General Tamil

8th Tamil Unit 4 Questions

8th Tamil Unit 4 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 8th Tamil Unit 4 Questions With Answers Uploaded Below.

1) கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – என்ற பாடலடிகள் இடம் பெற்ற செய்யுள்?

A) நீதிநெறிவிளக்கம்

B) பழமொழி நானூறு

C) அகநானூறு

D) கலித்தொகை

விளக்கம்: கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – என்ற பாடலடிகள் இடம் பெற்ற நூல் நீதிநெறிவிளக்கம்.

2) நீதிநெறி விளக்கம் என்ற நூலின் ஆசிரியர்?

A) ஒளவையார்

B) குமரகுருபரர்

C) கபிலர்

D) ஒட்டக்கூத்தர்

விளக்கம்: நீதி நெறி விளக்கம் என்னும் நூலை எழுதியவர் – குமரகுருபரர். மக்களுக்கு தேவையான நீதிகளைக் சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறிவிளக்கம் என்று அழைக்கப்பட்டது.

3) ஏட்டுக் கல்வி மட்டுமின்றித் தொழிற்கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே. என்று தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தை கூறியவர்?

A) மு. வரதராசனார்

B) அண்ணா

C) கண்ணதாசன்

D) திரு.வி.க

விளக்கம்: ஏட்டுக் கல்வி மட்டுமின்றித் தொழிற்கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே. கல்வித்துறைகள் பல திறத்தன. அவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் இயல்புக்குப் பொருந்தியதாகத் தோன்றும் என்று தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தை திரு.வி.க கூறியுள்ளார்.

4) ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________

A) கலன் + அல்லால்

B) கலம் + அல்லால்

C) கலன் + அல்லால்

D) கலன் + னல்லால்

விளக்கம்: கலனல்லால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கலன் + அல்லால்

5) கோயிலப்பா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) கோ + அப்பா

B) கோயில் + லப்பா

C) கோயில் + அப்பா

D) கோ + இல்லப்பா

விளக்கம்: கோயிலப்பா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது கோயில் + அப்பா

6) பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_______

A) பகைவென்றாலும்

B) பகைவனென்றாலும்

C) பகைவன்வென்றாலும்

D) பகைவனின்றாலும்

விளக்கம்: பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் பகைவனென்றாலும். நிலைமொழியின் இறுதி எழுத்து ன். வருமொழியின் முதல் எழுத்து எ. உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ன் + எ = னெ என சேரும்.

7) கற்றவருக்கு அழகு தருவது_____________

A) தங்கம்

B) வெள்ளி

C) வைரம்

D) கல்வி

விளக்கம்: கற்றவருக்கு அழகு தருவது கல்வி. இதனைக் குறிப்படும் நீதிநெறி விளக்கப் பாடல்,

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகுசெய் வார்

8) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ! தமிழ்க் காவியங்களைப் படியுங்கள் இன்பம் நுகருங்கள் என்று கூறியவர்?

A) கலாப்பிரியா

B) தமிழ்ஒளி

C) திரு.வி.க

D) பாரதியார்

விளக்கம்: இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ! தமிழ்க் காவியங்களைப் படியுங்கள் இன்பம் நுகருங்கள் என்று தமிழ்மொழியின் இலக்கியங்கள் பற்றி திரு.வி.க கூறியுள்ளார்.

9) ஆலங்குடி சோமு எங்கு பிறந்தார்?

A) இராமநாதபுரம்

B) சிவகங்கை

C) விருதுநகர்

D) புதுக்கோட்டை

விளக்கம்: ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.

10) மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது?

A) கல்வி

B) உணர்ச்சிகள்

C) கைகள்

B) எதுவுமில்லை

விளக்கம்: கேடில் விழுச்செல்வம் கல்வி. மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது கல்வி ஆகும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வதிலும் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது.

11) ஏட்டுக் கல்வியே கல்வி என்னும் கொள்கை எங்கும் நிலவி வருகிறது என்று கல்வி பற்றி கூறியவர்?

A) திரு.வி.க

B) மு.வரதராசனார்

C) காந்தியடிகள்

D) பாரதிதாசன்

விளக்கம்: இந்நாளில் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது. ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது. இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடைக்கிறது.

12) இயற்கை இன்பக்கலம் என்று அழைக்கப்படுவது?

A) பத்துப்பாட்டு

B) கலித்தொகை

C) திருக்குறள்

D) கலித்தொகை

விளக்கம்: இயற்கை இன்பக் கலம் என்று அழைக்கப்படுவது கலித்தொகை. இது எட்டுத் தொகை நூல்களில் ஒன்று ஆகும். இதனை கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று போற்றுவர்.

13) யாருக்கு அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் தேவையில்லை?

A) பொருள் வைத்திருப்பவர்க்கு

B) கல்வி கற்றவருக்கு

C) பொலிவுடன் இருப்பவருக்கு

D) பெண்களுக்கு

விளக்கம்: கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

14) தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந்தேடுவோம் என்னும் புதுப்பாட்டை பாடுமாறு யாரை திரு.வி.க. கேட்டுக்கொள்கிறார்?

A) சகோதரர்களை

B) மொழிபெயர்ப்பாளர்களை

C) நூலாசிரியர்களை

D) இளைஞர்களை

விளக்கம்: தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்திஇ அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந்தேடுவோம் என்னும் புதுப்பாட்டை பாடுமாறு இளைஞர்களை திரு.வி.க. கேட்டுக்கொள்கிறார்.

15) இயற்கை இறையுறையுள் என்று குறிப்பிடப்படும் நூல்?

A) பத்துப்பாட்டு

B) எட்டுத்தொகை

C) திருக்குறள்

D) தேவார திருவாச திருவாய் மொழிகள்

விளக்கம்: இயற்கை இறையுறையுள் என்று அழைக்கப்படுவது தேவார திருவாசக மொழிகள் என்னும் பக்தி காவியங்கள் ஆகும்.

16) ஆலங்குடி சோமு கீழ்க்கண்ட எவ்விருதை பெற்றார்?

A) பத்மஸ்ரீ

B) சிறந்த நடிகர்

C) கலைமாமணி

D) கண்ணதாசன் விருது

விளக்கம்: இவர் திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ் பெற்றவர். இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

17) என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும்_________இன்றி வாழ்ந்தார்?

A) சோம்பல்

B) அகம்பாவம்

C) வருத்தம்

D) வெகுளி

விளக்கம்: என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் அகம்பாவம் இன்றி வாழ்ந்தார். நாம் வாழ்வது சில காலம் அதற்குள் நமக்கு அகம்பாவம் வேண்டாம் என்பது ஆலங்குடி சோமுவின் பாடல் வரிகள் உணர்த்தும் செய்திகள்.

18) தொழில் நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டா என்றும் அறிவு விளக்கத்தின் பொருட்டுக் கல்வி பயிலுதல் வேண்டும் என்றும் இயற்கை அன்னை எச்சரிப்பதாக யார் உரைக்கிறார்?

A) கண்ணதாசன்

B) பாரதிதாசன்

C) ஆலங்குடி சோமு

D) திரு.வி.க

விளக்கம்: தொழில் நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டா என்றும் அறிவு விளக்கத்தின் பொருட்டுக் கல்வி பயிலுதல் வேண்டும் என்றும் இயற்கை அன்னை எச்சரிப்பதாக தொழிற்கல்வியின் முக்கியத்துவம் பற்றி உரைக்கிறார். அவ்வெச்சரிக்கைக்கு மாணக்கர் செவி சாய்த்து நடப்பாராக, அறிவு விளக்கத்துக்கெனக் கல்வி பயின்றுஇ அவ்வறிவை நாட்டுத் தொழிற்துறைகளைப் புதிய முறைகளில் வளர்க்கப் பயன்படுத்துவாராக.

19) மன்னிக்கத் தெரிந்த

மனிதனின் உள்ளம்

மாணிக்கக் கோயிலப்பா – இதை

மறந்தவன் வாழ்வு

தடம் தெரியாமல்

மறைந்தே போகுமப்பா! – இப்பாடலில் குறிப்பிடப்படும் தடம் என்ற சொல்லின் பொருள்?

A) வழி

B) தடை

C) அழிவு

D) அடையாளம்

விளக்கம்: இங்கே தடம் என்ற சொல்லின் பொருள் வழி. மன்னிக்க மறந்தவன் வாழ்வு தடம்(அடையாளம்) தெரியாமல் போகும் என்பது இதன் பொருள்.

20) இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படுவது?

A) பத்துப்பாட்டு

B) எட்டுத்தொகை

C) பதினெண்கீழ்க்கணக்கு நூல்

D) ஐம்பெருங்காப்பியங்கள்

விளக்கம்: இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படுவது பத்துப்பாட்டு. இதில் 10 நூல்கள் உள்ளன. முதல் நூல் திருமுருகாற்றுப்படை ஆகும்.

21) பொருத்துக.

அ. அருவி – 1. குரல்

ஆ. குயில் – 2. முழவு

இ. வண்டு – 3. அகவல்

ஈ. மயில் – 4. இசை

A) 2, 3, 1, 4

B) 2, 1, 4, 3

C) 1, 3, 2, 4

D) 1, 4, 3, 2

விளக்கம்: அருவி – முழவு

குயில் – குரல்

வண்டு – இசை

மயில் – அகவல்

22) ஏடன்று கல்வி, சிலர் பேசும்

இயலன்று கல்வி, பலர்க் கெட்டா தென்னும்

வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த

விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில் – என்ற வரிகளை எழுதியவர்?

A) குலோத்துங்கன்

B) ராஜராஜன்

C) ராஜேந்திரன்

D) மகேந்திரவர்மன்

விளக்கம்: கல்வி பற்றிய இவ்வரிகளை எழுதியவர் குலோத்துங்கன் ஆவார்

23) குமரகுருபரரால் எழுதப்பட்ட நூல் நீதிநெறி விளக்கம். இந்நூலின் பெயர்க் காரணம்?

A) மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளை கூறுவதால்

B) நீதியுள்ள அரசர் பற்றி கூறுவதால்

C) மன்னன் நீதி வழங்கும் முறை பற்றி கூறுவதால்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: நீதி நெறி விளக்கம் என்னும் நூலை எழுதியவர் – குமரகுருபரர். மக்களுக்கு தேவையான நீதிகளைக் சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறிவிளக்கம் என்று அழைக்கப்பட்டது.

24) இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படுவது?

A) திருக்குறள்

B) பத்துப்பாட்டு

C) எட்டுத்தொகை

D) கலித்தொகை

விளக்கம்: இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படுவது திருக்குறள். இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இதனை முப்பால் என்று பதினெண் கீழக்கணக்கு நூலில் வகைப்படுத்தி உள்ளனர். இந்நூல் நாம் வாழ்வதற்கு தேவையான கருத்துக்களை அறத்துப்பால்இ பொருட்பால்இ காமத்துப்பால் என்று முப்பால்களில் உரைப்பால் இந்நூல் முப்பால் என்று அழைக்கப்பட்டது.

25) தமிழ்தென்றல் என்று அழைக்கப்படுபவர்?

A) கபிலர்

B) கம்பர்

C) ஒளவையார்

D) திரு.வி.க

விளக்கம்: தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் திரு.வி.க ஆவார். இவர் திருவாரூர் விருதாச்சலனார் மகனார். இயற்பெயர் கலியாணசுந்தரனார். இதன் சுருக்கமே திரு.வி.க என்பது.

26) கல்வி என்பது வருவாய் தோடும் வழிமுறை அன்று என்று கல்வியின் முக்கியத்துவத்தை கூறியவர்?

A) திரு.வி.க

B) காந்தியடிகள்

C) அண்ணா

D) விஜயலட்சுமி பண்டிட்

விளக்கம்: கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும் என்று விஜயலட்சுமி பண்டிட் தெரிவித்துள்ளார்

27) இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் என்று அழைக்கப்படுவது?

A) சிலப்பதிகாரம், மணிமேகலை

B) சீவக சிந்தாமணி, வளையாபதி

C) குண்டலகேசி, வளையாபதி

D) சீவக சிந்தாமணி, வளையாபதி

விளக்கம்: இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் என்று அழைக்கப்படுவது சிலப்பதிகாரமும், மணிமேகலையும். இவற்றை இரட்டை காப்பியங்கள் என்று அழைப்பர்.

1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

28) ஆல் என்ற வேற்றுமை உருபின் சொல்லுருபு?

A) அதனால்

B) கொண்டு

C) ஆதலால்

D) அது

விளக்கம்: ஆல் என்பது மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபு. இது சில இடங்களில் சொல்லுருபாக வரும். ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபு-ன் சொல்லுருபு – கொண்டு.

29) இங்கே இருப்பது சில காலம்

இதற்குள் ஏனோ அகம்பாவம்

இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை

எண்ணிப்பாரு தெளிவாகும்! – என்ற பாடலில் உள்ள அகம்பாவம் என்ற சொல்லின் பொருள்?

A) செருக்கு

B) நற்செயல்

C) தீய செயல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: அகம்பாவம் என்ற சொல்லின் பொருள் செருக்கு என்பதாகும். இங்கே நாம் வாழ்வது சில காலம் தான் இக்காலத்தில் செருக்கு வேண்டாம் என்பது இதன் பொருள்.

30) கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – இதில் குறிப்பிடப்படும் செய்தி?

A) கல்வி கற்க அழகு வேண்டும்

B) கல்வி கற்க அணிகலன் வேண்டும்

C) கல்வி கற்றவருக்கு அக்கல்வியே அழகு

D) கல்வி கற்றவரை பின்பற்றுதல் வேண்டும்

விளக்கம்: கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

31) இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல்?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) கலித்தொகை

D) சிந்தாமணி

விளக்கம்: இயற்கைத் தவம் என்று அழைக்கப்படுவது – சிந்தாமணி. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியே சிந்தாமணி என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர்.

32) கூற்றுகளை ஆராய்க.

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை – வேற்றுமை

2. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசை – வேற்றுமை உருபுகள் என்படும்

A) இரண்டும் சரி

B) இரண்டும் தவறு

C) 1 மட்டும் சரி

D) 2 மட்டும் சரி

விளக்கம்: 1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை – வேற்றுமை

2. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசை – வேற்றுமை உருபுகள் என்படும்

33) முழுச்சொற்கள் வேற்றுமை உருபாக வந்தால்_________என்று அழைக்கப்படும்?

A) சொல்லுருபு

B) விளிச்சொல்

C) எழுவாய்ச்சொல்

D) எதுவுமில்லை

விளக்கம்: சில இடங்ளில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.

34) கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலன் வேண்டாவாம் – இச்சொல்லில் குறிப்பிடப்படும் கலன் என்ற சொல்லின் பொருள்?

A) கடமை

B) கலந்து கொள்ளுதல்

C) பாத்திரம்

D) அணிகலன்

விளக்கம்: இதில் கலன் என்ற சொல்லின் பொருள் அணிகலன் என்பதாகும். கல்வி கற்றவருக்கு அக்கல்வியே அணிகலன். வேறு அழகு வேண்டாம் என்பது இதன் பொருள்.

35) வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை_____________என்பது?

A) வேற்றுமைத் தொடர்கள்

B) அன்மொழித்தொகை

C) வேற்றுத்தொகை

D) வேற்றுமை விளி

விளக்கம்: வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் என்பர். வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத் தொகை என்பர்.

36) கூற்று: முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்று அழைக்கப்படும்

காரணம்: எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தரும்.

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று தவறு காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவதால் இதனை எழுவாய் வேற்றுமை என்று அழைக்கலாம்.

37) இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல்?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) கலித்தொகை

D) பெரியபுராணம்

விளக்கம்: இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் பெரியபுராணம். இதன் ஆசிரியர் சேக்கிழார்.

38) வேற்றுமை எத்தனை வகைப்படும்?

A) 5

B) 6

C) 7

D) 8

விளக்கம்: வேற்றுமை 8 வகைப்படும். அவை

1. முதல் வேற்றுமை

2. இரண்டாம் வேற்றுமை

3. மூன்றாம் வேற்றுமை

4. நான்காம் வேற்றுமை

5. ஐந்தாம் வேற்றுமை

6. ஆறாம் வேற்றுமை

7. ஏழாம் வேற்றுமை

8. எட்டாம் வேற்றுமை

39) கீழ்க்கண்டவற்றில் எந்த வேற்றுமைக்கு உருபு இல்லை?

A) முதல் வேற்றுமை

B) இரண்டாம் வேற்றுமை

C) மூன்றாம் வேற்றுமை

D) நான்காம் வேற்றுமை

விளக்கம்: வேற்றுமை எட்டு வகைப்படும். இதில் முதல் மற்றும் கடைசி வேற்றுமை தவிர 6 வேற்றுமைக்கும் உருபு உள்ளது.

40) ஐ. நா. வின் முதல் பெண் தலைவர்?

A) அருந்ததி ராய்

B) ஐஸ்வர்யா ராஜேஷ்

C) முத்துலட்சுமி ரெட்டி

D) விஜயலட்சுமி பண்டிட்

விளக்கம்: ஐ. நா. அவையின் முதல் பெண் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி பண்டிட் பதவி வகித்தார்.

41) செய்படுபொருள் வேற்றுமை என்று அழைக்கப்படுவது?

A) இரண்டாம் வேற்றுமை

B) நான்காம் வேற்றுமை

C) எட்டாம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை

விளக்கம்: ஒரு பெயரைச் செய்ப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையைச் செய்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.

42) விளி வேற்றுமை என்று அழைக்கப்படும் வேற்றுமை?

A) இரண்டாம் வேற்றுமை

B) நான்காம் வேற்றுமை

C) எட்டாம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை

விளக்கம்: படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைப்பதை விளி வேற்றுமை என்கிறோம். எட்டாம் வேற்றுமையின் மற்றொரு பெயர் விளி வேற்றுமை.

43) இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல்?

A) பெரியபுராணம்

B) மணிமேகலை

C) கலித்தொகை

D) கம்பராமாயணம்

விளக்கம்: இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் கம்பராமாயணம் ஆகும். வடமொழியில் வால்மீகி இராமாயனத்தை இயற்றினார். அதனைத் தழுவி தமிழில் கம்பர் இயற்றி அதற்கு அவர் இராமவதாரம் என்று பெயர் வைத்தார். இதனை கம்பர் இயற்றியதால் கம்பராமாயணம் என்று பெயர்வந்தது.

44) புற உலக ஆராய்ச்சிக்கு_________கொழுகொம்பு போன்றது?

A) தாய்மொழி

B) தமிழ்மொழி

C) கலைகள்

D) அறிவியல்

விளக்கம்: புற உலக ஆராய்ச்சிக் அறிவியல் கொழுகொம்பு போன்றது. நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது. இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.

45) மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூலின் ஆசிரியர்?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) திரு.வி.க

D) இராஜாஜி

விளக்கம்: மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூலை எழுதியவர் திரு.வி.க. இந்நூலில் காந்தியடிகளின் சிந்தனைகள் மற்றும் அவரின் கொள்கைள் பற்றி கூறப்பட்டுள்ளது.

46) தமிழ்மக்களாகிய நாம் தாய்மொழி வாயிலாகவே கல்வி பெறல் சிறப்பு என்று தாய்மொழி பற்றி கூறியவர்?

A) பாரதிதாசன்

B) கண்ணதாசன்

C) திரு.வி.க

D) அண்ணா

விளக்கம்: நாம் தமிழ் மக்கள். தாம் தமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை.

47) முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே – இச்சொல்லில் முற்ற என்ற சொல்லின் பொருள்?

A) ஒளிர

B) முற்றுதல்

C) முந்துதல்

D) முழுவதும்

விளக்கம்: முற்ற என்ற சொல்லின் பொருள் ஒளிர என்பதாகும்.

48) இரண்டாம் வேற்றுமை உருபு எத்தனைப் பொருள்களில் வரும்?

A) 5

B) 4

C) 6

D) 7

விளக்கம்: இரண்டாம் வேற்றுமை ஆறு பொருள்களில் வரும். அவை

1. ஆக்கல் 2. அழித்தல் 3. அடைதல் 4. நீத்தல் 5. ஒத்தல் 6. உடைமை

49) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க

1. ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்

2. அழித்தல் – பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்

3. அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்

4. உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

C) 2, 3

D) எதுவுமில்லை

விளக்கம்: 1. ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்

2. அழித்தல் – பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்

3. அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்

4. உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்

50) திரு.வி.க என்பதன் பொருள்?

A) திருவாவடுதுறை விருதாசலம் கல்யாணசுந்தரனார்

B) திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார்

C) திருத்தணி விருதுபட்டி கல்யாணசுந்தரனார்

D) திருவாங்கூர் விருதுபெற்ற கல்யாணசுந்தரனார்

விளக்கம்: திரு.வி.க என்பதன் பொருள் திருவாரூர் மாவட்டம் விருத்தாசலம் மகனார் கலியாணசுந்தரம் என்பதாகும்.

51) கல்வி கரையில கற்பவர் நாள் சில என்று கல்வியின் பெருமை பற்றி கூறும் நூல்?

A) திருக்குறள்

B) நான்மணிக்கடிகை

C) நாலடியார்

D) இனியவை நாற்பது

விளக்கம்: கல்வி கரையில கற்பவர் நாள் சில என்னும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் நாலடியார். கற்பதற்கு எல்லை என்பது இதன் பொருள் ஆகும்.

52) கல்விப் பயிற்சிக்குரிய பருவம்___________

A) இளமை

B) முதுமை

C) நேர்மை

D) வாய்மை

விளக்கம்: கல்விப் பயிற்சிக்குரிய பருவம் இளமைப் பருவமாகும். அதனால் தான் இளமையில் கல் என்னும் முதுமொழி உண்டாயிற்று

53) இங்கே இருப்பது சில காலம்

இதற்குள் ஏனோ அகம்பாவம்

இதனால் உண்டோ ஒரு லாபம் – இதை

எண்ணிப்பாரு தெளிவாகும்! – என்ற வரிகளை எழுதியவர்?

A) ஆலங்குடி சோமு

B) க. சச்தானந்தன்

C) கலாப்பிரியா

D) பெ. தூரன்

விளக்கம்: இங்கே (இவ்வுலகில்) நாம் வாழ்வது சில காலம் தான். நமக்கு அகம்பாவம் எதுவும் வேண்டாம் அதனால் ஒரு லாபமும் இல்லை. இதை நாம் எண்ணிப் பார்த்து தெளிவாக வேண்டும் என்று ஆலங்குடி சோமு தனது பாடலில் கூறியுள்ளார்.

54) எப்போது வேறு பல மொழிகளையும் பயிலலாம் என்று திரு.வி.க உரைக்கிறார்?

A) ஓய்வு நேரம் மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது

B) அம்மொழிச் சொற்கள் எளிமையாக இருக்கும் போது

C) கற்றுத் தரும் முறையான ஆசிரியர் இருக்கும் போது

D) வேலைவாய்ப்பு கிடைக்கும் போது

விளக்கம்: போதிய ஓய்வும் நேரமும் வாய்ப்பும் இருப்பின் வேறு பல மொழிகளையும் பயிலலாம். ஆனால் முதல் மொழி தாய் மொழி, அதன் வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும்.

55) கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தும் பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று கூறியவர்?

A) வாணிதாசன்

B) புதுமைப்பித்தன்

C) திரு.வி.க

D) ஆலந்தூர் சோமு

விளக்கம்: கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தும் பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க கூறியுள்ளார்.

56) வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்_________இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம் என்று திரு.வி.க கூறுவது?

A) காவிய இன்பம்

B) ஓவிய இன்பம்

C) இயற்கை இன்பம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம். நாம் தமிழர்கள். நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் எங்குச் செல்ல வேண்டும்? தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ? தமிழில் இலக்கியங்கள் பல உண்டு.

57) முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகுசெய் வார் – இச்சொல்லில் பூண் என்ற சொல்லின் பொருள்?

A) மணிகள்

B) ஒளிபெற்ற

C) அணிகலன்

D) அழகு

விளக்கம்: இவ்வரியில் குறிப்பிடப்படும் பூண் என்ற சொல்லின் பொருள் அணிகலன் என்பதாகும்.

58) உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது என்று திரு.வி.க கூறுவது?

A) தாய்மொழி

B) அறிவியல்

C) மொழிபெயர்ப்பு

D) இலக்கண நூல்கள்

விளக்கம்: உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது அறிவியல் என்னும் அறிவுக்கலை. உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியனவற்றில், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன வேண்டும் என்று திரு.வி.க கூறியுள்ளார்.

59) தமிழ் நமக்கு உயிரைப் போன்றது – என்ற தொடரில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ளது. இது என்ன பொருளில் வந்துள்ளது.

A) ஆக்கல்

B) ஒத்தல்

C) உடைமை

D) அடைதல்

விளக்கம்: இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை என்னும் ஆறு பொருள்களில் வரும். இதில் தமிழ் நமக்கு உயிரைப் போன்றது என்ற சொல் ஒத்தல் (ஒற்றுமை) என்னும் பொருளில் வந்துள்ளது.

60) இன்றைய கல்வி________நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது?

A) வீட்டில்

B) நாட்டில்

C) பள்ளியில்

D) தொழிலில்

விளக்கம்: இன்றைய கல்வி தொழிலில் நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது என்று திரு.வி.க கூறியுள்ளார்.

61) குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

A) 15

B) 16

C) 17

D) 18

விளக்கம்: குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.

62) தாய்நாடு என்னும் பெயர் எதனை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது?

A) தாய்

B) தாய்மொழி

C) தாய்பூமி

D) தமிழ்மொழி

விளக்கம்: தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறந்தது என்று திரு.வி.க கூறியுள்ளார்.

63) பெண்ணின் பெருமை என்ற நூலை எழுதியவர்?

A) திரு.வி.க

B) கவிமணி

C) கல்யாண்ஜி

D) பாரதிதாசன்

விளக்கம்: பெண்ணின் பெருமை என்னும் நூலை எழுதியவர் திரு.வி.க. இவர் இந்நூலில் பெண்மைப் பற்றி எழுதியுள்ளார்.

64) மூன்றாம் வேற்றுமை உருபுகளில் பொருந்தாதது?

A) ஆ

B) ஆன்

C) ஒடு

D) ஓடு

விளக்கம்: மூன்றாம் வேற்றுமை உருபு 1. ஆல் 2. ஆன் 3. ஒடு 4. ஓடு

65) ஒரு பெயரைச் செய்படுபொருளாக மாற்றும் வேற்றுமை உருபு எது?

A) ஆல்

B) கு

C) ஐ

D) இன்

விளக்கம்: ஐ என்னும் உருபு ஒரு பெயருடன் இணையும் போது அதனை செய்படுபொருளாக மாற்றுகிறது. எனவே இதனை செய்படுபொருள் வேற்றுமை என்கிறோம்.

66) பொருத்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) இயற்கை ஓவியம் – எட்டுத்தொகை

B) இயற்கை இன்பக்கலம்- கலித்தொகை

C) இயற்வை வாழ்வில்லம் – திருக்குறள்

D) இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை

விளக்கம்: இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு

இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை

இயற்வை வாழ்வில்லம் – திருக்குறள்

இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை

67) கந்தர் கலி வெண்பா என்னும் நூலை எழுதியவர்?

A) கம்பர்

B) ஒளவையார்

C) ஒட்டக்கூத்தர்

D) குமரகுருபரர்

விளக்கம்: கந்தர் கலிவெண்பா என்னும் நூலை எழுதியவர் குமரகுருபரர். இந்நூல் முருகப்பெருமான் பற்றிய நூல் ஆகும்.

68) கூற்று: எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை எனப்படும்

காரணம்: படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பது

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று தவறு காரணம் சரி

C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதால் எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை எனப்படும்.

69) நீதி நெறி விளக்கம் என்னும் நூலிலுள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை?

A) 100

B) 101

C) 99

D) 102

விளக்கம்: கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்களைக் கொண்டது நீதிநெறி விளக்கம். மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளை கூறுவதால் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. இந்நூலின் ஆசிரியர் குமரகுருபரர்.

70) மூன்றாம் வேற்றுமை உருபுகள் என்ன பொருளில் வரும்?

A) கருவி

B) கருத்தா

C) உடனிகழ்ச்சி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மூன்றாம் வேற்றுமை உருபுகள் – ஆல், ஆன், ஒடு, ஓடு

இதில் ஆல், ஆன் – கருவிப் பொருள், கருத்தாப் பொருள்

ஒடு, ஓடு – உடனிகழ்ச்சி பொருள்

71) இயற்கைக் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி கூறியவர்?

A) திரு.வி.க

B) கண்ணதாசன்

C) அறிஞர் அண்ணா

D) பாரதியார்

விளக்கம்: நீங்கள் ஏடுகளைப் பயில்வதுடன் நில்லாது, ஓய்ந்த நேரங்களில் இயற்கை நிலையங்களில் புகுந்து, இயற்கைக் கழகத்தில் நின்று, இயற்கைக் கல்வி பயில்வீர்களானால், இயற்கையோடியைந்த வாழ்வு நடத்த வல்லவர்களாவீர்கள் என்று இயற்கை கல்வி குறித்து திரு.வி.க கூறியுள்ளார்.

72) மூன்றாம் வேற்றுமையில்_______, _________ஆகியவை உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்

A) ஆல், ஆன்

B) ஒடு, ஓடு

C) ஆன், ஒடு

D) ஆல், ஓடு

விளக்கம்: மூன்றாம் வேற்றுமை உருபுகள் – ஆல், ஆன், ஒடு, ஓடு

1. ஆல், ஆன் – கருவிப் பொருள், கருத்தாப் பொருள்

2. ஒடு, ஓடு – உடனிகழ்ச்சி

73) கருவிப்பொருள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கருவிப்பொருள் 2 வகைப்படும்.

1. முதற்கருவி

2. துணைக்கருவி

74) நான்காம் வேற்றுமை உருபு எத்தனைப் பொருளில் வரும்?

A) 5

B) 6

C) 7

D) 8

விளக்கம்: நான்காம் வேற்றுமை உருபு 8 பொருட்களில் வரும். அவை,

1. கொடை 2. பகை 3. நட்பு 4. தகுதி 5. அதுவாதல் 6. பொருட்டு 7. முறை 8. எல்லை

75) ஐந்தாம் வேற்றுமை கீழ்க்கண்ட எந்த பொருளில் வராது?

A) நீங்கல்

B) ஒப்பு

C) எல்லை

D) நட்பு

விளக்கம்: ஐந்தாம் வேற்றுமை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது ஆகிய நான்கு பொருள்களில் வரும்.

76) மன்னிக்கத் தெரிந்த

மனிதனின் உள்ளம்

மாணிக்கக் கோயிலப்பா – இதை

மறந்தவன் வாழ்வு

தடம் தெரியாமல்

மறைந்தே போகுமப்பா! – என்று மனம் பற்றி கூறியவர்?

A) ஆலங்குடி சோமு

B) பொ. தூரன்

C) கலாப்பிரியா

D) மருதகாசி

விளக்கம்: மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலுக்கு ஒப்பானது. இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் போகும் என்று ஆலங்குடி சோமு கூறியுள்ளார்.

77) பொருத்துக.

அ. நீங்கல் – 1. சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்

ஆ. ஒப்பு – 2. தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்

இ. எல்லை – 3. பாம்பின் நிறம் ஒரு குட்டி

ஈ. ஏது – 4. தலையின் இழிந்த மயிர்

A) 4, 3, 2, 1

B) 4, 2, 3, 1

C) 4, 1, 2, 3

D) 1, 2, 3, 4

விளக்கம்: நீங்கல் – தலையின் இழிந்த மயிர்

ஒப்பு – பாம்பின் நிறம் ஒரு குட்டி

எல்லை – தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்

ஏது – சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்

78) குமரகுருபரர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவர் காலம் 18ம் நூற்றாண்டு

2. சிற்றிலக்கியங்களை எழுதியுள்ளார்

3. மக்கள் வாழ்வுக்கு தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.

4. கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

A) 1, 2, 3 சரி

B) 1, 2, 4 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இவர் காலம் 17ம் நூற்றாண்டு

2. சிற்றிலக்கியங்களை எழுதியுள்ளார்

3. மக்கள் வாழ்வுக்கு தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.

4. கந்தர் கலிவெண்பா கயிலைக் கலம்பம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

79) ஆறாம் வேற்றுமை உருபுகளில் பொருந்தாதது?

A) அது

B) ஆது

C) அ

D) ஆ

விளக்கம்: ஆறாம் வேற்றுமை உருபுகளில் பொருந்தாதது ஆ.

ஆறாம் வேற்றுமை உருபு. 1. அது 2. ஆது 3. அ

80) ஆறாம் வேற்றுமை எப்பொருளில் வரும்?

A) உரிமைப்பொருள்

B) நீங்கல்

C) நட்பு

D) எல்லை

விளக்கம்: ஆறாம் வேற்றுமை தொகை உரிமைப் பொருளில் வரும். இவ்வுரிமைப் பொருளை கிழமை பொருள் என்றும் கூறுவர்.

81) காலையில் இளஞாயிறு கடலிலும் வானிலும் செக்கர் உமிழ்ந்து எழுங்காட்சியை நெஞ்சில் எழுதுங்கள் – இதில் செக்கர் என்ற சொல்லின் பொருள்?

A) மஞ்சள்

B) சிவப்பு

C) சூரிய ஒளி

D) சூரிய வெப்பம்

விளக்கம்: செக்கர் என்ற சொல்லின் பொருள் சிவப்பு என்பதாகும். உதாரனமாக செக்கச்சிவந்த வானம் என்று கூறுதல்.

82) கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம்- முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டாவா யாரே

அழகுக்கு அழகுசெய் வார் – என்ற பாடலடிகள் நீதிநெறி விளக்கத்தின் எத்தனையாவது பாடல்?

A) 10

B) 12

C) 13

D) 15

விளக்கம்: மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளை கூறுவதால் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. இந்நூலின் ஆசிரியர் குமரகுருபரர். இந்நூலில் கடவுள் வாழத்து உட்பட மொத்தம் 102 வெண்பாக்கள் உள்ளன. இதில் மேற்கண்ட பாடல் 13-ம் பாடல் ஆகும்.

83) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.

A) இயற்கைத் தவம் – சீவக சிந்தாமணி

B) இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்

C) இயற்கை அன்பு – மணிமேகலை

D) இயற்கை இறையுறையுள் – தேவாரம் மற்றும் திருவாசகம்

விளக்கம்: இயற்கைத் தவம் – சீவக சிந்தாமணி

இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்

இயற்கை அன்பு – பெரியபுராணம்

இயற்கை இறையுறையுள் – தேவாரம் மற்றும் திருவாசகம்

84) தமிழ்ச்சோலை என்னும் நூலின் ஆசிரியர்?

A) கவிமணி

B) தமிழ்ஒளி

C) க. சச்சிதானந்தன்

D) திரு.வி.க

விளக்கம்: தமிழ்ச்சோலை என்ற நூலின் ஆசிரியர் திரு.வி.க ஆவார். இவர் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்.

85) நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக__________என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு.

A) ஆக

B) அது

C) ஆ

D) கு

விளக்கம்: நான்காம் வேற்றுமை உருபு கு ஆகும். நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு. (எ. கா) 1. கூலிக்கு வேலை – கூலிக்காக வேலை

86) பொருத்துக.

அ. கொடை – 1. கபிலருக்கு நண்பர் பரணர்

ஆ. பகை – 2. கவிதைக்கு அழகு கற்பனை

இ. நட்பு – 3. முல்லைக்குத் தேர் கொடுத்தான்

ஈ. தகுதி – 4. புகை மனிதனுக்குப் பகை

A) 3, 4, 1, 2

B) 4, 3, 1, 2

C) 4, 3, 2, 1

D) 3, 1, 2, 4

விளக்கம்: கொடை – முல்லைக்குத் தேர் கொடுத்தான்

பகை – புகை மனிதனுக்குப் பகை

நட்பு – கபிலருக்கு நண்பர் பரணர்

தகுதி – கவிதைக்கு அழகு கற்பனை

87) முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டாவா யாரே

அழகுக்கு அழகுசெய் வார் – என்ற வரிகளில் முற்ற முழுமணிப் பூண் என்ற சொல்லின் பொருள்?

A) ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்

B) ஒளிரும் தங்க நகைகள்

C) ஒளியை தரும் கல்வி

D) ஒளிரும் உலோகத்தால் செய்யப்பட்ட பூணூள்

விளக்கம்: முற்ற முழுமணிப் பூண் என்ற சொல்லின் பொருள் ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆகும்.

88) காலையில் இளஞாயிறு கடலிலும் வானிலும் செக்கர் உமிழ்ந்து எழுங்காட்சியை நெஞ்சில் எழுதுங்கள் – என்று கூறியவர்?

A) திரு.வி.க

B) மருதகாசி

C) வாணிதாசன்

D) ஆலந்தூர் சோமு

விளக்கம்: மண் வழங்கும் பரந்த பசுமையிலும் வெண்மையிலும் விண் வழங்கும் நீலத்திலும் தோய்ந்து திளையுங்கள். காலையில் இளஞாயிறு, கடலிலும் வானிலும் செக்கர் உமிழ்ந்து எழுங்காட்சியை நெஞ்சில் எழுதுங்கள் என்று இயற்கை அழகை திரு.வி.க கூறியுள்ளார்.

89) அது, ஆது, அ ஆகியவை ஆறாம் வேற்றுமை உருபுகள் ஆகும். இதில் எது இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.

A) ஆது, அ

B) ஆது, அது

C) அது, அ

D) அ

விளக்கம்: மூன்றாம் வேற்றுமை உருபுகளில் நாம் இன்று ஆது, அ அகிய உருபுகளை பயன்படுத்துவது இல்லை.

90) சகலகலா வல்லி மாலை என்ற நூலின் ஆசிரியர்?

A) கம்பர்

B) கபிலர்

C) ஒளவையார்

D) குமரகுருபரர்

விளக்கம்: சகலகலா வல்லி மாலை என்னும் நூலை எழுதியவர் குமரகுருபரர். இவர் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இவரின் பிற நூல்கள்:

1. கந்தர் கலி வெண்பா

2. கயிலைக் கலம்பகம்

3. சகலகலாவல்லி மாலை

4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

5. முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

6. நீதிநெறி விளக்கம்

91) கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது என்ற சொல் 3-ம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்?

A) முதற்கருவி

B) துணைக்கருவி

C) இயற்றுதல் கருத்தா

D) ஏவுதல் கருத்தா

விளக்கம்: கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது என்ற வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபு. ஆல். ஆல் ஆன் என்பது கருவிப்பொருளில் வரும். இவ்வாக்கியம் பிறரை ஏவி செயல் செய்யும் பொருளில் அமைந்துள்ளது. எனவே இது ஏவுதல் கருத்தா எனப்படும்.

92) பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர்?

A) அறிஞர் அண்ணா

B) கலாப்பிரியா

C) ஆலந்தூர் சோமு

D) திரு.வி.க

விளக்கம்: பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார்(திரு.வி.க) ஆவார். இவர் சிறந்த மேடைப்பேச்சாளர் ஆவார்.

93) ஏழாம் வேற்றுமை உருபு________, _______பொருளில் வரும்.

A) இடம், காலம்

B) கொடை, பகை

C) நீங்கல், ஒப்பு

D) ஆக்கல், அழித்தல்

விளக்கம்: ஏழாம் வேற்றுமை உருபு இடம் மற்றும் காலம் ஆகிய இரு பொருள்களில் வரும்.

கொடை, பகை – நான்காம் வேற்றுமை

நீங்கல், ஒப்பு – ஐந்தாம் வேற்றுமை

ஆக்கல், அழித்தல் – இரண்டாம் வேற்றுமை

94) உலகின் அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதலில் எம்மொழிகளில் எழுதுகின்றனர்?

A) தமிழ்மொழி

B) தாய்மொழி

C) ஆங்கிலமொழி

D) வேற்றுமொழி

விளக்கம்: தமிழிலேயே கல்வி போதிக்கத் தமிழில் போதிய கலைகளில்லையே, சிறப்பான அறிவியல் கலைகளில்லையே என்று சிலர் கூக்குரலிடுகிறார். அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதன் முதல் தம் தாய்மொழியில் வரைந்துவிடுகிறார் என்று திரு.வி.க கூறியுள்ளார்.

95) ஏழாம் வேற்றுமைக்கு பொருத்தமில்லாத உருபு?

A) கண்

B) மேல்

C) கீழ்

D) ஆல்

விளக்கம்: ஏழாம் வேற்றுமை உருபுகள் – கண், மேல், கீழ், கால், இல், இடம் போன்றவை

96) இரண்டு வேற்றுமைகளில் இடம் பெறும் உருபு?

A) இல்

B) ஆல்

C) ஆ

D) அது

விளக்கம்: இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு.

ஐந்தாம் வேற்றுமை – நீங்கல் பொருளில் வரும்

ஏழாம் வேற்றுமை – இடப்பொருளில் வரும்

97) எந்த உருபு பெரும்பாலும் செய்யுளின் வழக்கில் இடம்பெறும்.

A) ஆல்

B) ஆன்

C) ஒடு

D) ஓடு

விளக்கம்: ஆன் என்ற உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும். (எ. கா) புறந்தூய்மை நீரான் அமையும் என்ற சொல்லில் இடம்பெற்றுள்ள உருபு ஆன்.

98) பொருத்துக.

அ. இரண்டாம் வேற்றுமை – 1. ஆல், ஆன், ஒடு, ஓடு

ஆ. மூன்றாம் வேற்றுமை – 2. ஐ

இ. நான்காம் வேற்றுமை – 3. இன், இல்

ஈ. ஐந்தாம் வேற்றுமை – 4. கு

A) 2, 1, 4, 3

B) 1, 2, 4, 3

C) 1, 2, 3, 4

D) 2, 4, 1, 3

விளக்கம்: இரண்டாம் வேற்றுமை – ஐ

மூன்றாம் வேற்றுமை – ஆல், ஆன், ஒடு, ஓடு

நான்காம் வேற்றுமை – கு

ஐந்தாம் வேற்றுமை – இன், இல்

99) மொழிபெயர்ப்பைக்கொண்டு ஏன் நாம் தமிழ்மொழியை வளர்க்கக் கூடாது என்று கூறியவர்?

A) பாரதிதாசன்

B) கல்யாண்ஜி

C) அறிஞர் அண்ணா

D) திரு.வி.க

விளக்கம்: அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதன் முதல் தம் தாய்மொழியில் வரைந்து விடுகின்றனர். அவை பின்னே பல மொழியில் பெயர்த்து எழுதப்படுகின்றன. அம்மொழிபெயர்ப்பு முறையைத் தமிழர் கொண்டு ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது என்று திரு.வி.க கூறியுள்ளார்.

100) கூற்றுகளை ஆராய்க.

1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்

2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.

3. பெயரெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்

4. மேற்கொள் குறிகளுக்கு முன் காற்புள்ளி வரும்

A) அனைத்தும் சரி

B) 2 மட்டும் தவறு

C) 4 மட்டும் தவறு

D) 3 மட்டும் தவறு

விளக்கம்: 1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்

2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.

3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்

4. மேற்கொள் குறிகளுக்கு முன் காற்புள்ளி வரும்

101) மன்னிக்கத் தெரிந்த மனம்____________க்கு ஒப்பானது?

A) இறைவன்

B) மாணிக்கக் கோயில்

C) வானம்

D) கடல்

விளக்கம்: மன்னிக்கத் தெரிந்த

மனிதனின் உள்ளம்

மாணிக்கக் கோயிலப்பா – ஆலங்குடி சோமு

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலுக்கு ஒப்பானது என்று ஆலங்குடி சோமு தன் பாடலில் கூறியுள்ளார்.

102) முருகன் அல்லது அழகு என்ற நூலின் ஆசிரியர்?

A) குமரகுருபரர்

B) சேக்கிழார்

C) திரு.வி.க

D) பாரதிதாசன்

விளக்கம்: முருகன் அல்லது அழகு என்ற நூலை எழுதியவர் திரு.வி.க ஆவார்

103) கத்தியைத் தீட்டாதே – உந்தன் புத்தியைத் தீட்டு

கண்ணியம் தவறாதே – அதிலே திறமையைக் காட்டு! – இவ்வரிகளை எழுதியவர்?

A) பி.ச.குப்புசாமி

B) பெ.தூரன்

C) ஆலங்குடி சோமு

D) இவர்களில் யாருமில்லை

விளக்கம்: விளக்கம்: கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டு, கண்ணியம் தவறாமல் திறமையை காட்டி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆலங்குடி சோமு கூறுகிறார்.

104) பொருத்துக

அ. அதுவாதல் – 1. தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபாட்டார்

ஆ. பொருட்டு – 2. தயிருக்குப் பால் வாங்கினான்

இ. முறை – 3. தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்க்கடல்

ஈ. எல்லை – 4. செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ

A) 2, 1, 4, 3

B) 2, 1, 3, 4

C) 1, 2, 4, 3

D) 1, 2, 3, 4

விளக்கம்: அதுவாதல் – தயிருக்குப் பால் வாங்கினான்

பொருட்டு – தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபாட்டார்

முறை – செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ

எல்லை – தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்ககடல்

105) பி. ச. குப்புசாமி பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்று?

A) தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

B) சிறுகவிதை ஆசிரியர்களில் ஒருவர்

C) ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியுள்ளார்.

D) ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்னும் நூலின் ஆசிரியர்

விளக்கம்: தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியுள்ளார். ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்னும் நூலின் ஆசிரியர்

106) சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது என்பதற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க

A) முதற்கருவி

B) துணைக்கருவி

C) இயற்றுதல் கருத்தா

D) ஏவுதல் கருத்தா

விளக்கம்: ஒரு செயலை தானே செய்வது இயற்றுதல் கருத்தா எனப்படும். இங்கு பெரிய புராணம் என்னும் நூல் சேக்கிரால் இயற்றப்பட்டது. அவரே அந்நூலை இயற்றினார். எனவே இது இயற்றுதல் கருத்தா எனப்படும்.

107) ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியவர்?

A) பி. ச. குப்புசாமி

B) பெ. தூரன்

C) ஆலங்குடி சோமு

D) இவர்களில் யாருமில்லை

விளக்கம்: ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியவர் – பி. ச. குப்புசாமி. இவர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

108) மரத்தால் சிலை செய்தான் என்னும் சொல்____________பொருளில் வந்துள்ளது?

A) முதற்கருவி

B) துணைக்கருவி

C) இயற்றுதல் கருத்தா

D) ஏவுதல் கருத்தா

விளக்கம்: மரத்தால் சிலை செய்தான் என்னும் வாக்கியம் முதற்கருவி பொருளில் வந்துள்ளது. கருவியே செயப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி. இங்கு மரம் என்பது சிலை செய்ய முதன்மைப் பொருள். ஆகவே இது முதற்கருவி எனப்படும்.

109) எட்டாம் வேற்றுமைக்கு பொருந்தாத கூற்றை தெரிவு செய்க.

1. இது விளிப்பொருளில் வரும்

2. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம்

3. இவ்வேற்றுமையின் உருபு ஆ

4. இவ்வேற்றுமையில் பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு.

A) 1 தவறு

B) 2 தவறு

C) 3 தவறு

D) 4 தவறு

விளக்கம்: 1. இது விளிப்பொருளில் வரும்

2. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம்

3. இவ்வேற்றுமைக்கு உருபு கிடையாது

4. இவ்வேற்றுமையில் பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு.

110) பொருத்துக.

அ. மூன்றாம் வேற்றுமை – 1. இராமனுக்குத் தம்பி இலக்குவன்

ஆ. நான்காம் வேற்றுமை – 2. பாரியினது தேர்

இ. ஐந்தாம் வேற்றுமை – 3. மண்ணால் குதிரை செய்தான்

ஈ. ஆறாம் வேற்றுமை – 4. ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்

A) 1, 3, 4, 2

B) 3, 1, 4, 2

C) 2, 3, 4, 1

D) 3, 2, 1, 4

விளக்கம்: மூன்றாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்

நான்காம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்

ஐந்தாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்

ஆறாம் வேற்றுமை – பாரியினது தேர்

111) தாயொடு குழந்தை சென்றது – என்னும் வாக்கியம் என்ன பொருளில் வந்துள்ளது?

A) கருவி

B) கருத்தா

C) உடனிழ்ச்சி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தாயொடு குழந்தை சென்றது. இதில் தாய் செல்ல குழந்தையும் உடனே சென்றது. ஒரு செயல் நடைபெறும் போது மற்றொரு செயலும் அதனுடனே நடைபெறுவது உடனிகழ்ச்சி எனப்படும். மற்றொரு (எ. கா) அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்

112) நான்காம் வேற்றுமைக்குரிய உருபு?

A) ஐ

B) ஆல்

C) கு

D) ஆன்

விளக்கம்: நான்காம் வேற்றுமைக்குரிய உருபு – கு. இது கொடை, பகை– நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.

113) __________ ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

__________என்னும் வழக்கு.

A) அன்புடைமை, பண்புடைமை

B) பண்புடைமை, அன்புடைமை

C) அடக்கமுடைமை, பண்புடைமை

D) பண்புடைமை, அடக்கமுடைமை

விளக்கம்: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

இதன் பொருள்: அன்புடையவராய் இருத்தல் மற்றும் உயர்ந்த குடியில் பிறத்தல் என இருப்பவர்கள் பண்புடையவராக கருதப்படுவார்கள்.

114) ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்னும் நூலை எழுதியவர்?

A) பி. ச. குப்புசாமி

B) பெ. தூரன்

C) ஆலங்குடி சோமு

D) இவர்களில் யாருமில்லை

விளக்கம்: ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் என்னும் நூலை எழுதியவர் – பி. ச. குப்புசாமி– இவர் தொடக்கப்பள்ளித் தலைமைஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயகாந்தனோடு நெருங்கிப் பழகி பல்லாண்டு என்னும் நூலை எழுதியுள்ளார்.

115) இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக் கலை இளைஞருலகில் பரவல் வேண்டும் என்று கூறியவர்?

A) திரு.வி.க

B) அப்துல் கலாம்

C) சிவன்

D) பாரதிதாசன்

விளக்கம்: இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக் கலை இளைஞருலகில் பரவல் வேண்டும் என்று கூறியவர் திரு.வி.க.

116) வியப்புக்குறி கீழ்க்கண்ட எந்த இடத்தில் தேவையில்லை?

A) மகிழ்ச்சி

B) வியப்பு

C) அச்சம்

D) சொற்குறுக்கம்

விளக்கம்: மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.

117) பெண்ணின் பெருமை என்னும் நூலை எழுதியவர்?

A) திரு.வி.க

B) வாணிதாசன்

C) பாரதிதாசன்

D) பாரதியார்

விளக்கம்: பெண்ணின் பெருமை என்னும் நூலை எழுதியவர் – திரு.வி.க. இவரின்–முழு பெயர் கலியாண சுந்தரம். திரு.வி.க என்பதன் விரிவாக்கம் – திருவாரூர் விருதா–லனார் மகன் கலியாணசுந்தரம் என்பதாகும்.

118) மலர் பானையை வனைந்தாள் – இத்தொடர்_______பொருளைக் குறிக்கிறது?

A) ஆக்கல்

B) அழித்தல்

C) கொடை

D) அடைதல்

விளக்கம்: இத்தொடரில் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு வந்துள்ளது. இரண்டாம் வேற்றுமை 1. ஆக்கல் 2. அழித்தல் 3. அடைதல் 4. நீத்தல் 5. ஒத்தல் 6. உடைமை ஆகிய ஆறு பொருளில் வரும். மேற்கண்ட தொடர் ஆக்கல் பொருளில் வந்துள்ளது.

119) அறத்தான் பயின்று வருவதே இன்பம் – இத்தொடரில் பயின்ற– வரும் வேற்றுமை?

A) இரண்டாம்

B) மூன்றாம்

C) ஆறாம்

D) ஏழாம்

விளக்கம்: அறத்தான் வருவதே இன்பம் – இத்தொடரில் ஆன் என–னும் வேற்றுமை உருபு வந்துள்ளது. இது மூன்றாம் வேற்றுமையின் உருபு ஆகும். மூன்றாம் வேற்றுமையின் பிற உருபுகள் – ஆன், ஆல், ஒடு, ஓடு

120) முதல் வேற்றுமையின் சொல்லுருபு?

A) ஆனவன்

B) ஆவான்

C) ஆகின்றவன்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: முதல் வேற்றுமையின் மற்றொரு பெயர் எழுவாய் வேற்றுமை. இதற்கு உருபு இல்லை. இதன் சொல்லுருபு – ஆனவன், ஆவான், ஆகின்றவன்.

121) ஆத்திரம் கண்ணை

மறைத்திடும் போது

அறிவுக்கு வேலை கொடு – உன்னை

அழித்திட வந்த

பகைவன் என்றாலும்

அன்புக்குப் பாதை விடு! – என்ற வரிகளை எழுதியவர்?

A) பி. ச. குப்புசாமி

B) பெ. தூரன்

C) ஆலங்குடி சோமு

D) திரு.வி.க

விளக்கம்: ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது நாம் அறிவுக்கு வேலை கொடுத்து அதனை தவிர்க்க வேண்டும். பகைவன் தன்னை அழிக்க வந்தாலும் அன்பால் அவனை வெல்ல முடியும் என்று கூறியவர் ஆலங்குடி சோமு.

122) கிழமை என்ற சொல்லின் பொருள்?

A) மாதம்

B) நட்பு

C) பகை

D) உரிமை

விளக்கம்: கிழமை என்றால் உரிமை என்று பொருள். ஆறாம் வேற்றுமை உரிமைப் பொருளில் வரும்

123) அண்ணன் என்பதை அண்ணா என்றும், புலவர் என்பதை புலவரே என்றும் மாற்றி வழங்குவது__________

A) ஆகுபெயர்

B) திரிதல் புணர்ச்சி

C) இடுகுறிப்பெயர்

D) எட்டாம் வேற்றுமைத் தொகை

விளக்கம்: 1. பெயர்களை திரித்து வழங்குவதை எட்டாம் வேற்றுமைத் தொகை என்கிறோம்.

2. ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு சொல்லுக்கு ஆகி வருவது ஆகுபெயர்.

3. இரண்டு சொற்கள் சேரும் போது அதில் உள்ள எழுத்துக்கள் மாற்றமடைந்து சேர்த்து எழுதுவது திரிதல் புணர்ச்சி எனப்படும் (எ. கா) பொன் + குடம்=பொற்குடம். இதில் ன் என்னும் எழுத்து ற் என மாற்றமடைந்துள்ளது. எனவே இதனை திரிதல் புணர்ச்சி என்போம்.

4. காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் வழங்கிய சொல்லையே நாமும் பயன்படுத்தி வருவது இடுகுறிப்பெயர் (எ. கா) மரம்

124) திரு.வி.க-வின் நூல்களுள் பொருந்தாதது எது?

A) மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

B) பெண்ணின் பெருமை

C) தமிழ்ச்சாலை

D) பொதுமை வேட்டல்

விளக்கம்: திரு.வி.க-வின் நூல்கள்

1. மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்

2. பெண்ணின் பெருமை

3. தமிழ்ச்சாலை

4. பொதுமை வேட்டல்

5. முருகன் அல்லது அழகு

6. இளமை விருந்து

125) திறமை என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல்

A) Talent

B) Transformation

C) Language Change

D) Ornament

விளக்கம்: திறமை என்ற சொல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பு Talent

126) எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியவர்?

A) மகாத்மா காந்தியடிகள்

B) காமராசர்

C) அறிஞர் அண்ணா

D) ஜவஹர்லால் நேரு

விளக்கம்: எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியவர் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு.

127) இரட்டை மேற்கோள் எங்கு பயன்படுத்த கூடாது?

A) நேர்கூற்று

B) செய்யுள் அடிகள்

C) பொன்மொழிகள்

D) அயர்கூற்று

விளக்கம்: நேர்கூற்றுகளிலும், செய்யுள் அடிகளையோ மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும். அயற்கூற்றில் இரட்டை மேற்கோள் பயன்படுத்த தேவையில்லை.

128) கூற்றுகளை ஆராய்க.

1. தனிச்சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போது இரட்டை மேற்கோள் இடவேண்டும்

2. இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. தனிச்சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போது ஒற்றை மேற்கோள் இடவேண்டும்

2. இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்

129) கூற்றுகளை ஆராய்க

1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்

2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.

3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்

4. சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முற்றுப்புள்ளி வரும்

A) 1, 2 சரி

B) 1, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) 1, 3, 4 சரி

விளக்கம்: 1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்

2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.

3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்

4. சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி வரும்

130) பொருத்துக.

அ. நிறுத்தற்குறி – 1. Translation

ஆ. அணிகலன் – 2. Ornament

இ. மொழிபெயர்ப்பு – 3. Punctuation

ஈ. விழிப்புணர்வு – 4. Awarness

A) 3, 2, 1, 4

B) 3, 2, 4, 1

C) 1, 3, 2, 4

D) 4, 1, 2, 3

விளக்கம்: நிறுத்தற்குறி – 1. Punctuation

அணிகலன் – 2. Ornament

மொழிபெயர்ப்பு – 3. Translation

விழிப்புணர்வு – 4. Awarness

131) சீர்திருத்தம் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில மொழிபெயர்ப்பு?

A) Renew

B) Reform

C) Revenue

D) Recorrection

விளக்கம்: சீர்திருத்தம் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில மொழிபெயர்ப்புச் சொல் – Reform

132) கூற்ற–களை ஆராய்க.

1. ஒரேஎழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் காற்புள்ளி வரும்

2. உடன்பாடு எதிர்மறைக் கருத்துக்களை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்

A) இரண்டும் சரி

B) இரண்டும் தவறு

C) 1 மட்டும் சரி

D) 2 மட்டும் சரி

விளக்கம்: 1. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் காற்புள்ளி வரும்

2. உடன்பாடு எதிர்மறைக் கருத்துக்களை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்

133) பொருத்துக.

அ. இரண்டாம் வேற்றுமை – 1. நின்று, விட, காட்டிலும், இருந்து

ஆ. மூன்றாம் வேற்றுமை – 2. ஆக, பொருட்டு, நிமித்தம்

இ. நான்காம் வேற்றுமை – 3. கொண்டு, வைத்து, உடன், கூட

ஈ. ஐந்தாம் வேற்றுமை – 4. இல்லை

A) 1, 2, 3, 4

B) 4, 3, 2, 1

C) 4, 3, 1, 2

D) 4, 2, 3, 1

விளக்கம்: இரண்டாம் வேற்றுமை – இல்லை

மூன்றாம் வேற்றுமை – கொண்டு, வைத்து, உடன், கூட

நான்காம் வேற்றுமை – ஆக, பொருட்டு, நிமித்தம்

ஐந்தாம் வேற்றுமை – நின்று, விட, காட்டிலும், இருந்து

134) கூற்றுகளை ஆராய்க.

1. பொருளை வேறுபடுத்தி காட்டுவது – வேற்றுமை

2. சில இ–ங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றை சொல்லுருபுகள் என்பர்

3. வேற்றுமை உருபுகள் இடம்பெற்றுள்ள தொடர்கள் – வேற்றுமைத்தொகை

4.–வேற்றுமை உருபுகள் இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத் தொடர் என்பர்.

A) 1, 2 தவறு

B) 3, 4 தவறு

C) அனைத்தும் தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பொருளை வேறுபடுத்தி காட்டுவது – வேற்றுமை

2. சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றை சொல்லுருபுகள் என்பர்

3. வேற்றுமை உருபுகள் இடம்பெற்றுள்ள தொடர்கள் – வேற்றுமைத்தொடர்

4– வேற்றுமை உருபுகள் இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத் தொகை என்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin