8th Tamil Unit 3 Questions
8th Tamil Unit 3 Questions
Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.
6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.
First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.
Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 8th Tamil Unit 3 Questions With Answers Uploaded Below.
1) ஐஞ்பெருங்காப்பியங்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க?
A) வளையாபதி
B) நீலகேசி
C) சீவக சிந்தாமணி
D) சிலப்பதிகாரம்
விளக்கம்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். இதில் நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காப்பியம் ஆகும்.
2) உடல்நலம் என்பது__________இல்லாமல் வாழ்தல் ஆகும்?
A) அணி
B) பணி
C) பிணி
D) மணி
விளக்கம்: உடல்நலம் என்பது பிணி இல்லாமல் வாழ்வதாகும். பிணி என்றால் துன்பம் என்று பொருள்.
3) நீலகேசி கூறும் நோயின் வகைகள்______________
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: நீலகேசி கூறும் நோயின் வகைகள் மூன்று அவை,
1. மருந்தினால் நீங்கும் நோய்
2. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்
3. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன
4) திரியோக மருந்து என்னும் சொல்லின் பொருள்?
A) திரியை கொண்ட மூன்று மருந்துகள்
B) திரியால் தயாரிக்கப்படும் மூன்று மருந்துகள்
C) திரவடிவில் உள்ள மருந்துகள்
D) மூன்று யோக மருந்துகள்
விளக்கம்: திரி என்றால் மூன்று என்றுபொருள். திரியோக மருந்து என்றால் மூன்று யோக மருந்துகள் என்று பொருள்.
5) மூன்று யோக மருந்துகளில் பொருந்தாதது எது?
A) நல்லறிவு
B) நல்தியானம்
C) நற்காட்சி
D) நல்லொழுக்கம்
விளக்கம்: அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. அவை,
1. நல்லறிவு
2. நற்காட்சி
3. நல்லொழுக்கம்
6) நீலகேசியின் மொத்த சருக்கங்கள் எத்தனை?
A) 5
B) 10
C) 15
D) 20
விளக்கம்: ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்து சருக்கங்களைக் கொண்டுள்ளது.
7) நீலகேசி ஒரு____________சமய நூல்?
A) பௌத்தம்
B) சமணம்
C) ஜெராஸ்டிரியம்
D) இந்து
விளக்கம்: நீலகேசி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இது சமண சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
8) இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
A) இ + யுண்டார்
B) இவ் + உண்டார்
C) இவை + உண்டார்
D) இவை + யுண்டார்
விளக்கம்: இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது இவை + உண்டார்.
9) தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்____________
A) தாம்இனி
B) தாம்மினி
C) தாமினி
D) தாமனி
விளக்கம்: தாம் + இனி என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தாமினி. இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்து இ, உ.
10) நீலகேசியின் ஆசிரியர்?
A) திருத்தக்கதேவர்
B) தோலாமொழித்தேவர்
C) இமயவரம்பரன் நெடுஞ்சேரலாதன்
D) ஆசிரியர் பெயர் தெரியவில்லை
விளக்கம்: ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்று நீலகேசி. இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திருத்தக்க தேவர் – சீவக சிந்தாமணி
தோலாமொழித்தேவர் – சூளாமணி
இளங்கோவடிகள் – சிலப்பதிகாரம்
11) கவிமணி என்று போற்றப்படுபவர்?
A) தேசிய விநாயகனார்
B) பெ. சுந்தரனார்
C) கண்ணதாசன்
D) வாணிதாசன்
விளக்கம்: கவிமணி என்று போற்றப்படுபவர் தேசிய விநாயகனார் ஆவார்
பெ. சுந்தரனார் – மனோண்மணியம்
கண்ணதாசன் – கவியரசு
வாணிதாசன் – பாவலர் மணி, தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞாயிறு
12) பொருத்துக
அ. நித்தம் நித்தம் – 1. பாதுகாத்தல்
ஆ. திட்டு முட்டு – 2. நாள்தோறும்
இ. சுண்ட – 3. நன்கு
ஈ. பேணுவையேல் – 4. தடுமாற்றம்
A) 1, 2, 3, 4
B) 3, 2, 1, 4
C) 2, 3, 4, 1
D) 2, 4, 3, 1
விளக்கம்:
நித்தம் நித்தம் – நாள்தோறும்
திட்டு முட்டு – தடுமாற்றம்
சுண்ட – நன்கு
பேணுவையேல் – பாதுகாத்தல்
13) உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ? – என்ற பாடல் வரிகள் யாருடையது?
A) தேசிய விநாயகனார்
B) பெ. சுந்தரனார்
C) கண்ணதாசன்
D) வாணிதாசன்
விளக்கம்: உடற்பயிற்சியின் அவசியத்தையும் நோய் பற்றிய வருமுன் காப்போம் என்னும் விழிப்புணர்வு தரும் வகையில் கவிமணி இவ்வாறு எழுதியுள்ளார்.
14) அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே!
வையம் புகழ வாழ்வாயே! – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் வையம் என்ற சொல்லின் பொருள்?
A) ஊர்
B) நாடு
C) உலகம்
D) மாநிலம்
விளக்கம்: வையம் என்ற சொல்லின் பொருள் உலகம் என்பதாகும். வருமுன் நோயை காத்தால் உலகம் புகழும்படி வாழலாம் என்று கவிமணி தனது பாடல்கள் மூலம் கூறுகிறார்.
15) நீலகேசி பற்றி கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
1. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று
2. இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
3. பத்து சருக்கங்களைக் கொண்ட நூல்
4. பௌத்த சமய கருத்துக்களை வாதங்களில் அடிப்படையில் விளக்குகிறது
A) 1, 2, 3 சரி
B) 1, 3, 4 சரி
C) 2, 4 சரி
D) 1, 4 தவறு
விளக்கம்: 1. ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்று
2. இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
3. பத்து சருக்கங்களைக் கொண்ட நூல்
4. சமண சமய கருத்துக்களை வாதங்களில் அடிப்படையில் விளக்குகிறது
16) நோயை ஓட்டி நுறு வயது தரும் என்று கவிமணி கூறும் கருத்துகளில் பொருந்தாதது?
A) தூய காற்று
B) பசித்தபின் உணவு
C) மூலிகைகள்
D) நன்னீர்
விளக்கம்: தூய காற்றும் நன்னீரும்,
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஓட்டி விடும்அப்பா!
நூறு வயதும் தரும்அப்பா! என்பது கவிமணியின் வரிகள். இதில் நோயை ஓட்டும் வழிகளாக கவிமணி கூறுவன,
1. தூய கற்று
2. நன்னீர்
3. சுண்டப்பசித்த பின் உணவு
17) காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப்போவனே! – இவ்வரிகளில் காலன் என்ற சொல்லின் பொருள்?
A) தேவர்கள்
B) அரசர்
C) மருத்துவர்
D) எமன்
விளக்கம்: காலன் என்ற சொல்லின் பொருள் எமன் என்பதாகும். தினமும் காலை மாலை என்ற இருவேலை உடற்பயிற்சி செய்வோரைக் கண்டு எமன் காலைத் தொட்டு கும்பிட்டு ஓடிப்போவார் என்று உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
18) கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா – இவ்வரிகளில் உணர்த்தப்படும் செய்தி?
A) கூழைக் குடித்தால் உடல்நலம் நன்றாக இருக்கும்
B) குளித்த பிறகு கூழைத்தான் குடிக்க வேண்டும்
C) எளிமையாக இருத்தல்
D) தூய்மையாக இருத்தல்
விளக்கம்: கூழை குடித்தாலும் குளித்த பிறகே குடிக்க வேண்டும். அதாவது எது உண்டாலும் நாம் அன்றாடம் குளிக்க வேண்டும் என்று தூய்மை பற்றி கவிமணி இப்பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார் .
19) ஆசியஜோதி என்னும் நூலை எழுதியவர்?
A) கவிமணி
B) ஜவஹர்லால் நேரு
C) வாணிதாசன்
D) மனோன்மணியம் பெ. சுந்தரனார்
விளக்கம்: ஆசியஜோதி என்னும் நூலை எழுதியவர் – கவிமணி.
Discovery Of India – ஜவஹர்லால் நேரு
20) ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும் – இத்தொடரில் உள்ள உவசமம் என்ற சொல்லின் பொருள்?
A) சமமான
B) அடங்கிஇருத்தல்
C) அடங்காது எதிர்த்தல்
D) தன்மையுடையன
விளக்கம்: நோயின் தன்மை பற்றி விளக்கும் இவ்வரிகள் ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றாக நீலகேசியில் இடம் பெற்றுள்ளது. உவசமம் என்ற சொல்லின் பொருள் அடங்கி இருத்தல் என்பதாகும்.
21) கவிமணி பிறந்த ஊர்?
A) மருதூர்
B) எட்டயபுரம்
C) தோரமங்கலம்
D) தேரூர்
விளக்கம்: கவிமணி தேசிய விநாயகனார் பிறந்த ஊர் தேரூர்.
மருதூர் – இராமலிங்க அடிகள்
எட்டயபுரம் – பாரதியார்
தோரமங்கலம் – பாவலரேறு பெருஞ்சித்தனார்
22) _____________உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு?
A) உடற்பயிற்சி
B) சுத்தம்
C) நன்னீர்
D) நற்காற்று
விளக்கம்: சுத்தம் உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே! – கவிமணி
சுத்தம் உள்ள இடமே சுகம் உள்ள இடம் என்று கவிமணி கூறுகிறார்.
23) யார்வினவும் காலும் அவை மூன்று கூற்றவா – இதில் அவை என்று குறிப்பிடப்படுவது?
A) மருந்து
B) இன்பம்
C) துன்பம்
D) நோய்
விளக்கம்: இவ்வரிகளில் அவை என்று குறிப்பிடப்படுபவை நோய் ஆகும். சமண சமய நூலான நீலகேசி நோய் மூன்று தன்மையுடையன என்று விளக்குகிறது. அவை
1. மருந்தினால் நீங்கும் நோய்
2. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்
3. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன
24) மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர்?
A) கவிமணி
B) கவியரசு
C) பாவலர் மணி
D) புரட்சிக் கவி
விளக்கம்: மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகனார் ஆவார்.
கவியரசு – கண்ணதாசன்
பாவலர் மணி – வாணிதாசன்
புரட்சிக் கவி – பாரதிதாசன்
25) யார்வினவும் காலும் அவை மூன்று கூற்றவா – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் கூற்றவா என்ற சொல்லின் பொருள்?
A) கடவுள்
B) மகாவீரர்
C) எமன்
D) பிரிவுகளாக
விளக்கம்: யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா – இதில் குறிப்பிடப்படும் கூற்றவா என்ற சொல்லின் பொருள் பிரிவுகள். அதாவது மூன்று கூற்றவா எனில் மூன்று பிரிகள் என்பது இதன் பொருள்
26) _________,_________நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
A) சோறும், கூழும்
B) இடமும் பொருளும்
C) பணமும் பொருளும்
D) சோறும் நீரும்
விளக்கம்: இடமும் பொருளும் ஒரு போதும் நோயாளிக்கு இனிய வாழ்வு தராது என்பது இப்பாடலின் பொருள் ஆகும். மனிதனுக்கு நல்வாழ்வு அளிப்பது உடற்பயிற்சி, சுகாதார வாழ்வு, நடைபயிற்சி, சரியான உணவு முறைகள் என்று கவிமணி கூறுகிறார் .
27) காந்தியடிகள்__________போற்ற வாழ்ந்தார்?
A) நிலம்
B) வையம்
C) களம்
D) வானம்
விளக்கம்: காந்தியடிகள் வையம் போற்ற வாழ்ந்தார். இதில் வையம் என்ற சொல்லின் பொருள் உலகம் என்பதாகும்.
28) கவிமணி இயற்றிய மொழிபெயர்ப்பு நூல்?
A) மருமக்கள் வழி மான்மியம்
B) கதர் பிறந்த கதை
C) மலரும் மாலையும்
D) உமர்கய்யாம் பாடல்கள்
விளக்கம்: கவிமணி என்று போற்றப்படும் தேசிய விநாயகனார் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
அவரின் நூல்கள்:
1. ஆசியஜோதி
2. மருமக்கள் வழி மான்மியம்
3. கதர் பிறந்த கதை
4. மலரும் மாலையும்
29) ஓர்தல் தெளிவோரில் ஒழுக்கம் இவையுண்டார் – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் ஓர்தல் என்ற சொல்லின் பொருள்?
A) நல்லறிவு
B) நற்காட்சி
C) நல்லொழுக்கம்
D) ஒளிந்துகொள்ளுதல்
விளக்கம்: ஓர்தல் என்ற சொல்லின் பொருள் நல்லறிவு.
ஓர்தல் – நல்லறிவு
தெளிவு – நற்காட்சி
ஒழுக்கம் – நல்லொழுக்கம்
30) மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்!
தினமும் பாயில் விழுந்திடுவாய்! – இவ்வரிகளில் உணர்த்தப் படும் செய்தி?
A) அதிகமாக உண்ண வேண்டும்
B) சத்தானதாக உண்ண வேண்டும்
C) சுகாதாரமான உணவை உண்ண வேண்டும்
D) அளவாக உண்ண வேண்டும்
விளக்கம்: மட்டு என்ற சொல்லின் பொருள் அளவு. எனவே அளவாக உண்டால் ஆரோக்கியமான உடலை பெறமுடியும். அதிகமாக உண்டுவந்தால் நோய் வந்து பாயில் விழ வேண்டும் என்று உணவு உண்ணும் முறை பற்றி கவிமணி கூறியுள்ளார்.
31) நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) நலம் + எல்லாம்
B) நலன் + எல்லாம்
C) கலம் + எலாம்
D) நலன் + எலாம்
விளக்கம்: நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நலம் + எல்லாம்
32) இடம + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்__________
A) இடமெங்கும்
B) இடம்எங்கும்
C) இடமெங்கும்
D) இடம்மெங்கும்
விளக்கம்: இடம் + எங்கும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இடமெங்கும். இங்கு நிலைமொழியின் இறுதி எழுத்து ம். வருமொழியின் முதல் எழுத்து எ. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ம் + எ=மெ. இடமெங்கும் என எழுதலாம்
33) உடலின் உறுதி உடையவரே – இதில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்கள்?
A) உடலின் உறுதி என்ற இரு சொற்கள் மட்டுமே
B) உடலின் உடையவரே என்ற இரு சொற்கள் மட்டுமே
C) உடலின் உறுதி உடையவரே
D) எதுவுமில்லை
விளக்கம்: யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை, மோனை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்கள்(சொற்கள்) -ன் முதல் எழுத்து ஒன்றிவரின் அதனை மோனை என்று கூறுவர்.
34) மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல் – இதில் வாரி வாரி என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு?
A) இரட்டைக் கிளவி
B) அடுக்குத்தொடர்
C) முற்றும்மை
D) எண்ணும்மை
விளக்கம்: வாரி வாரி என்பது இரண்டு சொல் அடுக்கி வந்துள்ளது. இதனை பிரித்துப் பார்த்தாலும் பொருள் தரும். இதன் இலக்கண குறிப்பு – அடுக்குத் தொடர்
இரட்டைக்கிளவி – சொற்களைப் பிரித்தால் பொருள் தராது(எ.கா) . சல சலஇ மட மட
எண்ணும்மை – உம் என்னும் சொல் வெளிப்படையாக வருவது (எ.கா) நீயும் நானும்
முற்றும்மை – உம் என்னும் சொல் ஒற்றைச் சொல்லின் வெளிப்படையாக வருவது (எ.கா) நானும்
35) கவிமணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. இயற்பெயர் தேசிய விநாயகனார்
2. குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்
3. 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்
4. மொழிபெயர்ப்பு நூல் – ஆசியஜோதி
5. எழுதிய நூல் – மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும், ஆசியஜோதி
A) 3 மட்டும் தவறு
B) 4 மட்டும் தவறு
C) 1 மட்டும் தவறு
D) 5 மட்டும் தவறு
விளக்கம்: 1. இயற்பெயர் தேசிய விநாயகனார்
2. குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்
3. 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்
4. மொழிபெயர்ப்பு நூல் – உமர்கய்யாம்
5. எழுதிய நூல் – மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும், ஆசியஜோதி
36) சராசரி மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை கனவுகள் காண்கிறான்?
A) 2 லட்சம்
B) 3 லட்சம்
C) 4 லட்சம்
D) 5 லட்சம்
விளக்கம்: சராசரி மனிதன் தனது வாழ்நாளில் மூன்று லட்சம் கனவுகள் காண்கிறான்.
37) சுஜாதாவின் இயற்பெயர்?
A) ரங்கராஜன்
B) ராம்குமார்
C) ராஜாராம்
D) ராஜேந்திரன்
விளக்கம்: சுஜாதா என்பவரின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும். இவர் மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்
38) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் – இக்குறட்பா உணர்த்தும் செய்தி?
A) மருந்தை முறையாக உண்ணுதல் வேண்டும்
B) மருந்தை உண்ணக் கூடாது
C) பசித்தபின் உணவு அருந்தினால் மருந்து வேண்டாம்
D) உணவருந்தியப்பின் மருந்து உண்ண வேண்டும்
விளக்கம்: அருந்திய உணவு செரித்தபின் உணவு அருந்தினால் மருந்து என்ற ஒன்று தேவைப்படாது என்பது இக்குறட்பாவின் பொருள்.
39) நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய் – இதில் நிழல்இகழும் என்ற சொல்லின் பொருள்?
A) ஒளியை மறைக்கும்
B) நிழலைத் தரும்
C) ஒளிபொருந்திய
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: நிழல் இகழும் என்ற சொல்லின் பொருள் – ஒளி பொருந்திய என்பதாகும்.
நிழல்இகழும் பூணாய் – ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்.
40) தூய காற்றும் நன்னீரும் – இதில் இடம்பெற்றுள்ள தொடையின் உறுப்பு?
A) எதுகை
B) மோனை
C) இயைபு
D) எதுவுமில்லை
விளக்கம்: எதுகை, மோனை, இயைபு ஆகியவை தொடையின் உறுப்பு ஆகும்.
1. மோனை – வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்கள்(சொற்கள்) -ன் முதல் எழுத்து ஒன்றி வருவது
2. எதுகை – வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்கள்(சொற்கள்) -ன் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
3. இயைபு – வெவ்வேறு அடிகளின் இறுதி சீர் ஒன்றி வருவது
41) கூற்று: சித்த மருத்துவம் என்பது மரபுவழி மருத்துவமாகவும் நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது. இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது.
காரணம்: நவீன மருத்துவத்தில், துரிதமாகச் சிலநோய்களுக்குக் கிடைத்த தீர்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: சித்த மருத்துவம் என்பது மரபுவழி மருத்துவமாகவும் நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது. இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது. இதற்கான காரணம் நவீன மருத்துவத்தில்இ துரிதமாகச் சிலநோய்களுக்குக் கிடைத்த தீர்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றது ஆகும்.
42) வேர்பாரு, தழைபாரு, மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள். இதில் பற்பசெந்தூரம் என்பது கீழக்கண்ட எதைக் குறிக்கும்.
A) அணியும் ஒரு வகை திலகம்
B) உலோகம்
C) பாஷாணங்கள்
D) B மற்றும் C
விளக்கம்: வேர், தழை ஆகிவற்றால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த காலத்தில் எப்படி மூலிகைகளை பார்த்தார்களோ அப்படியே தாதுப்பொருட்களையும்இ உலோகத்தையும் பார்த்தார்கள். அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.
43) கூற்று: தமிழர் மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லை
காரணம்: மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
44) கூற்றுகளை ஆராய்க. (சித்த மருத்துவம் பற்றி) :
1. சமண, பௌத்த காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.
2. சைவம் ஓங்கிய போது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் இம்முறையில் கலந்தன
3. இறுதியாக ஆங்கிலேயர்களின் வருகையால் அறிவியல் பார்வை மூலம் சித்த மருத்துவம் சுருங்கியது
A) அனைத்தும் தவறு
B) அனைத்தும் சரி
C) 1, 2 சரி
D) 1, 3 சரி
விளக்கம்: 1. சமண, பௌத்த காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.
2. சைவம் ஓங்கிய போது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் இம்முறையில் கலந்தன
3. இறுதியாக ஆங்கிலேயர்களின் வருகையால் அறிவியல் பார்வை மூலம் சித்த மருத்துவம் சுருங்கியது
45) பேர்த்த பிணியுள் பிறாவர் பெரிதின்பமுற்றே – இதில் குறிப்பிடப்படும் பிணி என்ற சொல்லின் பொருள்?
A) கட்டுதல்
B) பனி
C) தீராத நோய்
D) துன்பம்
விளக்கம்: இச்செய்யுளில் பிணி என்பதன் பொருள் துன்பம் என்னும் பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரிகள் நீலகேசி என்றும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.
46) காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப்போவனே! – இவ்வரிகள் யார் எழுதியது?
A) தேசிய விநாயகனார்
B) பெ. சுந்தரனார்
C) கண்ணதாசன்
D) வாணிதாசன்
விளக்கம்: இவ்வரிகளின் ஆசிரியர் கவிமணி ஆவார். காலை மாலை என்று இருவேலையும் நடைபயிற்சி செய்வோர்க்கு நோய் என்பதிலிருந்து விடுதலை என்று கவிமணி எழுதியுள்ளார்.
47) நோய்நாடி நோய் முதல்நாடி என்று கூறியவர்?
A) ஒளவையார்
B) கபிலர்
C) அகத்தியர்
D) திருவள்ளுவர்
விளக்கம்: நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் திருக்குறள். இதனை எழுதியவர் திருவள்ளுவர். நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது
48) பொருத்துக
அ. தீர்வன – 1. ஒளிபொருந்திய
ஆ. உவசமம் – 2. நீங்குபவை
இ. நிகழ் இகழும் – 3. அடங்கி இருத்தல்
ஈ. பேர்தற்கு – 4. அகற்றுவதற்கு
A) 2, 3, 1, 4
B) 2, 3, 4, 1
C) 1, 3, 2, 4
D) 4, 2, 1, 3
விளக்கம்:
தீர்வன – நீங்குபவை
உவசமம் – அடங்கி இருத்தல்
நிகழ் இகழும் – ஒளிபொருந்திய
பேர்தற்கு – அகற்றுவதற்கு
49) தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு_________பயன்படுத்தினர்
A) தாவரங்களை
B) விலங்குகளை
C) உலோகங்களை
D) மருந்துகளை
விளக்கம்: தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களை கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான். தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறு தான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.
50) தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது____________நீட்சியாகவே உள்ளது
A) மருந்தின்
B) உடற்பயிற்சியின்
C) உணவின்
D) வாழ்வின்
விளக்கம்: ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சி யாக இருக்கிறது
51) உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று___________
A) தலைவலி
B) காய்ச்சல்
C) புற்றுநோய்
D) இரத்தக்கொதிப்பு
விளக்கம்: உடல் எடை அதிகரிப்பால் சர்க்கரைநோய், இரத்தக்கொதிப்பு வர வாய்ப்புள்ளது. அழகுக்காக மட்டும் உடல் எடையைக் குறைப்பதும் மிகவும் மெலிவதும் நல்லவையல்ல.
52) சமையலறையில் செலவிடும் நேரம்____________செலவிடும் நேரமாகும்
A) சுவைக்காக
B) சிக்கனத்திற்காக
C) நல்வாழ்வுக்காக
D) உணவுக்காக
விளக்கம்: அவசர யுகம் என்றாலும் உணவு உண்பதில், சில ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தாக வேண்டும். உணவுக்காகச் சமையலறையில் செலவிடும் நேரத்தை, நலவாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைக்க வேண்டும்.
53) தொற்றுநோய் வராமல் காப்பதிலும், அவசரகாலச் சிகிச்சையிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் _______மருத்துவம் முன்னணியில் உள்ளது?
A) சித்த
B) ஆயுர்வேத
C) நவீன
D) அலோபதி
விளக்கம்: உலகத்தின் அத்தனை மரபுசார்ந்த மருத்துவமுறைகளுக்கும் பலமும் இருக்கிறது. பலவீனமும் இருக்கிறது. தொற்றுநோய் வராமல் காப்பதிலும், அவசரகாலச் சிகிச்சையிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் நவீன மருத்துவம் முன்னணியில் உள்ளது. மரபுசார்ந்த மருந்து வேலை செய்யும் விதத்தைப் புரிந்துகொள்வதற்கு நவீன அறிவியல் பயன்படுகிறது. எனவே, எல்லா மருத்துவ முறைகளும் கைகோக்க வேண்டும்.
54) கூற்று: தமிழர் மருத்துவம் இப்பொழுது மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருவதாகத் தோன்றுகிறது.
காரணம்: சக்ககரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய வாழ்வியல் நோய்களை தீர்க்க இராசயன மருந்து மட்டும் போதாது.
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
B) கூற்று தவறுஇ காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: பல ஆண்டுகளுக்குப் பின்னால்தான் மரபுசார்ந்த மருத்துவம் மிகப்பெரிய அனுபவத்தின் நீட்சி என்பதும் மிகப்பெரிய பட்டறிவில் ஒரு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக ஒளிந்திருக்கும் என்பதும் புரியத் தொடங்கியது. குறிப்பாகச் சக்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய வாழ்வியல் நோய்கள் பெருகிய நிலையைச் சொல்லலாம். இவற்றைத் தீரக்க வெறும் இரசாயன மருந்துகள் போதா. கூடவே உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம் இவையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
55) மனித மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை?
A) மில்லியன்
B) பில்லியன்
C) ட்ரில்லியன்
D) கண்டறிய இயலாது
விளக்கம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன்.
56) மூளையை எத்தனை பாகங்களாகப் பிரிக்கலாம்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: மூளையை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கலாம். அவை
1. உள்மூளை
2. நடுமூளை
3. பின்மூளை
57) மூளை குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் _________ பாகத்தை அபகரித்துக் கொள்கிறது
A) 1/5
B) 1/4
C) 1/50
D) 1/10
விளக்கம்: மூளை குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது. காரணம் தனக்கான ஆற்றலைச் சேமித்து வைக்க அதற்கு இடம் இல்லை.
58) சூடான பாத்திரத்தை தொட்டல் கையை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட அவசர கால செயல்படுகளுக்கு எங்கிருந்து சைகை வரும்?
A) முன் மூளை
B) சிறு மூளை
C) நடு மூளை
D) முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்
விளக்கம்: தும்மல், இருமல், சூடான பாத்திரத்தை தொட்டல் கையை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட அவசர கால செயல்படுகளுக்கு மூளைக்கு சென்று சைகை வரும் வரை காத்திருக்க முடியாது. எனவே இந்த மாதிரி தன்னிச்சையான செயல்களுக்காகத்தான் முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள் இருக்கின்றன.
59) பொருத்துக
அ. திறத்தன – 1. அணிகலன்களை அணிந்தவவே
ஆ. கூற்றவா – 2. தன்மையுடையன
இ. பூணாய் – 3. துன்பம்
ஈ. பிணி – 4. பிரிவுகளாக
A) 1, 2, 4, 3
B) 3, 2, 1, 4
C) 2, 4, 3, 1
D) 2, 4, 1, 3
விளக்கம்: திறத்தன – தன்மையுடையன
கூற்றவா – பிரிவுகளாக
பூணாய் – அணிகலன்களை அணிந்தவவே
பிணி – துன்பம்
60) மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மி.லி குருதி தேவைப்படுகிறது?
A) 600
B) 700
C) 900
D) 800
விளக்கம்: மனித உடலின் எடையில் 50இல் ஒரு பங்கே கொண்டிருக்கும் மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி இரத்தம் தேவைப்படுகிறது.
61) கூற்று: நம்மில் பெரும்பாலானவர்கள் இடதுகைக்காரர்கள்
காரணம்: நம் மூளையின் இடது பகுதி அதிகப்பகுதியான பாதிப்பு அடைந்துள்ளது
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
விளக்கம்: மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது.. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப்பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலதுகைகக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதி அதிகப்படியன பாதிப்பினால்தான் என்று சொல்கிறார்கள்.
62) கூற்றுகளை ஆராய்க
1. நமது மூளை வடபகுதி-இடபகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
2. இந்த உலகத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித இதயம் தான்
3. மூளை முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது.
4. முளையின் அமைப்பு முட்டைகோஸ் அல்லது வெங்காய தோல் தோல் மடிப்பு மடிப்பாக இருக்கும்
A) 1, 3 சரி
B) 1, 4 சரி
C) 1, 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. நமது மூளை வடபகுதி-இடபகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
2. இந்த உலகத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளை தான்
3. மூளை முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது.
4. முளையின் அமைப்பு முட்டைகோஸ் அல்லது வெங்காய தோல் தோல் மடிப்பு மடிப்பாக இருக்கும்
63) எவ்வளவு நேர உறக்கம் தேவை?
A) 5
B) 6
C) 7
D) 8
விளக்கம்: தினமும் 7 மணி நேர உறக்கம் அவசியம். அதனையும் சரியான நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். அதிகாலையில் எழ வேண்டும்.
64) மிகவும் குருதி பசி கொண்ட மனித உடலின் பாகம்?
