8th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1
8th Science Lesson 2 Questions in Tamil
2] விசையும் அழுத்தமும்
1) ஒரு பொருளின் வடிவத்தை மாற்றுவது அல்லது மாற்ற முயல்வது ____ எனப்படும்?
a) நிறை
b) உந்துதல்
c) விசை
d) இயக்கம்
விளக்கம்: ஒரு பேனாவின் மூடியை திறத்தல், கதவினை திறத்தல், கால்பந்தை உதைத்தல், கேரம் விளையாட்டில் நாணயங்களை சுண்டுதல் முதலிய அனைத்து செயல்பாடுகளுக்கும் விசை தேவைப்படுகிறது. விசை என்பது தள்ளுதல் அல்லது இழுத்தலின் மூலமாக பொருள்களை இயங்க வைத்தல் அல்லது இயக்கத்திலிருந்து ஓய்வு நிலைக்கு கொண்டு வருதல் ஆகும். இது சில நேரங்களில் பொருட்களின் அளவையும், வடிவத்தையும் மாற்றுவதாக இருக்கும்.
2) கீழ்க்கண்டவற்றுள் விசையின் வடிவங்கள் எது?
a) இழுத்தல்
b) தள்ளுதல்
c) இழுத்தல் மற்றும் தள்ளுதல்
d) எதுவுமில்லை
விளக்கம்: இழுத்தல் மற்றும் தள்ளுதல் ஆகியவை விசையின் வடிவங்களாகும். எந்த திசையில் நாம் இழுத்தல் அல்லது தள்ளுதலை செலுத்துகிறோமோ அதுவே விசையின் திசையாக அமையும்.
3) கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?
ⅰ) எண்மதிப்பும் திசையும் இருப்பதால் விசை ஒரு வெக்டர் அளவு எனப்படுகிறது
ⅱ) விசை நியூட்டன் (N) என்ற அலகால் அளக்கப்படுகிறது
a)ⅰமட்டும்
b)ⅱமட்டும்
c)ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: எண்மதிப்பும் திசையும் இருப்பதால் விசை ஒரு வெக்டர் அளவு எனப்படுகிறது. இது நியூட்டன் (N) என்ற அலகால் அளக்கப்படுகிறது.
4) எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை எது?
a) செங்குத்து விசை
b) செயல் விசை
c) உந்து விசை
d) காரணி விசை
விளக்கம்: எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை உந்து விசை எனப்படும்.
5) ஒரு பொருளை இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையை செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது?
a) நின்றுவிடும்
b) அதிக வேகத்தில் இயங்கும்
c) குறைந்த வேகத்தில் இயங்கும்
d) வேறு திசையில் இயங்கும்
விளக்கம்: ஒரு பொருளை இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையை செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது நின்றுவிடும்.
6) உந்து விசை எந்த அலகினால் அளவிடப்படுகிறது?
a) ஆம்பியர்
b) மோல்
c) நியூட்டன்
d) லுமென்
விளக்கம்: உந்து விசை நியூட்டன் என்ற அலகினால் அளவிடப்படுகிறது.
7) கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?
ⅰ) அழுத்தத்தின் அலகு பாஸ்கல் (Pa) ஆகும்.
ⅱ) 1 பாஸ்கல் = 2 Nm-2
a)ⅰமட்டும்
b)ⅱமட்டும்
c)ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை
விளக்கம்: அழுத்தத்தின் அலகு பாஸ்கல் (Pa). 1 பாஸ்கல் = 1 Nm-2
8) பிரெஞ்ச் அறிவியல் அறிஞர் பிளெய்ஸ் பாஸ்கல் நினைவாக உள்ள SI அலகு எது?
a) பாஸ்கல்
b) கேண்டிலா
c) நியூட்டன்
d) கேன்டிலா
விளக்கம்: பிரெஞ்ச் அறிவியல் அறிஞர் பிளெய்ஸ் பாஸ்கல் நினைவாக உள்ள SI அலகு பாஸ்கல்
ஆகும்.
9) கீழ்க்கண்டவற்றில் விசையால் செலுத்தப்படும் அழுத்தமானது எதனைச் சார்ந்தது?
a) விசையின் எண் மதிப்பு
b) விசையின் தொடுபரப்பு
c) a மற்றும் b
d) எதுவுமில்லை
விளக்கம்: விசையால் செலுத்தப்படும் அழுத்தமானது விசையின் எண் மதிப்பையும் அது செயல்படுத்தப்படும் தொடுபரப்பையும் சார்ந்து இருக்கும்.
10) கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு யானையின் ஒரு கால் மூலம் செலுத்தப்படும் அழுத்தத்தை கணக்கிடுக?
ⅰ) யானையின் சராசரி எடை 4000 N
ⅱ) யானையின் ஒரு பாதத்தின் பரப்பு = 0.1 m2
a) 104 Nm-2
b) 105 Nm-2
c) 106 Nm-2
d) 107 Nm-2
விளக்கம்:
யானையின் சராசரி எடை = 40OON
ஒரு காலின் எடை = ஒரு காலால் செலுத்தப்படும் விசை
= 4000/4
= 100ON
ஒரு கால்பாதத்தின் பரப்பு = 0.1m
அழுத்தம் = விசை/பரப்பு
= 1000/0.1
= 10000 Nm-2
= 104 Nm-2
11) ஒரு சதுர மீட்டர் பரப்பில் யானையின் ஒரு காலால் செலுத்தப்படும் அழுத்தம் என்ன?
a) 5000 நியூட்டன்
b) 6000 நியூட்டன்
c) 8000 நியூட்டன்
d) 10000 நியூட்டன்
விளக்கம்: ஒரு சதுர மீட்டர் பரப்பில் யானையின் ஒரு காலால் செலுத்தப்படும் அழுத்தம் 10000 நியூட்டன் ஆகும்
12) பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?
a) ஒரு பொருளின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் மீது செயல்படும் உந்து விசையை அதிகரிக்க வேண்டும்.
b) ஒரு பொருளின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க உந்து விசை செயல்படும் பரப்பைக் குறைக்க வேண்டும்.
c) a மற்றும் b
d) எதுவுமில்லை
விளக்கம்: ஒரு பொருளின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் மீது செயல்படும் உந்து விசையை அதிகரிக்க வேண்டும் அல்லது உந்து விசை செயல்படும் பரப்பைக் குறைக்க வேண்டும்.
13) கூற்று(A): மணலில் நடப்பது ஒட்டகங்களுக்கு மிக எளிதானது.
காரணம்(R): ஒட்டகத்தின் அகன்ற பாதங்கள் மணலின் அதிகப்படியான பரப்புடன் தொடர்பு கொள்கிறது.
a) (A) மற்றும் (R) தவறு
b) (A) சரி (R) தவறு
c) (A) மற்றும் (R) இரண்டும், சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம்
d) (A) மற்றும் (R) இரண்டும், சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை
விளக்கம்: மணலில் நடப்பது நமக்கு கடினமானது, ஆனால் ஒட்டகங்களுக்கு மிக எளிதானது. ஏனெனில் ஒட்டகத்தின் அகன்ற பாதங்கள் மணலின் அதிகப்படியான பரப்புடன் தொடர்பு கொள்கிறது. இதனால் அழுத்தம் குறைந்து மணலில் ஒட்டகம் எளிதாக நடக்கிறது.
14) கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?
ⅰ) முதுகில் சுமந்து செல்லும் பைகள் தோளின் மீது செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்க அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன
ⅱ) முதுகில் சுமந்து செல்லும் பைகள் தோளின் மீது தொடு பரப்பைக் குறைக்க அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன
a) ⅰமட்டும்
b) ⅱமட்டும்
c) ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை.
விளக்கம்: முதுகில் சுமந்து செல்லும் பைகள் தோளின் மீது செலுத்தும் அழுத்தத்தை குறைக்கவும், தோளின் மீதான தொடு பரப்பை அதிகரிக்கவும் அகலமான பட்டைகள் அமைக்கப்படுகின்றன
படம்: அகலாமான பட்டைகள்
15) வளிமண்டலம் புவியின் ஓரலகு புறப்பரப்பின் மீது கீழ்நோக்கி செயல்படுத்தும் விசை அல்லது எடை ________ ஆகும்.
a) வளிமண்டல காற்று
b) வெப்பசலனக் காற்று
c) வெப்பமண்டல அழுத்தம்
d) வளிமண்டல அழுத்தம்
விளக்கம்: புவியைச் சுற்றிலும் காற்று நிரம்பியுள்ளது. இந்த உறைக்கு வளிமண்டலம் என்று பெயர். புவியின் புறப்பரப்பிற்கு மேலாக பல கிலோமீட்டர் வரை வளிமண்டலம் நீண்டுள்ளது. புவிப்பரப்பில் உள்ள அனைத்துப் பொருட்களும் இந்த வளிமண்டலம் காரணமாக உந்து விசை அல்லது விசையை உணரும். வளிமண்டலம் புவியின் ஓரலகு புறப்பரப்பின் மீது கீழ்நோக்கி செயல்படுத்தும் விசை அல்லது எடை வளிமண்டல அழுத்தம் எனப்படும்.
16) வளிமண்டல அழுத்தம் எந்த கருவியால் அளக்கப்படுகிறது?
a) பாரோ மீட்டர்
b) ஓடோமீட்டர்
c) மிண்ணனு மீட்டர்
d) வோல்ட் மீட்டர்
விளக்கம்: வளிமண்டல அழுத்தம் பாரோ மீட்டர் என்ற கருவியால் அளக்கப்படுகிறது.
17) பாரோமீட்டரைக் கண்டறிந்தவர் யார்?
a) டாரிசெல்லி
b) ஜாக்சன் பார்ட்
c) லூயிஸ் கான்பாடி
d) சைதட் சிக்டர்
விளக்கம்: டாரிசெல்லி என்ற அறிவியல் அறிஞர் பாரோமீட்டரைக் கண்டறிந்தார்.
18) உயரமான இடங்களில் சமைத்தால் நீரின் கொதிநிலை என்னவாக இருக்கும்?
a) 700C
b) 800C
c) 400C
d) 900C
விளக்கம்: உயரமான இடங்களில் வளிமண்டல அழுத்தக் குறைவு காரணமாக பொருளின் கொதிநிலை குறைவாக இருக்கும். இதனால் நீரானது 80°C இல் கொதிக்க ஆரம்பித்துவிடும். இந்த வெப்பநிலையில் உருவாகும் வெப்ப ஆற்றல் பொருளை சமைப்பதற்குப் போதுமானதாக இருக்காது. அதனால் உயரமான இடங்களில் சமையல் செய்வது கடினமாக இருக்கும்.
19) பாரோமீட்டரின் தம்பத்தில் உள்ள பாதரசத்தின் உயரம் கொண்டு அளவிடப்படுவது எது?
a) வெப்பத்தின் நிலை
b) காற்றின் வேகம்
c) வளிமண்டல அழுத்தம்
d) நீரின் கொதிநிலை
விளக்கம்: வளிமண்டல அழுத்தம் பாரோமீட்டரின் தம்பத்தில் உள்ள பாதரசத்தின் உயரம் கொண்டு அளவிடப்படுகிறது. திரவத்தம்பத்தில் உள்ள பாதரசமானது கொடுக்கப்பட்ட காலத்தில் அந்த இடத்தின் வளிமண்டல அழுத்தத்தைக் (millimetre of mercury – mm) குறிக்கிறது. பாரோமானி குழாயை வெவ்வேறு கோணங்களில் வளைத்தாலும் திரவத்தம்பத்தில் உள்ள பாதரச உயரம் மாறாது.
20) கடல் நீர் மட்டத்தில் உள்ள குழாயில் உள்ள பாதரசத்தின் உயரம் எவ்வளவு?
a) 76 செ.மீ
b) 760 மி.மீ
c) 760 செ.மீ
d) a மற்றும் b
விளக்கம்: கடல் நீர் மட்டத்தில் உள்ள குழாயில் உள்ள பாதரசத்தின் உயரம் 76 செ.மீ அல்லது 760 மி.மீ. ஒரு வளிமண்ட ல அழுத்தம் (1 atm) என்பது திரவத்தம்பத்தில் உள்ள பாதரசத்தின் மீது காற்று செலுத்தும் அழுத்தம் என கருதப்படுகிறது.
21) ஒரு வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு?
a) 1.01 x 105 Nm-2
b) 1.01 x 102 Nm-2
c) 1.05 x 105 Nm-2
d) 1.01 x 103 Nm-2
விளக்கம்: ஒரு வளிமண்டல அழுத்ததின் மதிப்பு 1.01 x 105 Nm-2 ஆகும்.
22) கீழ்க்கண்டவற்றில் வளிமண்டல அழுத்தத்தின் SI அலகு எது?
ⅰ) நியூட்டன்
ⅱ) பாஸ்கல்
a)ⅰமட்டும்
b)ⅱமட்டும்
c)ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை.
விளக்கம்: SI அலகு முறையில் 1 atm = 1,00,000 பாஸ்கல் (தோராயமாக); வளிமண்டல அழுத்தத்தின் SI அலகு நியூட்டன் (அ) பாஸ்கல்
23) திரவத்தம்பத்தில் வளிமண்டல அழுத்தத்தின் விளைவை அறிந்து கொள்வதற்கான செயல்பாடு எது?
a) கூம்புக் குடுவை – முட்டை சோதனை
b) கூம்புக் குடுவை – சர்க்கரை சோதனை
c) கூம்புக் குடுவை – மண் சோதனை
d) கூம்புக் குடுவை – நீர் சோதனை
விளக்கம்: ஒரு கூம்புக் குடுவையை எடுத்துக் கொள்ளவும். நன்கு வேக வைத்த முட்டையை ஓடு நீக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த முட்டையை கூம்புக் குடுவையின் வாயிலில் வைத்தால் உள்ளே செல்லாது. ஒரு காகிதத்தை எடுத்து பாதி எரிந்த நிலையில் கூம்புக் குடுவையினுள் போடவும். கூம்புக் குடுவையினுள் காகிதம் எரிந்து அடங்கியதும் முட்டையை மீண்டும் குடுவையின் வாய் அருகே கொண்டு வர வேண்டும். கூம்புக்குடுவையின் வாயிலில் வைக்கப்பட்ட முட்டையானது வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக உள்ளே விழுகிறது. கூம்புக் குடுவையினுள் எரியும் காகிதம் தான் முழுவதும் எரிவதற்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. இதனால் குடுவையினுள் அழுத்த குறைவு ஏற்படுகிறது. இந்த அழுத்த குறைவை சமன் செய்ய வளிமண்டலத்திலிருந்து காற்று குடுவையினுள் நுழைய முயற்சிக்கிறது. இதனால் குடுவையின் வாயிலில் வைக்கப்பட்ட முட்டை உள்ளே விழுகிறது.
படம்: கூம்புக் குடுவை – முட்டை சோதனை
24) கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை தவறானவை என்று கண்டறிக?
ⅰ) மிதப்பு விசை திரவங்களில் மட்டும் செலுத்தக் கூடியது ஆகும்
ⅱ) மேல் நோக்கு விசை மிதப்பு விசை என்று அழைக்கப்படுகிறது
a)ⅰமட்டும்
b)ⅱமட்டும்
c)ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை.
விளக்கம்: மிதக்கும் அல்லது பகுதியளவு நீரில் மூழ்கியிருக்கும் பொருளின் மீது நீரானது ஒரு மேல்நோக்கு விசையைச் செலுத்துகிறது. இந்த மேல்நோக்கிய விசை மிதப்பு விசை என்றழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு மிதத்தல் எனப்படுகிறது. இந்த விசை திரவங்களினால் மட்டுமே செலுத்தக்கூடியது அல்ல. வாயுக்களும் அழுத்தத்தை செலுத்துகின்றன.
25) திரவங்கள் மற்றும் வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) பாய்மங்கள்
b) செதில்கள்
c) சிலிக்கான்கள்
d) உயிரிகள்
விளக்கம்: திரவங்கள் மற்றும் வாயுக்கள் பாய்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
26) பொருளின் எடை மேல்நோக்கு விசையை விட ________ இருந்தால் பொருளானது மிதக்கும்?
a) குறைவாக
b) அதிகமாக
c) சுழியாக
d) பாதியாக.
விளக்கம்: ஒரு பொருள் மிதப்பதையோ அல்லது மூழ்குவதையோ இந்த மேல்நோக்கு விசையே தீர்மானிக்கிறது. பொருளின் எடை மேல்நோக்கு விசையை விட குறைவாக இருந்தால் பொருளானது மிதக்கும், இல்லை எனில் மூழ்கிவிடும்.
மிதக்கும் பொருளின் மிதப்பு விசை > பொருளின் எடை; மூழ்கும் பொருளின் எடை > மிதப்பு விசை.
27) கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?
ⅰ) திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் உண்டு
ⅱ) திரவம் எதில் வைக்கப்படுகிறதோ அதன் ஓரலகு பரப்பில் செயல்படுத்தப்படும் விசை திரவத்தின் நிலை அழுத்தம் என்றழைக்கப்படும்
a)ⅰமட்டும்
b)ⅱமட்டும்
c)ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை.
விளக்கம்: திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை . திரவம் எதில் வைக்கப்படுகிறதோ அதன் ஓரலகு பரப்பில் செயல்படுத்தப்படும் விசை திரவத்தின் நிலை அழுத்தம் என்றழைக்கப்படுகிறது. திரவமானது கொள்கலனின் அடிப்பாகத்தில் மட்டுமல்ல அதன் சுவர்களின் மீதும் அழுத்தத்தை செலுத்துகிறது.28) திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி எது?
a) ஓடோமீட்டர்
b) பாரோ மீட்டர்
c) மிண்ணனு மீட்டர்
d) மானோமீட்டர்
விளக்கம்: திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி மானோமீட்டர் என்றழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட கொள்கலனில் உள்ள திரவங்களின் அழுத்தத்தை மானோமீட்டர் மூலம் அளவிடலாம். அடித்தளத்தில் திரவத்தினால் செலுத்தப்படும் அழுத்தமானது திரவத்தின் உயரத்தைச் சார்ந்தது.
29) கீழ்கானும் கூற்றுகளை கவனி.
ⅰ) குறிப்பிட்ட ஆழத்தில் திரவங்கள் அனைத்து திசைகளிலும் சமமான அழுத்த்ததை செயல்படுத்துகின்றன
ⅱ) ஆழம் அதிகரிக்க அதிகரிக்க திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தமும் அதிகரிக்கிறது
a)ⅰமற்றும்ⅱசரி
b)ⅰமட்டும் சரி
c)ⅰமட்டும் தவறு
d)ⅰமற்றும்ⅱதவறு
விளக்கம்: குறிப்பிட்ட ஆழத்தில் திரவங்கள் அனைத்து திசைகளிலும் சமமான அழுத்த்ததை செயல்படுத்துகின்றன. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தமும் அதிகரிக்கிறது
30) கீழ்க்கண்டவற்றுள் பாஸ்கல் விதி எதில் பயன்படுகிறது?
a) வாகனங்களில் உள்ள தடை (Break) அமைப்பு
b) அழுத்தப்பட்ட பொதி
c) நீரியல் உயர்த்திகள்
d) மேற்கூறிய அனைத்தும்
விளக்கம்: பாஸ்கல் விதியின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகளை சில எடுத்துக்காட்டுகளுடன் காண்போம். வாகனங்களை பழுதுநீக்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்ந்த பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்களில் உள்ள தடை (Break) அமைப்பு பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது. பஞ்சு அல்லது ஆடைகள் மிகக் குறைவான இடத்தை அடைத்துக் கொள்ளும் அழுத்தப்பட்ட பொதிகளாக மாற்றுவதற்கு பாஸ்கல் விதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நீரியல் அழுத்தி பயன்படுத்தப்படுகின்றன.
31) திரவத்தின் ஒரு புள்ளியில் செயல்படுத்தப்படும் அழுத்தம் பிற பள்ளிகளுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படுவது பற்றி முதன்முதலாக எடுத்துரைத்தவர் யார்?
a) அலெக்சாண்டர் வுட்
b) பிளெய்ஸ் பாஸ்கல்
c) நியூட்டன்
d) மைக்கேல் பாரடே
விளக்கம்: திரவத்தின் ஒரு புள்ளியில் செயல்படுத்தப்படும் அழுத்தம் பிற புள்ளிகளுக்கு சமமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இக்கருத்து பிரெஞ்ச் அறிவியல் அறிஞர் பிளெய்ஸ் பாஸ்கல் என்பவரால் முதன் முதலாக எடுத்துரைக்கப்பட்டது.
32) கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி
ⅰ) மூடிய மற்றும் ஓய்வுநிலையில் உள்ள திரவத்தின் எந்தவொரு புள்ளிக்கும் அளிக்கப்படும் அழுத்தமானது அத்திரவத்தின் அனைத்துப் புள்ளிகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படாது
ⅱ) ஓய்வு நிலையில் உள்ள திரவத்தின் மீது செலுத்தப்படும் அழுத்தமானது அத்திரவத்தின் பிற பகுதிகளுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படாது
a)ⅰமற்றும்ⅱசரி
b)ⅰமட்டும் சரி
c)ⅰமட்டும் தவறு
d)ⅰமற்றும்ⅱதவறு
விளக்கம்: மூடிய மற்றும் ஓய்வுநிலையில் உள்ள திரவத்தின் எந்தவொரு புள்ளிக்கும் அளிக்கப்படும் அழுத்தமானது அத்திரவத்தின் அனைத்துப் புள்ளிகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். ஓய்வு நிலையில் உள்ள திரவத்தின் மீது செலுத்தப்படும் அழுத்தமானது அத்திரவத்தின் பிற பகுதிகளுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
33) திரவத்தின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு குத்தாக செயல்படும் விசை எது?
a) பரப்பு இழுவிசை
b) பரப்பு தொங்குவிசை
c) வளிமண்டல விசை
d) பருமன் விசை
விளக்கம்: திரவத்தின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு குத்தாக செயல்படும் விசை பரப்பு இழுவிசை ஆகும்.
34) கீழ்கானும் கூற்றுகளை கவனி.
ⅰ) பரப்பு இழுவிசை என்பது திரவங்களின் ஒரு பண்பு
ⅱ) பரப்பு இழுவிசையின் அலகு Nm-2
a)ⅰமற்றும்ⅱசரி
b)ⅰமட்டும் சரி
c)ⅰமட்டும் தவறு
d)ⅰமற்றும்ⅱதவறு
விளக்கம்: பரப்பு இழுவிசை என்பது திரவங்களின் ஒரு பண்பு. பரப்பு இழுவிசையின் அலகு Nm-1
35) மழைத்துளிகள் இயற்கையாகவே கோளவடிவத்தை பெற்றிருப்பதற்கு காரணம் எது?
a) செங்குத்து விசை
b) கனத்தாக்கு விசை
c) உராய்வு விசை
d) பரப்பு இழுவிசை
விளக்கம்: மழைத்துளிகள் இயற்கையாகவே கோளவடிவத்தை பெற்றிருப்பதற்கு காரணம் பரப்பு இழுவிசை ஆகும்
36) சைலம் என்ற மெல்லிய குழாயில் ______ காரணமாக நீர் மேலேறுகிறது?
a) நுண்புழை ஏற்றம்
b) இழுவிசை ஏற்றம்
c) தொடுவிசை ஏற்றம்
d) சாமந்தி ஏற்றம்
விளக்கம்: தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் பரப்பு இழுவிசை ஆகும். தாவரங்களில் சைலம் திசுக்கள் நீரை கடத்த உதவுகிறது. தாவர வேர்கள் நீர் மூலக்கூறுகளை உறிஞ்சுகிறது. சைலம் என்ற மெல்லிய குழாயில் நுண்புழை ஏற்றம் என்ற செயல்பாட்டின் காரணமாக நீர் மேலேறுகிறது. இதற்கு நீரின் பரப்பு இழுவிசை காரணமாக அமைகிறது.
37) பின்வரும் கூற்றுகளை கவனி
ⅰ) திரவங்கள் இயங்கும் போது அவற்றினுள் உள்ள திரவ அடுக்குகளுக்கு இடையே அவற்றிற்கு இணையாக ஒரு உராய்வு விசை உருவாகிறது.
ⅱ) உராய்வு விசை திரவங்கள் இயங்கும்போது அவ்வியக்கத்தை எதிர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
a)ⅰமற்றும்ⅱசரி
b)ⅰமட்டும் சரி
c)ⅰமட்டும் தவறு
d)ⅰமற்றும்ⅱதவறு
விளக்கம்: திரவங்கள் இயங்கும் போது அவற்றினுள் உள்ள திரவ அடுக்குகளுக்கு இடையே அவற்றிற்கு இணையாக ஒரு உராய்வு விசை உருவாகிறது. உராய்வு விசை திரவங்கள் இயங்கும்போது அவ்வியக்கத்தை எதிர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
38) நீர்ச்சிலந்தியானது நீரின் பரப்பில் எளிதாக நடக்கக் காரணம் என்ன?
a) நீரின் பக்கவாட்டு இழுவிசை
b) நீரின் பரப்பு இழுவிசை
c) நீரின் செயல்பாட்டு விசை
d) நீரின் கொதிநிலை விசை
விளக்கம்: நீரின் பரப்பு இழுவிசை காரணமாக நீர்ச்சிலந்தியானது நீரின் பரப்பில் எளிதாக நடக்கிறது.
படம்: நீர்ச்சிலந்தி
39) கீழ்கானும் திரவங்களில் அதிக பாகுநிலையை கொண்டது எது?
a) தேங்காய் எண்ணெய்
b) தேன்
c) நீர்
d) கிரீஸ்
விளக்கம்: கிரீஸ் அதிக பாகுநிலையை கொண்டுள்ளது
40) பின்வரும் கூற்றுகளை கவனி
ⅰ) பாகியல் விசை CGS அலகு முறையில் பாய்ல் என்ற அலகால் அளவிடப்படுகிறது
ⅱ) பாகியல் விசை SI அலகுமுறையில் Kg m-1s-1 அல்லது Nsm-2 என்ற அலகால் அளவிடப்படுகிறது
a)ⅰமற்றும்ⅱதவறு
b)ⅰமட்டும் சரி
c)ⅰமட்டும் தவறு
d)ⅰமற்றும்ⅱசரி
விளக்கம்: பாகியல் விசை CGS அலகு முறையில் பாய்ல் என்ற அலகால் அளவிடப்படுகிறது. பாகியல் விசை SI அலகுமுறையில் Kg m-1s-1 அல்லது Nsm-2 என்ற அலகால் அளவிடப்படுகிறது
41) ஒரு திரவம் பாயும் பொழுது, திரவங்களின் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இடையே சார்பியக்கத்தை எதிர்க்கும் வகையில் செயல்படும் விசையே _______ என்று அழைக்கப்படுகிறது.
a) பாகுநிலை
b) பாகியல் விசை
c) இரண்டும் சரியானவை
d) மேற்கூறிய எதுவுமில்லை
விளக்கம்: ஒரு திரவம் பாயும் பொழுது, திரவங்களின் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இடையே உராய்வு விசை உண்டாகிறது. சார்பியக்கத்தை எதிர்க்கும் இத்தகைய விசையே பாகியல் விசை எனப்படும். இந்த பண்பு பாகுநிலை என வரையறுக்கப்படுகிறது
42) கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?
ⅰ) உராய்வு விசையானது பொருளின் இயக்கத்திற்கு நேர்த்திசையில் செயல்படும்.
ⅱ) ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் பொருட்களின் ஒழுங்கற்ற வடிவியல் பரப்பின் காரணமாக இந்த உராய்வு விசை உருவாகிறது
a)ⅰமட்டும்
b)ⅱமட்டும்
c)ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை.
விளக்கம்: உராய்வு விசையானது பொருளின் இயக்கத்திற்கு நேர்த்திசையில் செயல்படும். ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் பொருட்களின் ஒழுங்கற்ற வடிவியல் பரப்பின் காரணமாக இந்த உராய்வு விசை உருவாகிறது
43) கீழ்க்கண்டவற்றில் உராய்வின் விளைவுகள் எவை?
a) உராய்வு இயக்கத்தை எதிர்க்கிறது.
b) உராய்வு தேய்மானத்திற்குக் காரணமாக இருக்கிறது.
c) உராய்வு வெப்பத்தை உருவாக்குகிறது.,
d) அனைத்தும் சரியானவை
விளக்கம்: உராய்வு பின்வரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அ. உராய்வு இயக்கத்தை எதிர்க்கிறது. ஆ. உராய்வு தேய்மானத்திற்குக் காரணமாக இருக்கிறது. இ. உராய்வு வெப்பத்தை உருவாக்குகிறது.
44) உராய்வு எத்தனை வகைப்படும்?
a) 3
b) 5
c) 2
d) 1
விளக்கம்: உராய்வானது அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது
45) கீழ்க்கண்டவற்றில் உராய்வின் வகைகள் எவை?
a) நிலை உராய்வு
b) இயக்க உராய்வு
c) a மற்றும் b
d) எதுவுமில்லை
விளக்கம்: உராய்வானது அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. அவை, நிலை உராய்வு மற்றும் இயக்க உராய்வு ஆகும்.
46) கீழ்க்கண்டவற்றுள் நிலை உராய்வுக்கு எடுத்துக்காட்டு என்ன?
a) புவியில் ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள் நிலையான இடத்தைப் பெற்றுள்ளன
b) கயிற்றில் உள்ள முடிச்சு
c) b மற்றும் a
d) எதுவுமில்லை
விளக்கம்: ஓய்வு நிலையில் இருக்கும் பொருட்களால் உணரப்படும் உராய்வு நிலை உராய்வு எனப்படும். எடுத்துக்காட்டு புவியில் ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள் நிலையான இடத்தைப் பெற்றுள்ளன, கயிற்றில் உள்ள முடிச்சு.
47) இயக்க உராய்வின் வகைகள் எவை?
a) நழுவு உராய்வு
b) உருளும் உராய்வு
c) நழுவு உராய்வு மற்றும் உருளும் உராய்வு
d) எதுவுமில்லை
விளக்கம்: இயக்க உராய்வானது நழுவு உராய்வு மற்றும் உருளும் உராய்வு என மேலும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
48) உருளும் உராய்வு நழுவும் உராய்வை விட _________ இருக்கும்?
a) அதிகமாக
b) குறைவாக
c) சமமாக
d) பாதியாக
விளக்கம்: உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாகவே இருக்கும். இதன்காரணமாகவே வாகனங்கள், தள்ளுவண்டிகள் மற்றும் பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
49) உராய்வை பாதிக்கும் காரணிகளில் எவை தவறானவை?
a) பரப்பின் தன்மை
b) பொருளின் எடை
c) தொடுபரப்பு
d) பொருளின் நிறை
விளக்கம்: உராய்வை பாதிக்கும் காரணிகள்.அ. பரப்பின் தன்மை ஆ. பொருளின் எடை இ. தொடுபரப்பு ஆகும்.
50) சொரசொரப்புத் தன்மை அதிகரித்தால் உராய்வு __________?
a) அதிகரிக்கும்
b) குறையும்
c) சமமாக இருக்கும்
d) மாறாது
விளக்கம்: பரப்பின் சொர சொரப்புத் தன்மை அதிகரித்தால் உராய்வு அதிகரிக்கும்.
51) கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?
ⅰ) தொடு பரப்பு அதிகமாக இருந்தால் உராய்வும் அதிகமாக இருக்கும்..
ⅱ) சாலை உருளையின்(Roadroller) உருளை குறைந்த தொடுப்பரப்பைப் பெற்றுள்ளதால், அதிக உராய்வைக் கொண்டுள்ளது
a)ⅰமட்டும்
b)ⅱமட்டும்
c)ⅰமற்றும்ⅱ
d) மேற்கூறிய எதுவும் இல்லை.
விளக்கம்: ஒரு குறிப்பிட்ட எடைக்கு உராய்வானது தொடும் இரு பரப்புகளுடன் நேரடியாக தொடர்பு படுத்தப்படுகிறது. தொடு பரப்பு அதிகமாக இருந்தால் உராய்வும் அதிகமாக இருக்கும். சாலை உருளையின்(Roadroller) உருளை அதிக தொடுப்பரப்பைப் பெற்றுள்ளதால், அதிக உராய்வைக் கொண்டுள்ளது , மிதி வண்டியின் மெல்லிய சக்கரத்தின் தொடு பரப்பு சிறியதாக இருப்பதால் குறைவான உராய்வைப் பெறுகிறது.
52) உராய்வின் நன்மைகள் பற்றிய கூற்றுகளில் எவை தவறானவை?
a) உராய்வின் காரணமாகவே பேனாவைக் கொண்டு காகிதத்தில் எழுத முடிகிறது.
b) சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையேயான உராய்வு விசை பாதுகாப்பான பயணத்திற்குக் காரணமான உள்ளது.
c) இயங்கும் வாகனத்தை நிறுத்த தடையைச் செலுத்தும் போது உராய்வின் காரணமாகவே வாகனம் ஓய்வு நிலைக்கு வருகிறது
d) தீக்குச்சியைக் கொளுத்துவதற்கு உராய்வு காரணமாக அமைவதில்லை
விளக்கம்: உராய்வானது நமது அன்றாட செயல்பாடுகளில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அன்றாட வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளில் உராய்வு விரும்பத்தகுந்ததாக உள்ளது. உராய்வின் காரணமாக எந்தவொரு பொருளையும் நம்மால் பிடிக்க முடிகிறது. உராய்வின் காரணமாகவே நம்மால் சாலைகளில் நடக்க முடிகிறது. செருப்பும், தரையும் நாம் நழுவி கீழே விழாமல் நடக்க உதவுகின்றன. உராய்வின் காரணமாகவே பேனாவைக் கொண்டு காகிதத்தில் எழுத முடிகிறது. சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையேயான உராய்வு விசை பாதுகாப்பான பயணத்திற்குக் காரணமான உள்ளது. இயங்கும் வாகனத்தை நிறுத்த தடையைச் செலுத்தும் போது உராய்வின் காரணமாகவே வாகனம் ஓய்வு நிலைக்கு வருகிறது. தீக்குச்சியைக் கொளுத்துவது, துணியைத் தைப்பது, முடிச்சுக்களைப் போடுவது.
53) உராய்வின் தீமைகள் பற்றிய கூற்றுகளில் எவை தவறானவை?
a) உராய்வு வெப்பத்தை உருவாக்குவதால் கருவிகள் உடைந்து பழுது ஏற்படுகிறது
b) கருவிகளில் உள்ள பற்சட்ட அமைப்பு, திருகுகள் போன்றவை ஒன்று மற்றொன்றின் மீது தேய்க்கப்படுவதால் அவை தேய்மானம் அடைவதில்லை
c) உராய்வைக் குறைப்பதற்கு அதிகப்படியாக வேலை செய்ய வேண்டிய தேவையில்லை
d) உராய்வைக் குறைப்பதற்கு ஆற்றல் இழப்பு அதிகமாகிறது
விளக்கம்: கருவிகளில் உள்ள பற்சட்ட அமைப்பு, திருகுகள் போன்றவை ஒன்று மற்றொன்றின் மீது தேய்க்கப்படுவதால் அவை தேய்மானம் அடைகின்றன. உராய்வைக் குறைப்பதற்கு அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியுள்ளதால் ஆற்றல் இழப்பு அதிகமாகிறது. உராய்வு வெப்பத்தை உருவாக்குவதால் கருவிகள் உடைந்து பழுது ஏற்படுகிறது.
54) பின்வரும் கூற்றுகளை கவனி.
ⅰ) தொடுபரப்பை அதிகரிப்பதன் மூலம் உராய்வை அதிகரிக்கலாம்.
ⅱ) சக்கரத்தின் உள்விளிம்பிற்கு அருகே தடைக்கட்டைகளை அமைத்தால் தடை செயல் படுத்தப்படும் போது உராய்வு அதிகரித்து மிதிவண்டி உடனே ஓய்வு நிலையை அடையும்.
a)ⅰமற்றும்ⅱதவறு
b)ⅰமட்டும் சரி
c)ⅰமட்டும் தவறு
d)ⅰமற்றும்ⅱசரி
விளக்கம்: தொடுபரப்பை அதிகரிப்பதன் மூலம் உராய்வை அதிகரிக்கலாம். காலணிகளின் அடிப்பாகத்தில் உள்ள அடிமான பிடிப்புகளைப்(Treed) பார்த்திருக்கீர்களா? இவை தரையுடனான பிடிமானத்திற்கும் பாதுகாப்பாக நடப்பதற்கும் உதவுகின்றன. அடிமான பிடிப்புகள் உடைய டயர்களும் உராய்வை அதிகரித்து பாதுகாப்பான பயணத்திற்கு உதவுகின்றன. மிதிவண்டியின்
சக்கரத்தின் உள் விளிம்பிற்கு அருகே தடைக்கட்டைகளை அமைத்தால் தடை செயல்படுத்தப்படும் போது உராய்வு அதிகரித்து மிதிவண்டி உடனே ஓய்வு நிலையை அடையும்.எடுத்துக்காட்டு: சுமோ வீரர்களும், கபடி வீரர்களும் சிறந்த பிடிமானத்திற்கு தங்களது கைகளை மணலில் தேய்த்துக் கொள்கிறார்கள். கால்பந்து வீரர்களின் காலணிகளில் பல துருத்திக் கொண்டிருக்கும் அமைப்புகள் மைதானத்துடன் வலிமையான பிடிமானத்தை தரும்.
55) கீழ்க்கண்டவற்றில் உயவுப்பொருளுக்கு எடுத்துக்காட்டு எவை?
a) கிரீஸ்
b) தேங்காய் எண்ணெய்
c) கிராஃபைட்
d) மேற்கூறிய அனைத்தும்
விளக்கம்: உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் உயவுப் பொருள் எனப்படும். எ.கா கிரீஸ், தேங்காய் எண்ணெய், கிராஃபைட், விளக்கெண்ணெய் முதலியவை. இரண்டு பொருட்களின் ஒன்றையொன்று தொடும் ஒழுங்கற்ற பரப்புகளின் இடையில் உயவுப் பொருள்கள் சென்று நிரம்புவதால் அவைகளுக்கு இடையே ஒரு வழவழப்பான உறை உருவாகிறது. இது இரு பரப்புகளுக்கான நேரடித் தொடர்பைத் தடுத்து உராய்வை குறைக்கிறது.
56) _____ க் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம்?
a) பந்து தாங்கிகள்
b) சக்கரங்கள்
c) தேங்காய் எண்ணெய்
d) கிராஃபைட்
விளக்கம்: உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருப்பதினால் பந்து தாங்கிகளைக் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம்.
57) கீழ்க்கண்டவற்றில் உராய்வை குறைப்பதற்கான முறை எது?
a) தொடுபரப்பை அதிகரித்தல்
b) உயவுப்பொருள்களை பயன்படுத்துதல்
c) பந்து தாங்கிகளை பயன்படுத்துதல்
d) மேற்கூறிய அனைத்தும்
விளக்கம்: உயவுப்பொருள்களை பயன்படுத்துவன் மூலம் உராய்வை குறைக்கலாம்.
58) கூற்று(A): கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது.
காரணம்(R): கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகிறது.
a) (A) மற்றும் (R) தவறு
b) (A) சரி (R) தவறு
c) (A) மற்றும் (R) இரண்டும், சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம்
d) (A) மற்றும் (R) இரண்டும், சரி (R) வுக்கு (A) சரியான விளக்கம் இல்லை
விளக்கம்: கூர்மையான கத்தி காய்கறிகளை வெட்டப் பயன்படுகிறது. கூர்மையான முனைகள் அதிக அழுத்தத்தைத் தருகிறது.
59) திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது?
a) திரவத்தின் அடர்த்தி
b) திரவத்தம்ப உயரம்
c) a மற்றும் b
d) மேற்கண்ட எதுவுமில்லை
விளக்கம்: திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் திரவத்தின் அடர்த்தி மற்றும் திரவத்தம்ப உயரம் ஆகியவற்றால் அதிகரிக்கிறது.
60) பொருத்துக
தொகுதி 1 தொகுதி 2
a) நிலை உராய்வு – 1) பாகுநிலை
b) இயக்க உராய்வு – 2) குறைந்த உராய்வு
c) உருளும் உராய்வு – 3) இயக்கத்தில் உள்ள பொருள்கள்
d) திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு – 4) நழுவும் பொருள்கள்
e) நழுவு உராய்வு – 5) ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள்
a b c d e
A) 1 2 3 4 5
B) 5 3 2 1 4
C) 5 3 4 1 2
D) 3 4 1 2 5
விளக்கம்:
தொகுதி 1 தொகுதி 2
a) நிலை உராய்வு – 1) ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள்
b) இயக்க உராய்வு – 2) இயக்கத்தில் உள்ள பொருள்கள்
c) உருளும் உராய்வு – 3) குறைந்த உராய்வு
d) திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு – 4) பாகுநிலை
e) நழுவு உராய்வு – 5) நழுவும் பொருள்கள்
61) பொருத்துக
தொகுதி 1 தொகுதி 2
a) பாரோமீட்டர் – 1) உராய்வைக் குறைக்கும்
b) உராய்வை அதிகரித்தல் – 2) வளிமண்டல அழுத்தம்
c) உராய்வை குறைத்தல் – 3) உராய்விற்கான காரணம்
d) உயவுப்பொருள்கள் – 4) தொடுபரப்பு அதிகரித்தல்
e) ஒழுங்கற்ற பரப்பு – 5) தொடுபரப்பு குறைதல்
a b c d e
A) 1 2 3 5 4
B) 2 4 5 1 3
C) 1 3 4 5 2
D) 3 4 1 5 2
விளக்கம்:
தொகுதி 1 தொகுதி 2
a) பாரோமீட்டர் – 1) வளிமண்டல அழுத்தம்
b) உராய்வை அதிகரித்தல் – 2) தொடுபரப்பு அதிகரித்தல்
c) உராய்வை குறைத்தல் – 3) தொடுபரப்பு குறைதல்
d) உயவுப்பொருள்கள் – 4) உராய்வைக் குறைக்கும்
e) ஒழுங்கற்ற பரப்பு – 5) உராய்விற்கான காரணம்