General Tamil

8th Tamil Unit 2 Questions

8th Tamil Unit 2 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 8th Tamil Unit 2 Questions With Answers Uploaded Below.

1) வாணிதாசனின் இயற்பெயர்?

A) அரங்கசாமி

B) ராசகோபாலன்

C) சாத்தப்பன்

D) மருதகாசி

விளக்கம்: வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு. ராசகோபலன் என்பது சுரதா (சுப்பு ரத்தின தாசன்) -ன் இயற்பெயர். சாத்தப்பன் என்பது கண்ணதாசனின் தந்தை பெயர். மருதகாசி என்பது மற்றொரு தமிழ் கவிஞர்.

2) நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச் – இதில் ஈரம் என்ற சொல்லின் பொருள்?

A) தண்ணீர்

B) ஆறு

C) இரக்கம்

D) அன்பு

விளக்கம்: இங்கு ஈரம் என்ற சொல்லின் பொருள் இரக்கம் என்பதாகும். நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது என்று ஓடையின் புகழைப் பாடியுள்ளார் வாணிதாசன்.

3) “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்” – இச்சொல்லில் உள்ள செஞ்சொல் என்பதன் பொருள்?

A) திருத்தப்படாத சொல்

B) திருந்திய சொல்

C) செந்தமிழ்ச் சொல்

D) செல்லுதல் என்னும் பொருள் தரும் சொல்

விளக்கம்: பாடலில் உள்ள செஞ்சொல் என்பதன் பொருள் திருந்திய சொல் என்பதாகும். சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது ஓடை என்று வாணிதாசன் கூறுகிறார்.

4) பள்ளிக்குச் சென்று கல்வி_____________சிறப்பு?

A) பயிலுதல்

B) பார்த்தல்

C) கேட்டல்

D) பாடுதல்

விளக்கம்: பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு என வாணிதாசன் தனது தொடுவானம் என்னும் நூலில் ஓடை என்னும் தலைப்பில் கூறியுள்ளார்.

5) செஞ்சொல் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?

A) செம்மை + சொல்

B) செம் + சொல்

C) செ + சொல்

D) செழுமை + சொல்

விளக்கம்: செஞ்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது – செம்மை + சொல்.

6) சீருக்கு + ஏற்ப என்னும் சொல்லை சேர்தது எழுதக் கிடைப்பது?

A) சீருக்குஏற்ப

B) சீருக்கேற்ப

C) சீர்க்கேற்ப

D) சீருகேற்ப

விளக்கம்: சீருக்கு + ஏற்ப என்னும் சொல்லை சேர்த்து எழுதும் போது சீருக்கேற்ப என்று எழுதலாம். இதில் நிலைமொழியிலுள்ள இறுதி எழுத்து கு. இதன் பிரித்தால் க் + உ எனப் பிரியும். வருமொழியின் முதல் எழுத்து ஏ. உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி நிலை மொழியின் இறுதியிலுள்ள உ என்னும் எழுத்து கெடும். சீருக்க்ஸ்ரீஏற்ப எனக் கிடைக்கும். உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி நிலைமொழின் இறுதி எழுத்து க்-உடன் வருமொழியின் முதல் எழுத்து ஏ சேர்ந்து (க் + ஏ-கே) என மாறும்.

7) ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) ஓடைஆட

B) ஓடையாட

C) ஓடையோட

D) ஓடைவாட

விளக்கம்: ஓடை + ஆட என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஓடையாட. ஓடை + ஆட இதில் நிலைமொழியின் இறுதி எழுத்து டை. இதனை ட் + ஐ எனப்பிரிக்கலாம். வருமொழியின் முதல் எழுத்து ஆ. நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் உயிர் எழுத்து எனில், உடம்படு மெய் என்னும் புணர்ச்சி படி இவ்விரு சொற்களும் சேரும். நிலைமொழியின் இறுதி எழுத்து ஐ. இதற்கேற்ற உடம்படு உடம்படு மெய் ய். ஓடை + ய் + ஆட. உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ய் + ஆ – யா. ஓடையாட என்று எழுதலாம்.

8) தமிழச்சி என்ற நூலை எழுதியவர் யார்?

A) கண்ணதாசன்

B) மருதகாசி

C) பாரதிதாசன்

D) வாணிதாசன்

விளக்கம்: தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும்.

9) உருமங்கட் டியமுகிலால் – கோணக்காத்து

உழன்று உழன்றுமெத்த அடித்ததினால்” – இதில் முகில் என்பதன் பொருள் என்ன?

A) மழை

B) காற்று

C) புயல்

D) மேகம்

விளக்கம்: இப்பாடலில் முகில் என்பது மேகத்தைக் குறிக்கிறது. மேகத்தை குறிக்கும் மற்றொரு சொல் கொண்டல்.

10) கோணகாத்து என்னும் பாடலை எழுதியவர்?

A) வெங்கம்பூர் சாமிநாதன்

B) புலவர் செ. இராசு

C) பக்தவத்சல பாரதி

D) வாணிதாசன்

விளக்கம்: கோணக்காத்துப் பாட்டு என்னும் பாடலை எழுதியவர் வெங்கம்பூர் சாமிநாதன் ஆவார். இதில் புயல் காற்று வீசும் போது ஏற்படும் சூழ்நிலைகள் பற்றி இப்பாடலில் விளக்கியுள்ளார் இதன் ஆசிரியர்.

11) தமிழகப் பெருங்குடிகள் என்னும் நூலை எழுதியவர்?

A) வெங்கம்பூர் சாமிநாதன்

B) புலவர் செ. இராசு

C) பக்தவத்சல பாரதி

D) வாணிதாசன்

விளக்கம்: தமிழகப் பெருங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் பக்தவத்சல பாரதி ஆவார். நிலம் அனைவருக்கும் பொது என்னும் கருத்தை மையமாக வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

12) நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச் – இதில் நாணம் என்ற சொல்லின் பொருள்?

A) பயம்

B) வெட்கம்

C) துன்பம்

D) நாணயம்

விளக்கம்: நாணம் என்ற சொல்லின் பொருள் வெட்கம் என்பதாகும். இப்பாடலை எழுதியவர் வாணிதாசன் ஆவார்.

13) “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்” – இச்சொல்லில் உள்ள முழவு என்பதன் பொருள்?

A) இசைக்கருவி

B) மேகம்

C) மழை

D) ஓடை

விளக்கம்: வாணிதாசனின் தொடுவானம் என்னும் நூலில் ஓடை என்னும் தலைப்பில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் முழவு என்னும் சொல்லின் பொருள் இசைக்கருவிகள் என்பதாகும்

14) நீளுழைப்பு என்னும் சொல்லைப் பிர்த்து எழுதக் கிடைப்பது?

A) நீளு + உழைப்பு

B) நீண் + உழைப்பு

C) நீள் + அழைப்பு

D) நீள் + உழைப்பு

விளக்கம்: நீளுழைப்பு என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் நீள் + உழைப்பு

15) நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) நன் + செய்

B) நன்று + செய்

C) நன்மை + செய்

D) நல் + செய்

விளக்கம்: நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நன்மை + செய் என்பதாகும்.

16) செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது________

A) கடல்

B) ஓடை

C) குளம்

D) கிணறு

விளக்கம்: செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்பது ஓடை ஆகும். செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும் என்ற பாடல் வாணிதாசனின் ஓடை பற்றிய பாடல் ஆகும்.

17) காங்கேய நாடு எது எந்த மண்டலத்தின் நாடுகளுள் ஒன்று?

A) சேர மண்டலம்

B) பாண்டிய மண்டலம்

C) சோழ மண்டலம்

D) கொங்கு மண்டலம்

விளக்கம்: காங்கேய நாடு என்பது கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்றாகும்.

18) பொருத்துக.

அ. தூண்டுதல் – 1. வெட்கம்

ஆ. ஈரம் – 2. ஆர்வம் கொள்ளுதல்

இ. முழவு – 3. இரக்கம்

ஈ. நாணம் – 4. இசைக்கருவி

A) 1, 2, 3, 4

B) 4, 3, 2, 1

C) 3, 4, 1, 2

D) 2, 3, 4, 1

விளக்கம்: தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்

ஈரம் – இரக்கம்

முழவு – இசைக்கருவி

நாணம் – வெட்கம்

19) நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி

நாட்டு மக்கள் வறுமை ஓட்டி – இதில் குறிப்பிடப்படுவது?

A) நதி

B) கடல்

C) ஓடை

D) அருவி

விளக்கம்: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களுக்கு நீர் வழங்குவதன் மூலம் விவசாயம் செழித்து இந்நாட்டு மக்களின் வறுமையை ஓட்ட வல்லது ஓடை என்று பொருள் தரும் இவ்வரியை இயற்றியவர் வாணிதாசன் .

20) பேச்சுத் தமிழில் அமைத்து பஞ்ச காலங்களில் பாடப்படும் கும்மிப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

A) தமிழ்கும்மி

B) பஞ்சகும்மி

C) செந்தமிழ் கும்மி

D) வாய்மொழிக்கும்மி

விளக்கம்: நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக் கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.

21) ஆர்க்காடு மைசூர் வரைக்கும் – கோணக்காத்து

அலறி அலறிமெத்த அடித்ததனால் – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மெத்த என்ற சொல்லின் பொருள்?

A) குறைவான

B) வேகமான

C) மிகவும்

D) மேடான

விளக்கம்: கோணகாத்து என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இப்பாடலில் குறிப்பிடப்படும் மெத்த என்ற சொல்லின் பொருள் மிகவும் என்பதாகும்.

22) “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்” – இச்சொல்லில் உள்ள வள்ளைப்பாட்டு என்பதன் பொருள்?

A) வலிமையான பாட்டு

B) எளிமையான பாட்டு

C) நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு

D) செந்தமிழ் பாட்டு

விளக்கம்: வள்ளைப் பாட்டு என்பது பெண்கள் நெல் குத்தும் போது பாடப்படும் ஒரு வகை உலக்கைப்பாட்டு ஆகும். இப்பாடல் வரியை எழுதியவர் வாணிதாசன் ஆவார்.

23) தாரங்களும் பிள்ளைகளுடன் – கூட்டிக்கொண்டு

தானடந்து வேகமுடன் கூ கூ வென்றார் – இதில் தாரம் என்று குறிப்பிடப்படுபவர்?

A) தாய்

B) மனைவி

C) தந்தை

D) பெண் குழந்தை

விளக்கம்: தாரம் என்பது மனைவியை குறிக்கும் மற்றொரு சொல்லாகும்.

24) கோணகாத்து என்னும் பாடல் இடம்பெற்ற பஞ்சக் கும்மியைத் தொகுத்தவர்?

A) வெங்கம்பூர் சாமிநாதன்

B) செ. இராசு

C) பக்தவச்ல பாரதி

D) வாணிதாசன்

விளக்கம்: கோணகாத்து என்னும் பாடலை இயற்றியவர் வெங்கம்பூர் சாமிநாதன் ஆவார். இவரின் பாடல்கள் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

25) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) அரங்கசாமி

B) இராசகோபாலன்

C) மருதகாசி

D) வரதன்

விளக்கம்: தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன் ஆவார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு ஆகும்.

26) சேகரமாய் வைத்த மரங்கள் – அத்தனையும்

சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே – இதில் சேகரம் என்ற சொல்லின் பொருள்?

A) மழை

B) மேகம்

C) கூட்டம்

D) காற்று

விளக்கம்: சேகரமாய் வைத்த மரங்கள் – அத்தனையும்

சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே – இவ்வரிகளில் சேகரம் என்பது கூட்டம் என்று பொருள் தருகிறது. சேகரமாய் வைத்த மரங்கள் என்பது கூட்டமாய் வைத்த மரங்கள் என்று பொருள் தரும் வகையில் ஆசிரியர் இதனை எழுதியுள்ளார்.

27) கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்

குளிர்ந்த புல்லுக்கும் இன்பம் கூட்டி – இவ்வரிகளில் குறிப்பிடப்படுவது?

A) ஓடை

B) நதி

C) அருவி

D) கிணற்று நீர்

விளக்கம்: இப்பாடல் வரிகள் ஓடையை உணர்த்துகிறது. கரைகளோடு கொஞ்சி, பாய்ந்து அதன் மூலம் புல்லுக்கு நீர் வழங்குவது ஓடை என்று பெர்ருள் தரும் இப்பாடலை பாடியவர் வாணிதாசன்.

28) கொம்புச் சுத்திக் கோணகாத்து – காலனைப்போல்

கோணமழை வந்துகப்பல் தான் கவிந்ததே – இதில் குறிபிடப்படும் காலன் என்ற சொல்லின் பொருள்?

A) இறைவன்

B) கொடிய மக்கள்

C) எமன்

D) அரசன்

விளக்கம்: காலன் என்பது எமனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகும். கூற்றுவன் என்பதும் எமனைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.

29) பொருத்துக.

அ. தூண்டுதல் – 1. இரக்கம்

ஆ. ஈரம் – 2. இசைக்கருவி

இ. முழவு – 3. திருந்திய சொல்

ஈ. செஞ்சொல் – 4. ஆர்வம் கொள்ளுதல்

A) 4, 1, 2, 3

B) 1, 4, 2, 3

C) 2, 3, 4, 1

D) 2, 3, 1, 4

விளக்கம்: தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்

ஈரம் – இரக்கம்

முழவு – இசைக்கருவி

செஞ்சொல் – திருந்திய சொல்

30) காங்கேய நாடு______________மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று?

A) சேர

B) சோழ

C) பாண்டிய

D) கொங்கு

விளக்கம்: காங்கேய நாடு என்பது கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்றாகும். தற்போது இவ்வூர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.

31) ஏடு போதா இதன்கவிக் கார்

ஈடு செய்யப் போரா ரோடி – இதில் குறிப்பிடப்படுவது?

A) ஆறு

B) அருவி

C) ஓடை

D) பள்ளி

விளக்கம்: இப்பாடல் வரிகளை இயற்றியவர் வாணிதாசன்.. இப்பாடல் வரிகளில் ஓடையை பற்றிப் பாடப்பட்டுள்ளன.

32) கோணகாத்து பாடல்__________எனவும் அழைக்கப்படுகிறது?

A) பஞ்சக் கும்மிகள்

B) காத்து நொண்டிச் சிந்து

C) புயல்காத்து பாட்டு

D) கடல் காற்ற பாட்டு

விளக்கம்: கோணகாத்துப் பாட்டு என்று அழைக்கப்படும் காத்து நொண்டிச் சிந்து பாடலைப் பாடியவர் வெங்கம்பூர் சுவாமிநாதன் ஆவார்.

33) சேகரமாய் வைத்தமரங்கள் – அத்தனையும்

சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாய்ச்சுதே – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் வின்னம் என்ற சொல்லின் பொருள்?

A) மேகம்

B) மிகவருந்தி

C) சேதம்

D) சரியாக

விளக்கம்: வின்னம் என்ற சொல்லின் பொருள் சேதம் என்பதாகும். இவ்வரிகள் வெங்கம்பூர் சுவாமிநாதன் எழுதிய கோணகாத்து என்னும் பாடலில் இடம்பெற்றுள்ளது.

34) வானில் கரு_________தோன்றினால் மழை பொழியும் என்பர்

A) முகில்

B) துகில்

C) வெயில்

D) கயல்

விளக்கம்: வானில் கரு முகில் தோன்றினால் மழை பொழியும் என்பர். முகில் என்பது மேகம் என்று பொருள் தரும் சொல்லாகும். துகில் என்பது ஆடையைக் குறிக்கும் சொல். கயல் என்பது மீன் என்று பொருள் தரும் ஒரு சொல்

35) முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும்________யும் ஓட்டிவிடும்.

