TnpscTnpsc Current Affairs

8th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

8th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எஃகு கழிவுகளால் ஆன முதல் சாலையைப் பெறவுள்ள இந்திய நகரம் எது?

அ) மும்பை

ஆ) சூரத் 

இ) ஜெய்ப்பூர்

ஈ) சண்டிகர்

  • எஃகுக்கழிவுகளாலான சாலை வாய்க்கப்பெற்ற இந்தியாவின் முதல் நகரமாக சூரத் ஆனது. இது நிலையான வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. CSIR இந்தியா (அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்) மற்றும் CRRI (மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்) உடன் ஆர்செலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியாவால் இணைந்து இந்தச் சாலை அமைக்கப்பட்டது.
  • இது எஃகு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்க மதியுரையகமான NITI ஆயோக்கின் ஆதரவின்கீழ் உள்ளது.

2. பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் தனியார் லிட்’இன் ‘வர்னிகா’ மை உற்பத்திப் பிரிவானது கீழ்காணும் எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?

அ) சென்னை

ஆ) மைசூரு 

இ) புது தில்லி

ஈ) கொல்கத்தா

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ், மைசூரில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் தனியார் நிறுவனத்தின் (BRBNMPL) மை உற்பத்திப் பிரிவான ‘வர்னிகா’வை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முழு-உரிமையுடைய துணை நிறுவனமாகும்.

3. ‘பாலிகாத்தான்’ என்பது அமெரிக்கப் படைகளுக்கும் கீழ்காணும் எந்நாட்டிற்கும் இடையே நடைபெறும் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

அ) இத்தாலி

ஆ) பிலிப்பைன்ஸ் 

இ) ஜப்பான்

ஈ) இலங்கை

  • அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸின் தற்காப்புப் படைகள் பிலிப்பைன்ஸில், ‘பாலிகாத்தான் – 2022’ என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கின.
  • 12 நாள் நடக்கும் இந்தப் பயிற்சியில் கிட்டத்தட்ட 9,000 பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க வீரர்கள் ஈடுபடுத்தப்பட் -டுள்ளனர்.

4. இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடனான பொருளாதார ஒத்துழைப்பு & வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ) ஜப்பான்

ஆ) ஜெர்மனி

இ) ஆஸ்திரேலியா

ஈ) பிரான்ஸ்

  • இந்தியாவும் ஆஸி’உம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (IndAus ECTA) கையெழுத்திட்டன. இது ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 96% வரி அணுகலை வழங்க எண்ணுகிறது. ஏற்றுமதியில் பொறியியல் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி, ஆடை மற்றும் தோல் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
  • இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளில் $45-50 பில்லியன் டாலர்கள் வரை பொருட்கள் மற்றும் சேவைகளில் இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும். மேலும், இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. பொருளாதார நெருக்கடி தொடர்பான எதிர்ப்புகளுக்கு இடையே நாடு தழுவிய அவசரநிலையை அறிவித்துள்ள ஆசிய நாடு எது?

அ) மியான்மர்

ஆ) ஆப்கானிஸ்தான்

இ) இலங்கை 

ஈ) பாகிஸ்தான்

  • இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிக்கு இடையே இலங்கை அதிபர் கோத்தபய இராஜபக்ச நாடு தழுவிய அவசரநிலையை அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு ஏப்ரல்.1 முதல் உடனடியாக அமலுக்கு வரும்.

6. ‘சாஜிபு நோங்மா பண்பா’ என்பது எந்த மாநிலத்தின் பாரம்பரிய விழாவாகும்?

அ) மேற்கு வங்காளம்

ஆ) ஒடிஸா

இ) மணிப்பூர் 

ஈ) அஸ்ஸாம்

  • ‘சாஜிபு நோங்மா பண்பா’ என்பது நிலவுப் புத்தாண்டாக மணிப்பூரில் உள்ள சனாமாஹிசம் மதத்தைப் பின்பற்று
    -வோரால் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய பண்டிகை ஆகும். இந்நாள் பெரும்பாலும் சந்திர மாதமான சாஜிபுவின் முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது.
  • ‘மீதேய் செய்ரவ்பா’ அல்லது ‘சாஜிபு செய்ரவ்பா’ என்றும் அழைக்கப்படும் இவ்விழா, மணிப்பூரின் மிகப்பெரிய இன சமூகங்களில் ஒன்றான மெய்டே இன மக்களால் கொண்டாடப்படுகிறது.

7. ‘நவீன தடுப்பாற்றலியல் பயிற்சி தொடர்பான உலகளா -விய ஒத்துழைப்பு’க் கூட்டத்தை நடத்திய நகரம் எது?

அ) நியூயார்க்

ஆ) ஜெனிவா 

இ) பெர்லின்

ஈ) பாரிஸ்

  • ‘நவீன தடுப்பாற்றலியல் பயிற்சி தொடர்பான உலகளாவிய ஒத்துழைப்பு’க்கூட்டமானது சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப்பணியாளர்களுக்கான அடிப்படை தடுப்பாற்றலியல் பயிற்சியின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • தேசிய நோய்த்தடுப்பு தொழினுட்ப ஆலோசனை குழுவில் (NTAGEI) COVID-19 பணிக்குழுவின் தலைவரான Dr NK அரோரா இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

8. உட்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகளின் (IL&FS) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

அ) உர்ஜித் படேல்

ஆ) C S இராஜன் 

இ) இரகுராம் இராஜன்

ஈ) விரால் ஆச்சார்யா

  • மத்திய அரசானது C S இராஜனை ஆறு மாத காலத்திற்கு உட்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் (IL&FS) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது.
  • மார்ச் இறுதி வரை, இந்நிறுவனம் 55,000 கோடி ரூபாய் கடனுக்குத் தீர்வுகண்டுள்ளது. இதில், சொத்துக்களைப் பணமாக்குதல் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றின்மூலம் `21,000 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. தீர்க்கப்பட்ட கடனானது தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மொத்த கடனில் 90% ஆகும்.

9. ‘வினய சமரசிய யோஜனா’வை அறிவித்துள்ள இந்திய மாநிலம் / UT எது?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) கர்நாடகா 

இ) கேரளா

ஈ) குஜராத்

  • கர்நாடக மாநில அரசு, மாநிலம் முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் தீண்டாமையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு திட்டமான, ‘வினய சமரஸ்ய யோஜனா’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு 3 வயது தலித் சிறுவன் வினயின் பெயர் இடப்பட்டுள்ளது.

10. பெண்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்காக, ‘DSLSA சட்ட உதவியகத்தை’த்தொடங்கிய அமைப்பு எது?

அ) ஐநா பெண்கள்

ஆ) தேசிய பெண்கள் ஆணையம் 

இ) UNICEF

ஈ) NITI ஆயோக்

  • தேசிய பெண்கள் ஆணையமானது (NCW) தில்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் (DSLSA) இணைந்து ‘சட்ட உதவியகம்’ என்றவொன்றைத் தொடங்கியுள்ளது.
  • பெண்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கி அவர்தம் குறைகளைத் தீர்க்க ஒற்றைச்சாளர வசதியாக இது செயல்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தூய்மையான உணவுவளாகம் திட்டத்தின்கீழ் ICF-க்கு ஐந்து நட்சத்திர தரச்சான்றிதழ்

சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலைக்கு (ICF) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ‘தூய்மையான உணவு வளாகத்துக்கான’ 5 நட்சத்திர தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (ஊநநஅஐ) செயல்படுகிறது. இந்த நிறுவனம், பொதுமக்கள் உடல்நல பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

‘தூய்மையான உணவு வளாகம்’ என்னும் திட்டத்தின் கீழ், இந்நிறுவனம் சார்பில், பல்வேறு பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

2. நடமாடும் மருத்துவ வாகன சேவை

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் `70 கோடி செலவில் சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

`70 கோடி செலவில் 389 மருத்துவ வாகனங்களை முதல்வர் சென்னையில் கொடியசைத்து தொடக்கினார்.

3. காலணி வடிவமைப்பு, உற்பத்தி: தைவான் நிறுவனத்துடன் `1,000 கோடியில் அரசு ஒப்பந்தம்

தைவானின் புகழ்பெற்ற காலணி வடிவமைப்பு, உற்பத்தி நிறுவனமான ஹாங்பூ தமிழ்நாட்டில் தனது ஆலையை அமைக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் செய்யப்பட்டது.

`1,000 கோடி முதலீட்டில் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

4. அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு முதல் கருப்பின பெண் நீதிபதி நியமனம்

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கருப்பினத்தைச் சேர்ந்த கேதன்ஜி பிரெளன் ஜாக்சனை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

தற்போது தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக உள்ள கேதன்ஜி பிரெளன் ஜாக்சன் (51) அமெரிக்க உச்சநீதி மன்றத்தின் மூன்றாவது பெண் நீதிபதியாக இருப்பார்.

1. Which is the first Indian city to get a road that is made out of steel waste?

A) Mumbai

B) Surat 

C) Jaipur

D) Chandigarh

  • Surat has become the first in India to get a road that is made out of steel waste. It is seen as an example of sustainable development.
  • The road is built by Arcelor Mittal Nippon Steel India with CSIR India (Council of Scientific and Industrial Research) & CRRI (Central Road Research Institute) with support from Ministry of Steel and Government think tank NITI Aayog.

2. ‘Varnika’ Ink Manufacturing Unit of Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) has been inaugurated in which city?

A) Chennai

B) Mysuru 

C) New Delhi

D) Kolkata

  • Governor of Reserve Bank of India (RBI) Shaktikanta Das dedicated Varnika, the Ink Manufacturing Unit of Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) to the nation in Mysuru. It is a wholly owned subsidiary of the Reserve Bank of India (RBI).

3. ‘Balikatan’ is a Joint military drills held between the Forces of US and which country?

A) Italy

B) Philippines 

C) Japan

D) Sri Lanka

  • The Defence Forces of the United States and Philippines launched their largest joint military drills in the Philippines named ‘Balikatan 2022’. The 12–day war games involve nearly 9,000 Filipino and American soldiers.

4. India recently signed an Economic Cooperation and Trade Agreement (ECTA) with which country?

A) Japan

B) Germany

C) Australia 

D) France

  • India and Australia signed an Economic Cooperation and Trade Agreement (IndAus ECTA). It seeks to provide –duty access to 96 per cent of India’s exports to Australia. The exports include engineering goods, gems and jewellery, textiles, apparel and leather.
  • The pact is expected to boost bilateral trade in goods and services to USD 45–50 billion over 5 years and generate over 1 million jobs in India.

5. Which Asian country has declared a nationwide public emergency amidst protests over economic crisis?

A) Myanmar

B) Afghanistan

C) Sri Lanka 

D) Pakistan

  • Sri Lankan President Gotabaya Rajapaksa has declared a nationwide public emergency amidst protests over the worst economic crisis in the island nation.
  • The special gazette notification declared a public emergency in Sri Lanka with immediate effect from April 1.

6. ‘Sajibu Nongma Panba’ is a traditional festival of which Indian state?

A) West Bengal

B) Odisha

C) Manipur 

D) Assam

  • ‘Sajibu Nongma Panba’ is a traditional festival for the followers of the Sanamahism religion in Manipur, as a Lunar New Year. The day is mostly observed on the first day of the lunar month of Sajibu.
  • Also known as Meetei Cheiraoba or Sajibu Cheiraoba, the festival is celebrated by the Meitei people, one of the largest ethnic communities in Manipur.

7. Which city hosted the ‘Global Collaboration Advanced Vaccinology Training’ Meeting?

A) New York

B) Geneva 

C) Berlin

D) Paris

  • ‘Global Collaboration Advanced Vaccinology Training’ meeting was recently held in Geneva. In the meeting, the need for a basic vaccinology training module for healthcare personnel across the world was discussed. India was represented by Dr NK Arora, head of the COVID–19 working group in the National Immunization Technical Advisory Group (NTAGI).

8. Who has been appointed as the Chairman and Managing Director of Infrastructure Leasing & Financial Services (IL&FS)?

A) Urjit Patel

B) CS Rajan 

C) Raghuram Rajan

D) Viral Acharya

  • The Union Government has appointed CS Rajan as Chairman and Managing Director of Infrastructure Leasing & Financial Services (IL&FS) for a period of six months. Till March–end, the company has resolved debt amounting to Rs 55,000 crore.
  • Out of which, Rs 21,000 crore has been discharged by way of monetisation of assets and debt repayment. The resolved debt amounts to 90% of the total debt that was expected to be resolved.

9. Which Indian state/UT has announced ‘Vinaya Samarasya Yojana’?

A) Andhra Pradesh

B) Karnataka 

C) Kerala

D) Gujarat

  • The Karnataka government has announced ‘Vinaya Samarasya Yojana’, an awareness programme meant to eradicate untouchability in Gram Panchayats across the state. The scheme has been named after a three–year–old Dalit boy Vinay.

10. Which institution launched the ‘DSLSA Legal Aid Clinic’, to provide free legal assistance to women?

A) UN Women

B) National Commission for Women 

C) UNICEF

D) NITI Aayog

  • The National Commission for Women (NCW) in collaboration with Delhi State Legal Services Authority (DSLSA) has launched a ‘Legal Aid Clinic’. It will act as a single–window facility for resolving grievances of women by offering them free legal assistance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!