TnpscTnpsc Current Affairs

8th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

8th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஐஐடி ரூர்க்கியானது எந்நிறுவனத்துடன் இணைந்து ‘ரூர்க்கி நீர் மாநாட்டை’ ஏற்பாடு செய்துள்ளது?

அ) NITI ஆயோக்

ஆ) தேசிய நீரியல் நிறுவனம் 

இ) இந்திய கடற்படை

ஈ) இந்திய கடலோர காவல்படை

  • மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஐஐடி ரூர்க்கியில், ‘ரூர்க்கி நீர் மாநாட்டின்’ 2ஆம் பதிப்பை தொடங்கி வைத்தார். இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – ரூர்க்கியும் தேசிய நீரியல் நிறுவனமும் இணைந்து, “Water Security for Sustainable Development” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. தேசிய நீரியல் நிறுவனம் என்பது ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

2. ‘தெய்யம்’ அல்லது ‘காளியாட்டம்’ என்பது பின்வரும் எந்த மாநிலத்தில் நடத்தப்படும் ஒரு சடங்கு நடனமாகும்?

அ) கர்நாடகா

ஆ) கேரளா 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) மேற்கு வங்காளம்

  • ‘தெய்யம்’ அல்லது ‘காளியாட்டம்’ என்பது கேரளத்தில் நடத்தப்படும் எண்ணூறு ஆண்டுகள் பழமையான ஒரு சடங்கு நடனமாகும். இது நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கலைகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இது பண்டைய பழங்குடி கலாசாரங்களை வெளிப்படுத்துகிறது. இந்தத் திருவிழாவின்போது பலவகையான ‘தெய்யங்கள்’ நிகழ்த்தப்படுகின்றன.
  • கேரளத்தின் கண்ணூரில் நடைபெறும் காளியாட்டம் திருவிழாவில், ‘அக்னி கண்டகர்ணன்’ என்ற ஒருவகை தெய்யம் என்ற சடங்கு நடனம் தொடங்கியது.

3. ‘ஜன் ஔஷாதி பால மித்ரா’ என்ற திட்டத்தின் நோக்கம் என்ன?

அ) PMBJP திட்டம் பற்றி குழந்தைகளுக்குக் கற்பித்தல் 

ஆ) சிறார்களுக்கு மானியவிலையில் மருந்துகள் வழங்கல்

இ) கருவுற்றிருக்கும் பெண்களுக்கு மானிய விலையில் மருந்துகள் வழங்குதல்

ஈ) PMBJP-க்கான முதலீட்டை ஊக்குவித்தல்

  • ‘ஜன் ஔஷாதி திவாஸ்’ வாரவிழாவையொட்டி, நாடு முழுவதும் 75 இடங்களில் ‘ஜன் ஔஷாதி பால மித்ரா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரதமர் பாரதிய ஜன் ஔஷாதி பரியோஜனாவின் நன்மைகளைப்பற்றி சிறார்களுக்குக் கற்பிப்பதற்காக ‘ஜன் ஔஷாதி திட்டத்துடன் சிறார்களை ‘பால மித்ரா’க்களாக ஈடுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. ‘சுதேச தர்ஷன் விருதுகளை’ நிறுவியுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) வெளியுறவு அமைச்சகம்

ஆ) சுற்றுலா அமைச்சகம் 

இ) கலாசார அமைச்சகம்

ஈ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • நடுவண் சுற்றுலா அமைச்சகம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முன்னெடுப்புகளை அங்கீகரிப்பதற்காக ‘சுதேச தர்ஷன் விருதுகளை’ அமைத்துள்ளது. ‘சுதேச தர்ஷன்’ திட்டத்தின்கீழ், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா தொடர்பான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 31 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் `5500 கோடிக்கு மேல் 76 திட்டங்களுக்கு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘சாபோரிஜியா அணுமின் நிலையம்’ அமைந்துள்ள நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) உக்ரைன் 

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) பெலாரஸ்

  • சாபோரிஜியா அணுமின் நிலையமானது உக்ரைனின் ஒரு முக்கிய மின் விநியோகக் கட்டமைப்பு ஆகும். இந்த ஆலை 40-42 பில்லியன் kWh’ஐ உற்பத்தி செய்கிறது. இது உக்ரைனின் சராசரி ஆண்டு மின்சார உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. சமீபத்தில், ரஷ்ய இராணுவம் இதனைக் கைப்பற்றி ஷெல் தாக்குதலைத் தொடங்கியதாக உக்ரைன் கூறியது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகவும் உள்ளது.

6. ஒரு சமீப அறிக்கையின்படி, 2020இல் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் யூடியூப் கிரியேட்டர் அமைப்பின் பங்களிப்பு என்ன?

அ) `1700 கோடி

ஆ) `3400 கோடி

இ) `6800 கோடி 

ஈ) `8500 கோடி

  • தன்னாட்சிமிகு ஆலோசனை நிறுவனமான ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸின் புதிய அறிக்கையின்படி, யூடியூப் உருவாக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு இந்திய GDP-க்கு `6,800 கோடி பங்களித்துள்ளது.
  • 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுநேர வேலைக்கு இணையான 683,900 பணிகளை யூடியூப் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் 100,000-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக்கொண்ட யூடியூப் சேனல்களின் எண்ணிக்கையானது 40,000 என்றும் அது கூறியுள்ளது.

7. 2022 – உலக பெண்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Educate Organise and Agitate

ஆ) Gender Equality: March against Patriarchy

இ) Gender equality today for a sustainable tomorrow 

ஈ) Impact of COVID-19 on women

  • பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவர்களது சாதனைகளை முன்னிலைப்படுத்தும் நோக்கோடு பன்னாட்டு பெண்கள் நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.8 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “Gender equality today for a sustainable tomorrow” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

8. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட முயற்சியின் பெயர் என்ன?

அ) ஆபரேஷன் கங்கா 

ஆ) ஆபரேஷன் கியேவ்

இ) ஆபரேஷன் மாஸ்கோ

ஈ) ஆபரேஷன் பாரத்

  • ‘ஆபரேசன் கங்கா’ என்பது உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட ஒரு முயற்சியின் பெயராகும். இதுவரை, இந்தியா தனது நாட்டைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டவர்களை திரும்ப அழைத்து வந்துள்ளது. ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாகிய குடியரசின் எல்லை வழியாக இந்தியர்களை வெளியேற்ற உதவுவதற்காக 24×7 கட்டுப்பாட்டு மையங்களையும் இந்தியா அமைத்துள்ளது.

9. குஜராத் பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நகரத்தில் (GIFT) அலுவலகத்தைத் திறக்கும் முதல் பலதரப்பு நிறுவனம் எது?

அ) WEF

ஆ) ILO

இ) புதிய வளர்ச்சி வங்கி 

ஈ) உலக வங்கி

  • குஜராத் பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நகரத்தில் (GIFT) அலுவலகத்தைத் திறக்கும் முதல் பலதரப்பு நிறுவனமாக புதிய வளர்ச்சி வங்கி மாறவுள்ளது. புதிய வளர்ச்சி வங்கி ஆனது இந்தியாவில் உள்ள முக்கியமான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு உதவுதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய நிதியுதவி உட்கட்டமைப்பு & மேம்பாட்டிற்கான நிறுவனத்துடன் கூட்டு சேரவும் அவ்வங்கி எண்ணுகிறது.

10. 2022-உலக மொபைல் மாநாடு நடந்த நகரம் எது?

அ) பாரிஸ்

ஆ) பார்சிலோனா 

இ) பெய்ஜிங்

ஈ) டோக்கியோ

  • உலக மொபைல் மாநாடானது அண்மையில் ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டில், உலகளாவிய மொபைல் பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, உலகளவில் 5G இணைப்புகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 1 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கடந்த 2021ஆம் ஆண்டில், மொபைல் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் மட்டும் 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளன. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகும். இது 2025இல் $5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி தொடக்கம்

இந்தியா-இலங்கை இடையிலான 9ஆவது கூட்டு கடற் படை பயிற்சி தொடங்கியது.

இந்தியா-இலங்கை இடையிலான கூட்டு கடற்படை பயிற்சி 2 கட்டங்களாக நடக்கவுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இது தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் மார்ச் 9, 10ஆம் தேதிகளில் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கிர்ச் கப்பல், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான எல்எல்என்எஸ் சயூரலா ஆகியவை பயிற்சியில் இடம்பெற்றுள்ளன. இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனுபவ பகிர்வு, கடல்சார் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேம்படு -த்தும் நோக்கில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

2. உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியா முதலிடம்…!

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த 25 மீ ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி 17-7 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

இந்த போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. நார்வே (3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம்) 2ஆவது இடத்தை பெற்றது. பிரான்ஸ் (3 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 20 பதக்கங்களுடன்) மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

3. நான்கு நாள் இந்தோ-பசிபிக் இராணுவ சுகாதாரக் கருத்தரங்கு: பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தோ-பசிபிக் இராணுவ சுகாதாரக் கருத்தரங்கைப் (IPMHE), பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

இந்தக் கருத்தரங்கைப் பாதுகாப்புப் படைகள் மருத்து சேவைகள் பிரிவு மற்றும் அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்துகிறது.

“கொந்தளிப்பான, நிச்சமற்ற, சிக்கலான உலகில் ராணுவ மருத்துவ நலன்” என்பதுதான் இந்த மாநாட்டின் கருப் பொருள். மார்ச்.10ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கருத்தரங்கு, இராணுவ மருத்துவப்பிரிவுகள் இடையே
-யான ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போர்க்கள மருத்துவப் பராமரிப்பு, மருந்துகள், போர்க்கள அறுவை சிகிச்சை, மயக்க மருந்து, விமானம் மற்றும் கடல்சார் மருத்துவ அவசரநிலை உட்பட பல விஷயங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளன.

இந்தக் கருத்தரங்கில், 38-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு பிரதிகள் கலந்துகொள்கின்றனர். இந்த 4 நாள் கருத்தரங் -கில் 110 தலைப்புகளில் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

4. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையத்தை ஹைதராபாத்தில் அமைக்கவுள்ளது

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்தியாவில் நான்காவது தரவு மையத்தை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஹைதராபாத் தரவு மையம் இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையங்களுள் ஒன்றாக இருக்கும் எனவும் 2025 ஆம் ஆண்டில் இது செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் ஏற்கனவே புனே, மும்பை மற்றும் சென்னை ஆகிய 3 இந்தியப் பிராந்தியங்களில் தரவு மையத்தைக் கொண்டுள்ளது.

5. ஆசியாவின் பெரிய இந்திய யானை உயிரிழப்பு

ஆசியாவின் மிகப்பெரிய யானையாக கருதப்படும் 69 வயதான ‘நதுங்கமுவே இராஜா’ 07-03-2022 அன்று உயிரிழந்தது.

கண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பெளத்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாவில் புனித புத்தரின் பல் இந்த யானை மீது வைத்து கொண்டு செல்லப்படும். இதற்காக இராஜா தனது நதுங்கமுவே கிராமத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டிக்கு நடந்தே செல்லும். இந்த யானையின் தந்தம் 10.5 அடி நீளமாகும்.

6. நாட்டின் முதல் & மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை தூத்துக்குடியில் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்

தூத்துக்குடி ஸ்பிக் (SPIC) நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின் 07.03.2022 அன்று தூத்துக்குடியில், SPIC நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் `150 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 42 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை தங்களுடைய தொழிற்சாலைகளிலேயே உபயோகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார்.

இப்புதிய 25.3 MW DC / 22 MW AC திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத்திட்டம், நவீனகால பசுமை, நிலையான தொழில்நுட்பம் மற்றும் தன்னிறைவு பெற்ற ஆற்றல் உற்பத்தியை செயல்படுத்த SPIC நிறுவனத்தின் ESG உத்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் சோலார் திட்டங்கள் பாரம்பரிய நில அடிப்படையிலான சோலார் ஆலைகளை விட அதிக உற்பத்தியை வழங்குவதோடு, ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தி, விலைமதிப்பற்ற தண்ணீரை ஆவியாகாமல் சேமிக்கிறது. இச்சூரிய மின்சக்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும் ‘SPIC’ மற்றும் ‘Greenstar’ உரங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.

இந்த மிதக்கும் சூரியமின் நிலையம், நீர் குளிர்ச்சி விளைவை எளிதாக்கி, அதிக மின் உற்பத்திக்கு உதவுகிறது. சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தவிர, நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஆவி ஆகாமல் 60% கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நன்மைக்கும் இந்தத் திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டம் இந்திய சூரிய ஆற்றல் மேம்பாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

“SPIC நிறுவனத்தின் மிதக்கும் சூரியமின் நிலையத் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள தொழில்களை மேம்படுத்துவதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் இலக்கை அடைவதற்கான ஒரு மைல்கல்லாக அமையும்” என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

7. உலக மகளிர் நாளன்று 2020, 2021 ஆண்டுகளுக்கா -ன தலைசிறந்த 29 பேருக்கு கௌரவம் மிக்க ‘நாரி சக்தி’ விருதுகளை மாண்புமிகு குடியரசு தலைவர் வழங்கினார்.

மகளிருக்கு அதிகாரமளித்தலுக்காக குறிப்பாக நலிந்த மற்றும் விளிம்பு நிலை பெண்களுக்கு சிறப்புமிக்க சேவைகள் செய்தவர்களின் மெச்சதக்க பணிகளை அங்கீகரிக்கும் விதமாக 29 பேருக்கு 28 விருதுகள் (2020 மற்றும் 2021-க்கு தலா 14) வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் கைவினைக்கலைஞர் ஜெயா முத்து, தோடா கைப்பின்னல் கலைஞர் தேஜம்மா ஆகியோர் 2020ஆம் ஆண்டுக்கான விருதினைக் கூட்டாகப் பெறுகிறார்கள்.

2021ஆம் ஆண்டுக்கு தமிழ்நாட்டைச்சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் ஆய்வாளரான தாரா ரங்கசாமி விருது பெறுகிறார்.

1. The ‘Roorkee Water Conclave’ has been organised by IIT Roorkee along with which institution?

A) NITI Aayog

B) National Institute of Hydrology 

C) Indian Navy

D) Indian Coast Guard

  • Union Minister for Jal Shakti Shri Gajendra Singh Shekhawat inaugurated the 2nd edition of the ‘Roorkee Water Conclave’ today at IIT, Roorkee.
  • It is being jointly organised by Indian Institute of Technology, Roorkee and National Institute of Hydrology, focusing on the theme, ‘Water Security for Sustainable Development’. National Institute of Hydrology is an autonomous society under Ministry of Jal Shakti.

2. ‘Theyyam’ or ‘Kaliyattam’ is a ritual dance performed in which state?

A) Karnataka

B) Kerala 

C) Andhra Pradesh

D) West Bengal

  • ‘Theyyam’ or ‘Kaliyattam’ is a 800–year–old ritual dance performed in the state of Kerala. It exhibits folk dances and art thereby displaying the ancient tribal cultures. Various types of theyyams are performed during the course of the festival. Ritual dance Agni Kandakarnan Theyyam has begun at the Kaliyattam festival in Kannur, Kerala.

3. What is the objective of the ‘Jan Aushadhi Bal Mitra programme’?

A) Educate Children on PMBJP 

B) Provide subsidised medicines to children

C) Provide subsidised medicines to pregnant women

D) Promote Investment in PMBJP

  • On the occasion of Jan Aushadhi Diwas week celebrations, Jan Aushadhi Bal Mitra programme has been conducted across the country at 75 locations. It aims to engage children as ‘Bal Mitras’ with Jan Aushadhi scheme to educate them about the benefits of the PM Bharatiya Jan Aushadi Pariyojana.

4. Which Union Ministry has constituted ‘Swadesh Darshan Awards’?

A) Ministry of External Affairs

B) Ministry of Tourism 

C) Ministry of Culture

D) Ministry of Housing and Urban Affairs

  • Ministry of Tourism has constituted Swadesh Darshan Awards, to acknowledge the efforts of states/ UTs. Under ‘Swadesh Darshan’ scheme, tourism related infrastructure has been developed at more than 500 tourist destinations. The Ministry has sanctioned 76 projects in 31 States / UTs of India for more than Rs.5500 Crore.

5. ‘Zaporizhzhia Nuclear Power Plant’, which was seen in the news recently, is located in which country?

A) Russia

B) Ukraine 

C) Afghanistan

D) Belarus

  • Zaporizhzhia Nuclear Power Plant is a major electricity supplier in Ukraine. The plant generates 40–42 billion kWh which accounts for one fifth of the average annual electricity production in Ukraine.
  • Recently, Ukraine has claimed that Russian military has seized the plant and started shelling. It is also the largest nuclear power plant in Europe.

6. As per a recent report, what is the contribution of YouTube creator system to Indian GDP in 2020?

A) Rs 1700 Crores

B) Rs 3400 Crores

C) Rs 6800 Crores 

D) Rs 8500 Crores

  • As per a new report by independent consulting firm Oxford Economics, YouTube’s creator ecosystem contributed Rs 6,800 crore to the Indian GDP. YouTube supported 683,900 full–time equivalent jobs in India in 2020. It also said that the number of channels on YouTube in India with over 100,000 subscribers are 40,000.

7. What is the theme of the International Women’s Day 2022?

A) Educate Organise and Agitate

B) Gender Equality: March against Patriarchy

C) Gender equality today for a sustainable tomorrow 

D) Impact of COVID–19 on women

  • International Women’s Day is observed every year on March 8 across the world, to highlight the achievements and problems faced by women. The theme for this year is “Gender equality today for a sustainable tomorrow”.

8. What is the name of the initiative launched by India to bring back Indians stranded in Ukraine?

A) Operation Ganga 

B) Operation Kiev

C) Operation Moscow

D) Operation Bharat

  • Operation Ganga is the name of the initiative launched by the Government of India to bring back Indians stranded in Ukraine. So far, India has brought back more than 1,000 of its nationals from the country. It has also set up 24×7 control centres to assist in the evacuation of Indians through the border crossing points with Hungary, Poland, Romania and Slovak Republic.

9. Which is the first multilateral agency to open an office in the Gujarat International Finance Tech City (GIFT)?

A) WEF

B) ILO

C) New Development Bank 

D) World Bank

  • New Development Bank (NDB) is set to become the first multilateral agency to open an office in the Gujarat International Finance Tech City (GIFT). NDB also expects to partner with the newly formed National Bank for Financing Infrastructure and Development (NBFID) to support important infrastructure projects in India.

10. Which city is the host of Mobile World Congress (MWC) 2022?

A) Paris

B) Barcelona 

C) Beijing

D) Tokyo

  • Mobile World Congress (MWC) began recently in the city of Barcelona, Spain. In the conference, the Global Mobile Economy Report was released.
  • As per the report, the total number of 5G connections globally is expected to reach 1 billion in 2022, which could increase 5G adoption. In 2021, mobile technologies and services generated USD 4.5 trillion, which equals 5% of Global GDP. This is expected to grow to USD 5 trillion in 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!