A) நுரையீரல்
B) இதயம்
C) மூளை
D) கல்லீரல்
விளக்கம்: மனித உடலில் ரொம்ப பசி உள்ள பாகம் மூளை. அதாவது உயிர்வளிப் பசி. உயிர்வளி எனில் ஆக்ஸிஜன் மற்றும் குருதி. மனித உடலின் எடையில் 50ல் ஒரு பங்கே இருந்தாலும் அத குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது.
65) பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவும் மூளையின் பாகம்?
A) முன்மூளை
B) வடபகுதி மூளை
C) இடப்பகுதி மூளை
D) பின் மூளை
விளக்கம்: நமது மூளை வடபகுதி-இடபகுதி என்ற இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவும் மூளையின் பாகம் இடது பாதி தான்
66) மூளைக்கு செல்லும் நரம்புகளில்____________மாற்றம் ஒன்று நிகழ்கிறது?
A) தலைகீழ்
B) இடவல
C) மேல் கீழ்
D) எவ்வித மாற்றமும் இல்லை
விளக்கம்: மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது
67) நோயற்ற வாழ்வை வாழ தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: தினமும் 3 லிட்டர் தண்ணீர் என்பது அவசியம். ஏனெனில் நீர் நமது உடலை தூய்மைப் படுத்தும். அதிகப்படியாக நமது உடம்பில் உப்பு தேங்காமல் தடுக்கும்.
68) மூளை__________லிருந்து முளைக்கிறது?
A) தோள்பட்டை
B) முதுகுத் தண்டு
C) மண்டையோடு
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: மூளை, முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது. தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் வருவது போல அல்லது வெங்காயம் போல உள்ளது.
69) உடம்பிலுள்ள ____________தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது?
A) முன் மூளை
B) நடு மூளை
C) பின் மூளை
D) சிறு மூளை
விளக்கம்: உடம்பிலுள்ள சிறுமூளைதான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
70) காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப்போவனே! – என்ற வரிகள் இடம்பெற்ற கவிமணியின் நூல்?
A) மலரும் மாலையும்
B) மருமக்கள் வழி மான்மியம்
C) ஆசிய ஜோதி
D) கதர் பிறந்த கதை
விளக்கம்: இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் மலரும் மாலையும்.
கவிமணியின் பிற நூலகள்:
1. மருமக்கள் வழி மான்மியம்
2. ஆசியஜோதி
3. கதர் பிறந்த கதை
மொழிபெயர்ப்பு நூல் – உமர்கய்யாம் பாடல்கள்
71) பிறவித் துன்பத்திலிருந்து நீக்கும் மருந்துகளில் பொருந்தாது?
A) நற்காட்சி
B) நல்லறிவு
C) நல்லொழுக்கம்
D) நற்செயல்
விளக்கம்: அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள். இவற்றைத் தீரக்க திரியோக மருநதுகள் உதவுகின்றன. நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் ஆகியவை திரியோக மருந்து ஆகும். நற்செயல் என்பது திரியோக மருந்துகளில் குறிப்பிடப்படவில்லை.
72) மூளையின் வலது பாதிக்கு பொருத்தமில்லாத செயல் எது?
A) பேசுதல்
B) தர்க்கரீதியில் சிந்தித்தல்
C) சதுரங்கம்
D) கவிதை எழுதுதல்
விளக்கம்: மூளையின் வலது பாதி பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது இடதுபாதி மூளையே. ஆனால் கவிதை எழுதுதல் வலது பாதி மூளையின் செயல்பாடாகும்.
73) மனிதனின் புத்திசாலித்தனத்திற்கு காரணம்?
A) நியூரான்களின் பிணைப்பு
B) செல்களின் எண்ணிக்கை
C) செல்களின் அமைப்பு
D) மூளையின் எடை
விளக்கம்: மனித மூளையில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலைப்பின்னல்தான் புத்திசாலித்தனம், படைப்பு, உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம்.
74) மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர்?
A) அப்துல்கலாம்
B) சிவன்
C) சுகுமார் சென்
D) ரங்கராஜன்
விளக்கம்: சுஜாதா என்று அறியப்படும் ரங்கராஜன் என்பவர் மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
சிவன் என்பவர் இஸ்ரோவின் தலைவர்.
75) கூற்றுகளை ஆராய்க.
1. தலையின் பகுதியில் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றபடி கண்களைத் திறப்பது, தலையைத் திருப்பும்போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொள்வது – மூளை
2. ஏப்பம் விடுவது, இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி ஆகியவற்றுக்கெல்லாம் மூளையே முக்கிய காரணம்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. தலையின் பகுதியில் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றபடி கண்களைத் திறப்பது, தலையைத் திருப்பும்போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொள்வது – மூளை
2. ஏப்பம் விடுவது, இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி ஆகியவற்றுக்கெல்லாம் மூளைக்குப் பதிலாக முதுகெலும்பு இருந்தாலே போதும்.
76) நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளுள் பொருந்தாதது எது?
A) சித்த மருத்துவம்
B) ஆயர்வேத மருத்தும்
C) அலோபதி மருத்துவம்
D) ஹோமியோபதி
விளக்கம்: நடைமுறையில் உள்ள மருத்துமுறைகள்:
1.. சித்த மருத்துவம்
2. ஆயுர்வேத மருத்துவம்
3. யுனானி மருத்துவம்
4. அலோபதி மருத்துவம்
77) நோய்நாடி நோய் முதல்நாடி என்ற திருக்குறளில் முதல் என்ற சொல்லின் பொருள்?
A) ஆரம்பம்
B) காரணம்
C) தொடக்கம்
D) முதல் நோய்
விளக்கம்: நோய்நாடி நோய் முதல்நாடி என்ற திருக்குறளில் முதல் என்ற சொல்லின் பொருள் காரணம் என்பதாகும். அதாவது நோயை மட்டுமின்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.
78) கூற்று: இன்று நோய்கள் பெருகிவிட்டன.
காரணம்: உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் ஆகியவை
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: இன்று நோய்கள் பெருகி இருப்பதற்கு மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம். மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள். சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.
79) மனித உடலின் எடையில் மூளையின் எடை?
A) 1/10
B) 1/20
C) 1/40
D) 1/50
விளக்கம்: மனித உடலின் எடையில் மூளையின் எடை 50-ல் ஒரு பங்கு ஆகும்.
80) கூற்று: உயர்வாக இருந்த தமிழர் மருத்துவமுறை பின்தங்கி போயிற்று
காரணம்:நம் நாட்டின் மீது நடந்த படையெடுப்புகள்
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: உயர்வாக இருந்த தமிழர் மருத்துவமுறை பிறகு பின்தங்கிப் போனதற்குக் காரணம் நிறைய காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று நம் நாட்டின் மீது நடத்தப்பட்ட அன்னிய படையெடுப்பு.
81) மூளையில் இடது பாதிக்கு பொருத்தமில்லாத செயல் எது?
A) பிரச்சினைகளை அலசுதல்
B) சதுரங்கம்
C) கணக்கிடுதல்
D) படம் போடுவது (படம் வரைதல்)
விளக்கம்: நமது மூளையின் இடது பாதி பேசுதல், எழுதுதல், கணக்கிடுதல், தர்க்கரீதியில் சிந்தித்து செயல்படுதல் போன்ற செயல்களுக்கும், பிரச்சினைகளை அலசுதல் போன்றவற்றிற்கும் உதவுகிறது ஆனால் படம்போடுவது(படம் வரைதல்) மூளையின் வலது பாதியின் வேலையாகும்.
82) எந்த மூளைப் பகுதி சரியில்லை என்றால் வீட்டுக்குப் போக திண்டாடுவோம்?
A) வலது
B) இடது
C) மேல்
D) கீழ்
விளக்கம்: மூளையின் வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப்போக வழி தெரியாமல் திண்டாடுவோம்.
83) சுஜாதாவின் நூல்களில் பொருந்தாதது?
A) என் இனிய எந்திரா
B) மீண்டும் ஜீனோ
C) மின்னணு வாக்கு எந்திரம்
D) ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
விளக்கம்: ரங்கராஜன் என்னும் இயற்பெயர் சுஜாதாவின் நூல்கள்:
1. என் இனிய எந்திரா
2. மீண்டும் ஜீனோ
3. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
4. தூண்டில் கதைகள்
84) நோயில்லா வாழ்வைப் பெற தினமும் 45 நிமிடத்தில் எவ்வளவு தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும்?
A) 3 கி.மீ
B) 5 கி.மீ
C) 2 கி.மீ
D) 4 கி.மீ
விளக்கம்: தினமும் 45 நிமிடத்தில் மூன்று கி.மீ நடைப்பயணம். 15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி செய்தல் அவசியம்.
85) முழுவதும் விழித்துக்கொண்டிருக்கும் போது நாம் எத்தனை வகையான மனதுடன் இயங்குகிறோம்?
A) 1
B) 2
C) 3
D) 4
விளக்கம்: முழுவதும் விழித்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு விதமான மனம் இயங்குவதை நீங்கள் கவனிக்கலாம். மகிழுந்து அல்லது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு மனம் வேறு சிந்தனையில் இருக்க, மற்றது கியர் மாற்றுவது, சாலை விதிகளுக்குப் பணிவது என்று மற்றொரு தளத்தில் இயங்கும்.
86) எத்தனை நிமிடங்களுக்கு ஒரு நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம்?
A) 90
B) 60
C) 96
D) 108
விளக்கம்: சுமார் 96 நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கொஞ்ச நேரம் சுறுசுறுப்பு, கொஞ்ச நேரம் பகல்கனா, இப்படித்தான் நாம் மாறி மாறி வாழ்கிறோம். பகலிலும் சரி, இரவிலும் சரி இந்நிலை தொடரும்.
87) கூற்று: கடந்த காலத்தை விட இன்று நோய்கள் அதிகமாகிவிட்டன.
காரணம்: மருத்துவமுறைகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன.
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: இன்றைக்கு நோய்கள் பெருகி விட்டன. இதற்கு காரணம் மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
88) பொருள் முற்று பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்__________எனப்படும்
A) முற்றெச்சம்
B) முற்று வினை
C) எச்சம்
D) வினைமுற்று
விளக்கம்: பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். (எ.கா) . படித்த, எழுதிய
89) கூற்றுகளை ஆராய்க.
1. சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 30 வருடம் தூங்குகிறான்
2. மூன்று லட்சம் கனவுகள் காண்கிறான்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 20 வருடம் தூங்குகிறான். மூன்று லட்சம் கனவுகள் காண்கிறான். கனவு என்பது மனதில் உள்ள நினைவலைகளில் அன்றைய அல்லது சமீபத்திய நினைவுகளை வகைப்படுத்தி வரிசைப்படுத்தும் செயல் என்கின்றனர். கனவுகள் அலமாரியில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துத் திருப்பி வைப்பது போன்றது என்கிறார்கள்.
90) எச்சம் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: எச்சம் 2 வகைப்படும்.
1. பெயரெச்சம்
2. வினையெச்சம்
91) மனித மூளையில் இருக்கும் நியூரான்களின் எண்ணிக்கை?
A) ட்ரில்லியன்
B) 100 மில்லியன்
C) 100 பில்லியன்
D) 10 ஆயிரம் பில்லியன்
விளக்கம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் நியூரான்களின் எண்ணிக்கை நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன.
92) _________விலங்குக்கு மன்றாடிச் சொல்லிக் கொடுத்தும் இலக்கண விதிப்படி பேசும் திறமை வரவில்லை?
A) சிம்பன்சி குரங்கு
B) மனித குரங்கு
C) கிளி
D) புறா
விளக்கம்: மொழியை இலக்கண விதிகளின்படி பேசுவது மனிதனுக்கு உண்டான தனிப்பட்ட திறமை. சிம்பன்சி போன்ற குரங்குகளுக்கு மன்றாடிச் சொல்லிக் கொடுத்தும் இந்தத் திறமை வரவில்லை.
93) பெயரெச்சம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. பெயரைக் கொண்டு முடியும் எச்சம்
2. மூன்று காலத்தையும் காட்டாது
A) இரண்டும் சரி
B) இரண்டும் தவறு
C) 1 மட்டும் சரி
D) 2 மட்டும் சரி
விளக்கம்: பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். இது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் காட்டும்.
94) கூற்று: குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது.
காரணம்: தனக்கான ஆற்றலைச் சேமித்து வைக்க அதற்கு இடம் இல்லை.
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: மனித உடலின் மொத்த எடையில் 50ல் 1 பங்கு மட்டுமே எடைகொண்ட மூளை குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை அபகரித்துக் கொள்கிறது. காரணம் தனக்கான ஆற்றலைச் சேமித்து வைக்க அதற்கு இடம் இல்லை.
95) தலைமைச் செயலகம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A) கல்யாண்ஜி
B) பாரதிதாசன்
C) பாவலரேறு பெருஞ்சித்தனார்
D) சுஜாதா
விளக்கம்: தலைமைச் செயலகம் என்ற நூலை எழுதியவர் ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட சுஜாதா ஆவார். இவர் இந்நூலில் மனித மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை பற்றி விளக்கியுள்ளார்.
96) கூற்று: தமிழர் மருத்துவம் இப்பொழுது மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது.
காரணம்: ஆங்கில மருத்துவ முறையில் பக்கவிளைவுகள் அதிகம்.
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
D) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
விளக்கம்: தொடர் சிகிச்சைக்குப் பிறகு பக்கவிளைவுகள் இல்லா மருந்துகளின் தேவை அவசியமாயிற்று. அதன் பிறகுதான் எல்லா நாடுகளிலும் இருக்கும் மரபுசார்ந்த மருத்துவ முறைகளின் மீது, நவீன அறிவியல் பார்வை விழத் தொடங்கியது. அதனால், சித்த மருத்துவத்தின் தொன்மையும் தமிழர் மருத்துவத்தின் தொன்மையும் புரிய தொடங்கியது.
97) நான் ஒரு நடிகன் எனில் மூளையின் எந்த பாகம் எனக்கு உதவி புரியும்?
A) வலது
B) இடது
C) நடு மூளை
D) முன் மூளை
விளக்கம்: நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் மூளையின் வலது பாதியின் தான்.
98) கூற்றுகளை ஆராய்க (மூளையின் பகுதி)
1. வலது பகுதி – பட்டயக் கணக்கர், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்
2. இடது பகுதி – நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளைக் கையாளுபவர்கள்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: இடது பகுதி – பட்டயக் கணக்கர், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்
வலது பகுதி – நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளைக் கையாளுபவர்கள்
99) கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம்____________
A) படித்து
B) எழுதி
C) வந்து
D) பார்த்த
விளக்கம்: மேற்க்கண்டவற்றில் பார்த்த என்பது மட்டுமே பெயரெச்சம்.
படித்து, எழுதி, வந்து – வினையெச்சங்கள்
100) குறிப்பு வினையெச்சம்_________வெளிப்படையாகக் காட்டாது.
A) காலத்தை
B) வினையை
C) பண்பினை
D) பெயரை
விளக்கம்: செயலையோ, காலத்தையோ தெளிவாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
101) __________மூளையில் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ளன.
A) பின் மூளை
B) உள் மூளை
C) நடு மூளை
D) சிறு மூளை
விளக்கம்: முன் மூளையில் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ளன. சிறு மூளைதான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
102) பெயரெச்சம் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5
விளக்கம்: பெயரெச்சம் 2 வகைப்படும்.
1. தெரிநிலை பெயரெச்சம்
2. குறிப்புப் பெயரெச்சம்
103) மொழி அறிவுடன் தொடர்புடைய மூளையின் பகுதி எது?
A) முன் மூளை
B) வலது பாதி
C) இடது பாதி
D) முன் மூளை
விளக்கம்: மொழி அறிவு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பாகம் இடது பகுதியாகும்.
104) செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டும் பெயரெச்சம்?
A) குறிப்பு பெயரெச்சம்
B) தெரிநிலை பெயரெச்சம்
C) பண்புப்பெயரெச்சம்
D) காலப்பெயரெச்சம்
விளக்கம்: செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம். (எ.கா) எழுதிய கடிதம்
எழுதிய – எழுதுதல் என்னும் செயல் மற்றும் இறந்த காலம்
105) அமுக்குவான் என்றால் என்ன?
A) உடல் உறுப்புகள் தூக்கத்திற்கு பின் இயக்கம் பெறுதல்
B) தூக்கத்திற்கு பின் நினைவு திரும்புதல்
C) இரண்டு விதமான நினைவுகளுடன் வாழுதல்
D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: தூக்கதிலிருந்து எழுந்திருக்கும்போது நாம் இதன்(தன்னுணர்வு) பல நிலைகளை சந்திக்கிறோம். சிலருக்கு மதியநேரத் தூக்கம் இருந்து எழுந்திருக்கும்பொழுது ‘அமுக்குவான்’ வரும். அதாவது நினைவு திரும்புதல். ஆனால், கைகால் அசைக்கும் திறமை சிறிது நேரத்திற்குப் பிறகே வரும்.
106) ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது__________
A) எண்ணும்மை
B) முற்றெச்சம்
C) பெயரெச்சம்
D) வினையெச்சம்
விளக்கம்: ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும். (எ.கா) வள்ளி படித்தனள். இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.
107) பாடும் பாடல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பைக் காண்க
A) குறிப்பு பெயரெச்சம்
B) தெரிநிலைப் பெயரெச்சம்
C) குறிப்பு வினையெச்சம்
D) தெரிநிலை வினையெச்சம்
விளக்கம்: பாடும் பாடல் என்ற சொல்லின் பொருள் தெரிநிலை பெயரெச்சம்.
1. முற்று பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும். இங்கு முற்று பெறாத சொல் பாடும்.
2. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம். இங்கு பாடல் என்பது பெயர் சொல்.
3. காலம் மற்றும் செயலை உணர்த்துவது தெரிநிலை பெயரெச்சம். இங்கு பாடுதல் என்ற செயலும்இ எதிர்காலமும் வந்துள்ளது.
108) கூற்றுகளை ஆராய்க:
1. உணர்ச்சிகளின் பிறப்பிடம் – மூளை
2. மூளை-உடல் இரண்டும் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுபவைதான் உணர்ச்சிகள்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: 1. உணர்ச்சிகளின் பிறப்பிடம் – மூளை
2. மூளை-உடல் இரண்டும் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுபவைதான் உணர்ச்சிகள்
109) வலது பாதி மூளைக்கு பொருத்தமில்லாத செயல் ஒன்றை தெரிவு செய்க.
A) கவிதை எழுதுவது
B) படம் வரைதல்
C) நடனம் ஆடுவது
D) சதுரங்கம் விளையாடுதல்
விளக்கம்: நமது மூளை வலது பாதி, இடது பாதி என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கவிதை எழுதுவது, படம் வரைதல், நடனம் ஆடுவது போன்றவை வலதுபாதி மூளையின் செயல்களாகும். ஆனால் சதுரங்கம் விளையாடுவதற்கு உதவுவது இடது பாதி ஆகும்.
110) செயலையோ காலத்தையோ வெளிப்படையாக அறியமுடியாத பெயரெச்சம்?
A) தெரிநிலை பெயரெச்சம்
B) குறிப்பு பெயரெச்சம்
C) காலம்காட்டா பெயரெச்சம்
D) செயல் உணர்த்தா பெயரெச்சம்
விளக்கம்: செயலையோ, காலத்தையோ அறிய முடியாத பெயரெச்சம் குறிப்பு பெயரெச்சம். (எ.கா) சிறிய கடிதம். இதில் செயல் மற்றும் காலத்தை வெளிப்படையாக அறியமுடியவில்லை. இதில் பண்பை வெளிப்படையாக உணரலாம். பண்பு என்பது வடிவம், அளவு, நிறம், சுவை ஆகிய நான்கனுள் ஒன்றைக் குறிப்பதாகும். இங்கு சிறிய என்பது அளவைக் குறிக்கிறது. எனவே இது குறிப்பு பெயரெச்சம் என அறியலாம்.
111) கூற்றுகளை ஆராய்க.
1. முற்றுபெறாத வினைச்சொல் எச்சம்
2. தெரிநிலை பெயரெச்சம், தெரிநிலை வினையெச்சம் – காலத்தையும், செயலையும் உணர்த்தும்
3. குறிப்பு பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் – காலத்தையும், செயலையும் வெளிப்படையாக உணர்த்துவதோடு பண்பையும் உணர்த்தும்
4. முற்றெச்சம் – ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
A) அனைத்தும் சரி
B) 1, 2, 4 சரி
C) 1, 2 சரி
D) 1, 3, 4 சரி
விளக்கம்: 1. முற்றுபெறாத வினைச்சொல் எச்சம்
2. தெரிநிலை பெயரெச்சம், தெரிநிலை வினையெச்சம் – காலத்தையும், செயலையும் உணர்த்தும்
3. குறிப்பு பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் – காலத்தையும், செயலையும் வெளிப்படையாக உணர்த்தாது. பண்பை மட்டுமே உணர்த்தும்
4. முற்றெச்சம் – ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
112) கூற்றுகளை ஆராய்க.
1. நாம் பதின்ம வரை மட்டுமே கற்கிறோம்
2. கற்க கற்க நம் நியூரான்களின் இணைப்புச் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
3. கற்க கற்க நம் மூளையின் எடை கூடுகிறது.
4. அதிகமாக கற்க கற்க புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது
A) 1, 2 சரி
B) 2, 3, 4 சரி
C) 3, 4 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. நாம் தினமும் கற்கிறோம்.
2. கற்க கற்க நம் நியூரான்களின் இணைப்புச் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
3. கற்க கற்க நம் மூளையின் எடை கூடுகிறது.
4. அதிகமாக கற்க கற்க புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது.
113) சிறிய கடிதம் என்ற சொல்லின் இலக்கண குறிப்பு?
A) தெரிநிலை பெயரெச்சம்
B) குறிப்பு பெயரெச்சம்
C) முற்றெச்சம்
D) வினையெச்சம்
விளக்கம்: சிறிய கடிதம் – குறிப்பு பெயரெச்சம். சிறிய என்னும் முற்று பெறாத வினைச்சொல் கடிதம் என்னும் பெயர் சொல்லை கொண்டு முடிந்துள்ளது. இவ்வாறு செயலையோ காலத்தையோ வெளிப்படையாக காட்டாமல் குறிப்பால் உணர்த்தி பண்பை மட்டும் குறிப்பால் உணர்த்துவது குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
114) சுஜாதா பற்றிய கூற்றுகளை ஆராய்க
1. இயற்பெயர் – ராகுராம் ராஜன்
2. அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக் கதை வசனம் எழுதியுள்ளார்
3. மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
4. என் இனிய எந்திரா என்னும் நூலில் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கியுள்ளார்.
A) 1, 2 சரி
B) 1, 4 சரி
C) 2, 3 சரி
D) 2, 4 சரி
விளக்கம்: 1. இயற்பெயர் – ரங்கராஜன்
2. அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக் கதை வசனம் எழுதியுள்ளார்.
3. மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
4. தலைமைச் செயலகம் என்னும் நூலில் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கியுள்ளார்.
115) பொருத்துக
அ. நடந்து – 1. முற்றெச்சம்
ஆ. பேசிய – 2. குறிப்புப் பெயரெச்சம்
இ. எடுத்தனன் உண்டான் – 3. பெயரெச்சம்
ஈ. பெரிய – 4. வினையெச்சம்
A) 1, 2, 4, 3
B) 3, 4, 1, 2
C) 4, 3, 1, 2
D) 1, 2, 3, 4
விளக்கம்: நடந்து – வினையெச்சம்
பேசிய – பெயரெச்சம்
எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
பெரிய – குறிப்புப் பெயரெச்சம்
116) பசுமரத்தாணி போல என்னும் சொல்லின் உவமைப் பொருள்?
A) எதிர்பாரா நிகழ்வு
B) எளிதில் மனதில் பதிதல்
C) தற்செயல் நிகழ்வு
D) வெளிப்படைத் தன்மை
விளக்கம்: பசுமரத்தாணி போல என்னும் சொல்லின் உவமை எளிதில் பதிதல் ஆகும். அதாவது பச்சை மரத்தில் ஆணி அடிப்பது எளிது என்பது இங்கு உவமையாக காட்டப்பட்டுள்ளது.
117) கலைகள் தொடர்பான மூளையின் பகுதி எது?
A) வலதுபாதி
B) இடதுபாதி
C) முன் மூளை
D) பின் மூளை
விளக்கம்: வலது பகுதி ஆக்கரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.
1. நடிகர்கள்
2. பாடகர்கள்
3. கலைஞர்கள்
4. இசைக்கருவிகளை கையாளுபவர்கள் போன்றோர் வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளவர்கள்
118) உள்ளங்கை நெல்லிக்கனி போல – என்னும் சொற்றொடரில் உள்ள உவமை?
A) மகிழச்சியான நிகழ்வு
B) எளிதில் மனதில் பதிதல்
C) தற்செயல் நிகழ்வு
D) வெளிப்படைத் தன்மை
விளக்கம்: உள்ளங்கை நெல்லிக்கனி போல என்ற சொல்லின் உவமை – வெளிப்படைத்தன்மை ஆகும்.
119) பொருத்துக.
அ. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – 1. ஒற்றுமையின்மை
ஆ. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – 2. பயனற்ற செயல்
இ. பசு மரத்து ஆணி போல – 3. தற்செயல் நிகழ்வு
ஈ. விழலுக்கு இறைத்த நீர் போல – 4. எதிர்பாரா நிகழ்வு
உ. நெல்லிக்காய மூட்டையைக் கொட்டினாற் போல – 5. எளிதில் மனத்தில் பதிதல்
A) 1, 2, 3, 4, 5
B) 3, 4, 5, 1, 2
C) 3, 4, 5, 2, 1
D) 2, , 3, 4, 5, 1
விளக்கம்: காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – தற்செயல் நிகழ்வு
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – எதிர்பாரா நிகழ்வு
பசு மரத்து ஆணி போல – எளிதில் மனத்தில் பதிதல்
விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்ற செயல்
நெல்லிக்காய மூட்டையைக் கொட்டினாற் போல – ஒற்றுமையின்மை
120) மூளை பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. நமது மூளைக்கு செய்திகளை வழங்குவது கண், காது, தொண்டை போன்ற புலன்கள்
2. சில செய்திகளை தேர்ந்தெடுத்து தற்காலிகமாக மூளை குறுகிய கால நினைவாக வைத்துக்கொள்கிறது
3. பழைய செய்திகள் தற்காலிக செய்திகளால் இடம் மாற்றப்படுகின்றன.
4. நிலையான நினைவுகள் – திரும்ப திரும்ப நினைத்துப் பார்ப்பதன் மூலம் நினைவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
A) 1, 2 சரி
B) 1, 2, 3 சரி
C) 1, 3 சரி
D) அனைத்தும் சரி
விளக்கம்: 1. நமது மூளைக்கு செய்திகளை வழங்குவது கண், காது, தொண்டை போன்ற புலன்கள்
2. சில செய்திகளை தேர்ந்தெடுத்து தற்காலிகமாக மூளை குறுகிய கால நினைவாக வைத்துக்கொள்கிறது
3. பழைய செய்திகள் தற்காலிக செய்திகளால் இடம் மாற்றப்படுகின்றன.
4. நிலையான நினைவுகள் – திரும்ப திரும்ப நினைத்துப் பார்ப்பதன் மூலம் நினைவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
121) பெருத்துக.
அ. நோய் – 1. Herbs
ஆ. மூலிகை – 2. Millets
இ. சிறுதானியங்கள் – 3. Auditor
ஈ. பட்டக்கணக்கர் – 4. Disease
A) 2, 1, 4, 3
B) 2, 3, 4, 1
C) 1, 4, 3, 2
D) 4, 1, 2, 3
விளக்கம்: நோய் – Disease
மூலிகை – Herbs
சிறுதானியங்கள் – Millets
பட்டக்கணக்கர் – Auditor
122) பொருத்துக
அ. பக்கவிளைவு – 1. Gene
ஆ. நுண்ணுயிர் முறி – 2. Allergy
இ. மரபணு – 3. Side Effect
ஈ. ஒவ்வாமை – 4. Antibiotic
A) 1, 2, 3, 4
B) 2, 3, 4, 1
C) 3, 4, 1, 2
D) 4, 1, 23
விளக்கம்: பக்கவிளைவு – Side Effect
நுண்ணுயிர் முறி – Antibiotic
மரபணு – Gene
ஒவ்வாமை – Allergy
123) மடை திறந்த வெள்ளம் போல – என்ற உவமையின் பொருள்
A) தடையின்றி மிகுதியாக
B) ஒற்றுமையின்மை
C) பயனற்ற செயல்
D) வெளிப்படைத்தன்மை
விளக்கம்: மடை திறந்த வெள்ளம் போல் என்ற சொல்லின் உவமை தடையின்றி மிகுதியாக என்பதாகும்.
124) கல்வி அறிவு தொடர்பான மூளையின் பகுதி எது?
A) வலது
B) முன் மூளை
C) இடது
D) நடு மூளை
விளக்கம்: மூளையின் இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள்,
1. பட்டயக் கணக்கர்கள், 2. கணக்கு ஆசிரியர்கள், 3. இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள்