8th Tamil Unit 5 Questions
8th Tamil Unit 5 Questions
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 8th Tamil Unit 5 Questions With Answers Uploaded Below.
1) கலித்தொகையை தொகுத்தவர்?
A) பாரதம் பாடிய பெருந்தேவனார்
B) நல்லந்துவனார்
C) பெருங்கடுங்கோ
D) கபிலர்
விளக்கம்: கலித்தொகை என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை தொகுத்தவர் நல்லந்துவனார். இவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
2) ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – இதில் அலந்தவர் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?
A) செல்வந்தர்
B) வறியவர்
C) உறவினர்
D) அறிவற்றவர்
விளக்கம்: அலந்தவர் என்ற சொல்லின் பொருள் வறியவர் என்பதாகும். இதன் எதிர்ச்சொல் செல்வந்தர். இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் என்பதே மேற்கண்ட பாடல் வரி உணர்த்தும் பொருள்.
3) முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
A) முறையப்படுவது
B) முறையெனப்படுவது
C) முறைஎனப்படுவது
D) முறைப்படுவது
விளக்கம்: முறை + எனப்படுவது என்ற சொல்லை சேர்த்தெழுத கிடைப்பது முறையெனப்படுவது. நிலைமொழியின் இறுதி எழுத்து றை. இதனை ற் + ஐ எனப் பிரிக்கலாம். வருமொழியின் முதல் எழுத்து எ. உடம்படுமெய் புணர்ச்சி விதிப்படி வருமொழியின் முதல் எழுத்துக்கு ஏற்ற மெய் எழுத்து தோன்றி, முறையெனப்படுவது என்று புணர்ந்தது.
4) காட்டிலிருந்து வந்த_________கரும்பைத் தின்றன.
A) முகில்கள்
B) முழவுகள்
C) வேழங்கள்
D) வேய்கள்
விளக்கம்: காட்டிலிருந்து வந்த வேழங்கள் கரும்பைத் தின்றன.
வேழங்கள் – யானைகள்
முழவுகள் – இசைக்கருவி
முகில்கள் – மேகங்கள்
வேய்கள் – மூங்கில்கள்
5) பொருத்துக
அ. கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – புறநானூறு
ஆ. மாக்கண் முரசம் – மதுரைக்காஞ்சி
இ. மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்;ந்த பந்தர்கீழ் – நாச்சியார் திருமொழி
ஈ. சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – பெரியபுராணம்
A) 1, 2, 3, 4
B) 3, 4, 2, 1
C) 4, 2, 3, 1
D) 4, 3, 2, 1
விளக்கம்: அ. கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – புறநானூறு
ஆ. மாக்கண் முரசம் – மதுரைக்காஞ்சி
இ. மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்கீழ் – நாச்சியார் திருமொழி
ஈ. சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – பெரியபுராணம்
6) நம்மை_________ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
A) இகழ்வாரை
B) அகழ்வாரை
C) புகழ்வாரை
D) மகிழ்வாரை
விளக்கம்: நம்மை இகழ்வாரையும் பொறுத்துக்கொள்ளுதல் பொறுமை என்று கலித்தொகை கூறுகிறது. “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” – கலித்தொகை
7) மறைபொருளைக் காத்தல்__________எனப்படும்
A) சிறை
B) அறை
C) கறை
D) நிறை
விளக்கம்: நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல் ஆகும்.
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலித்தொகை
8) பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
A) பாட் + அறிந்து
B) பா + அறிந்து
C) பாடு + அறிந்து
D) பாட்டு + அறிந்து
விளக்கம்: பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது பாடு + அறிந்து என்பதாகும்.
9) ‘கனகச்சுனை’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
A) கனகச் + சுனை
B) கனக + சுனை
C) கனகம் + சுனை
D) கனம் + சுனை
விளக்கம்: கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது கனகம் + சுனை.
10) போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை – இவ்வரியில் உள்ள போற்றுதல் என்ற சொல்லின் பொருள்?
A) பாதுகாத்தல்
B) உதவிசெய்தல்
C) வணங்குதல்
D) பிரியாது இருத்தல்
விளக்கம்: போற்றுதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். போற்றுதல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் என்பது இவ்வரி உணத்தும் பொருள்.
11) முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
A) முழவுதிர
B) முழவுதிரை
C) முழவதிர
D) முழவுஅதிர
விளக்கம்: முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுக்கிடைக்கும் சொல் – முழவதிர. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து வு. இதனைப் பிரித்தால் வ் + உ. வருமொழியின் முதல் எழுத்து அ. அதாவது வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்து. எனவே உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் எனும் விதிப்படி நிலைமொழியிலுள்ள இறுதி எழுத்து கெடும். முழ + வ் + அதிர. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி, வ் + அ=வ எனப்புணரும்.
12) மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் ஆகும். இதில் குறிப்பிடப்படும் மூவருள் பொருந்தாதவர்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரகர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
13) நெய்தற்கலியை இயற்றியவர் யார்?
A) கபிலர்
B) நல்லந்துவனார்
C) பாரதம் பாடிய பெருந்தேவனார்
D) நன்முள்ளையார்
விளக்கம்: கலித்தொகை என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதில் நெய்தற்கலியை பாடியவர் நல்லந்துவனார். இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே.
14) பதிகம் என்பது எத்தனை பாடல்கள் கொண்டது?
A) 5
B) 10
C) 4
D) 100
விளக்கம்: பதிகம் என்பது 10 பாடல்கள் கொண்டது. கேதாரப்பதிகம் என்பது சுந்தரர் பாடிய பதிகம் ஆகும்.
15) கூற்றுகளை ஆராய்க.
1. தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
2. தே + வாரம் – இனிய ஓசை பொருந்திய பாடல்கள்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
2. தே + வாரம் – இனிய ஓசை பொருந்திய பாடல்கள்
16) பொருத்துக.
அ. அலந்தவர் – 1. உறவினர்
ஆ. செறாஅமை – 2. மறவாமை
இ. கிளை – 3. வெறுக்காமை
ஈ. மறாஅமை – 4. வறியவர்
A) 4, 2, 1, 3
B) 4, 1, 3, 2
C) 1, 3, 2, 4
D) 4, 3, 1, 2
விளக்கம்: அலந்தவர் – வறியவர்
செறாஅமை – வெறுக்காமை
கிளை – உறவினர்
மறாஅமை – மறவாமை
17) பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய் – இத்தொடரில் பண் என்ற சொல்லின் பொருள்?
A) இசை
B) பாடல்
C) மேகம்
D) இசைக்கருவி
விளக்கம்: பண் என்ற சொல்லின் பொருள் இசை ஆகும். இவ்வரிகள் சுந்தரரின் திருக்கேதாரப் பாடலில் இடம்பெற்றுள்ளது.
18) கலித்தொகையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
A) 100
B) 101
C) 80
D) 150
விளக்கம்: கலித்தொகையில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை தொகுத்தவர் நல்லந்துவனார்.
19) போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை – இவ்வரியில் உள்ள புணர்ந்தாரை என்ற சொல்லின் பொருள்?
A) அன்புடையோரை
B) உதவிசெய்தோரை
C) சான்றோரை
D) வறியோரை
விளக்கம்: இவ்வரியில் புணர்ந்தாரை என்பது அன்புடையோரை குறிக்கிறது. பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் என்பதே இவ்வரியின் பொருள் ஆகும்.
20) கண்ணின் ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய இதில் கனகச்சுனை என்ற சொல்லின் பொருள்?
A) பொன் வண்ண நீர்நிலை
B) குதிரை நீர் அருந்தும் நீர்நிலை
C) வளமையான நீர்நிலை
D இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: கனகச்சுனை என்றால் பொன் வண்ண நீர்நிலை என்று பொருள். கனகம் என்றால் பொன் என்று பொருள். சுனை என்றால் நீர்நிலை என்று பொருள்.
21) சரியாக பொருந்தாததைத் தேர்க.
A) பண் – இசை
B) கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
C) மத வேழங்கள் – மதகுதிரைகள்
D) முரலும் – முழங்கும்
விளக்கம்: மதவேழங்கள் என்றால் மத யானைகள் என்று பொருள். வேழம் என்றால் யானை என்று பொருள்.
களிறு – ஆண்யானை
பிடி – பெண் யானை
22) தமிழ்நாட்டில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன?
A) கரிக்கையூர்
B) செம்பியன் கண்டியூர்
C) ஆதிச்சநல்லூர்
D) கீழடி
விளக்கம்: மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டக் கலை. சிந்துசமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள்தாழிகள் கிடைத்துள்ளன.
23) ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல் – இவ்வரியில் ஆற்றுதல் என்ற சொல்லின் பொருள்?
A) வறியோர்
B) இல்வாழ்வு
C) பாதுகாத்தல்
D) அன்புடையோர்
விளக்கம்: ஆற்றுதல் என்றால் இல்வாழ்வு என்று பொருள். இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல் ஆகும்.
24) கலித்தொகை எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
A) 4
B) 3
C) 2
D) 5
விளக்கம்: கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது 5 பிரிவுகளை கொண்டது. அவை,
1. குறிஞ்சிக்கலி
2. முல்லைக்கலி
3. மருதக்கலி
4. நெய்தல்கலி
5. பாலைக்கலி
25) மூங்கில்களில் எத்தனை பிரிவுகள் உண்டு?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: மூங்கில்களில் மூன்று பிரிவுகள் உண்டு. அவை,
1. கல்மூங்கில்
2. மலைமூங்கில்
3. கூட்டு மூங்கில்
26) மண்ணமை முழவு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
A) சிலப்பதிகாரம்
B) மதுரைக்காஞ்சி
C) பொருநாராற்றுப்படை
D) பெரும்பாணாற்றுப்படை
விளக்கம்: மண்ணமை முழவு என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் பொருநராற்றுப்படை. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக்கப்பட்ட கருவியாகும். இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர்.
27) பண்பு எனப்படுவது_____________?
A) அலந்தவர்க்கு உதவுதல்
B) புணர்ந்தாரைப் பிரியாமை
C) பாடறிந்து ஒழுகுதல்
D) தன்கிளை செறாஅமை
விளக்கம்: பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் ஆகும். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் ஆகும்.
28) அரசரை அவரது________காப்பாற்றும்.
A) செங்கோல்
B) வெண்கொற்றக்குடை
C) குற்றமற்ற ஆட்சி
D) படை வலிமை
விளக்கம்: உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அரசரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் – திருக்குறள்
29) சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும்________தகுதி அறிந்து பேச வேண்டும்.
A) சொல்லின்
B) அவையின்
C) பொருளின்
D) பாடலின்
விளக்கம்: அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர் – திருக்குறள்
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.
30) பொருத்துக.
அ. நோன்றல் – 1. பகைவர்
ஆ. போற்றார் – 2. பொறுத்தல்
இ. பேதையார் – 3. பொறுமை
ஈ. பொறை – 4. அறிவற்றவர்
A) 2, 1, 3, 4
B) 2, 1, 4, 3
C) 1, 2, 3, 4
D) 4, 3, 1, 2
விளக்கம்: நோன்றல் – பொறுத்தல்
போற்றார் – பகைவர்
பேதையார் – அறிவற்றவர்
பொறை – பொறுமை
31) கலித்தொகை பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது?
1. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
2. கலிப்பா என்னும் பாவகையால் பாடப்பட்டது.
3. 100 பாடல்களைக் கொண்டது
4. குறிஞ்சிகலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி, பாலைக்கலி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
A) 1, 4 சரி
B) 2, 4 சரி
C) 1, 3, 4 சரி
D) 1, 2, 4 சரி
விளக்கம்: 1. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
2. கலிப்பா என்னும் பாவகையால் பாடப்பட்டது.
3. 150 பாடல்களைக் கொண்டது
4. குறிஞ்சிகலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி, பாலைக்கலி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
32) பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக் – இத்தொடரில் பழவெய் என்ற சொல்லின் பொருள்?
A) முதிர்ந்த மூங்கில்
B) பழைய மூங்கில்
C) இசை தரும் மூங்கில்
D) இளமையான மூங்கில்
விளக்கம்: பழவெய் என்ற சொல்லின் பொருள் முதிர்ந்த மூங்கில் என்பதாகும். பழ என்றால் முதிர்ந்த என்று பொருள்.
33) ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) கண் + ஓடாது
B) கண் + ணோடாது
C) க + ஓடாது
D) கண்ணோ + ஆடாது
விளக்கம்: கண்ணோடாது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கண் + ஓடாது.
34) கசடற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_____________
A) கச + டற
B) கசட + அற
C) கசடு + உற
D) கசடு + அற
விளக்கம்: கசடற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கசடு + அற. நிலைமொழியின் இறுதி எழுத்து டு. டு + ட்=உ. வருமொழியின் முதல் எழுத்து அ. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி உ என்னும் எழுத்து கெடும். கசட் + அற. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ட் + அ புணர்ந்து கசடற என்னும் சொல் கிடைக்கும்.
35) என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
A) என்றாய்ந்து
B) என்றுஆய்ந்து
C) என்றய்ந்து
D) என்ஆய்ந்து
விளக்கம்: என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் என்றாய்ந்து. நிலைமொழியின் இறுதி எழுத்தை பிரித்தால் ற் + உ. வருமொழியின் முதல் எழுத்து ஆ. உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி உ என்னும் எழுத்து கெடும். என் + ற் + ஆய்ந்து எனக்கிடைக்கும். பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ற் + ஆ=றா எனக் கிடைக்கும். என்று + ஆய்ந்து=என்றாய்ந்து
36) செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல் – இக்குறளில் குறிப்பிடப்படும் வினை என்னும் சொல்லின் பொருள்?
A) விளைவு
B) செயல்
C) திறன்
D) விளைச்சல்
விளக்கம்: இக்குறட்பாவில் வினை என்ற சொல்லின் பொருள் செயல் ஆகும். செயலாற்றும் திறன் உடையவரையும் செய்யவேண்டிய செயலையும் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும் என்பதே இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
37) பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை_______
A) கல்வெட்டுகள்
B) செப்பேடுகள்
C) பனையோலைகள்
D) மண்பாண்டங்கள்
விளக்கம்: பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை பனையோலைகள். இப்பனையோலைகளில் பலவகையான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
38) பானை__________ஒரு சிறந்த கலையாகும்
A) செய்தல்
B) வனைதல்
C) முடைதல்
D) சுடுதல்
விளக்கம்: பானை வனைதல் ஒரு சிறந்த கலையாகும். பானை வனைதல் என்று கூறதலே மரபு.
39) மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது__________
A) மட்டு + மல்ல
B) மட்டம் + அல்ல
C) மட்டு + அல்ல
D) மட்டும் + அல்ல
விளக்கம்: மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது மட்டும் + அல்ல.
40) அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை – இவ்வரியில் கிளை என்ற சொல்லின் பொருள்?
A) மரக்கிளை
B) உறவினர்
C) பிள்ளைகள்
D) பிரிவுகள்
விளக்கம்: இவ்வரியில் கிளை என்பது உறவினரைக் குறிக்கும். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் ஆகும்.
41) கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_________
A) கயிற்றுக்கட்டில்
B) கயிர்க்கட்டில்
C) கயிறுக்கட்டில்
D) கயிற்றுக்கட்டில்
விளக்கம்: கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கயிற்றுக்கட்டில்.
42) எங்கு கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன?
A) கரிக்கையூர்
B) செம்பியன் கண்டியூர்
C) ஆதிச்சநல்லூர்
D) கீழடி
விளக்கம்: நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் தமிழருக்கும் மண்பாண்டக்கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் ஆகும்.
43) நம்பியாரூரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரகர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: நம்பியாரூரர் என்று அழைக்கப்படுபவர் சுந்தரர். இவர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். இவர் அருளிய பாடல்கள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன
44) கூற்றுகளை ஆராய்க.
1. ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது – கலைக்களஞ்சியம்
2. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது – அகராதி
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது – அகராதி
2. ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது – கலைக்களஞ்சியம்
45) காலத்தை அறிவிக்க பயன்படுத்தப்படும் முரசு வகை?
A) நாழிகை முழவு
B) காலை முழவு
C) மாக்கண் முரசம்
D) A மற்றும் B
விளக்கம்: காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது முழவு. ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவியாகும். இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர். மண்ணமை முழவு எனப் பொருநராற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.
46) மண்பாண்டங்கள் செய்யப்பயன்படும் சக்கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
A) திருகை
B) திருவை
C) குருவை
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: பானை செய்யும் சக்கரத்தை நாம் திருவை என்கிறோம். திருவையை வேகமாகச் சுழலச்செய்து அதன் நடுவில் மண்ணை வைத்துக் கையால் அணைத்துப் பிடித்து மண்பாண்டங்களை உருவாக்குவோம். உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்துக் காயவைப்போம்.
47) ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை – இக்குறட்பாவில் கண்ணோடாது என்னும் சொல்லின் பொருள்?
A) கண்ணால் ஆராய்தல்
B) ஒருபக்கசார்பின்மை
C) கண் கொண்டு பார்த்தல்
D) சிறந்த ஆட்சிபுரிதல்
விளக்கம்: கண்ணோடாது என்ற சொல்லின் பொருள் ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நிற்றல் என்பதே இதன் பொருளாகும்.
48) புல்லங்குழலில் எத்தனை ஸ்வரங்கள் உண்டாக்க முடியும்?
A) 5
B) 4
C) 6
D) 7
விளக்கம்: புல்லாங்குழலில் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகள் இருக்கும்
49) இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக்கெடும் – இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள்?
A) வேந்தன்
B) இறைவன்
C) மக்கள்
D) அமைச்சர்
விளக்கம்: இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள் வேந்தன் என்பதாகும். நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.
50) பொருத்துக
அ. பின்னுதல் – 1. Rite
ஆ. கொம்பு – 2. Artisan
இ. கைவினைஞர் – 3. Horn
ஈ. சடங்கு – 4. Knitting
A) 4, 3, 2, 1
B) 4, 3, 2, 1
C) 4, 1, 3, 2
D) 4, 3, 2, 1
விளக்கம்: பின்னுதல் – Knitting
கொம்பு – Horn
கைவினைஞர் – Artisan
சடங்கு – Rite
51) அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – இதில் பேதையார் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?
A) அறிவற்றவர்
B) அறிவுடையவர்
C) உறவினர்
D) பகைவர்
விளக்கம்: இவ்வரியில் பேதையார் என்றால் அறிவற்றவர் என்று பொருள். இதன் எதிர்ச்சொல் அறிவுடையோர் என்பதாகும். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல் ஆகும்.
52) மூவர் தேவாரத்தை தொகுத்தவர்?
A) நம்பியாண்டார் நம்பி
B) சேக்கிழார்
C) பதுமனார்
D) நாதமுனி
விளக்கம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
53) கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?
A) பானை செய்தல்
B) பானை முடைதல்
C) பானை வனைதல்
D) பானை சுற்றுதல்
விளக்கம்: பானை செய்தலை பானை வனைதல் என்று சொல்லுதல் மரபு. கூடை முடைதல் என்று சொல்வோம்.
54) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) பாண்டில்
B) சேமங்கலம்
C) சால்ரா
D) திமிலை
விளக்கம்: பாண்டில், சால்ரா, ஜால்ரா ஆகிய அனைத்தும் ஒரே கருவியை குறிக்கும்.
சேமங்கலம் என்பது சேகண்டியை குறிக்கும். இவை அனைத்தும் கஞ்சக்கருவி. ஆனால் திமிலை என்பது தோல்கருவி.
55) உடுக்கை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. பெரிய உடுக்கையை தவண்டை என்பர்.
2. சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்பர்.
3. தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம்.
4. இறைவழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது.
A) 1, 2, 3 சரி
B) 1, 2, 4 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. பெரிய உடுக்கையை தவண்டை என்பர்.
2. சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்பர்.
3. தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம்.
4. இறைவழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது.
56) கூற்றுகளை ஆராய்க.
1. ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்
2. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர் அல்லது சொற்றொடர் எனப்படும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்
2. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர் அல்லது சொற்றொடர் எனப்படும்.
57) இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக்கெடும் – இக்குறட்பாவில் உரை கடுகி என்ற சொல்லின் பொருள்?
A) கடுமையான சொல்
B) வாழ்நாள் குறைந்து
C) விரைந்து அழிதல்
D) குடிமக்களால் தூற்றப்படும்
விளக்கம்: உறை கடுகி என்ற சொல்லின் பொருள் வாழ்நாள் குறைந்து என்பதாகும். நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.
58) அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை – இதில் செறாஅமை என்ற சொல்லின் பொருள்?
A) மறவாமை
B) வெறுக்காமை
C) மறவாமை
D) பொறுமை
விளக்கம்: செறாஅமை என்றால் வெறுக்காமை என்று பொருள். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் என்று கலித்தொகை வாயிலாக அறிகிறோம்.
59) ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை – இக்குறட்பாவில் ஓர்ந்து என்னும் சொல்லின் பொருள்?
A) ஒருபக்கம் சாராது
B) நடுவுநிலையில் இருத்தல்
C) நன்கு ஆராய்ந்து
D) சிறந்த ஆட்சி
விளக்கம்: ஓர்ந்து என்ற சொல்லின் பொருள் எதையும் நன்கு ஆராய்ந்து செய்தல் என்பதாகும். எதையும் நன்க ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும் என்பது இக்குறட்பாவின் விளக்கம் ஆகும்.
60) இசையை எத்தனை வகையாகப்பிரிப்பர்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: இசையை இரண்டு வகையாகப்பிரிப்பர். அவை,
1. குரல்வழி இசை
2. கருவிவழி இசை
61) தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – என்ற பாடல் வரியை எழுதியவர்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரசர்
C) மாணிக்கவாசகர்
D) சுந்தரர்
விளக்கம்: தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – என்ற பாடல் வரியை எழுதியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இவரின் தேவாரப்பாடலில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன. இவரின் பாடல்கள் முதல், இரண்டு, மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
62) செறாஅமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
A) செய்யுளிசை அளபெடை
B) சொல்லிசை அளபெடை
C) இன்னிசை அளபெடை
D) உயிரளபெடை
விளக்கம்: செறாஅமை என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு செய்யுளிசை அளபெடை ஆகும். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர். செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிர் எழுத்துக்கள் அளப்பெடுத்தால் அது உயிரளபெடை எனப்படும். இது மூன்று வகைப்படும். அவை,
1. செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
2. சொல்லிசை அளபெடை
3. இன்னிசை அளபெடை
63) செறிவு எனப்படுவது__________?
A) தன்கிளை செறாஅமை
B) பேதையார் சொல்நோன்றல்
C) கூறியது மறாஅமை
D) மறை பிறர் அறியாமை
விளக்கம்: செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை. செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
64) கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) பொருநராற்றுப்படை
C) புறநானூறு
D) மதுரைக்காஞ்சி
விளக்கம்: கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் – புறநானூறு. இவ்வரிகள் முழவு பற்றி கூறுகிறது. ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்த முரசு முழவு எனப்படும். காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
65) பெரிய புராணத்தை எழுதியவர்?
A) நம்பியாண்டார் நம்பி
B) சுந்தரர்
C) அப்பர்
D) சேக்கிழார்
விளக்கம்: பெரியபுராணத்தை எழுதியவர் சேக்கிழார். இது 12-ஆம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. இதன் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும்.
66) திருக்குறள் படித்தாள் என்பது எவ்வகைத் தொகைநிலைத் தொடர்?
A) வேற்றுமைத்தொகை
B) வினைத்தொகை
C) பண்புத்தொகை
D) அன்மொழித்தொகை
விளக்கம்: இத்தொடர் திருக்குறளைப் படித்தாள் என விரிந்து நின்று பொருள் தருகிறது. இரு சொற்களுக்கும் இடையே ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத் தொகை என்பர்.
67) யாழ் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப்போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக்கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினர்.
2. யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப்போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக்கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினர்.
2. யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது
68) திமிலை எம்மரத்தினால் செய்யப்படும்?
A) கருங்காலி
B) சந்தனம்
C) பலாமரம்
D) செங்காலி
விளக்கம்: திமிலை என்ற தோல்கருவி பலாமரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் ஒரு இசைக்கருவி.
69) இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் – இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள்?
A) இறைவன்
B) அரசன்
C) அமைச்சர்
D) மக்கள்
விளக்கம்: இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள் அரசன் என்பதாகும். உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும் என்பதே இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
70) எந்த வகை மூங்கில் கைவினைப் பொருள்கள் செய்வதற்கு ஏற்றது?
A) கல்மூங்கில்
B) மலைமூங்கில்
C) கூட்டுமூங்கில்
D) காட்டுமூங்கில்
விளக்கம்: மூங்கில்கள் மூன்று வகைப்படும். அவை
1. கல்மூங்கில்
2. மலைமூங்கில்
3. கூட்டு மூங்கில்
இதில் கூட்டு மூங்கில்கள் கைவினைப்பொருள்கள் செய்ய ஏற்றது.
71) பொருத்துக (பாய் பற்றியது)
அ. குழந்தைகள் படுக்க – 1. பட்டுப்பாய்
ஆ. உட்கார்ந்து உண்ண – 2. திண்ணைப்பாய்
இ. உட்கார, படுக்க – 3. பந்திப்பாய்
ஈ. திருமணம் – 4. தடுக்குப்பாய்
A) 1, 3, 2, 4
B) 1, 4, 2, 3
C) 3, 2, 4, 1
D) 4, 3, 2, 1
விளக்கம்: குழந்தைகள் படுக்க – தடுக்குப்பாய்
உட்கார்ந்து உண்ண – பந்திப்பாய்
உட்கார, படுக்க – திண்ணைப்பாய்
திருமணம் – பட்டுப்பாய்
72) அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – இதில் நோன்றல் என்ற சொல்லின் பொருள்?
A) வெறுத்தல்
B) பகைத்தல்
C) பொறுத்தல்
D) மறுத்தல்
விளக்கம்: நோன்றல் என்றால் பொறுத்தல் என்று பொருள். அறிவு என்பது அறிவற்றவர் சொல்லும் சொல்லை பொறுத்துக்கொள்ளுதல் ஆகும்.
73) கூற்றுகளை ஆராய்க(பிரம்பு) .
1. பிரம்பு என்பது செடி வகையைச் சார்ந்தது
2. இதன் தாவரவியல் பெயர் – கலாமஸ் ரொடாங்
3. இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் செழித்து வளரும்.
4. தமிழகத்தில் இப்போது இது அதிக இடங்களில் வளரக்கப்படுகிறது.
5. நமது தேவைக்காக அந்தமான், அசாம், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.
A) அனைத்தும் சரி
B) 1, 2, 4 தவறு
C) 1, 4 தவறு
D) 1, 5 தவறு
விளக்கம்: 1. பிரம்பு என்பது கொடி வகையைச் சார்ந்தது
2. இதன் தாவரவியல் பெயர் – கலாமஸ் ரொடாங்
3. இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் செழித்து வளரும்.
4. தமிழகத்தில் இப்போது இது அருகிவிட்டது.
5. நமது தேவைக்காக அந்தமான், அசாம், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.
74) திருத்தொண்டர் தொகை என்னும் நூலை எழுதியவர்?
A) மாணிக்க வாசகர்
B) திருநாவுக்கரசர்
C) சுந்தரர்
D) சேக்கிழார்
விளக்கம்: திருத்தொண்டர் தொகை என்னும் நூலை எழுதியவர் சுந்தரர். இவரின் பாடல்கள் 7ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
75) இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக்கெடும் – இக்குறட்பாவில் உரை கடுகி என்ற சொல்லின் பொருள்?
A) கடுமையான சொல்
B) வாழ்நாள் குறைந்து
C) விரைந்து அழிதல்
D) குடிமக்களால் தூற்றப்படும்
விளக்கம்: உறை கடுகி என்ற சொல்லின் பொருள் விரைந்து அழிவான் என்பதாகும். நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்
76) தமிழ்நாட்டின் மாநில மரம்?
A) தென்னை
B) மாமரம்
C) பனை
D) பலாமரம்
விளக்கம்: தமிழகத்தின் மாநில மரம் – பனை
மாநில விலங்கு – வரையாடு
மாநில பறவை – மரகதப்புறா
மாநில பூ – செங்காந்தாள் பூ
77) சேக்கிழார் பெரியபுராணத்தை எந்த நூலை அடிப்படையாக கொண்டு எழுதினார்?
A) திருத்தொண்டர் புராணம்
B) திருத்தொண்டர் தொகை
C) திருவிளையாடற் புராணம்
D) கந்தபுராணம்
விளக்கம்: சேக்கிழார் சுந்தரரின் திருத்தொண்டர்த் தொகையை முதல் நூலாகக் கொண்டே பெரியபுராணம் என்னும் நூலை எழுதினார். இது 12-ம் திருமுறையாக இடம்பெற்றுள்ளது. இதன் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும்.
78) பொருத்துக
அ. கைவினைப்பொருள்கள் – 1. Crafts
ஆ. புல்லாங்குழல் – 2. Flute
இ. முரசு – 3. Drum
ஈ. கூடைமுடைதல் – 4. Basketry
A) 1, 2, 3, 4
B) 1, 3, 2, 4
C) 4, 3, 1, 2
D) 1, 4, 2, 3
விளக்கம்: கைவினைப்பொருள்கள் – 1. Crafts
புல்லாங்குழல் – 2. Flute
முரசு – 3. Drum
கூடைமுடைதல் – 4. Basketry
79) நிறை எனப்படுவது_________?
A) தன்கிளை செறாஅமை
B) பேதையார் சொல்நோன்றல்
C) கூறியது மறாஅமை
D) மறை பிறர் அறியாமை
விளக்கம்: நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை. நிறை எனப்படுவது மறை பொருளைப் பிறர் அறியாமல் காத்தல் ஆகும்.
80) பாணி என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது?
A) சேகண்டி
B) கொம்பு
C) சாலரா
D) திமிலை
விளக்கம்: பாணி என்று அழைக்கப்படும் இசைக்கருவி திமிலை ஆகும். இது பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி ஆகும் .
81) மிகவும் பழமையான யாழ் வகை?
A) பேரியாழ்
B) செங்கோட்டியாழ்
C) மகரயாழ்
D) A மற்றும் B
விளக்கம்: வேட்டுவர் இறுகக் கட்டிய தங்கள் வில் நாணில் இருந்து எழும் ஓசையை உணர்ந்தனர். வில்லைப்போன்ற வளைவு உடையதும் நரம்புகளால் ஆனதும் விரலால் வருடக் கூடியதுமான கருவி ஒன்றை உருவாக்கினர். இதன் அடிப்படையில் உருவான கருவியே யாழ் ஆகும். பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை ஆகும்.
82) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) சாலரா
B) பாண்டில்
C) ஜால்ரா
D) பணிலம்
விளக்கம்: சாலரா என்பது ஒரு வகை கஞ்சக்கருவி. கஞ்சக்கருவி என்றால் ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுவது என்று பொருள். இதன் வேறுபெயர்கள் ஜால்ரா, பாண்டில். பணிலம் என்பது சங்கைக் குறிக்கும்.
83) தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
A) 7
B) 6
C) 5
D) 9
விளக்கம்: தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை
1. வேற்றுமைத் தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை
84) இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் – இக்குறட்பாவில் முறைகாக்கும் என்ற சொல்லின் பொருள்?
A) மன்னன்
B) மக்களின் வாழ்வு முறை
C) குற்றமற்ற ஆட்சி
D) ஒருபக்கசார்ப்பின்மை.
விளக்கம்: இங்கு முறை என்பது குற்றமற்ற ஆட்சியை குறிக்கிறது. உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும் என்பதே இக்குறட்பாவின் பொருள் ஆகும்.
85) பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் – இதில் பொறை என்ற சொல்லின் பொருள்?
A) பகை
B) பொறுமை
C) சிறுமை
D) எளிமை
விளக்கம்: பொறை என்றால் பொறுமை என்று பொருள். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் கலித்தொகை. இந்நூலில் 150 பாடல்கள் உள்ளன.
86) சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) இராமாயணம்
B) பெரியபுராணம்
C) கலித்தொகை
D) பரிபாடல்
விளக்கம்: இசைக்கருவிகள் பற்றி கூறும் மேற்கண்ட பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் பெரியபுராணம். இந்நூலை எழுதியவர் சேக்கிழார். இந்நூலின் மற்றொரு பெயர் திருத்தொண்டர் புராணம். இந்நூல் சுந்தரரின் திருத்தொண்டர்தொகை என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
87) பொருத்துக.
அ. பேரியாழ் – 1. 19 நரம்புகள்
ஆ. மகரயாழ் – 2. 14 நம்புகள்
இ. சகோடயாழ் – 3. 21 நரம்புகள்
A) 1, 2, 3
B) 3, 2, 1
C) 3, 1, 2
D) 2, 3, 1
விளக்கம்: பேரியாழ் – 21 நரம்புகள்
மகரயாழ் – 19 நரம்புகள்
சகோடயாழ் – 14 நரம்புகள்
88) இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி(மறைந்து) வருமானால் அதனை____________என்பர்.
A) தொகாநிலைத் தொடர்
B) தொகைநிலைத் தொடர்
C) ஆகுபெயர்
D) பொருள்கோள்
விளக்கம்: இரு சொற்களுக்கிடையே உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி(மறைந்து) வருமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்பர். தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை, வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழித் தொகைகள் ஆகும்.
89) குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் – என்று கூறும் நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) பரிபாடல்
D) திருக்குறள்
விளக்கம்: குழந்தையின் மழலைச் சொல்லை கேளாதவரே குழலின் ஓசையும், யாழின் ஓசையும் இனிது என்று கூறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
90) இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A) பாணர்
B) விறலியர்
C) கூத்தர்
D) இவர்களில் யாருமில்லை
விளக்கம்: இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர். இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள் ஆகும். இசைக்கருவிகள் குரல் இசைக்கு மட்டும் பயன்படுபவை, நாடகத்திற்கு மட்டும் பயன்படுபவை, இரண்டிற்கும் பயன்படுபவை எனப் பலவாகத் தோன்றி கிளைத்தன.
91) சங்கு பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
1. இது ஓர் இயற்கைக் கருவி.
2. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர்.
3. சங்கின் ஒலியை சங்கநாதம் என்பர்
4. இலக்கியங்களில் இதனை படிலம் என்று குறிப்பிட்டுள்ளனர்
A) 1, 2, 3 சரி
B) 1, 2, 4 சரி
C) 2, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இது ஓர் இயற்கைக் கருவி.
2. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர்.
3. சங்கின் ஒலியை சங்கநாதம் என்பர்
4. இலக்கியங்களில் இதனை பணிலம் என்று குறிப்பிட்டுள்ளனர்
92) தக்காங்க நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து – இக்குறட்பாவில் தக்காங்கு என்ற சொல்லின் பொருள்?
A) செய்த குற்றம்
B) குற்றமற்ற ஆட்சி
C) தண்டித்தல்
D) அரசனின் கடமை
விளக்கம்: தக்காங்கு என்பது ஒருவர் செய்த குற்றம் என்று பொருள். ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசின் கடமையாகும் என்பது இக்குறட்பாவின் பொருள்.
93) பொருத்துக.
அ. தோல்கருவிகள் – 1. சாலரா, சேகண்டி
ஆ. நரம்புக்கருவிகள் – 2. முழவு, முரசு
இ. காற்றுக்கருவிகள் – 3. யாழ், வீணை
ஈ. கஞ்சக்கருவிகள் – 4. குழல், சங்கு
A) 1, 4, 3, 2
B) 4, 2, 3, 1
C) 3, 4, 2, 1
D) 2, 3, 4, 1
விளக்கம்: தோல்கருவிகள் – முழவு, முரசு
நரம்புக்கருவிகள் – யாழ், வீணை
காற்றுக்கருவிகள் – குழல், சங்கு
கஞ்சக்கருவிகள் – சாலரா, சேகண்டி
94) பறை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி
2. பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க ஆகோட்பறையை முழக்கினர்.
3. பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது கோட்பறையை முழக்கினர்
4. இக்காலத்தில் தப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
A) அனைத்தும் சரி
B) 1, 4 சரி
C) 2, 3 சரி
D) 1, 3, 4 சரி
விளக்கம்: 1. விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி
2. பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க ஆகோட்பறையை முழக்கினர்.
3. பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது கோட்பறையை முழக்கினர்
4. இக்காலத்தில் தப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனை முழக்கிக்கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
95) உடுக்கைப்பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இடைசுருங்கிய ஒரு கைப்பறை
2. இதன் உடல் செம்பால் ஆனது.
3. வாய்ப்பகுதி மாட்டுத்தோலால் போர்த்தப்பட்டிருக்கும்
4. இடது வாயின் மீதுதான் அடிப்பர்.
A) 1, 3 சரி
B) 1, 3, 4 சரி
C) 1 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இடைசுருங்கிய ஒரு கைப்பறை
2. இதன் உடல் பித்தளையால் ஆனது.
3. வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் போர்த்தப்பட்டிருக்கும்
4. வலது வாயின் மீதுதான் அடிப்பர்.
96) தொகைநிலைத் தொடரில் பொருந்தாதது எது?
A) வேற்றுமைத்தொகை
B) வினைத்தொகை
C) உம்மைத்தொகை
D) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
விளக்கம்: தொகை நிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை,
1. வேற்றுமைத் தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது பண்புத்தொகையின் வகை ஆகும். இது தொகை நிலைத் தொடரில் வரிசைப்படுத்தப்படவில்லை.
97) யாழ் போன்ற அமைப்பையுடைய கருவி_________
A) வீணை
B) திமிலை
C) கொம்பு
D) குடமுழா
விளக்கம்: யாழ் போன்ற அமைப்புடைய நரம்புக்கருவி வீணையாகும். யாழின் வடிவமே மெல்ல மெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணையாக உருமாறியது என்பர்.
98) பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் – இதில் போற்றார் என்ற சொல்லின் பொருள்?
A) பகைவர்
B) பொறுமை உடையவர்
C) உறவினர்
D) அறிவற்றவர்
விளக்கம்: போற்றார் என்றால் பொறுமை உடையவர் என்று பொருள். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் ஆகும்.
99) கூற்றுகளை ஆராய்க.
1. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
2. இந்நூலைத் தொகுத்தவர் நாதமுனி
3. கேதாரப்பதிகப்பாடலை பாடியவர் சுந்தரர்
4. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது
A) 1, 2, 3 சரி
B) 1, 2, 4 சரி
C) 1, 3, 4 சரி
D) 1, 2, 3, 4 சரி
விளக்கம்: 1. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
2. இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
3. கேதாரப்பதிகப்பாடலை பாடியவர் சுந்தரர்
4. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது
100) தக்காங்க நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து – இக்குறட்பாவில் தலைசெல்லா என்ற சொல்லின் பொருள்?
A) செய்த குற்றம்
B) குற்றமில்லா ஆட்சி
C) அரசனின் தண்டணை
D) மீண்டும் குற்றம் செய்யாதவாறு
விளக்கம்: தலைசெல்லா என்பது ஒருவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு மாற்றுதல் என்று பொருள். ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும் என்பது இக்குறட்பாவின் பொருள்.
101) சுந்தரரின் தேவாரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
A) 4
B) 7
C) 8
D) 10
விளக்கம்: சுந்தரரின் தேவாரப் பாடல்கள் 7-ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
1, 2, 3 திருமுறைகள் – திருஞானசம்பந்தர்
4, 5, 6 திருமுறைகள் – திருநாவுக்கரசர்
7 – சுந்தரர்
8 – மாணிக்கவாசகர்
9 – 9 பேர் பாடிய பாடல்கள்
10 – திருமூலர் (திருமந்திரம்)
102) முறை எனப்படுவது____________?
A) தன்கிளை செறாஅமை
B) பேதையார் சொல்நோன்றல்
C) கூறியது மறாஅமை
D) கண்ஓடாது உயிர் வெளவல்
விளக்கம்: முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வெளவல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் ஆகும்.
103) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.
A) இரண்டாம் வேற்றுமை – ஐ
B) மூன்றாம் வேற்றுமை – ஆல்
C) ஐந்தாம் வேற்றுமை – அது
D) ஏழாம் வேற்றுமை – கண்
விளக்கம்: இரண்டாம் வேற்றுமை – ஐ
மூன்றாம் வேற்றுமை – ஆல்
நான்காம் வேற்றுமை – கு
ஐந்தாம் வேற்றுமை – இன்
ஆறாம் வேற்றுமை – அது
ஏழாம் வேற்றுமை – கண்
104) நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள் – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) அகநானூறு
B) பரிபாடல்
C) கலித்தொகை
D) புறநானூறு
விளக்கம்: மேற்ச்சொன்ன வரிகள் இசைப்பற்றியது ஆகும். இவ்வரிகள் இடம்பெற்றுள் நூல் புறநானூறு ஆகும்.
105) வீணையில் மொத்தம் எத்தனை நரம்புகள் உள்ளன?
A) 5
B) 14
C) 19
D) 7
விளக்கம்: வீணையில் மொத்தம் 7 நரம்புகள் உள்ளன. இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும் வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் இசை எழுப்புவர்.
106) பரிவாதினி என்னும் வீணை யாருடைய காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது?
A) நரசிம்மவர்மன்
B) மகேந்திரவர்மன்
C) ராஜராஜசோழன்
D) ஜடாவர்ம சுந்தர பாண்டியன்
விளக்கம்: பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வீணையில் 7 நரம்புகள் இருக்கும். நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை அதன் குடம், தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்புகின்றன.
107) கொன்றைக்குழல், முல்லைக் குழல், ஆம்பல்குழல் இருந்ததாக கூறும் நூல்?
A) மணிமேகலை
B) பரிபாடல்
C) கலித்தொகை
D) சிலப்பதிகாரம்
விளக்கம்: கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிரகாரம் கூறுகிறது. இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள்.
108) பொருத்துக.
அ. ஆற்றதல் – 1. தன்கிளை செறாஅமை
ஆ. போற்றுதல் – 2. பாடறிந்து ஒழுகுதல்
இ. பண்பு – 3. புணர்ந்தாரைப் பிரியாமை
ஈ. அன்பு – 4. அலந்தவர்க்கு உதவுதல்
A) 4, 2, 3, 1
B) 4, 3, 2, 1
C) 4, 1, 2, 3
D) 4, 2, 3, 1
விளக்கம்: ஆற்றதல் – அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் – புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு – பாடறிந்து ஒழுகுதல்.
அன்பு – தன்கிளை செறாஅமை
109) இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை,
1. தோல்கருவி
2. நரம்புக்கருவி
3. காற்றுக்கருவி
4. கஞ்சக்கருவி
தோல்கருவி – விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள்(எ.கா) . முழவு முரசு
நரம்புக்கருவிகள் – நரம்பு அல்லது தந்திகளை உடையவை(எ.கா) . யாழ், வீணை
காற்றுக்கருவிகள் – காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை (எ.கா) . குழல் சங்கு
கஞ்சக்கருவிகள் – ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை (எ.கா) . சாலரா சேகண்டி
110) புல்லாங்குழலின் வேறுபெயர்?
A) சந்தனக்குழல்
B) செங்காலிகுழல்
C) கருங்காலிகுழல்
D) வேய்ங்குழல்
விளக்கம்: புல்லாங்குழலின் வேறு பெயர் வேய்ங்குழல் என்பதாகும். வேய் என்றால் மூங்கில் என்று பொருள். மூங்கில் மரத்தால் செய்யப்படுவதால் இதனை வேய் குழல் என்று கூறுவர். மூங்கில் மட்டுமின்றி சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.
111) குடமுழா என்பது எத்தனை முகங்களை உடைய ஒரு இசைக்கருவி?
A) 4
B) 2
C) 5
D) 7
விளக்கம்: குடமுழா என்பது ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது. இதன் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகை இசைப்பிறக்கும்.
112) கொம்பு என்பது ஒரு வகை?
A) தோல்கருவி
B) காற்றுக்கருவி
C) கஞ்சக்கருவி
D) நரம்புக்கருவி
விளக்கம்: மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. கொம்பு என்பது ஒரு வகைக் காற்றுக்கருவியாகும்.
113) பொற்சிலை என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?
A) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
B) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
C) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
D) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
விளக்கம்: பொற்சிலை என்ற சொல்லை பொன்னால் ஆகிய சிலை என்று பொருள் கொள்ள வேண்டும். இங்கு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபும், அதனுடன் ஆகிய என்ற சொல்லும் வந்துள்ளது. எனவே இதன் இலக்கணக்குறிப்பு மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.
114) பணிலம் என்று குறிப்பிடப்படுவது?
A) சக்கரம்
B) சங்கு
C) வில்
D) அம்பு
விளக்கம்: பணிலம் என்றால் அது சங்கை குறிக்கும். இலக்கியங்களில் சங்கை பணிலம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது ஒரு இயற்கைக் கருவி ஆகும்.
115) காலம் கரந்த பெயரெச்சம்__________
A) பண்புத்தொகை
B) வினைத்தொகை
C) அன்மொழித்தொகை
D) உம்மைத்தொகை
விளக்கம்: காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பது.
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – (நன்னூல் 304)
116) மத்தளம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
A) மத்து + தாளம்
B) மத்து + தளம்
C) மத் + தளம்
D) ம + அத்தளம்
விளக்கம்: மத்தளம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது மத்து + தளம் ஆகும். இங்கு மத்து என்றால் ஓசையின் பெயர். இசைக்கருவிகளுக்கெல்லாம் தளம் அடிப்படை.
117) குடமுழா பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. ஐந்து முகங்களை கொண்ட இதன் நடு வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும்.
2. இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும். சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகை முழவு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. ஐந்து முகங்களை கொண்ட இதன் நடு வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும்.
2. இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும். சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகை முழவு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
118) பொருத்துக.
அ. அறிவு – 1. மறை பிறர் அறியாமை
ஆ. செறிவு – 2. பேதையார் சொல் நோன்றல்
இ. நிறை – 3. கண்ஓடாது உயிர் வெளவல்
ஈ. முறை – 4. கூறியது மறாஅமை
A) 2, 3, 4, 1
B) 1, 2, 3, 4
C) 2, 4, 3, 1
D) 2, 4, 1, 3
விளக்கம்: அறிவு – பேதையார் சொல் நோன்றல்
செறிவு – கூறியது மறாஅமை
நிறை – மறை பிறர் அறியாமை
முறை – கண்ஓடாது உயிர் வெளவல்
119) புல்லாங்குழல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1. இதன் வேறுபெயர் வேய்ங்குழல்
2. ஐந்து சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும்
3. இது சுமார் பதினைந்து விரல் நீளம் உடையதாக இருக்கும்.
4. மூங்கில் மட்டுமின்றி செங்காலி, கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.
A) 1, 2
B) 2, 3
C) 1, 3
D) 1, 4
விளக்கம்: 1. இதன் வேறுபெயர் வேய்ங்குழல்
2. ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும்
3. இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும்.
4. மூங்கில் மட்டுமின்றி செங்காலி, கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன.
120) கொம்புகள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இக்காலத்தில் கொம்புகள் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படுகின்றன.
2. இதனை வேடர்கள் வேட்டையின் போது ஊதுவர்.
3. கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும், மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர்.
4. ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.
A) 1, 2, 3 சரி
B) 1, 2, 4 சரி
C) 1, 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. இக்காலத்தில் கொம்புகள் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படுகின்றன.
2. இதனை வேடர்கள் வேட்டையின் போது ஊதுவர்.
3. கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும், மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர்.
4. ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.
121) மாட்டுக்கொட்டகை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
A) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
B) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
C) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
D) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
விளக்கம்: மாட்டுக் கொட்டகை என்ற தொடரை மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை என்று பொருள் கொள்ள வேண்டும். இதில் கு என்ற நான்காம் வேற்றுமை உருபும் கட்டப்பட்ட என்ற சொல்லும்(பயன்) இடம்பெற்றிருப்பதால் நான்காம் வேற்றுமைத்தொகை எனலாம்.
122) கூற்று: குடமுழா பஞ்மகா சப்தம் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: ஐந்து வாய்கொண்ட இதில் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும்
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
விளக்கம்: 1. குடமுழா பஞ்மகா சப்தம் என்று அழைக்கப்படுகிறது.
2. ஐந்து வாய்கொண்ட இதில் ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும்
123) கூற்றுகளை ஆராய்க(சுந்தரர் பற்றி)
1. தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
2. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
3. இவர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஆறாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
4. இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் திருத்தொண்டர்த் தொகையை இயற்றினார்.
A) 1, 2 சரி
B) 3, 4 சரி
C) 1, 2, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
2. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
3. இவர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
4. இவர் இயற்றிய திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் திருத்தொண்டர்த் புராணத்தை இயற்றினார்.
124) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.
A) பொறை எனப்படுவது – போற்றாரைப் பொறுத்தல்
B) செறிவு எனப்படுவது – மறைபிறர் அறியாமை
C) அன்பு எனப்படுவது – தன்கிளை செறாஅமை
D) முறை எனப்படுவது – கண்ஓடாது உயிர் வெளவல்
விளக்கம்: பொறை எனப்படுவது – போற்றாரைப் பொறுத்தல்
செறிவு எனப்படுவது – கூறியது மறாஅமை
அன்பு எனப்படுவது – தன்கிளை செறாஅமை
முறை எனப்படுவது – கண்ஓடாது உயிர் வெளவல்
125) சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையான்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் – இப்பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்?
A) திருப்பாவை
B) திருவெம்பாவை
C) திருவாசகம்
D) திருமந்திரம்
விளக்கம்: சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையான்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் என்ற பாடலடிகள் திருமால் பற்றியதாகும். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாவை.
126) ஆடுகொடி, வளர்தமிழ் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு?
A) பண்புத்தொகை
B) வினைத்தொகை
C) அன்மொழித்தொகை
D) உம்மைத்தொகை
விளக்கம்: இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே கொடி, தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலம் காட்டாத பெயரெச்சங்களாக உள்ளன. அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன. மேலும் இவை முறையே ஆடிய கொடி, ஆடுகின்றன கொடி, ஆடும்கொடி எனவும், வளர்ந்த தமிழ், வளர்கின்றன தமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன. எனவே இவை வினைத்தொகை.
127) மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல்?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) பரிபாடல்
D) மதுரைக்காஞ்சி
விளக்கம்: மாக்கண் முரசம் என்று குறிப்பிடும் நூல் மதுரைக்காஞ்சி. முப்பத்தாறு வகையான முரசுகள் இருந்ததாக குறிப்பிடும் நூல் சிலப்பதிகாரம்.
128) பண்புத்தொகையில் மறைந்து வரும் பண்புருகள்?
A) ஆன
B) ஆகிய
C) A மற்றும் B
D) ஆக
விளக்கம்: பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
129) பின்வருவனவற்றுள் எது இயற்கைக் கருவி?
A) வீணை
B) சங்கு
C) புல்லாங்குழல்
D) திமிலை
விளக்கம்: மேற்கண்ட நான்கு இசைக் கருவிகளில் சங்கு மட்டும் இயற்கை கருவியாகும். மீதமுள்ள அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக்கொண்ட செய்யப்பட்டவை ஆகும்.
130) தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
A) 5
B) 7
C) 9
D) 10
விளக்கம்: தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும்
1. எழுவாய்த்தொடர்
2. விளித்தொடர்
3. வினைமுற்றுத்தொடர்
4. பெயரெச்சத்தொடர்
5. வினையெச்சத்தொடர்
6. வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
7. இடைச்சொல் தொடர்
8. உரிச்சொல் தொடர்
9. அடுக்குத்தொடர்
131) வெண்ணிலவு என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
A) பண்புத்தொகை
B) வினைத்தொகை
C) அன்மொழித்தொகை
D) உம்மைத்தொகை
விளக்கம்: இத்தொடரில் உள்ள வெண்மை என்னும் பண்பு நிலவு என்னும் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு என்னும் பொருளைத் தருகின்றன.
132) செம்மரம் என்னும் சொல்__________த்தொகை
A) வினை
B) பண்பு
C) அன்மொழி
D) உம்மை
விளக்கம்: செம்மரம் என்னும் சொல் செம்மையான மரம் என்று பொருள் தரும். இருசொற்களுக்கிடைய பண்புருபான ஆன என்பது மறைந்து வந்துள்ளதால், இது பண்புத்தொகை எனப்படும்.
133) கண்ணா வா! என்பது________த் தொடர்
A) எழுவாய்
B) விளி
C) வினைமுற்று
D) வேற்றுமை
விளக்கம்: கண்ணா வா! என்பது விளித் தொடர். கண்ணா என்பது விளிப்பெயர் ஆகும். இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளித்தொடர் எனப்படும்.
134) பனைமரம் என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு?
A) அன்மொழித்தொகை
B) பண்புத்தொகை
C) இருபெயரொட்டுப்பண்புத்தொகை
D) வினைத்தொகை
விளக்கம்: இத்தொடர் பனையாகிய மரம் என விரியும். மரம் என்பது பொதுப்பெயர். பனை என்பது மரங்களுள் ஒன்றனைக் குறிக்கும் சிறப்புப்பெயர். இவ்வாறு சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.
135) பொருத்துக
அ. பெயரெச்சத்தொடர் – 1. கார்குழலி படித்தாள்
ஆ. வினையெச்சத்தொடர் – 2. புலவரே வருக
இ. வினைமுற்றுத்தொடர் – 3. பாடி முடித்தான்
ஈ. எழுவாய்த் தொடர் – 4. எழுதிய பாடல்
உ. விளித்தொடர் – 5. வென்றான் சோழன்
A) 4, 3, 1, 2, 5
B) 4, 5, 3, 1, 2
C) 3, 4, 5, 1, 2
D) 4, 3, 5, 1, 2
விளக்கம்: பெயரெச்சத்தொடர் – எழுதிய பாடல்
வினையெச்சத்தொடர் – பாடி முடித்தான்
வினைமுற்றுத்தொடர் – வென்றான் சோழன்
எழுவாய்த் தொடர் – கார்குழலி படித்தாள்
விளித்தொடர் – புலவரே வருக
136) மலர்விழி என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
A) பண்புத்தொகை
B) வினைத்தொகை
C) உவமைத்தொகை
D) உம்மைத்தொகை
விளக்கம்: மலர்விழி – இத்தொடர் மலர்போன்ற விழி என்ற பொருள் தருகிறது.
மலர் – உவமை. விழி – உவமேயம்
இடையில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இவ்வாறு உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
137) சாலவும் நன்று – இதற்குப் பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க.
A) அடுக்குத் தொடர்
B) உரிச்சொற்றொடர்
C) விளித்தொடர்
D) இடைச்சொற்றொடர்
விளக்கம்: சாலவும் நன்று. இதில் சால என்னும் உரிச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால். இது உரிச்சொல் எனப்படும்.
138) ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது?
A) உம்மைத்தொகை
B) உவமைத்தொகை
C) எண்ணும்மை
D) வினைத்தொகை
விளக்கம்: ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும். (எ.கா) . இரவும் பகலும், பசுவும் கன்றும்
139) இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: இணைச்சொற்களானது மூன்று வகைப்படும். அவை,
1. நேரிணை
2. எதிரிணை
3. செறியிணை
140) உவம உருபுகளில் பொருந்தாது எது?
A) நிகர
B) போன்ற
C) அன்ன
D) ஆன
விளக்கம்: போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைப, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன, போன்ற – உவம உருபுகள் ஆகும்.
ஆன, ஆகிய – பண்புருபுகள்
141) ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இவர்கள் எந்நிலத்தைச் சார்ந்தவர்கள்?
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) நெய்தல்
விளக்கம்: முல்லை நில மக்களாகிய ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இதனைச் சம்பந்தர் திருப்பதிகத்தல் அமைந்த நிகழ்ச்சி ஒன்று விளக்குகிறது. காணாமல் போன எருமை ஒன்றை தன் குழலின் இசையால் மீண்டும் வரவழைத்த செய்தியே அது.
142) தமிழ் மக்களிடம் முப்பதாறு வகையான முரசுகள் இருந்ததாக குறிப்பிடும் நூல் எது?
A) மணிமேகலை
B) சீவகசிந்தாமணி
C) பரிபாடல்
D) சிலப்பதிகாரம்
விளக்கம்: தமிழ் மக்களிடம் 36 வகையான முரசுகள் வழக்கில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. ஆனால் படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்ற மூன்று வகைiயான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன.
143) தொகை, தொகாநிலைத் தொடர் என இரு வகைகளிலும் இடம்பெறுவது?
A) வேற்றுமை
B) உம்மை
C) உரிச்சொல்
D) அன்மொழி
விளக்கம்: தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். இவை இரண்டு வகையிலும் இடம்பெறுவது வேற்றுமை.
வேற்றுமைத்தொகை – இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது
வேற்றுமைத் தொடர் – இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறையால் வருவது
144) பொற்றொடி வந்தாள் – இத்தொடருக்குப் பொருத்தமானது?
A) பண்புத்தொகை
B) அன்மொழித்தொகை
C) வினைத்தொகை
D) உம்மைத்தொகை
விளக்கம்: இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும். இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது. இதில் ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் ஆகிய என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண் என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.
145) நன்று நன்று நன்று – இதற்கு பொருத்தமானது?
A) இரட்டைக்கிளவி
B) அடுக்குத்தொடர்
C) உரிச்சொற்றொடர்
D) வினையெச்சத்தொடர்
விளக்கம்: இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளது. ஒரே சொல் இரண்டிற்கும் மேற்பட்ட முறை அடுக்கி வந்துள்ளது. பிரித்தால் பொருள் தருகிறது. எனவே இதன் இலக்கணக்குறிப்பு அடுக்குத்தொடர் ஆகும்.
146) மத்து + தளம் – மத்தளம் என்று ஆகியது என்று கூறியவர்?
A) இளங்கோவடிகள்
B) அடியார்க்கு நல்லார்
C) திருத்தக்க தேவர்
D) பவணந்தி முனிவர்
விளக்கம்: மத்து என்பது ஓசையின் பெயர். இசைக்கருவிகளுக்கு எல்லாம் தளம் அடிப்படை ஆகும். மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் அடியார்க்கு நல்லார்.
147) பசியால் வாடும்_____________உணவளித்தல் நமது கடமை
A) பிரிந்தவர்க்கு
B) அலந்தவர்க்கு
C) சிறந்தவர்க்கு
D) உயர்ந்தவர்க்கு
விளக்கம்: பசியால் வாடும் அலந்தவர்க்கு உணவளித்தல் நமது கடமை. அலந்தவர் என்றால் வறியவர் என்று பொருள். வறியவருக்கு உணவளித்தல் நமது கடமை என்று கலித்தொகை பாடல் மூலம் அறியலாம்.
148) ஒரு தொடரில் இருசொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அது?
A) தொழிற்பெயர்
B) ஆகுபெயர்
C) தொகாநிலைத்தொடர்
D) தொகைநிலைத்தொடர்
விளக்கம்: ஒரு தொடரில் இருசொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அது தொகாநிலைத் தொடர் எனப்படும். இது ஒன்பது வகைப்படும்.
149) சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை__________என்கிறோம்?
A) எண்ணும்மை
B) உவமைத்தொகை
C) உம்மைத்தொகை
D) முற்றும்மை
விளக்கம்: சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்கிறோம். (எ.கா) இரவுபகல், தாய்தந்தை. இச்சொற்கள் இரவும்பகலும், தாயும் தந்தையும் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.
150) கூற்று: மத்தளம் முதற்கருவி என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: மத்தளம் இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி.
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
D) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
விளக்கம்: மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்தும் கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும். மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இதன் வாய்ப்பகுதி வளையங்களில் தோல் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். இக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகிறது. ஆகவே இதனை முதற்கருவி என்பர்.
151) தொடி என்ற சொல்லின் பொருள்?
A) தொடை
B) தொடுத்தல்
C) யாப்பின் உறுப்பு
D) வளையல்
விளக்கம்: தொடி என்றால் வளையல் என்று பொருள். பொற்றொடி என்றால் பொன்னால் ஆன வளையல் என்று பொருள்.
152) மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைதாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
A) திருவாசகம்
B) பரிபாடல்
C) தேவாரம்
D) நாச்சியார் திருமொழி
விளக்கம்: மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைதாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் நாச்சியார் திருமொழி ஆகும். இவ்வரிகள் திருமால் பற்றிய நூல் ஆகும்.
153) அன்மொழித்தொகை எத்தனை வகைப்படும்?
A) 4
B) 6
C) 7
D) 5
விளக்கம்: அன்மொழித் தொகை 5 வகைப்படும். வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித் தொகை எனப்படும்.
154) அன்மொழித் தொகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
A) அன் + மொழி + தொகை
B) அன்மொழி + தொகை
C) அல் + மொழி + தொகை
D) அ + மொழிதொகை
விளக்கம்: அன்மொழித் தொகை என்ற சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது அல் + மொழி + தொகை எனக்கிடைக்கும்.
155) எந்த கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் என்ற ஒருவரும் இருந்தார் என்று கூறுகிறது.
A) தஞ்சை பெரியகோவில்
B) காஞ்சி கைலாசநாதர் கோவில்
C) இராமநாதசுவாமி கோயில்
D) மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
விளக்கம்: தஞ்சை பெரியகோயில் கல்வெட்டில் கோயிலுக்கும் நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என்பர்.
156) எத்தனை வகையான முரசுகள் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தன?
A) 4
B) 2
C) 3
D) 5
விளக்கம்: பழந்தமிழ் நாட்டில் மூன்று வiயான முரசுகள் புழக்கத்தில் இருந்தன. அவை,
1. படைமுரசு
2. கொடை முரசு
3. மணமுரசு
157) கருங்குவளை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு?
A) பண்புத்தொகை
B) வினைத்தொகை
C) அன்மொழித்தொகை
D) உம்மைத்தொகை
விளக்கம்: இத்தொடரில் உள்ள கருமை என்னும் பண்பு குவளை என்னும் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்கின்றன. ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தருகின்றன.
158) பொருத்துக.
அ. நேரிணை – 1. பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்
ஆ. எதிரிணை – 2. இரவுபகல், உயர்வுதாழ்வு
இ. செறியிணை – 3. சீரும் சிறப்பும், பேரும் புகழும்
A) 2, 1, 3
B) 3, 1, 2
C) 3, 2, 1
D) 1, 2, 3
விளக்கம்: நேரிணை – சீரும் சிறப்பும், பேரும் புகழும
எதிரிணை – இரவுபகல், உயர்வுதாழ்வு
செறியிணை – பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்
159) கூம்பொடு மீப்பாய் களையாது என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) அகநானூறு
B) கலித்தொகை
C) பட்டினப்பாலை
D) புறநானூறு
விளக்கம்: முற்காலத்தில் பாய்மரக்கப்பலில் பயன்பட்டதும்கூடப் பாய்தான். இதனைப் புறநானூறு கூம்பொடு மீப்பாய் களையாது என்னும் அடியால் குறிப்பிடுகிறது.
160) அறிவு எனப்படுவது____________சொல் நோன்றல்?
A) புணர்ந்தார்
B) அலந்தவர்
C) பேதையார்
D) அறிவுடையோர்
விளக்கம்: அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல். இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல் கலித்தொகை. இந்நூலைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
161) தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர்?
A) திருஞானசம்பந்தர்
B) திருநாவுக்கரகர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
விளக்கம்: தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர் சுந்தரர். இறைவனால் தோழர் என்று அழைக்கப்பட்டதால் இவர் தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றார். இவரின் மற்றொரு சிறப்புப்பெயர் நம்பியாரூரர்.
162) பொருத்துக.
அ. நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள் – 1. திருப்பாவை
ஆ. தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – 2. திருக்குறள்
இ. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் – 3. புறநானூறு
ஈ. சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் – 4. சம்பந்தர் தேவாரம்
A) 2, 3, 4, 1
B) 1, 4, 2, 3
C) 3, 4, 1, 2
D) 3, 4, 2, 1
விளக்கம்: 1. நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப
பாணன் சூடான் பாடினி அணியாள் – புறநானூறு
2. தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார் – சம்பந்தர் தேவாரம்
3. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் – திருக்குறள்
4. சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் – திருப்பாவை