A) பாலனை

B) காலனை

C) ஆற்றலை

D) நலத்தை

விளக்கம்: முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் காலனை ஓட்டிவிடும். காலன் என்றால் எமன் என்று பொருள். இவ்வாறு கவிமணி தனது பாடல் மூலம் கூறியுள்ளார்.

36) விழுந்ததங்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) விழுந்தூ + அங்கே

B) விழுந்த + ஆங்கே

C) விழுந்தது + அங்கே

D) விழுந்தது + ஆங்கே

விளக்கம்: விழுந்ததங்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விழுந்தது + அங்கே. நிலைமொழியின் இறுதி எழுத்து து என்பதாகும். வருமொழியின் முதல் எழுத்து அ என்பதாகும். உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி நிலைமொழியிலுள்ள உ என்னும் எழுத்து(து-த்=உ) கெட்டு த் மட்டுமே நிற்கும். விழுந்தத் + அங்கே. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி விழுந்ததங்கே என்று எழுதலாம்.

37) பொருத்துக.

அ. முகில் – 1. மிகவருந்தி

ஆ. கொடிகலங்கி – 2. மேகம்

இ. சம்பிரமுடன் – 3. கூட்டம்

ஈ. சேகரம் – 4. முறையாக

A) 2, 1, 3, 4

B) 2, 1, 4, 3

C) 1, 4, 3, 2

D) 2, 3, 2, 4

விளக்கம்: முகில் – மேகம்

கொடிகலங்கி – மிகவருந்தி

சம்பிரமுடன் – முறையாக

சேகரம் – கூட்டம்

38) சுகுவாமிஷ் பழங்குடியினர் எந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர்?

A) ரஷ்யா

B) ஜப்பான்

C) அமெரிக்கா

D) இந்தியா

விளக்கம்: சுகுவாமிஷ் பழங்குடியினர் அமெரிக்க நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர். அமெரிக்க நாட்டில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள்.

39) தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லையில் வாழும் பழங்குடிகள்?

A) காடர்கள்

B) தோமர்கள்

C) மதுக்கர்கள்

D) இவர்களில் யாருமில்லை

விளக்கம்: தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

40) செத்திறந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) செ + திறந்த

B) செத்து + திறந்த

C) செ + இறந்த

D) செத்து + இறந்த

விளக்கம்: செத்திறந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது செத்து + இறந்த என்பதாகும்.

41) வாணிதாசன் யாருடைய மாணவர்?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) கவிமணி

D) மருதகாசி

விளக்கம்: வாணிதாசன் பாரதிதாசனின் மாணவர்களில் ஒருவராவார். இவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுகிறார்.

42) பொருத்துக

அ. வின்னம் – 1. எமன்

ஆ. வாகு – 2. சேதம்

இ. காலன் – 3. சரியாக

ஈ. மெத்த – 4. மிகவும்

A) 4, 3, 1, 2

B) 1, 2, 3, 4

C) 2, 1, 4, 3

D) 2, 3, 1, 4

விளக்கம்: வின்னம் – சேதம்

வாகு – சரியாக

காலன் – எமன்

மெத்த – மிகவும்

43) சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?

A) சுகுவாமிஷ்

B) சியாட்டல்

C) பூஜேசவுண்ட்

D) தாரா

விளக்கம்: சியாட்டல் என்பரே சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் ஆவார். இவர் நிலத்தின் முக்கியத்துவத்தை பற்றி அவர் வசிக்கும் நாட்டின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

44) காடர்கள் தாங்கள் பேசும் மொழியை___________என்று அழைக்கின்றனர்?

A) சிந்தி

B) ஆல்அலப்பு

C) கொங்கிணி

D) காடனி

விளக்கம்: பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன. காடர்கள் மிகச்சிறிய பழங்குடிச் சமுதாயத்தினர். தாங்கள் பேசும் மொழியை ‘ஆல் அலப்பு’ என்று அழக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும் அவர்களிடம் இல்லை.

45) செவாலியர் விருது பெற்ற தமிழறிஞர் யார்?

A) சிவாஜி கணேசன்

B) வாணிதாசன்

C) மருதகாசி

D) பாரதியார்

விளக்கம்: வாணிதாசன் செவாலியர் விருது பெற்றுள்ளார். செவாலியர் விருது பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இவ்விருதை பெற்ற திரைத்துறை கலைஞர் – சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆவார்கள்.

46) காடர்களின் கதைகளில் ஒன்றாக யானையோடு பேசுதல் என்னும் கதையை தமிழாக்கம் செய்தவர்?

A) பக்தவச்சல பாரதி

B) வா.கீதா

C) கல்யாண்ஜி

D) பெ. தூரன்

விளக்கம்: யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் வ.கீதா காடர்களின் கதையை தமிழாக்கம் செய்துள்ளார்

47) பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்____________

A) பருத்திஎல்லாம்

B) பருத்தியெல்லாம்

C) பருத்தெல்லாம்

D) பருத்திதெல்லாம்

விளக்கம்: பருத்தி + எல்லாம் என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது பருத்தியெல்லாம் என்பதாகும். இங்கு நிலைமொழியின் இறுதியில் உள்ள எழுத்து தி. வருமொழியின் முதலில் உள்ள எழுத்து எ. உடம்படுமெய் புணர்ச்சி விதிப்படி வருமொழியின் முதல் எழுத்து என்னும் எழுத்திற்கேற்ப உடம்படுமெய் தோன்றி பருத்தியெல்லாம் என்று புணர்ந்தது.

48) காடர்களின் கதையை தொகுத்தவர்களில் பொருந்தாதவர்?

A) மனிஷ்

B) சாண்டி

C) மாதுரி ரமேஷ்

D) வா.கீதா

விளக்கம்: மனிஷ், சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். வா. கீதா என்பவர் தமிழாக்கம் செய்தவர்

49) ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல்?

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

விளக்கம்: ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் – பெயர்ச்சொல்

ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் – வினைச்சொல்

இடைச்சொல், உரிச்சொல் என்பது பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொல்லுடன் சேர்ந்து இயங்கும்.

50) பொருள் முற்று பெற்ற வினைச்சொல்?

A) வினையெச்சம்

B) பெயரெச்சம்

C) விணையாலணையும் பெயர்

D) வினைமுற்று

விளக்கம்: பொருள் முற்று பெற்ற வினைச்சொல் வினைமுற்று அல்லது முற்று வினை எனப்படும்.

பெயரெச்சம் – முற்றுபெயராத பெயர்ச்சொல்

வினையெச்சம் – முற்றுபெறாத வினைச்சொல்

விணையாலணையும் பெயர் – செயலைக் குறிக்காமல் செயல் செய்பவரைக் குறிக்கும்.

51) கவிஞரேறு என்று அழைக்கப்படுபவர் யார்?

A) வாணிதாசன்

B) பாரதிதாசன்

C) சுரதா

D) கண்ணதாசன்

விளக்கம்: கவிஞரேறு என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன். இவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் செவாலியர் விருதும் பெற்றுள்ளார்.

52) பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள் என்று கூறிக்கொள்ளும் பழங்குடிகள் யார்?

A) சுகுவாமிஷ்

B) சியாட்டல்

C) பூஜேசவுண்ட்

D) தாரா

விளக்கம்: பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள் என்று கூறிக்கொள்ளும் பழங்குடிகள் சுகுவாமிஷ் பழங்குடிகள் இவர்கள் அமெரிக்காவின் பூஜேசவுண்ட் என்ற இடத்தில் வசிக்கும் குழுவினர் ஆவார்கள்.

53) வினைமுற்றுக்கு கீழ்க்கண்ட எது பொருத்தமற்றது?

A) ஐந்துபால்களிலும் வரும்

B) மூவிடங்களிலும் வரும்

C) மூன்று காலங்களிலும் வரும்

D) இரு திணைகளிலும் வரும்

விளக்கம்: பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஐந்துபால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.

54) ஒரு செயல் நடைபெறுவதற்கு கீழ்க்கண்ட எது முதன்மையாவை அல்ல?

A) செய்பவர்

B) கருவி

C) செயல்

D) பால்

விளக்கம்: ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும்.

55) தமிழச்சி என்ற நூலை எழுதியவர்?

A) வாணிதாசன்

B) கண்ணதாசன்

C) பாரதிதாசன்

D) சுப்புரத்தினதாசன்

விளக்கம்: தமிழச்சி என்ற நூலை எழுதியவர் வாணிதாசன். இவரின் பிற நூல்கள் கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகும்.

56) நிலமே எங்கள் தாயாகும் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று கூறியவர்?

A) சுகுவாமிஷ்

B) சியாட்டல்

C) பூஜேசவுண்ட்

D) சுந்தரலால் பகுகுணா

விளக்கம்: இந்நிலமே எங்கள் தாயாகும் என்று கூறியவர் சியாட்டல் ஆவார். எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள் என்று சியாட்டல் அமெரிக்க நாட்டு குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

57) பாவலர் மணி என்று அழைக்கப்படுபவர் யார்?

A) கவிமணி

B) பாரதிதாசன்

C) பாரதியார்

D) வாணிதாசன்

விளக்கம்: பாவலர் மணி என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன். இவர் கவிஞரேறு என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்ற புகழையும் பெற்றவர் வாணிதாசன்.

58) செய்பவர், கருவி முதலான ஆறும் வெளிப்படுமாறு அமைவது_______வினைமுற்று எனப்படும்?

A) தெரிநிலை வினைமுற்று

B) குறிப்பு வினைமுற்று

C) பெயரெச்ச வினைமுற்று

D) முற்றெச்ச வினைமுற்று

விளக்கம்: ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்

59) பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுக் கிடைக்கும் சொல்__________

A) பால்ஊறும்

B) பாலூறும்

C) பால்லூறும்

D) பாஊறும்

விளக்கம்: பால் + ஊறும் என்ற சொல்லைச் சேர்த்தெழுத கிடைக்கும் சொல் பாலூறும் என்பதாகும். நிலைமொழியின் இறுதி எழுத்து ல். வருமொழியின் முதல் எழுத்து ஊ. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ல் + ஊ – லூ என சேர்ந்து பாலூறும் என்று எழுதலாம்.

60) பொருள், இடம் முதலிய ஆறனுள் காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று?

A) தெரிநிலை வினைமுற்று

B) குறிப்பு வினைமுற்று

C) பெயரெச்ச வினைமுற்று

D) முற்றெச்ச வினைமுற்று

விளக்கம்: பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் முதலிய ஆறனுள் காலத்தை வெளிப்படையாகக் காடாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும்

61) வாணிதாசன் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

1. இயற்பெயர் – அரங்கசாமி என்கிற எத்திராசலு

2. சிறப்பு பெயர் – கவியரசு, பாவலர் மணி

3. பிரிட்டிஷ் அரசால் செவாலியர் விருது பெற்றவர்

4. தொடுவானம் என்ற நூலை எழுதியுள்ளார்

A) 1, 4 சரி

B) 2, 4 சரி

C) 1, 3 சரி

D) 1, 2, 4 சரி

விளக்கம்: இயற்பெயர் – அரங்கசாமி என்கிற எத்திராசலு

சிறப்பு பெயர் – கவிஞரேறு, பாவலர் மணி

பிரெஞ்சு அரசால் செவாலியர் விருது பெற்றவர்

தொடுவானம் என்ற நூலை எழுதியுள்ளார்

62) எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள் என்று கூறியவர்?

A) சுகுவாமிஷ்

B) சியாட்டல்

C) பூஜேசவுண்ட்

D) தாரா

விளக்கம்: எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள் என்று கூறியவர் பூஜேசவுண்ட் பழங்குடிகளின் தலைவர் சியாட்டல் ஆவார்.

63) செவ்விந்தியர்கள் நிலத்தை____________ஆக மதிக்கின்றனர்?

A) தாயாக

B) தந்தையாக

C) தெய்வமாக

D) தூய்மையாக

விளக்கம்: செவ்விந்தியர்கள் நிலத்தைத் தந்தையாக மதிக்கின்றனர் என்று பூஜேசவுண்ட் பழங்குடிகளின் தலைவர் சியாட்டல் தன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்

64) இன்னோசை என்ற சொல்லின் பொருள்?

A) இன் + ஓசை

B) இனி + ஓசை

C) இனிமை + ஓசை

D) இன் + னோசை

விளக்கம்: இன்னோசை என்ற சொல்லை பிரித்து எழுத கிடைக்கும் சொல் இனிமை + ஓசை ஆகும்.

65) கொடிமுல்லை என்ற நூலின் ஆசிரியர்?

A) எத்திராசலு

B) மருதகாசி

C) சி. சுப்பிரமணியம்

D) இரசகோபாலன்

விளக்கம்: கொடிமுல்லை என்ற நூலை எழுதியவர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும். இவரின் பிற நூல்கள் தமிழச்சிஇ தொடுவானம் ஆகும்.

66) வினைமுற்று எத்தனை வகைப்படும்?

A) 4

B) 2

C) 3

D) 5

விளக்கம்: முற்று பெற்ற வினைச்சொல்லைக் குறிப்பது வினைமுற்று எனப்படும். இது 4 வகைப்படும்.

1. தெரிநிலை வினைமுற்று

2. குறிப்பு வினைமுற்று

3. ஏவல் வினைமுற்று

4. வியங்கோள் வினைமுற்று

67) பொருத்துக.

அ. பொருள் – 1. கண்ணன்

ஆ. இடம் – 2. பொன்னன்

இ. காலம் – 3. தென்னாட்டார்

ஈ. சினை – 4. ஆதிரையான்

A) 2, 3, 1, 4

B) 2, 3, 4, 1

C) 2, 4, 1, 3

D) 2, 1, 3, 4

விளக்கம்: பொருள் – பொன்னன்

இடம் – தென்னாட்டார்

காலம் – ஆதிரையான்

சினை – கண்ணன்

68) பாடம் படி, கடைக்குப் போ போன்றவை எவ்வகையான வினைமுற்று?

A) தெரிநிலை வினைமுற்று

B) குறிப்பு வினைமுற்று

C) ஏவல் வினைமுற்று

D) வியங்கோள் வினைமுற்று

விளக்கம்: வினைமுற்று நான்கு வகைப்படும். பாடம் படி, கடைக்கு போ என்பது ஏவல் பொருளில் வந்துள்ளதால் இது ஏவல் வினைமுற்று எனப்படும்.

69) எழுத்தன் என்பது என்ன வகை வினைமுற்று?

A) சினை

B) பொருள்

C) தொழில்

D) பண்பு

விளக்கம்: எழுத்தன் என்பது தொழிலைக் குறிக்கும் ஒரு வினைமுற்றுச் சொல்லாகும்

70) மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரிலுள் வினைமுற்று?

A) மாடு

B) வயல்

C) புல்

D) மேய்ந்தது

விளக்கம்: மாடு வயிலில் புல்லை மேயந்தது இத்தொடரிலுள்ள வினைமுற்று – மேய்ந்தது ஆகும். வினைமுற்று என்பது முடிவு பெற்ற ஒரு செயலைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.

71) எழுதுமின் என்பதன் இலக்கண குறிப்பு தருக?

A) தெரிநிலை வினைமுற்று

B) ஏவல் ஒருமை வினைமுற்று

C) ஏவல் பன்மை வினைமுற்று

D) வியங்கோள் வினைமுற்று

விளக்கம்: எழுதுமின் என்பது ஏவல் பொருளில் வந்துள்ளது. இது பன்மை பொருளை உணர்த்துகிறது. எனவே இது ஏவல் பன்மை வினைமுற்று ஆகும்.

72) வாணிதாசனின் நூல்களில் பொருந்தாத நூல் எது?

A) தமிழச்சி காவியம்

B) கொடிமுல்லை

C) தொடுவானம்

D) எழிலோவியம்

விளக்கம்: தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் என்று போற்றப்படும் வாணிதாசனின் நூல்கள் தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம். தமிழச்சி என்பதே வாணிதாசனின் நூல் ஆகும். தமிழச்சி காவியம் என்பது வாணிதாசனின் நூல் அல்ல.

73) ஏவல் வினைமுற்றுக்கு பொருந்தாதது எது?

A) முன்னிலையில் வரும்

B) ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.

C) கட்டளைப் பொருளை மட்டுமே உணர்த்தும்

D) விகுதி பெற்றே வரும்

விளக்கம்: ஏவல் வினைமுற்று என்பது கட்டளையிடும் பொருளில் முடிவுபெற்ற ஒரு செயலை குறிக்கும் ஒரு சொல்லாகும். இதுஇ

1. முன்னிலையில் வரும்.

2. ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.

3. கட்டளைப் பொருளை மட்டுமே உணர்த்தும்

4. விகுதி பெற்றும் பெறாமலும் வரும்

74) பின்வருவனவற்றில் இறந்தகால வினைமுற்று எது?

A) படித்தான்

B) நடக்கிறான்

C) உண்பான்

D) ஓடாது

விளக்கம்: மேற்கண்ட சொற்களில் இறந்த கால வினைமுற்று படித்தான் என்பதாகும்.

நடக்கிறான் – நிகழ்கால் வினைமுற்று

உண்பான் – எதிர்கால வினைமுற்று

ஓடாது – எதிர்மறை வினைமுற்று

75) பின்வருவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்__________

A) செல்க

B) ஓடு

C) வாழ்க

D) வாழிய

விளக்கம்: ஓடு என்பது ஏவல் வினைமுற்றுச் சொல்லாகும்.

76) உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

A) ஜுலை 28

B) ஜுன் 18

C) ஆகஸ்ட் 18

D) செப்டம்பர் 18

விளக்கம்: இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் ஜுலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

77) கூற்றுகளை ஆராய்க.

1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று தன்மை இடத்தில் வரும்

2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் உண்டு. செய்யுள் வழக்கில் இல்லை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று தன்மை இடத்தில் வராது. 2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் உண்டு.

78) வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று எது?

A) தெரிநிலை வினைமுற்று

B) குறிப்பு வினைமுற்று

C) ஏவல் வினைமுற்று

D) வியங்கோள் வினைமுற்று

விளக்கம்: வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று.

79) உலக ஈர நில நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

A) பிப்ரவரி 2

B) செப்டம்பர் 10

C) அக்டோபர் 3

D) அக்டோபர் 2

விளக்கம்: உலக ஈர நில நாள் பிப்ரவரி 2 அன்று கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 3 என்பது உலக இயற்கை நாள்

80) தொடர் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தொடர் நான்கு வகைப்படும். அவை,

1. செய்தித் தொடர்

2. வினாத்தொடர்

3. விழைவுத் தொடர்

4. உணர்ச்சித் தொடர்

81) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் – என்ன வகையானத் தொடர்?

A) செய்தித் தொடர்

B) வினாத்தொடர்

C) விழைவுத்தொடர்

D) உணர்ச்சித் தொடர்

விளக்கம்: சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் – என்பது தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள கேட்கப்படுவது ஆகும். எனவே இது வினாத் தொடர் ஆகும்.

82) எழுது என்பதன் இலக்கண குறிப்பு

A) தெரிநிலை வினைமுற்று

B) ஏவல் ஒருமை வினைமுற்று

C) ஏவல் பன்மை வினைமுற்று

D) வியங்கோள் வினைமுற்று

விளக்கம்: எழுது என்பது ஏவல் பொருளில் வந்துள்ளது. எனவே ஏவல் வினைமுற்று ஆகும்.

83) உலக ஓசோன் தினம் எப்போது கொண்டாடப்பட்டது?

A) செப்டம்பர் 16

B) அக்டோபர் 2

C) பிப்ரவரி 2

D) நவம்பர் 16

விளக்கம்: உலக ஓசோன் தினம் செப்டம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 2- உலக ஈர நில நாள் ஆகும்.

84) கரிகாலன் கல்லணையைக் கட்டினான் என்ன வகைத்தொடர்?

A) செய்தித் தொடர்

B) வினாத்தொடர்

C) விழைவுத்தொடர்

D) உணர்ச்சித் தொடர்

விளக்கம்: கரிகாலன் கல்லணையைக் கட்டினான் என்பது செய்தித் தொடராகும். இது ஒரு நிகழ்வை மக்கள் அறிந்துகொள்ளும்படி கூறியுள்ளது.

85) விழைவுத் தொடர் எந்த பொருளில் வராது?

A) ஏவல்

B) வேண்டுதல்

C) வாழ்த்துதல்

D) வினாவுதல்

விளக்கம்: விழைவுத்தொடர் ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்.

86) பொருத்துக.

அ. ஆ! புலி வருகிறது! – 1. வியப்பு

ஆ. அடடா! என் தங்கை பரிவு பெற்றாள்! – 2. உவகை

இ. பழந்தமிழ் இலக்கியங்கள் – 3. அச்சம்

ஈ. ஆ! மலையின் உயரம்தான் என்னே! – 4. அவலம்

A) 3, 2, 4, 1

B) 2, 3, 4, 1

C) 2, 3, 1, 4

D) 1, 2, 3, 4

விளக்கம்:

ஆ! புலி வருகிறது! – அச்சம்

அடடா! என் தங்கை பரிவு பெற்றாள்! – உவகை

பழந்தமிழ் இலக்கியங்கள் – அவலம்

ஆ! மலையின் உயரம்தான் என்னே! – வியப்பு

87) வியங்கோள் வினைமுற்று தொடர்பான வாக்கியங்களில் தவறானது எது?

A) இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்

B) ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை

C) வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்

D) விகுதி பெறாமலே வரும்.

விளக்கம்: 1. இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்

2. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை

3. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்

4. விகுதி பெற்றே வரும்.

88) உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்?

A) செப்டம்பர் 16

B) பிப்ரவரி 2

C) அக்டோபர் 2

D) அக்டோபர் 5

விளக்கம்: அக்டோபர் 5 – உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்

செப்டம்பர் 16 – உலக ஓசோன் நாள்

பிப்ரவரி 2 – உலக ஈர நில நாள்

அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி

89) பொருத்துக.

அ. இளமையில் கல் – 1. வாழ்த்துதல்

ஆ. உன் திருக்குறள் நூலைத் தருக – 2. வைதல்

இ. உழவுத் தொழில் வாழ்க – 3. வேண்டுதல்

ஈ. கல்லாமை ஒழிக – 4. ஏவல்

A) 4, 1, 2, 3

B) 4, 1, 3, 2

C) 4, 3, 1, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: இளமையில் கல் – ஏவல்

உன் திருக்குறள் நூலைத் தருக – வேண்டுதல்

உழவுத் தொழில் வாழ்க – வாழ்த்துதல்

கல்லாமை ஒழிக – வைதல்

90) கடமையைச் செய் என்ன வகையானத் தொடர்?

A) செய்தித் தொடர்

B) வினாத்தொடர்

C) விழைவுத்தொடர்

D) உணர்ச்சித் தொடர்

விளக்கம்: கடமையைச் செய் என்பது விழைவுத் தொடர் ஆகும். இது ஏவல் பொருளில் வந்துள்ளது.

91) உண்கிறேன் என்ற சொல்லுக்கு பொருத்தமானது?

A) ஆண்பால்

B) பெண்பால்

C) தன்மை

D) முன்னிலை

விளக்கம்: உண் என்ற வேர்ச்சொல்லின் தன்மை உண்கிறேன் என்று எழுதலாம்.

92) சென்றனர் என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்?

A) சென்

B) செல்

C) செல்லு

D) சென்று

விளக்கம்: சென்றனர் என்பது வினைமுற்றுச் சொல் இதன் வேர்ச்சொல் செல் என்பதாகும். வேர்ச்சொல் எப்பொழுதும் கட்டளைச் சொல்லாக அமையும்.

93) உலக வன விலங்கு தினம்?

A) செப்டம்பர் 16

B) அக்டோபர் 3

C) அக்டோபர் 6

D) அக்டோபர் 5

விளக்கம்: அக்டோபர் 6 – உலக வன விலங்கு தினம்

அக்டோபர் 5 – உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்

செப்டம்பர் 16 – உலக ஓசோன் நாள்

அக்டோபர் 3 – உலக இயற்கை நாள்

94) திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்?

A) நாலடியார்

B) திருவள்ளுவம்

C) திருவள்ளுவமாலை

D) பரிமேலழகரின் திருக்குறள் உரை

விளக்கம்: திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் திருவள்ளுவமலை என்னும் நூல். இது பல்வேறு புலவர்கள் எழுதிய செய்யுள்களை கொண்ட நூலாகும்.

95) தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும் – இதில் தக்கார் என்ற சொல்லின் பொருள்?

A) நடுவு நிலைமை இல்லாதவர்

B) நடுவு நிலைமை உடையவர்

C) நடுவு நிலைமையை எதிர்நோக்கி வாழ்பவர்

D) புகழும் பழியும் அற்றவர்

விளக்கம்: தக்கார் – நடுவு நிலைமை உடையவர்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும் – என்ற குறட்பாவில் நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

96) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி?

A) உவமை அணி

B) எடுக்காட்டு உவமை அணி

C) பிரிது மொழிதல் அணி

D) இல்பொருள் உவமை அணி

விளக்கம்: வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று – என்ற குறட்பாவில் இல்பொருள் உவமை வந்துள்ளது. உவமை அணி என்றால் ஒரு பொருளை ஒப்புமைப்படுத்தி கூறுவது. இல்பொருள் என்றால் உலகில் இல்லாத பொருள் என்றாகும். இல்பொருள் உவமை அணி என்பது உலகிலேயே இல்லாத ஒரு பொருளுடன் ஒப்புமைப்படுத்தி செய்யுள் இயற்றுதல் ஆகும். இச்செய்யுளில் மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம்இ புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசுவிற்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது. புலியின் தோலை போர்த்திய பசு என்பது இவ்வுலகில் இல்லாத ஒன்றாகும்.

97) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி – இக்குறட்பாவில் அணி என்ற சொல் எதனைக் குறிக்கிறது

A) வரிசை

B) அழகு

C) அணிகலன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இக்குறட்பாவில் அணி என்ற சொல் அழகு என்னும் பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

98) தருகின்றனர் என்ற சொல்லின் வேர்ச்சொல்?

A) தரு

B) தா

C) தந்து

D) தருகின்ற

விளக்கம்: தருகின்றனர் என்பது வினைமுற்றுச் சொல். இதன் வேர்ச்சொல் தா என்பதாகும். வேர்ச்சொல்லை பகுதி என்றும் அழைக்கலாம்.

99) வியங்கோள் வினைமுற்று பற்றிய கூற்றில் தவறானது எது?

A) வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.

B) இது இரு திணைகளையும் உணர்த்தும்

C) ஐம்பால்களையும் உணர்த்தும்

D) மூவிடங்களை உணர்த்தாது

விளக்கம்: 1. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.

2. இது இரு திணைகளையும் உணர்த்தும்

3. ஐம்பால்களையும் உணர்த்தும்

4. மூவிடங்களை உணர்த்தும்

100) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று – இக்குறட்பாவில் வல்லுருவம் என்ற சொல்லின் பொருள்?

A) கொடிய உருவம்

B) வலிமையான உருவம்

C) வலிய தவக்கோலம்

D) தெய்வ உருவம்

விளக்கம்: இக்குறட்பாவில் வல்லுரும் என்பது வலிய தவக்கோலம் என்று பொருள் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

101) கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல் – இக்குறட்பாவில் கணை என்னும் சொல்லின் பொருள்?

A) வில்

B) அம்பு

C) கணைக்கும் குதிரை

D) ஏவுகணை

விளக்கம்: இக்குறட்பாவில் கணை என்னும் சொல்லின் பொருள் அம்பு என்பதாகும். நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமைத் தருகிறது. எனவே மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செய்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்

102) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று – இக்குறட்பாவில் உள்ள பெற்றம் என்ற சொல்லின் பொருள்?

A) பெறுதல்

B) பசு

C) ஆடு

D) புலிக்குட்டி

விளக்கம்: பெற்றம் என்றால் பசு என்று பொருள். மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம்இ புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசுவிற்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது.

103) உளர் என்னும் மாத்திரையார் அல்லால் பயவாக்

களர் அனையர் கல்லா தவர் – இக்குறட்பாவில் உளர் என்னும் சொல்லின் பொருள்?

A) பேச்சு

B) நிலம்

C) உயிருடன் இருத்தல்

D) இசை

விளக்கம்: உளர் என்னும் சொல்லின் பொருள் உயிரோடு இருக்கிறார் என்பதாகும்.

104) பொருத்தமற்றதை தேர்வு செய்க

A) இரு திணை – கைக்கிளை, பெருந்திணை

B) முப்பால் – அறம், பொருள், இன்பம்

C) மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை

D) ஐந்து பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்

விளக்கம்: இரு திணை – உயர்திணை, அஃறிணை அல்லது அகத்திணை, புறத்திணை

முப்பால் – அறம், பொருள், இன்பம்

மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை

ஐந்து பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்

105) கேட்டார் என்ற சொல்லின் வேர்ச்சொல்?

A) கேள்

B) கேட்டு

C) கேண்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: கேட்டார் என்பது வினைமுற்றுச் சொல்லாகும். இதன் வேர்ச்சொல் கேள் என்பதாகும்.

106) மக்களின் பண்பை எதனுடன் ஒப்புமைபடுத்தியுள்ளார் திருவள்ளுவர்?

A) புலித்தோல் போர்த்திய பசு

B) யாழின் கொம்பின் இனிமை

C) களர் நிலம்

D) விலங்கு

விளக்கம்: மக்களின் பண்பை யாழின் இசையுடன் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது. நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமைத் தருகிறது. எனவே மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செய்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்

107) வருமுன்னர்க் காவாதன் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தாறு போலக் கெடும் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி?

A) உவமை அணி

B) எடுக்காட்டு உவமை அணி

C) பிரிது மொழிதல் அணி

D) இல்பொருள் உவமை அணி

விளக்கம்: இக்குறட்பாவில் போல என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. எனவே இது உவமை அணி ஆகும். பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்து விடும் என்பது இச்சொல்லின் பொருளாகும். இதில் போல என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. எனவே இது உவமை அணி ஆகும்.

108) பொருத்துக.

அ. மலைமுகடு – 1. Ridge

ஆ. வெட்டுக்கிளி – 2. Locust

இ. சிறுத்தை – 3. Bud

ஈ. மொட்டு – 4. Leopard

A) 1, 2, 4, 3

B) 1, 2, 3, 4

C) 2, 3, 4, 1

D) 2, 4, 1, 3

விளக்கம்: மலைமுகடு – Ridge

வெட்டுக்கிளி – Locust

சிறுத்தை – Leopard

மொட்டு – Bud

109) வியங்கோள் வினைமுற்றுகளில் பொருந்தாதது?

A) கா

B) இய

C) இயல்

D) அல்

விளக்கம்: வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும். இதன் விகுதிகள் க, இய, இயர், அல் ஆகும்.

110) கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல் – இக்குறட்பாவில் யாழ்கோடு என்னும் சொல்லின் பொருள்?

A) யாழின் கொம்பு

B) யாழின் இசை

C) யாழின் கைப்பிடி

D) யாழின் ஒலி

விளக்கம்: யாழின் கோடு என்ற சொல்லில் உள்ள கோடு என்ற சொல்லின் பொருள் கொம்பு என்பதாகும்.

111) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்.

A) போனான் – போ

B) வருக – வா

C) உறங்கினாள் – உறங்க

D) பயின்றாள் – பயின்

விளக்கம்: பயின்றாள் என்ற வினைமுற்று சொல்லின் வேர்ச்சொல் பயில் என்பதாகும் . வேர்ச்சொல் கட்டளையிடும் வகையில் எப்போதும் அமையும்.

112) பாரதியாரின் பாடல்களின் இனிமைத்தான் என்னே! – என்பது என்ன வகையானத் தொடர்?

A) வினாத்தொடர்

B) விழைவுத்தொடர்

C) உணர்ச்சித் தொடர்

D) செய்தித் தொடர்

விளக்கம்: இத்தொடர் உணர்ச்சி வயப்படும்(வியப்பு) வகையில் அமைந்துள்ளதால், இது உணர்ச்சித் தொடர் ஆகும்

113) Tribes என்ற சொல்லின் தமிழ்பொருள்?

A) சமவெளி

B) பள்ளத்தாக்கு

C) பழங்குடியினர்

D) மலைப்பகுதி

விளக்கம்: பழங்குடியினர் – Tribes

சமவெளி – Plain

பள்ளத்தாக்கு – Valley

114) தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும் – இதில் தகவிலார் என்ற சொல்லின் பொருள்?

A) நடுவு நிலைமை இல்லாதவர்

B) நடுவு நிலைமை உடையவர்

C) நடுவு நிலைமையை எதிர்நோக்கி வாழ்பவர்

D) புகழும் பழியும் அற்றவர்

விளக்கம்: இத்திருக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் நடுவுநிலைமை. இதில் தகவிலார் என்ற சொல்லின் பொருள் நடுவுநிலைமை இல்லாதவர் ஆகும்.

115) அதிகாலையில் துயில் எழுவது நல்லது – இத்தொடரை வினாத்தொடராக மாற்றுக?

A) எப்போது துயில் எழுவது நல்லது?

B) எங்கு துயில் எழுவது நல்லது?

C) காலையில் துயில் எழுவது நல்லதா?

D) காலையில் தான் துயில் எழ வேண்டுமா?

விளக்கம்: அதிகாலையில் துயில் எழுவது நல்லது என்ற தொடர் காலத்தை பற்றிய செய்தி தொடர் ஆகும். எனவே இதற்கு பொருத்தமான வினாச் சொல் எப்போது ஆகும். எனவே எப்போது துயில் எழ வேண்டும்.

116) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி – இக்குறட்பாவில் கோல் என்ற சொல் எதனைக் குறிக்கிறது?

A) மூங்கில் மரம்

B) குச்சி

C) மரத்தின் கிளை

D) துலாக்கோல்

விளக்கம்: இக்குறட்பாவில் கோல் என்ற சொல்லின் பொருள் துலாக்கோல்(தராசு) என்பதாகும்.

117) புகழாலும் பழியாலும் அறியப்படுவது_____________

A) அடக்கமுடைமை

B) நாணுடைமை

C) நடுவுநிலைமை

D) பொருளுடைமை

விளக்கம்: புகழாலும் பழியாலும் அறியப்படுவது நடுவுநிலைமை.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும் – என்ற குறட்பாவில் நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொருள்

118) காட்டில் புலி நடமாட்டம் உள்ளது – என்ற தொடரின் வினாத் தொடர்?

A) காட்டில் எதன் நடமாட்டம் இல்லை?

B) எங்கு புலி நடமாட்டம் உள்ளது?

C) காட்டில் புலி நடமாடுகிறதா?

D) காட்டில் தான் புலி நடமாடுகிறதா?

விளக்கம்: காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. என்ற தொடர் இடத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தொடர் . இடம் பற்றிய செய்திக்கு பொருத்தமான வினாச் சொல் எங்கு. எனவே எங்கு புலி நடமாட்டம் உள்ளது என்பதே சரியா வினாத் தொடர் ஆகும்.

119) பள்ளத்தாக்கு என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில சொல்?

A) Valley

B) Plain

C) Tribes

D) Thicket

விளக்கம்: சமவெளி – Plain

பள்ளத்தாக்கு – Valley

பழங்குடியினர் – Tribes

புதர் – Thicket

120) பொருத்துக.

அ. நடக்கிறான் – 1. ஒன்றன் பால்

ஆ. நடக்கிறாள் – 2. பலவின் பால்

இ. நடக்கிறார்கள் – 3. ஆண்பால்

ஈ. நடந்தன – 4. பெண்பால்

உ. நடந்தது – 5. பலர்பால்

A) 3, 4, 1, 2, 5

B) 4, 3, 2, 1, 5

C) 3, 5.4, 1, 2

D) 3, 4, 5, 1, 2

விளக்கம்: நடக்கிறான் – ஆண் பால்

நடக்கிறாள் – பெண் பால்

நடக்கிறார்கள் – பலர் பால்

நடந்தன – ஒன்றன் பால்

நடந்தது – பலவின் பால்

121) தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும் – இதில் எச்சம் என்ற சொல்லின் பொருள்?

A) நடுவு நிலைமை இல்லாதவர்

B) நடுவு நிலைமை உடையவர்

C) நடுவு நிலைமையை எதிர்நோக்கி வாழ்பவர்

D) எஞ்சியிருக்கும் புகழும் பழியும்

விளக்கம்: இத்திருக்குறளில் குறிப்பிடப்படும் எச்சம் என்ற சொல்லின் பொருள் எஞ்சியிருக்கும் புகழும் பழியும் ஆகும்.

தக்கார் – நடுவு நிலைமை உடையவர்

தகவிலர் – நடுவு நிலைமை அற்றவர்

நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும என்பதே இக்குறட்பாவின் பொருள்.

122) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி?

A) உவமை அணி

B) எடுக்காட்டு உவமை அணி

C) பிரிது மொழிதல் அணி

D) இல்பொருள் உவமை அணி

விளக்கம்: இக்குறட்பா சான்றோரின் தன்மையை துலாக்கோலுடன் ஒப்பிட்டு கூறியிருப்பதால் இதனை உவமை அணி என்கிறோம். இங்கு போல(போல்) என்றும் உவம உறுப்பும் இடம் பெற்றுள்ளது

123) உறங்கியது என்பது?

A) ஆண்பால்

B) பெண்பால்

C) ஒன்றன் பால்

D) பலவின் பால்

விளக்கம்: உறங்கியது என்பது பலவின் பால் சொல்லாகும்

ஆண்பால் – உறங்கினான்

பெண்பால் – உறங்கினாள்

பலர்பால் – உறங்கினார்

ஒன்றன் பால் – உறங்கின

124) பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள்__________

A) வலிமையற்றவர்

B) கல்லாதவர்

C) ஒழுக்கமற்றவர்

D) அன்பில்லாதவர்

விளக்கம்: பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள் கல்லாதவர்கள். இதனை விளக்கும் குறள்,

உளர்என்னும் மாத்திரையார் அல்லால் பயவாக

களர்அனையர் கல்லா தவர் – இக்குறட்பாவின் பொருள் கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.

125) வல்லுருவம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) வல் + உருவம்

B) வன்மை + உருவம்

C) வல்ல + உருவம்

D) வல்லு + உருவம்

விளக்கம்:வல்லுருவம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வல் + உருவம் என்பதாகும். இங்கு நிலைமொழியில் ஒரு குறில் ஒரு ஒற்று உள்ளது. தனிக்குறில் முன் ஒற்று இரட்டிக்கும் என்னும் விதிப்படி ல் என்னும் எழுத்து தோன்றும் வல் + ல் + உருவம். பின் உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ல் + உ=லு எனப்புணரும்.

126) நெடுமை + தேர் என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____________

A) நெடுதேர்

B) நெடுத்தேர்

C) நெடுந்தேர்

D) நெடுமைதேர்

விளக்கம்: நெடுமை + தேர் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நெடுந்தேர் என்பதாகும். நெடு + தேர் (ஈறுபோதல் என்னும் விதிப்படி)

நெடு + ந் + தேர் (தன்னொற்றிரட்டல் என்னும் விதிப்படி)

நெடுந்தேர் என்று பண்புப்பெயர் புணர்ச்சி விதிப்படி கிடைக்கும்

127) வள்ளுவருக்கு பொருந்தாத பெயர்?

A) பெருநாவலர்

B) முதற்பாவலர்

C) நாயன்மார்

D) செந்நாபோதார்

விளக்கம்: பெருநாவலர், முதற்பாவலர், நாயனார், செந்நாபோதார் என்பது திருவள்ளுவரின் சிறப்புப் பெயராகும். நாயன்மார்கள் மொத்தம் 63 பேர்கள்.

128) அறத்துப்பாலிலுள்ள இயல்களில் பொருத்தமற்றது?

A) பாயிரவியல்

B) இல்லறவியல்

C) துறவறவியல்

D) அமைச்சியல்

விளக்கம்: அறத்துப்பாலில் 4 இயல்கள் உள்ளன. அவை

1. பாயிரவியல்

2. இல்லறவியல்

3. துறவறவியல்

4. ஊழியல்

அமைச்சியல் என்பது பொருட்பாலில் உள்ள இயல் ஆகும்.

129) களர் நிலம் என்ற சொல்லின் பொருள்?

A) செந்நிறமான நிலம்

B) அதிக விளைச்சல் தரும் நிலம்

C) பயனுள்ள நிலம்

D) பயனற்ற நிலம்

விளக்கம்: களர் நிலம் என்பது பயனற்ற நிலமாகும். இந்நிலத்திற்கு கல்லாதவரை ஒப்புமைப்படுத்தி திருவள்ளுவர்,

உளர்என்னும் மாத்திரையார் அல்லால் பயவாக

களர்அனையர் கல்லா தவர் என்ற குறட்பாவில் விளக்கியுள்ளார்.

130) திருவள்ளுவரின் காலம்?

A) கி.மு 31

B) கி.பி. 31

C) கி.மு. 131

D) கி.பி. 131

விளக்கம்: திரவள்ளுவரின் காலம் கி.மு 31 ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டே திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டம் திருவள்ளுவராண்டு கிடைக்கும் . 2021ஆம் ஆண்டின் திருவள்ளுவராண்டு 2051 ஆகும்.

131) பொருத்துக

அ. பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் – 1. பொருட்பால்

ஆ. அரசியல், அமைச்சியல், ஒழிபியல் – 2. காமத்துப்பால்

இ. களவியல், கற்பியல் – 3. அறத்துப்பால்

A) 1, 2, 3

B) 2, 3, 1

C) 3, 1, 2

D) 1, 3, 2

விளக்கம்: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் – அறத்துப்பால்

அரசியல், அமைச்சியல், ஒழிபியல் – பொருட்பால்

களவியல், கற்பியல் – காமத்துப்பால்

132) கற்றவருக்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது எதற்கு இடையே உள்ள வேறுபாட்டோடு ஒப்பிடப்பட்டுள்ளது?

A) மக்கள்-விலங்கு

B) மக்கள்-மரம்

C) மக்கள்-ஞானிகள்

D) மக்கள்-மாடு

விளக்கம்: விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

பொருள்: கற்றவருக்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

133) கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து – இதில் நாவாய் என்னும் சொல்லின் பொருள்?

A) நாக்கு

B) நாக்கு மற்றும் வாய்

C) படகு

D) கப்பல்

விளக்கம்: நாவாய் என்னும் சொல்லின் பொருள் கப்பல் என்பதாகும்.

134) கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து – இதில் பயின்று வரும் அணி?

A) உவமை அணி

B) எடுத்துகாட்டு உவமை அணி

C) பிறிது மொழிதல் அணி

D) இல்பொருள் உவமை அணி

விளக்கம்: கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி பிறிது மொழிதல் அணி.

வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலே சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது இக்குறளின் பொருள் ஆகும்.

135) தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது – இக்குறட்பாவில் எள்ளற்க என்ற சொல்லின் பொருள்?

A) புகழ்தல்

B) இகழ கூடாது

C) பேசுதல்

D) செயலைத் தொடங்குதல்

விளக்கம்: எள்ளற்க என்ற சொல்லின் பொருள் இகழக் கூடாது என்பதாகும்.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது – பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது. இகழவும் கூடாது என்பது இதன் பொருள் ஆகும்.

136) வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தாறு போலக் கெடும் – இக்குறட்பாவில் எரிமுன்னர் என்ற சொல்லின் பொருள்?

A) நெருப்பின் முன்

B) வலியின் முன்

C) தூக்கி எறியும் முன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இக்குறட்பாவில் உள்ள எரிமுன் என்ற சொல்லின் பொருள் நெருப்பின் அருகில் என்பதாகும்.

137) பொருட்பாலில் உள்ள துறைகளில் பொருந்தாதது எது?

A) அரசியல்

B) அங்கவியல்

C) ஒழிபியல்

D) ஊழியல்

விளக்கம்: அரசியல், அமைச்சியல், ஒழிபியல் ஆகியவை பொருட்பாலிலுள்ள துறைகள் ஆகும். ஊழியல் என்பது அறத்துப்பாலிலுள்ள துறைகளுள் ஒன்றாகும்.

138) தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு – இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள்?

A) கடவுள்

B) குற்றம்

C) தலைவன்

D) தூய்மை

விளக்கம்: இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள் தலைவன் ஆகும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.

தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப்பழியும் ஏற்படாது என்பது இக்குறட்பாவில் பொருள்.

139) மொட்டு என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில மொழிபெயர்ப்பு?

A) Ridge

B) Locust

C) Leopard

D) Bud

விளக்கம்: மொட்டு – Bud

மலைமுகடு – Ridge

வெட்டுக்கிளி – Locust

சிறுத்தை – Leopard

140) வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி?

A) உவமை அணி

B) எடுத்துகாட்டு உவமை அணி

C) பிறிது மொழிதல் அணி

D) இல்பொருள் உவமை அணி

விளக்கம்: வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும் இக்குறட்பாவில் உவமை அணி வந்துள்ளது.

உவமை அணி என்பது ஒரு நிகழ்வை மற்றொரு நிகழ்வுடன் ஒப்பிட்டு கூறுவது ஆகும். பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கைஇ நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும். இதில் உவம உறுப்புகளில் ஒன்றான போல என்ற சொல் வந்துள்ளது.

141) திருக்குறள் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?

A) 27

B) 3

C) 9

D) 4

விளக்கம்: திருக்குறள் 9 இயல்களைக் கொண்டுள்ளது.

அறத்துப்பால் – பாயிரவியல், இல்லறவியல், துறவறவயில், ஊழியல்

பொருட்பால் – அரசியல், அங்கவியல் (அல்லது) அமைச்சியல், ஒழிபியல்

காமத்துப்பால் – களவியல், கற்பியல்

142) வாணிதாசனின் நூல்களுள் பொருந்தாத நூல் எது?

A) தமிழச்சி

B) எழிலோவியம்

C) தொடுவானம்

D) சிறுவர் இலக்கியம்

விளக்கம்: தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று போற்றப்படும் வாணிதாசன் தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin