8th Tamil Unit 6 Questions
8th Tamil Unit 6 Questions
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 8th Tamil Unit 6 Questions With Answers Uploaded Below.
1) தகடூர் யாத்திரை என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) அதியமான் நெடுமானஞ்சி
B) ஒளவையார்
C) பிசிராந்தையார்
D) ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை
விளக்கம்: தகடூர் யாத்திரை என்ற நூலின் ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை. இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
2) தகடூர் என்பது தற்பேதைய_________மாவட்டம்?
A) சேலம்
B) கிருஷ்ணகிரி
C) தர்மபுரி
D) நாமக்கல்
விளக்கம்: தகடூர் என்பது தற்போதைய தருமபுரி மாவட்டத்தைக் குறிக்கும். இப்பகுதியை ஆட்சி செய்தவர் கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் ஆவார். ஒளவைக்கு அரிய நெல்லிக்கனியை வழங்கியதால் இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் ஆனார்.
3) பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து – என்ற வரியில் வாரி என்ற சொல்லின் பொருள்?
A) வழங்குதல்
B) வருவாய்
C) கொட்டுதல்
D) மழைநீர்
விளக்கம்: வாரி என்றால் வருவாய் என்று பொருள். சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு பெறுகிற மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குக என்பதே இப்பாடல் வரிகள் உணர்த்தும் செய்தி.
4) அக்களத்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) அ + களத்து
B) அக் + களத்து
C) அக்க + அளத்து
D) அம் + களத்து
விளக்கம்: அக்களத்து என்ற சொல்லைப்பிரித்து எழுதக் கிடைப்பது அ + களத்து ஆகும்.
5) தோட்டத்தில் தம்பி ஊன்றிய____________எல்லாம் முளைத்தன?
A) சத்துகள்
B) பித்துகள்
C) முத்துகள்
D) வித்துகள்
விளக்கம்: தோட்டத்தில் தம்பி ஊன்றிய வித்துக்கள் எல்லாம் முளைத்தன. வித்துக்கள் என்றால் விதைகள் என்று பொருள்.
6) என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு______________பெருகிற்று.
A) காரி
B) ஓரி
C) வாரி
D) பாரி
விளக்கம்: என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு வாரி பெருகிற்று. வாரி என்றால் வருவாய் என்று பொருள். வருவாய் என்பது வாரி என்று தகடூர் யாத்திரை என்னும் நூல் வாயிலாக அறியலாம்.
7) இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார என்ற வரியில் வித்து என்ற சொல்லின் பொருள்?
A) விற்றல்
B) விளைவித்தல்
C) பயிர் முளைத்தல்
D) விதை
விளக்கம்: வித்து என்றால் விதை என்று பொருள். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் தகடூர் யாத்திரை. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
8) கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?
A) கதிரென
B) கதியீன
C) கதிரீன
D) கதிரின்ன
விளக்கம்: கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கதிரீன. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து ர். வருமொழியின் முதல் எழுத்து ஈ. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி, ர் + ஈ = ரீ எனச் சேர்ந்து கதிரீன என கிடைக்கும்.
9) முட்டாது வந்து மழை பெய்க! பெய்தபின்________ என்ற வரியில் முட்டாது என்ற சொல்லின் பொருள்?
A) குறைவின்றி
B) தட்டுப்பாடின்றி
C) வாட்டம் இன்றி
D) மோதாமல்
விளக்கம்: முட்டாது என்ற சொல்லின் பொருள் தட்டுப்பாடின்றி என்பதாகும். முளைத்த விதை செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிய வேண்டும் என்று இவ்வரி கூறுகிறது.
10) மானத்தை நம்பி நாங்க
மக்களைத் தான் பெற்றெடுத்தோம்
மானம் செய்த பாவமுங்க
மக்கள் பசி தீரலையே – இவ்வரிகளில் மானம் என்று குறிப்பிடப்படுவது?
A) கௌரவம்
B) வானம்
C) மழைநீர்
D) உணவுப் பயிர்
விளக்கம்: இப்பாடலில் மானம் என்று குறிப்பிடப்படுவது வானம். மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் தரப்பட்டுள்ளது. இப்பாடலின் பதிப்பாசியர் அ. கௌரன்.
11) பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) பெறு + எடுத்தோம்
B) பேறு + எடுத்தோம்
C) பெற்ற + எடுத்தோம்
D) பெற்று + எடுத்தோம்
விளக்கம்: பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது பெற்று + எடுத்தோம்.
12) முடியுடைய மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் என்று கூறுவர்?
A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்
விளக்கம்: முடியுடைய மூவேந்தர்களில் பழமையானவர்கள் சேரர்களே என்று கூறுபவர்களும் உண்டு. தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாக கூறும் நூல்கள்: தொல்காப்பியம், சங்கஇலக்கியம்.
வண்புகழ் மூவர் – தொல்காப்பியம்.
13) கூற்று: சேரர், சோழர், பாண்டியர்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவர்கள்
காரணம்: வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: சேரர், சோழர், பாண்டியர்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவர்கள். காரணம் வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
14) தகடூர் யாத்திரை என்னும் நூலின் சில பாடல்கள் எந்த நூலின் வாயிலாக அறிய முடிகிறது?
A) தனிப்பாடல் திரட்டு
B) புறப்பாடல் திரட்டு
C) அகப்பொருள் விளக்கம்
D) புறநானூறு
விளக்கம்: தகடூர் யாத்திரை என்னும் நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை. இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை. தகடூர் என்பது தற்போதைய தர்மபுரி ஆகும்.
15) கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?
A) கால்லிறங்கி
B) காலிறங்கி
C) கால்இறங்கி
D) கால்றங்கி
விளக்கம்: கால் + இறங்கி என்பதனை சேர்த்தெழுத கிடைப்பது காலிறங்கி. நிலைமொழியின் இறுதி எழுத்து ல். வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்து. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ல் + இ = லி எனச் சேர்ந்து காலிறங்கி எனக் கிடைக்கும்.
16) போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்து பூவும் – இதில் குறிப்பிடப்படுபவர்?
A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்
விளக்கம்: மேற்கண்ட வரிகளில் குறிப்பிடப்படுபவர் சேரர்கள். இவர்களே முடியுடைய மூவேந்தர்களில் பழமையானவர்கள் என்று கூறுபவர்களும் உண்டு.
17) புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: புணர்ச்சி இரண்டு வகைப்படும். அவை,
1. இயல்பு புணர்ச்சி
2. விகாரப் புணர்ச்சி
18) பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து என்ற வரியில் பெருநீரால் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) மழைநீர்
B) கடல்நீர்
C) கிணற்று நீர்
D) ஆற்று நீர்
விளக்கம்: பெருநீர் என்றால் இங்கு மழைநீரைக் குறிக்கிறது. சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குக என்பதே இப்பாடல் வரிகள் உணர்த்தும் செய்தி.
19) பொருத்துக
அ. சிலை + அழகு – 1. மெய்யீற்றுப் புணர்ச்சி
ஆ. மண் + அழகு – 2. உயிரீற்று புணர்ச்சி
இ. பொன் + உண்டு – 3. மெய்முதல் புணர்ச்சி
ஈ. பொன் + சிலை – 4. உயிர்முதல் புணர்ச்சி
A) 1, 2, 3, 4
B) 2, 1, 4, 3
C) 2, 3, 1, 4
D) 2, 1, 3, 4
விளக்கம்: சிலை + அழகு – உயிரீற்று புணர்ச்சி
மண் + அழகு – மெய்யீற்றுப் புணர்ச்சி
பொன் + உண்டு – உயிர்முதல் புணர்ச்சி
பொன் + சிலை – மெய்முதல் புணர்ச்சி
20) கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எங்கு பிறந்தார்?
A) திருப்பூர்
B) திருச்சி
C) கன்னியாகுமரி
D) திண்டுக்கல்
விளக்கம்: கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
21) தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறும் நூல்?
A) தொல்காப்பியம், அகத்தியம்
B) தொல்காப்பியம், சிலப்பதிகாரம்
C) தொல்காப்பியம், சங்க இலக்கியம்
D) தொல்காப்பியம், பத்துப்பாட்டு
விளக்கம்: தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றன.
22) மழைச்சோற்றுடன் தொடர்புடையது எது?
A) நெல்சோறு
B) சோளச்சோறு
C) கம்பங்கூழ்
D) உப்பில்லாச் சோறு
விளக்கம்: மழைபெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர். கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.
23) இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார என்ற வரியில் எஞ்சாமை என்ற சொல்லின் பொருள் என்ன?
A) முளைக்காமை
B) மீதியில்லாமல்
C) குறைவின்றி
D) தட்டுப்பாடின்றி
விளக்கம்: எஞ்சாமை என்ற சொல்லின் பொருள் குறைவின்றி என்பதாகும். அகன்ற நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளைவிடுக என்பதே இப்பாடல் வரியின் பொருளாகும்.
24) கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் கீழ்க்கண்ட எவ்விருதைப் பெற்றார்?
A) சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது
B) சிறந்த புதினத்திற்கான இலக்கியச் சிந்தனை விருது
C) சிறந்த நூலுக்கான சாகித்தய அகாடமி விருது
D) தமிழாசிரியர் விருது
விளக்கம்: கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர். இவர் சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர். 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.
25) ஒட்டாது வந்து கிளை பயில்க! அக்கிளை________ என்ற வரியில் ஒட்டாது என்ற சொல்லின் பொருள் என்ன?
A) குறைவின்றி
B) தட்டுப்பாடின்றி
C) வாட்டம் இன்றி
D) மோதாமல்
விளக்கம்: ஒட்டாது என்ற சொல்லின் பொருள் வாட்டம் இன்றி என்பதாகும். தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்க என்பது இவ்வரியின் பொருளாகும்.
26) கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டவர் யார்?
A) மார்க்கோபோலோ
B) யுவான் சுவாங்
C) தாலமி
D) பாகியான்
விளக்கம்: கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய கரூர் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகத் திகழ்கிறது என்று தாலமி குறிப்பிட்டுள்ளார்.
27) இந்தியாவிலேயே எம்மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது?
A) கரூர்
B) சேலம்
C) திண்டுக்கல்
D) திருச்சி
விளக்கம்: மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் சேலத்தில் தான் இந்தியாவிலேயே அதிகமாக ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.
28) நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) ஆகுபெயர்
B) அன்மொழித்தொகை
C) புணர்ச்சி
D) வேற்றுமைத்தொகை
விளக்கம்: நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது புணர்ச்சி எனப்படும். இது இரண்டு வகைப்படும். அவை,
1 இயல்பு புணர்ச்சி
2. விகாரப் புணர்ச்சி
29) தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது?
A) கோவை
B) கரூர்
C) ஈரோடு
D) சேலம்
விளக்கம்: மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தில் தான் தமிழ்நாட்டில் நெசவு அதிகமாக நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் நெல், பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு ஆகியன பயிரிடப்படுகின்றன.
30) கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரை எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
A) பழந்தமிழர் மழை வழிபாட்டு மரபுகள்
B) பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
C) பழந்தமிழர் சோற்று வழிபாட்டு மரபுகள்
D) பழந்தமிழர் விவசாய வழிபாட்டு மரபுகள்
விளக்கம்: கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்பது பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள ஒரு கட்டுரை ஆகும். இதில் மழை வேண்டி வழிபாடு செய்யும் விவசாயிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
31) இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார என்ற வரியில் நாறுக என்ற சொல்லின் பொருள்?
A) மணம்வீச
B) முளைவிடுக
C) மழை பொழிக
D) தட்டுப்பாடின்றி
விளக்கம்: நாறுக என்ற சொல்லின் பொருள் முளைவிடுக என்பதாகும். அகன்ற நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளைவிடுக என்பதே இப்பாடல் வரியின் பொருளாகும். இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் தகடூர் யாத்திரை. இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நூலின் ஆசிரியர் பெயரும் அறியப்படவில்லை.
32) ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது எது?
A) கொடைக்கானல்
B) கோத்தகிரி
C) குற்றாலம்
D) ஏற்காடு
விளக்கம்: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது ஏற்காடு. இது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
33) சேலம் மாவட்டம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. மாங்கனி நகரம் என்னும் சிறப்புப்பெயர் பெற்றது
2. இந்தியாவிலேயே இம்மாவட்டத்தில் தான் அதிகமாக ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது
3. இந்தியாவிலேயே கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம்
4. முலாம் பூசும் தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது.
A) 1 மட்டும் தவறு
B) 2 மட்டும் தவறு
C) 3 மட்டும் தவறு
D) 4 மட்டும் தவறு
விளக்கம்: 1. மாங்கனி நகரம் என்னும் சிறப்புப்பெயர் பெற்றது
2. இந்தியாவிலேயே இம்மாவட்டத்தில் தான் அதிகமாக ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது
3. தமிழகத்திலேயே கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம்
4. முலாம் பூசும் தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது.
34) தகடூர் யாத்திரை என்ற நூல் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
2. தகடூர் என்றால் தர்மபுரி என்று தற்காலத்தில் அழைக்கப்படுகிறது
3. இந்நூல் முழுமையாக கிடைத்துள்ளது
4. இந்நூலின் சில பாடல்கள் அகத்திரட்டு என்னும் தொகுப்பு நூலிலும் கிடைக்கின்றன.
A) 1, 2 சரி
B) 3, 4 சரி
C) 1, 3 சரி
D) 2, 4 சரி
விளக்கம்: 1. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
2. தகடூர் என்றால் தர்மபுரி என்று தற்காலத்தில் அழைக்கப்படுகிறது
3. இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை
4. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலிலும் கிடைக்கின்றன.
35) நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது_____________புணர்ச்சி?
A) இயல்பு புணர்ச்சி
B) விகாரப் புணர்ச்சி
C) A மற்றும் B
D) உடம்படுமெய் புணர்ச்சி
விளக்கம்: நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். (எ.கா) தாய் + மொழி = தாய்மொழி
36) கூற்று: முடியுடைய வேந்தர்களில் பழமையானவர்கள் சோழர்கள்
காரணம்: சேர, சோழ, பாண்டியர் என்னும் தொடரே சான்றாகும்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: முடியுடைய வேந்தர்களில் பழமையானவர்கள் சேரர்கள். இதற்கு சேர, சோழ, பாண்டியர் என்னும் தொடரே சான்றாகும்.
37) குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் நகரம் எது?
A) விருதுநகர்
B) சேலம்
C) சிவகாசி
D) சென்னை
விளக்கம்: குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் நகரம் சிவகாசி ஆகும்.
38) சேர நாட்டின் முக்கியத் துறைமுகங்களில் பொருந்தாதது எது?
A) தொண்டி
B) முசிறி
C) காந்தளுர்
D) மாமல்லபுரம்
விளக்கம்: சேரநாட்டின் முக்கியத் துறைமுகப்பட்டினங்கள் தொண்டி, முசிறி, காந்தளுர். முடியுடைய மூவேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள்.
39) சேரர்கள் பற்றியதில் தவறானது எது?
A) நாடு – குடநாடு
B) தலைநகர் – பூம்புகார்
C) கொடி – வில்
D) பூ – பனம்பூ
விளக்கம்: நாடு – குடநாடு
தலைநகர் – வஞ்சி
கொடி – வில்
பூ – பனம்பூ
40) ………………..அக்களத்துப்
போரெல்லாங் காவாது வைகுக! போரின்……………… இதில் போர் என்று எந்த பயிரைக் குறிப்பிடுகிறோம்?
A) கரும்பு
B) கோதுமை
C) நெல்
D) சோளம்
விளக்கம்: இங்கு போர் என்று குறிப்பிடப்படுவது நெல் ஆகும். நெல் குவித்து வைத்திருப்பதை நெற்போர் என்று குறிப்பிடுவர்.
41) சேரநாட்டின் தலைநகர் வஞ்சி. இது எந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது?
A) தன்பெருணை
B) பேரியாறு
C) நொய்யல்
D) சிற்றாறு
விளக்கம்: முடியுடை மூவேந்தர்களில் பழமையானவர்களான சேரர்களின் தலைநகரம் வஞ்சி ஆகும்.இந்நகர் மேற்கு மலைத்தொடரில் அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் இருந்தது.
42) கரூர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. கொங்கு நாட்டின் ஒரு பகுதி
2. வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்பட்டது
3. அரேபிய நாட்டு அறிஞர் இந்நகரை தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
A) 1, 3 சரி
B) 2, 3 சரி
C) 1, 2 சரி
D) 1 மட்டும் சரி
விளக்கம்: 1. கொங்கு நாட்டின் ஒரு பகுதி
2. வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்பட்டது
3. கிரேக்க நாட்டு அறிஞர் இந்நகரை தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
43) வண்புகழ் மூவன் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) தொல்காப்பியம்
D) அகநானூறு
விளக்கம்: வண்புகழ் மூவர் தண்பொழில் வனப்பு என்று குறிப்பிடும் நூல் தொல்காப்பியம். தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாக இவ்வரிகள் கூறுகின்றன.
44) கூற்று: சேலம், கோவை கொங்கு நாடு என்று அழைக்கப்பட்டன.
காரணம்: சேலம், கோவை ஆகிய பகுதிகளை சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்தனர்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: பண்டைய சேரநாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது. சேலம், கோவை கொங்கு நாடு என்று அழைக்கப்பட்டன. இப்பகுதிகளை சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்தனர்.
45) …………………போரின்
உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு……இவ்வரியில் குறிப்பிடப்படும் ஓதை என்ற சொல்லின் பொருள்?
A) நீர் பெருக்கம்
B) அஞ்சி
C) ஓசை
D) வருவாய்
விளக்கம்: இப்பாடலடிகளில் ஓதை என்று குறிப்பிடப்படுவது ஓசை ஆகும். நெல் போரிரை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சும் என்பதே இவ்வரியின் பொருளாகும்.
46) கொங்கு மண்டலச் சதகம் என்ற நூலை எழுதியவர்?
A) காளமேகப் புலவர்
B) கார்மேகப் புலவர்
C) ஒட்டக்கூத்தர்
D) சின்னமலை
விளக்கம்: கார்மேக கவிஞர் காளமேகப் புலவர் இயற்றிய கொங்கு மண்டலச் சதகம் என்னும் நூலில் கொங்கு மண்டலத்தின் எல்லை குறிப்பிடப்பட்டுள்ளது.
47) கொங்கு மண்டலத்தின் எல்லைகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
A) வடக்கு – திருத்தணி
B) தெற்கே – பழனிமலை
C) மேற்கே – வெள்ளி மலை
D) கிழக்கே – மதிற்கரை
விளக்கம்: வடக்கு – பெரும்பாலை
தெற்கே – பழனிமலை
மேற்கே – வெள்ளி மலை
கிழக்கே – மதிற்கரை
48) ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது?
A) மழை
B) கல்வி
C) கனிமவளம்
D) போக்குவரத்து
விளக்கம்: ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது மழை. மழை பொய்த்துவிட்டால் நீர்நிலைகளும் வற்றிவிடும். நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும். அத்தகைய காலங்களில் மழை வேண்டி மக்கள் வழிபாடும் செய்வர்.
49) கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எழுதாத நூல் எது?
A) கன்னிவாடி
B) குணச்சித்திரங்கள்
C) உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
D) சீரங்கராயன்
விளக்கம்: கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர். இவர் சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர். 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறந்த சிறுகதைக்கான இலக்கியக் சிந்தனை விருது பெற்றவர். இவரின் நூல்கள்
1. கன்னிவாடி
2. குணச்சித்திரங்கள்
3. உப்புக்கடலைக் குடிக்கும் பூனை.
50) முத்து நகரம் எது?
A) தூத்துக்குடி
B) திருநெல்வேலி
C) சென்னை
D) கடலூர்
விளக்கம்: முத்து நகரம் என்று அழைக்கப்படும் நகரம் தூத்துக்குடி. பழங்காலத்தில் முத்துக் குளித்தல் இங்கு சிறப்பாக நடைபெற்றதால் இந்நகரம் இப்பெயர் பெற்றது.
51) பொருத்துக
அ. வைகுக – 1. புதுவருவாய்
ஆ. ஓதை – 2. அஞ்சி
இ. வெரீஇ – 3. ஓசை
ஈ. யாணர் – 4. தங்குக
A) 2, 3, 4, 1
B) 4, 1, 2, 3
C) 4, 2, 3, 1
D) 4, 3, 2, 1
விளக்கம்: வைகுக – தங்குக.
ஓதை – ஓசை
வெரீஇ – அஞ்சி
யாணர் – புதுவருவாய்
52) பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் மாவட்டம் எது?
A) சென்னை
B) கோவை
C) விருதுநகர்
D) கரூர்
விளக்கம்: பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது. தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன.
53) பண்டைய சேர நாடு என்பது கீழ்க்கண்ட எந்த பகுதியை உள்ளடக்கியது அல்ல?
A) சேலம்
B) கோவை
C) கரூர்
D) கேரளா
விளக்கம்: பண்டைய சேரநாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது. சேலம், கோவை கொங்கு நாடு என்று அழைக்கப்பட்டன. இப்பகுதிகளை சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்தனர்.
54) இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின். அது ____________புணர்ச்சி எனப்படும்?
A) இயல்பு புணர்ச்சி
B) விகாரப் புணர்ச்சி
C) A மற்றும் B
D) உடம்படுமெய் புணர்ச்சி
விளக்கம்: இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின். அது விகாரப் புணர்ச்சி எனப்படும். (எ.கா) உடல் + ஓம்பல். (இங்கு ல் + ஓ இணைந்து லோ என்னும் உயிர்மெய் எழுத்து ஆயிற்று) .
55) பொருத்துக.
அ. தூத்துக்குடி – 1. தீப நகரம்
ஆ. சிவகாசி – 2. தூங்காநரகம்
இ. மதுரை – 3. குட்டி ஜப்பான்
ஈ. திருவண்ணாமலை – 4. முத்து நகரம்
A) 1, 2, 3, 4
B) 2, 3, 4, 1
C) 3, 4, 2, 1
D) 4, 3, 2, 1
விளக்கம்: தூத்துக்குடி – முத்து நகரம்
சிவகாசி – குட்டி ஜப்பான்
மதுரை – தூங்கா நகரம்
திருவண்ணாமலை – தீப நகரம்.
56) கொங்கு மண்டலத்திற்கு பொருந்தாத பகுதி எது?
A) நீலகிரி
B) கோயமுத்தூர்
C) திருப்பூர்
D) திருச்சி
விளக்கம்: கொங்கு மண்டலம் என்பது இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக கொங்கு மண்டலம் விளங்கியது.
57) ஆன் பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?
A) வைகை
B) நொய்யல்
C) அமராவதி
D) சிற்றாறு
விளக்கம்: ஆன் பொருநை என்று அழைக்கப்படும் ஆறு அமராவதி. இந்நதி கொங்கு மண்டலத்தை வளம் செழிக்கச் செய்த ஒரு நதியாகும்.
58) கூற்றுகளை ஆராய்க
1. ஓர் எழுத்து தோன்றுவது – திரிதல் புணர்ச்சி
2. ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது – தோன்றல் புணர்ச்சி
3. ஓர் எழுத்து மறைவது – கெடுதல் புணர்ச்சி
A) 1, 2 சரி
B) 3 மட்டும் சரி
C) 1, 3 சரி
D) 2, 3 சரி
விளக்கம்: 1. ஓர் எழுத்து தோன்றுவது – தோன்றல் புணர்ச்சி
2. ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது – திரிதல் புணர்ச்சி
3. ஓர் எழுத்து மறைவது – கெடுதல் புணர்ச்சி
59) பொருத்துக.
அ. வாரி – 1. வாட்டம் இன்றி
ஆ. எஞ்சாமை – 2. வருவாய்
இ. முட்டாது – 3. தட்டுப்பாடின்றி
ஈ. ஒட்டாது – 4. குறைவின்றி
A) 2, 3, 4, 1
B) 2, 4, 3, 1
C) 2, 3, 4, 1
D) 2, 1, 3, 4
விளக்கம்: வாரி – வருவாய்
எஞ்சாமை – குறைவின்றி
முட்டாது – தட்டுப்பாடின்றி
ஒட்டாது – வாட்டம் இன்றி.
60) வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது?
A) நாமக்கல்
B) கரூர்
C) திருச்சி
D) மதுரை
விளக்கம்: கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய கரூர் நகரமே வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்படுகிறது.
61) விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். அவை,
- தோன்றல்
- திரிதல்
- கெடுதல்
62) கொங்கு மண்டலத்தை வளப்படுத்தாத ஆறு எது?
A) காவிரி
B) பவானி
C) நொய்யல்
D) வைகை
விளக்கம்: கொங்குநாட்டுப் பகுதியை காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆகிய ஆறுகள் வளம் கொழிக்கச் செய்தன.
63) நாமக்கல் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை இம்மாவட்டத்தில் உள்ளன.
2. முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் இந்தியாவிலேயே நாமக்கல் முதன்மையான இடம் வகிக்கின்றன.
3. சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிகமாக இயங்கும் மாவட்டமாக விளங்குகிறது.
A) 1 மட்டும் சரி
B) 1, 3 சரி
C) 2 மட்டும் சரி
D) 2, 3 சரி
விளக்கம்: 1. பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை இம்மாவட்டத்தில் உள்ளன.
2. முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே நாமக்கல் முதன்மையான இடம் வகிக்கின்றன.
3. சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிகமாக இயங்கும் மாவட்டமாக விளங்குகிறது.
64) …………………போரின்
உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு…இவ்வரியில் குறிப்பிடப்படும் வெரீஇப் என்ற சொல்லின் பொருள்?
A) நீர் பெருக்கம்
B) அஞ்சி
C) ஓசை
D) வருவாய்
விளக்கம்: இப்பாடலடிகளில் வெரீஇ என்றால் அஞ்சி என்று பொருள். நெல் போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சும் என்பதே இவ்வரியின் பொருளாகும்.
65) பொருத்துக.
அ. தமிழ் + தாய் – 1. திரிதல்
ஆ. வில் + கொடி – 2. கெடுதல்
இ. மணம் + மகிழ்ச்சி – 3. தோன்றல்
A) 3, 2, 1
B) 3, 1, 2
C) 1, 3, 2
D) 2, 3, 1
விளக்கம்: தமிழ் + தாய் – தோன்றல்
வில் + கொடி – திரிதல்
மணம் + மகிழ்ச்சி – கெடுதல்
66) இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்காவை பெற்ற மாவட்டம் எது?
A) கரூர்
B) கோவை
C) திருப்பூர்
D) ஈரோடு
விளக்கம்: இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா (நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா) அமைக்கப்பட்டுள்ள மாவட்டம் திருப்பூர். இது பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படுகிறது.
67) மஞ்சள் சந்தையுடன் தொடர்புடைய மாவட்டம் எது?
A) கோவை
B) ஈரோடு
C) சேலம்
D) தருமபுரி
விளக்கம்: தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில்தான் நடைபெறுகிறது. துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள், சர்க்கரை ஆலைகள், பெருமளவில் உள்ளன. நூல் நூற்பு, துணிகளுக்குச் சாயம் ஏற்றுதல், அச்சிடுதல், தோல் பதனிடுதல் முதலான தொழில்களும் இம்மாவட்டத்தில் நடைபெறுகின்றன.
68) பொற்சிலை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
A) பொன் + சிலை
B) பொற் + சிலை
C) பொ + சிலை
D) பொன்னு + சிலை
விளக்கம்: பொற்சிலை என்னும் சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது பொன் + சிலை. இது திரிதல் புணர்ச்சி ஆகும்.
69) கூற்று: தமிழ்நாட்டின் ஹாலாந்து – திண்டுக்கல்
காரணம்: அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
A) கூற்று தவறு, காரணம் சரி
B) கூற்று சரி, காரணம் தவறு
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: தமிழ்நாட்டின் ஹாலாந்து என்று அழைக்கப்படும் மாவட்டம் திண்டுக்கல். காரணம் இப்பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.
70) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு – இதில் குறிப்பிடப்படும் மூவரில் பொருந்தாதவர்?
A) பாண்டியர்
B) பல்லவர்
C) சேரர்
D) சோழர்
விளக்கம்: வண்புகழ் மூவர் தண்பொழில் வனப்பு என்று குறிப்பிடும் நூல் தொல்காப்பியம். இதில் மூவர் என்று குறுப்பிடப்படுபவர்கள் சேரர், சோழர், பாண்டியர்கள். தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாக இவ்வரிகள் கூறுகின்றன. இதே போல் தமிழகம் சேர, சோழ, பாண்டியருக்கு உரியதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
71) பாலாடை இச்சொல்லுக்குரிய புணர்ச்சி?
A) இயல்பு
B) தோன்றல்
C) திரதல்
D) கெடுதல்
விளக்கம்: பால் + ஆடை = பாலாடை. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்தாகிய ல் என்னும் மெய் எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தாகிய ஆ என்னும் உயிர் எழுத்தும் இணைந்து லா என்னும் உயிர்மெய் எழுத்து தோன்றுகிறது. இங்கு தோன்றல், திரிதல், கெடுதல் போன்றவை நிகழவில்லை. எனவே இது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
72) கீழக்கண்டவற்றில் எது நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை?
A) பச்சைமலை
B) கஞ்சமலை
C) கொல்லிமலை
D) சேர்வராயன் மலை
விளக்கம்: பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தில் உள்ளது.
73) தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A) ஈரோடு
B) கோவை
C) திருப்பூர்
D) மதுரை
விளக்கம்: தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது. காங்கயம் என்ற இடம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.
74) பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?
A) அ. கௌரன்
B) பெ. தூரன்
C) கலாப்பிரியா
D) கதிரைவேலனார்
விளக்கம்: கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்பது பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள ஒரு கட்டுரை ஆகும். இந்நூலின் பதிப்பாசிரியர் அ.கௌரன்.
75) சுங்குடிச்சேலைக்கு பெயர் பெற்ற இடம்?
A) திண்டுக்கல்
B) பத்தமடை
C) சென்னிமலை
D) சின்னாளப்பட்டி
விளக்கம்: சின்னாளப்பட்டி சுங்குடிச் சேலைக்குப் பெயர்பெற்றது. இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
திண்டுக்கல் – பூட்டு
பத்தமடை – பாய்
சென்னிமலை – போர்வை.
76) மனம் + மகிழ்ச்சி என்ற சொல்லைச் சேர்த்தெழுதுக
A) மனமகிழ்ச்சி
B) மனம்மகிழ்ச்சி
C) மமகிழ்ச்சி
D) மனமிகிழ்ச்சி
விளக்கம்: மனம் + மகிழ்ச்சி என்ற சொல்லை சேர்த்தெழுதக் கிடைப்பது மனமகிழ்ச்சி.
77) கனத்த மழை என்னும் சொல்லின் பொருள்?
A) பெருமழை
B) சிறு மழை
C) எடைமிகுந்த மழை
D) எடைகுறைந்த மழை
விளக்கம்: கனத்த மழை என்றால் பெருமழை என்று பொருள். ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது மழை. மழை பொய்த்துவிட்டால் நீர்நிலைகளும் வற்றிவிடும். நாட்டில் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும். அத்தகைய காலங்களில் மழை வேண்டி மக்கள் வழிபாடு செய்வர்.
78) திருப்பூர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. பின்னலாடை நகரம்
2. விவசாயத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குப் பெரும் வருவாயை ஈட்டித்தருகிறது.
3. தமிழகத்தின் முதல் ஆயத்த ஆடை பூங்கா (நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா) இம்மாவட்டத்தில் தான் அமைக்கப்பட்டது.
4. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் இம்மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கின்றன.
A) 1, 2 சரி
B) 1, 2, 4 சரி
C) 1, 2, 3, 4 சரி
D) 1, 4 சரி
விளக்கம்: 1. பின்னலாடை நகரம்
2. பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள் மூலம் தமிழ்நாட்டிற்குப் பெரும் வருவாயை ஈட்டித்தருகிறது.
3. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா (நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா) இம்மாவட்டத்தில் தான் அமைக்கப்பட்டது.
4. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் இம்மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கின்றன.
79) வாசலெல்லாம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) வாசல் + எல்லாம்
B) வாசல் + எலாம்
C) வாசம் + எல்லாம்
D) வாசு + எல்லம்
விளக்கம்: வாசலெல்லாம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வாசல் + எல்லாம்.
80) திண்டுக்கல் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. மஞ்சள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
2. அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்.
3. காங்கயம் காளைகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளது.
4. தமிழ்நாட்டின் ஹாலாந்து என்று அழைக்கப்படுகிறது.
A) 1, 3 சரி
B) 2, 3 சரி
C) 1, 4 சரி
D) 2, 4 சரி
விளக்கம்: 1. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
2. அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்.
3. சின்னாளப்பட்டி இம்மாவட்டத்தில் தான் உள்ளது.
4. தமிழ்நாட்டின் ஹாலாந்து என்று அழைக்கப்படுகிறது.
81) …………………போரின்
உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு……இவ்வரியில் குறிப்பிடப்படும் பெடை என்ற சொல்லின் பொருள்?
A) படை
B) பெண் நாரை
C) பெறுதல்
D) அஞ்சி
விளக்கம்: இப்பாடலடிகளில் பெடை என்று குறிப்பிடப்படுவது பெண்நாரை ஆகும். நெல் போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் என்பதே இவ்வரியின் பொருளாகும்.
82) கரூர்-க்கு பொருத்தமில்லாத ஒன்றை தெரிவு செய்க.
A) பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குகிறது
B) கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.
C) விசைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம்
D) தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டம்
விளக்கம்: கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதி,
1. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டம்
2. தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டம்
3. பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குகிறது
4. கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.
83) ஒரு நாட்டு மக்களின் நாகரீக நல்வாழ்விற்கு அடிப்படையானவைகளில் பொருந்தாதது எது?
A) உழவு
B) கைத்தொழில்
C) வணிகம்
D) இயந்திர உற்பத்தி
விளக்கம்: உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரீக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர்.
84) யாணர்த் தகாஅவன் அகன்றலை நாடே! என்ற வரியில் குறிப்பிடப்படும் நாடு எந்த நாடு?
A) சோழ நாடு
B) சேர நாடு
C) பாண்டிய நாடு
D) தொண்டைநாடு
விளக்கம்: இவ்வரியில் குறிப்பிடப்படும் நாடு சேர நாடு ஆகும். தகடூர் யாத்திரை என்னும் நூலில் சேர நாட்டின் நில வளம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
85) கோயம்புத்தூர் என்னும் பெயர் எந்த பெயரில் இருந்து மருவி வந்துள்ளது?
A) கோயன்புத்தூர்
B) கோவன்புத்தூர்
C) கோவை
D) கோவையன் புத்தூர்
விளக்கம்: கோவன்புத்தூர் என்னும் பெயரை கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.
86) கூற்று: கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது
காரணம்: அந்நாட்டின் நாட்டின் இயற்கை அமைப்பு
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்திருந்தது.
87) கிழக்குத்தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்?
A) கோயம்புத்தூர்
B) நீலகிரி
C) ஊட்டி
D) கன்னியாகுமரி
விளக்கம்: கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி ஆகும். இம்மாவட்டம் முழுவதும் மலைப் பகுதியாலானது. காடுகள் நிறைந்த இம்மாவட்டத்தில் தோட்டப்பயிர்களான காப்பி, தேயிலை, தைலமரம் (யூகலிப்டஸ்) வளர்க்கப்படுகிறது.
88) கூற்று: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டவர் சேரன் செங்குட்டுவன்
காரணம்: கடற்போர் வெற்றியால் செங்குட்டுவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும்D சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.
89) யாணர்த் தகாஅவன் அகன்றலை நாடே! என்ற வரியில் குறிப்பிடப்படும் யாணர் என்ற சொல்லின் பொருள்?
A) பெண் நாரை
B) விவசாயி
C) பனையோலைப் பெட்டி
D) புதுவருவாய்
விளக்கம்: யாணர் என்றால் புதுவருவாய் என்று பொருள். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் தகடூர் யாத்திரை. இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
90) மண் + அழகு என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக்கிடைப்பது?
A) மண்அழகு
B) மண்ணழகு
C) மண்ண்ழகு
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: மண் + அழகு என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது மண்ணழகு. இது இயல்புப் புணர்ச்சியாகும்.
91) ஈரோடு மாவட்டம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
2. தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை இம்மாவட்டத்தில்தான் நடைபெறுகின்றது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
2. தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை இம்மாவட்டத்தில்தான் நடைபெறுகின்றது.
92) சேர மன்னர்களின் சிறந்த துறைமுகமாக விளங்கியது?
A) வஞ்சி
B) பூம்புகார்
C) முசிறி
D) மாமல்லபுரம்
விளக்கம்: முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
93) பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்ட இச்செய்தியை கூறும் நூல்?
A) அகநானூறு
B) புறநானூறு
C) கலித்தொகை
D) பரிபாடல்
விளக்கம்: மீனோடு நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து
……………..
கலந்தந்த பொற்பரிசும்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து என்ற புறநானூறு வரிகள் மூலம் பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்ட இச்செய்தியை அறியலாம்.
94) கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர் யார்?
A சேரர்
B) பாண்டியர்
C) சோழர்
D) பல்லவர்
விளக்கம்: கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச் சேரமன்னர்கள் அடக்கினர். செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.