப்

புல்லாங் குழலில்

பூபாளம் இசைத்தது

எந்த நாளோ

அந்த நாள் இது – இதில் மோகித்து என்ற சொல்லின் பொருள்.

A) சுவாசித்து

B) உயிர்பெற்று

C) சூளுரைத்து

D) விரும்பி

விளக்கம்: மோகித்து என்னும் சொல்லின் பொருள் விரும்பி. இப்பாடல் வரிகள் சுதந்திரம் பற்றிய மீராவின் வரிகள் ஆகும்.

26) எம்.ஜி. ராமச்சந்திரனுக்குப் பொருந்தாதது எது?

A) நடிகர்

B) தயாரிப்பாளர்

C) இயக்குநர்

D) கதையாசிரியர்

விளக்கம்: எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் அறியப்படும் எம்.ஜி. ராமச்சந்திரன் திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கினார்.

27) எம்.ஜி.ஆரின் பெற்றோர் யார்?

A) கோபாலன்-சந்தியா

B) கோபாலன்-சத்தியபாமா

C) இராசாராம்-சந்தியா

D) இராசாராம்-சந்தியபாமா

விளக்கம்: எம்.ஜி.ஆர்-ன் பெற்றோர் கோபாலன்-சத்தியபாமா ஆவார்கள். இவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இலங்கையில் குடிபெயர்ந்தனர்.

28) எம்.ஜி.ஆர்__________என்னும் ஊரில் கல்வி பயின்றார்?

A) கண்டி

B) கும்பகோணம்

C) சென்னை

D) மதுரை

விளக்கம்: எம்.ஜி.ஆர்-ன் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இலங்கையில் குடிபெயர்ந்த வாழ்ந்து வந்தார்கள். பின் தமிழகத்தின் கும்பகோணத்தில் குடியேனார்கள். கும்பகோணத்திலுள்ள ஆனையடிப் பள்ளியில் பயின்றார்.

29) அரக்கக் கூத்து

முடிந்தது என்று

முழங்கி நின்றது

எந்த நாளோ

அந்த நாள் இது. இவ்வரிகளில் அந்த நாள் என்று குறிப்பிடப்படுவது?

A) 1950 ஜனவரி 26

B) 1942 ஆகஸ்ட் 08

C) 1930 ஜனவரி 26

D) 1947 ஆகஸ்ட் 15

விளக்கம்: மேற்கண்ட பாடலில் அந்த நாள் என்று மீரா குறிப்பிடுவது ஆகஸ்ட் 15, 1947 ஆகும். இவ்வரிகள் சுதந்திரம் பற்றிய மீராவின் பாடலாகும்.

30) எம்.ஜி.ஆர்-க்கு எப்போது இந்திய மாமணி பட்டம் வழங்கப்பட்டது?

A) 1987

B) 1988

C) 1989

D) 1990

விளக்கம்: இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988-ஆம் எம்.ஜி.ஆர்-க்கு வழங்கிப் பெருமைப்படுத்தியது. அம்பேத்கருக்கு 1990-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

31) வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி

மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம் – இவ்வரிகளில் பிலம் என்ற சொல்லின் பொருள்?

A) புதர்

B) நெருங்குதல்

C) யானை

D) மலைக்குகை

விளக்கம்: பிலம் என்றால் என்றால் மலைக்குகையைக் குறிக்கும். கலிங்க நாட்டிற்கு எதிரான போரில் சோழர்களின் படையைக் கண்டு கலிங்கர்கள் எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

32) எம்.ஜி.ஆர்-க்கு எந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது?

A) அண்ணா பல்கலைக்கழகம்

B) அண்ணாமலை பல்லைக்கழகம்

C) இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னை

D) சென்னைப் பல்கலைக்கழகம்

விளக்கம்: சென்னைப் பல்கலைக் கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.

33) எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் என்ன?

A) நடிப்பு ஆர்வம்

B) பள்ளி இல்லாமை

C) குடும்ப வறுமை

D) படிப்பில் ஆர்வமில்லை

விளக்கம்: எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் குடும்ப வறுமை. இதன் காரணமாகவே அவர் முதலமைச்சர் ஆனதும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அரும்பாடுபட்டார். உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டம், ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம், தாய்சேய் நல இல்லங்கள், பற்பொடி வழங்கும்திட்டம், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை வழங்கினார்.

34) சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கீந் தனையே – என்று பாடியவர் யார்?

A) அதியமான்

B) ஒளவையார்

C) தொண்டைமான்

D) கபிலர்

விளக்கம்: கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நீண்ட நாள் நோயின்றி வாழ வைக்கும் அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவைக்கு வழங்கினார். அதனை பெற்ற ஒளவையார் மனம் மகிழ்ந்து மேற்கண்ட வரிகளை பாடினார்.

35) கலிங்கத்தப் பரணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இது 96 வகை சிற்றிலங்கியங்களில் ஒன்றாகும்.

2. தமிழில் தோன்றிய முதல் பரணி இதுவே.

3. கலித்தாழிசையால் இயற்றப்பட்டது

4. 499 தாழிசைகள் கொண்டது.

A) 1, 3 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இது 96 வகை சிற்றிலங்கியங்களில் ஒன்றாகும்.

2. தமிழில் தோன்றிய முதல் பரணி இதுவே.

3. கலித்தாழிசையால் இயற்றப்பட்டது

4. 599 தாழிசைகள் கொண்டது.

36) மீரா நடத்திய இதழ்?

A) குடியரசு

B) இந்தியா

C) அன்னம் விடு தூது

D) முல்லை

விளக்கம்: மீரா நடத்திய இதழ் – அன்னம் விடு தூது.

குடியரசு – பெரியார்

இந்தியா – பாரதியார்

முல்லை – கண்ணதாசன்

37) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.

2. எல்லா இடங்களிலும் வல்லின மெய்எழுத்து மிகும்.

3. வல்லின மெய்எழுத்துக்களை சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பது தான்.

4. செய்திகளில் கருத்துபிழையோ, பெர்ருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கு வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.

A) 1, 2, 4 சரி

B) 1, 4 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.

2. எல்லா இடங்களிலும் வல்லின மெய்எழுத்து மிகாது

3. வல்லின மெய்எழுத்துக்களை சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமன்று

4. செய்திகளில் கருத்துபிழையோ, பெர்ருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கு வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.

38) அருவர் வருவர் எனா இறைஞ்சினர்

அபயம் அபயம் எனநடுங்கியே – இதில் அருவர் என்று குறிப்பிடப்படுபவர்?

A) சோழர்கள்

B) கலிங்கர்கள்

C) தமிழர்கள்

D) சேரர்கள்

விளக்கம்: அருவர் என்றால் தமிழர்கள் என்று பொருள். கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர். தஞ்சம் வேண்டி வணங்கினர்.

39) சுதந்திரம் பற்றிய மீராவின் பாடல் அவரது எந்த நூலில் இருந்து தரப்பட்டது?

A) அன்னம் விடு தூது

B) குக்கூ

C) மூன்றும் ஆறும்

D) கோடையும் வசந்தமும்

விளக்கம்: இந்திய சுதந்திரம் பற்றிய மீராவின் பாடல் அவரின் நூல்களில் ஒன்றான கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து தரப்பட்டுள்ளது.

40) கூற்று: பொன்மனச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர்

காரணம்: பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கினார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காணரம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: பொன்மனச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர். காரணம் பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கினார். தன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் இந்தியப் படைவீரர் நலச்சங்கத்திற்கு கடனாகப் பணத்தை பெற்று கொடை வழங்கினார்.

41) தமிழின்மீது நீ கொண்டுள்ள பற்று என் உள்ளத்தை உருகச் செய்கிறது. உன்னைப் புகழ முடியாமல் என் தமிழே தடுமாறுகிறது. இதில் குறிப்பிடப்படுபவர்?

A) முருகன்

B) கபிலர்

C) ஒளவையார்

D) அதியமான்

விளக்கம்: அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவைக்கு வழங்கினார் அதிமான். அதனை உண்டு மகிழ்ந்த ஒளவையார் தமிழின்மீது நீ; கொண்டுள்ள பற்று என் உள்ளத்தை உருகச் செய்கிறது. உன்னைப் புகழ முடியாமல் என் தமிழே தடுமாறுகிறது என்று கூறினார்.

42) வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்

2. எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்

3. இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.

4. எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகும்

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்

2. எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்

3. இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.

4. எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.

43) இந்திய அரசு மிகச்சிறந்த நடிகர் என்ற வகையில் எம்.ஜி.ஆர்-க்கு வழங்கிய விருது?

A) பாரதரத்னா

B) தாதாசாகிப் பால்கே

C) பாரத்

D) பத்ம ஸ்ரீ

விளக்கம்: திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கினார் எம்.ஜி.ஆர். இவருக்கு இந்திய அரசு மிகச்சிறந்த நடிகருக்கு வழங்கப்படும் பாரத் என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

44) முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்

முதுகு செயும்உப காரம் என்பரே – இதில் முழைகள் என்று குறிப்பிடப்படுவது?

A) புதர்கள்

B) வழிகள்

C) மலைக்குகை

D) வணங்குதல்

விளக்கம்: முழைகள் என்றால் மலைக்குகை என்று பொருள். சோழ மன்னின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின. அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர். ஏனையோர் புறமுதுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.

45) மீராவின் நூல்களில் பொருந்தாதது?

A) ஊசிகள்

B) குக்கூ

C) வா இந்தப் பக்கம்

D) அன்னம் விடு தூது

விளக்கம்: அன்னம் விடு தூது என்பது அவர் நடத்திய இதழ். மீராவின் நூல்கள்.

1. ஊசிகள்

2. குக்கூ

3. மூன்றும் ஆறும்

4. வா இந்தப்பக்கம்

5. கோடையும் வசந்தமும்

46) எந்த வேற்றுமை உருபு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்?

A) இரண்டாம் வேற்றுமை உருபு

B) நான்காம் வேற்றுமை உருபு

C) மூன்றாம் வேற்றுமை உருபு

D) A மற்றும் B

விளக்கம்: இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்

நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.

47) மலர்ப்பாதம் என்ற சொல்லின் இலக்கண குறிப்பு?

A) எண்ணும்மை

B) உவமைத்தொகை

C) உம்மைத்தொகை

D) பெயரெச்சம்

விளக்கம்: மலர்ப்பாதம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு – உவமைத்தொகை. இதனை மலர்போன்ற பாதம் என்று பொருள் கொள்ள வேண்டும். இரு சொற்களுக்கு இடையில் போன்ற என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது. எனவே இதன் இலக்கணக் குறிப்பு உவமைத்தொகை.

48) என்னைப் போன்ற ஓர் அரசன் இல்லையானால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது -இக்கூற்றை யார் யாரிடம் கூறினார்.

A) ஒளவையார், அதியமான்

B) அதியமான், ஒளவையார்

C) ஒளவையார், கபிலர்

D) அதியமான், தொண்டைமான்

விளக்கம்: அரிய நெல்லிக்கனியை ஒளவையிடம் வழங்கிய அதியமான், ஒளவையிடம், என்னைப் போன்ற ஓர் அரசன் இல்லையானால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது என்று கூறினார்.

49) எம்.ஜி.ஆர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவரின் பெற்றோர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்

2. பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர்.

3. எம்.ஜி.ஆர் இலங்கையிலுள்ள கண்டியில் 1917 ஜனவரி திங்கள் 17-ஆம் நாள் ஐந்தாவது மகனாகப் பிறந்தார்

4. இவரின் பெற்றோர்: கோபாலன்-சத்தியபாமா

A) 1, 2, 3 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இவரின் பெற்றோர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்

2. பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர்.

3. எம்.ஜி.ஆர் இலங்கையிலுள்ள கண்டியில் 1917 ஜனவரி திங்கள் 17-ஆம் நாள் ஐந்தாவது மகனாகப் பிறந்தார்

4. இவரின் பெற்றோர்: கோபாலன்-சத்தியபாமா

50) எம்.ஜி.ஆரின் தாயார், குழந்தைகளுடன் தமிழ்நாட்டிற்கு வந்து எங்கு குடியேறினார்?

A) மயிலாடுதுறை

B) சென்னை

C) சிதம்பரம்

D) கும்பகோணம்

விளக்கம்: கோபாலன்-சத்தியபாமா இணையாருக்கும் ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர் பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து கும்பகோணத்தில் குடியேறினார்.

51) அதியமானிடம் போர் செய்வதாக அறிவித்த மன்னன் யார்?

A) அரிமர்த்தனர்

B) தொண்டைமான்

C) குலோத்துங்கன்

D) இரசேந்திரன்

விளக்கம்: மன்னன் தொண்டைமான் அதியமானிடம் போர் செய்வதாக அறிவித்தார். இதனை ஒற்றர் மூலம் அறிந்த அதியமான் நம்மீது போர் மேகங்கள் சூழ்ந்தவிட்டன என்று ஒளவையிடம் கூறினார்.

52) அதியமான் போர் கண்டு அஞ்சக்காரணம்?

A) போதிய ஆயுதங்கள் இல்லை

B) போதிய இராணுவ வீரர்கள் இல்லை

C) தொண்டைமானின் வீரம்

D) போரில் உயிர்கள் மடிதல்

விளக்கம்: ஒவ்வொரு போரின் போதும் எவ்வளவு உயிரிழப்புகள்? எவ்வளவு அழிவு? தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தம்பி தங்கைகள் என எத்தனையோ பேரின் கண்ணீர் ஒவ்வொரு போர் வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது என்று போரில் உயிர்மடிவதை எண்ணி அதியமான் போரை தவிர்க்க முற்பட்டார்.

53) மலைக்குகை என்று பொருள் தரும் சொல் எது?

A) பிலம்

B) தூறு

C) முழை

D) A மற்றும் C

விளக்கம்: பிலம் – மலைக்குகை

முழை – மலைக்குகை

தூறு – புதர்

54) வாய்ப்பவளம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?

A) உவமைத்தொகை

B) எண்ணும்மை

C) வினையெச்சம்

D) உருவகம்

விளக்கம்: வாயப்பவளம் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு உருவகம். இங்கு வாய் பவளத்திற்கு ஒப்பாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

55) உகரத்தில் முடியும் வினையெச்சங்கள்____________குற்றியலுகரமாக இருந்தால் மட்டுமே வல்லினம் மிகும்.

A) நெடில்தொடர்

B) மென்தொடர்

C) இடைத்தொடர்

D) வன்தொடர்

விளக்கம்: உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும். (எ.கா) பெற்றுக் கொண்டேன், படித்துப்பார்த்தார்.

56) தமிழக அரசு எம்.ஜி.ஆர்-ன் நினைவைப்போற்றும் வகையில் அவருக்கு செய்துள்ள பணி?

A) பாரத ரத்னா

B) பாரத் பட்டம்

C) டாக்டர் பட்டம்

D) எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்

விளக்கம்: தமிழக அரசு அவரது நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தை சென்னையில் நிறுவியுள்ளது.

57) கலிங்கத்துப்பரணியில் யாருடைய போர் பற்றி பேசப்பட்டுள்ளது?

A) முதல் குலோத்துங்கச் சோழன்

B) கருணாகரத் தொண்டைமான்

C) A மற்றும் B

D) இரண்டாம் குலோத்தங்கன்

விளக்கம்: கலிங்கத்துப்பரணியில் முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது.

58) செல்லாக்காசு என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?

A) பெயரெச்சம்

B) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

C) வினையெச்சம்

D) எதிர்மறை வினையெச்சம்

விளக்கம்: செல்லாக் காசு என்ற சொல்லின் பொருள் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும்.

59) பொருத்துக.

அ. மறலி – 1. யானை

ஆ. கரி – 2. காலன்

இ. அருவர் – 3. புதர்

ஈ. தூறு – 4. தமிழர்

A) 2, 1, 3, 4

B) 2, 1, 4, 3

C) 4, 3, 1, 2

D) 4, 1, 2, 3

விளக்கம்: மறலி – காலன்

கரி – யானை

அருவர் – தமிழர்

தூறு – புதர்

60) எந்த பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

A) சென்னை

B) மதுரை

C) கோவை

D) A மற்றும் B

விளக்கம்: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017-2018) தமிழக அரசால் சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

61) கூற்றுகளை ஆராய்க.

1. நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்

2. இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்

3. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்

4. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வரும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்

2. இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்

3. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்

4. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வரும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

62) ஈரத்திலும் வீரத்திலும் உனக்கு இணைசொல்ல யாருண்டு? என்ற கூற்றில் குறிப்பிடப்படுபவர்?

A) ஒளவையார்

B) இரண்டாம் குலோத்துங்கன்

C) அதியமான்

D) தொண்டைமான்

விளக்கம்: தொண்டைமானின் போர் அறிவிப்பின் போது, ஒளவையார், ஈரத்திலும் வீரத்திலும் உனக்கு இணைசொல்ல யாருண்டு? என்று அதியமானை பார்த்து கூறிய வரிகளே இவை.

63) கூற்றுகளை ஆராய்க.

1. செயங்கொண்டார் கலிகத்துப்பரணியை இயற்றினார்

2. இவர் தீர்த்தகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர்

3. பரணிக்கோர் செயங்கொண்டார் – ஒட்டக்கூத்தர்

4. தென்தமிழ் தெய்வப்பரணி – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

A) 1, 3, 4 சரி

B) 1, 2, 3 சரி

C) 1 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. செயங்கொண்டார் கலிகத்துப்பரணியை இயற்றினார்

2. இவர் தீபங்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்

3. பரணிக்கோர் செயங்கொண்டார் – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

4. தென்தமிழ் தெய்வப்பரணி – ஒட்டக்கூத்தர்

64) தவறான ஒன்றை தெரிவு செய்க (வல்லினம் மிகும், மிகா இடங்கள் பற்றிய கூற்றில்)

A) தாய்தந்தை

B) வெற்றிலைப்பாக்கு

C) செய்துபார்த்தாள்

D) தின்று தீர்த்தான்

விளக்கம்: மேற்கண்ட சொற்களில் தவறானது வெற்றிலைப்பாக்கு. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

65) பொருத்துக.

அ. உடன்றன – 1. மலைக்குகை

ஆ. வழிவர் – 2. நெருங்குதல்

இ. பிலம் – 3. சினந்து எழுந்தன

ஈ. மண்டுதல் – 4. நழுவி ஓடுவர்

A) 3, 4, 2, 1

B) 3, 1, 2, 4

C) 3, 2, 1, 4

D) 3, 4, 1, 2

விளக்கம்: உடன்றன – சினந்து எழுந்தன

வழிவர் – நழுவி ஓடுவர்

பிலம் – மலைக்குகை

மண்டுதல் – நெருங்குதல்

66) செயங்கொண்டார் யாருடைய அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார்?

A) முதற்குலோத்துங்கச் சோழன்

B) சடையப்ப வள்ளல்

C) இரண்டாம் குலோத்துங்கச் சோழன்

D) அரிமர்த்தன பாண்டியன்

விளக்கம்: செயங்கொண்டார் முதற்குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவராக திகழ்ந்தார்.

சடையப்ப வள்ளல் – கம்பர்

அரிமர்த்தன பாண்டியன் – மாணிக்க வாசகர்

ஒட்டக்கூத்தர் – விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இராசராசன்.

67) கூற்றுகளை ஆராய்க.

1. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்

2. உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்

3. உருவகத்தில் வல்லினம் மிகும்

4. வினைத்தொகையில் வல்லினம் மிகும்.

A) 2, 4 தவறு

B) 1, 3 தவறு

C) 1, 4 தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்

2. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது

3. உருவகத்தில் வல்லினம் மிகும்

4. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

68) கலிங்கத்துப் பரணியை தென்தமிழ்த் தெய்வ பரணி என்ற புகழ்ந்தவர்?

A) ஒட்டக்கூத்தர்

B) கம்பர்

C) பலபட்டடைச் சொக்கநாதர்

D) ஒளவையார்

விளக்கம்: கலிகத்துப்பரணியை தென்தமிழ்த் தெய்வப் பரணி என்று புகழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலும் வாழ்ந்தவர்.

69) போரக்களத்தில் நீயும் பகைவரை எதிர்த்து வெல்கிறாய். அத்தகைய வீரமுடைய நீ இன்று போரைக்கண்டு தயங்கலாமா? – இதில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) அதியமான்

B) தொண்டைமான்

C) ஒளவையார்

D) விக்கிரமசோழன்

விளக்கம்: தொண்டைமானின் போர் அறிவிப்பை அறிந்த ஒளவையார், அதியமானைப் பார்த்து யானை போர்க்களத்தில் பகைவரின் படையை வெருண்டோடச் செய்வதுபோல நீயும் பகைவரை எதிர்த்து வெல்கிறாய். அத்தகைய வீரமுடைய நீ இன்று போரைக் கண்டு தயங்கலாமா என்று கூறினார்.

70) போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக்கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம்?

A) பிள்ளைத் தமிழ்

B) தூது

C) பரணி

D) கலிங்கம்

விளக்கம்: போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக்கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் – பரணி. பரணி இலக்கியங்களில் சிறந்தது கலிங்கத்துப்பரணி.

71) மீரா பற்றி கூற்றுகளை ஆராய்க.

1. இயற்பெயர் – மீ. இராசராசன்

2. பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்

3. நடத்திய இதழ் – அன்னம் விடு தூது

4. நூல்கள் – ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப்பக்கம், கோடையும் வசந்தமும்

A) 1, 2 தவறு

B) 3, 4 தவறு

C) 1, 2, 3 தவறு

D) 2 மட்டும் தவறு

விளக்கம்: 1. இயற்பெயர் – மீ. இராசேந்திரன்

2. கல்லூரிப் பேராசியராகப் பணியாற்றியவர்.

3. நடத்திய இதழ் – அன்னம் விடு தூது

4. நூல்கள் – ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப்பக்கம், கோடையும் வசந்தமும்.

72) இந்திய அரசு எந்த இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியுள்ளது?

A) கோவை

B) திருநெல்வேலி

C) கும்பகோணம்

D) சென்னை

விளக்கம்: இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

73) செயங்கொண்டார் யாருடைய அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார்?

A) முதற்குலோத்துங்கச் சோழன்

B) சடையப்ப வள்ளல்

C) இரண்டாம் குலோத்துங்கச் சோழன்

D) அரிமர்த்தன பாண்டியன்

விளக்கம்: செயங்கொண்டார் முதற்குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவராக திகழ்ந்தார்.

சடையப்ப வள்ளல் – கம்பர்

அரிமர்த்தன பாண்டியன் – மாணிக்க வாசகர்

ஒட்டக்கூத்தர் – விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இராசராசன்.

74) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை எம்.ஜி.ஆர் எங்கு நடத்தினார்?

A) கோவை

B) சென்னை

C) திருச்சி

D) மதுரை

விளக்கம்: எம்.ஜி.ஆர் மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.

75) அதியமானுக்காக ஒளவையார் யாரிடம் தூது சென்றார்?

A) விக்கிரமசோழன்

B) இரண்டாம் குலோத்துங்கன்

C) இரண்டாம் இராசராசன்

D) தொண்டைமான்

விளக்கம்: அதியமானுக்காக தொண்டைமானிடம் ஒளவையார் தூது சென்றார். அதியமான் தகடூர் என்னும் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். அரிய நெல்லிக்கனியை ஒளவையிடம் வழங்கியதால் கடையெழு வள்ளல்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.

76) செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்தவர்?

A) ஒட்டக்கூத்தர்

B) கம்பர்

C) பலபட்டடைச் சொக்கநாதர்

D) ஒளவையார்

விளக்கம்: செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்தவர் – பலபட்டடைச் சொக்கநாதர். செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி என்னும் நூலை எழுதினார். இவர் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.

77) வட்டம் + பாறை என்ற சொல்லை சேர்த்தெழுதக்கிடைக்கும் சொல்?

A) வட்டம்பாறை

B) வட்டபாறை

C) வட்டப்பாறை

D) வட்ப்பாறை

விளக்கம்: வட்டம் + பாறை என்ற சொல்லை சேர்த்தெழுதக் கிடைப்பது வட்டப்பாறை.

78) கூற்றுகளை ஆராய்க.

1. அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்

2. திசைப்பெயர்களையடுத்து வல்லினம் மிகாது

3. மகரமெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்

4. எழுவாய் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) 4 மட்டும் தவறு

விளக்கம்: 1. அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்

2. திசைப்பெயர்களையடுத்து வல்லினம் மிகும்

3. மகரமெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்

4. எழுவாய் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.

79) தமிழில் தோன்றிய முதல் பரணி?

A) கலிங்கத்துப் பரணி

B) இரணியன் வதைப் பரணி

C) பாச வதைப்பரணி

D) மோகவதைப் பரணி

விளக்கம்: செயங்கொண்டாரால் இயற்றப்பட்ட கலிங்கத்துப் பரணியே தமிழில் தோன்றிய முதல் பரணி வகை ஆகும். பரணி என்பது 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.

80) சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?

A) 100

B) 99

C) 97

D) 96

விளக்கம்: சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும். அவற்றுள் சில. பரணி, தூது, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்றவை.

81) கூற்றுகளை ஆராய்க.(எம்.ஜி.ஆர்-ன் தமிழ்ப்பணிகள்)

1. தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்துமுறையை எளிமைப்படுத்தினார்

2. மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.

3. தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தோற்றுவித்தார்.

4. முதியோர் மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்

A) அனைத்தும் சரி

B) 1, 2, 3 சரி

C) 2, 3, 4 சரி

D) 1, 3, 4 சரி

விளக்கம்: 1. தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்துமுறையை எளிமைப்படுத்தினார்.

2. மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.

3. தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தோற்றுவித்தார்.

4. முதியோர் மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

82) உன் பெயரில் தான் அஞ்சி என்னும் சொல் இருக்கிறதேயன்றி! நீ அஞ்சி ஒருநாளும் கண்டதில்லையே – இவ்வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?

A) தொண்டைமான்

B) ஒளவையார்

C) அதியமான்

D) ராஜராஜசோழன்

விளக்கம்: அதியமான் நெடுமான் அஞ்சியே உன் பெயரில்தான் அஞ்சி என்னும் சொல் இருக்கிறதேயன்றி! நீ அஞ்சி நான் ஒருநாளும் கண்டதில்லையே. போர் உனக்குப் புதிதா என்ன? என்று ஒளவையார் அதியமானிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!