7th Tamil Unit 9 Questions
61) பொங்கல் உண்டான் இத்தொடரில் பயின்று வந்துள்ள ஆகுபெயர்?
A) பொருளாகு பெயர்
B) சினையாகு பெயர்
C) பண்பாகு பெயர்
D) தொழிலாகு பெயர்
விளக்கம்: இத்தொடரில் பொங்கல்(பொங்குதல்) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகுபெயர் ஆகும்.
62) பாய்மரக் கப்பல் என்னும் நூலை எழுதியவர்?
A) கவியரசு
B) சே. பிருந்தா
C) பால் வண்ணன் பிள்ளை
D) பாவண்ணன்
விளக்கம்: பாய்மரக் கப்பல் என்னும் நூலை எழுதியவர் பாவண்ணன். இவர் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வiயான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருகிறார்.
63) கல்வி ஒன்றதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணியவர்?
A) காயிதே மில்லத்
B) காந்தியடிகள்
C) ஜவஹர்லால் நேரு
D) அறிஞர் அண்ணா
விளக்கம்: கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் காயிதே மில்லத். “கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார் காயிதே மில்லத்.
64) ஜமால் முகம்மது கல்லூரியை எங்கு தொடங்க காயிதே மில்லத் காரணமாக இருந்தார்?
A) கேரளா
B) நாகர்கோவில்
C) தஞ்சாவூர்
D) திருச்சி
விளக்கம்: “கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார் காயிலே மில்லத். அதன்படி திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்க அவரே காரணமாக இருந்தார்.
65) கூற்றுகளை ஆராய்க.
1. தமிழக அரசியல் வானில் கவ்வியருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் – தந்தை பெரியார்
2. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் – அறிஞர் அண்ணா
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் தவறு
D) இரண்டும் சரி
விளக்கம்: 1. தமிழக அரசியல் வானில் கவ்வியருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் – அறிஞர் அண்ணா
2. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் – தந்தை பெரியார்
66) பொருத்துக.
அ. சமயம் – 1. Simplicity
ஆ. எளிமை – 2. Religion
இ. ஈகை – 3. Dignity
ஈ. கண்ணியம் – 4. Charity
A) 2, 1, 3, 4
B) 2, 1, 4, 3
C) 1, 2, 3, 4
D) 1, 2, 4, 3
விளக்கம்:சமயம் – Religion
எளிமை – Simplicity
ஈகை – Charity
கண்ணியம் – Dignity
67) பொருத்துக.
அ. தத்துவம் – 1. Sincerity
ஆ. நேர்மை – 2. Philosophy
இ. வாய்மை – 3. Preaching
ஈ. உபதேசம் – 4. Intergrity
A) 2, 4, 1, 3
B) 4, 3, 2, 1
C) 4, 3, 1, 2
D) 3, 4, 1, 2
விளக்கம்:தத்துவம் – Philosophy
நேர்மை – Integrity
வாய்மை – Sincerity
உபதேசம் – Preaching
68) Astronomy என்ற சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு?
A) விண்ணியல்
B) விண்மீன்
C) கோள்கள்
D) வானியல்
விளக்கம்: Astronomy என்பது வானியல் என்ற சொல்லைக் குறிக்கும்.
69) Doctrine என்ற சொல்லின் தமிழ்மொழிபெயர்ப்பு?
A) மருத்துவர்
B) மருத்துவத்துறை
C) கொள்கை
D) பட்டம்
விளக்கம்: Doctrine என்ற சொல்லின் தமிழ்மொழிபெயர்ப்பு கொள்கை என்பதாகும்.
70) கூற்றுகளை ஆராய்க.
1. அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும்.
2. இரட்டைக் கிளவியின் சொற்கள் இணைந்தே நிற்கும்
A) இரண்டும் சரி
B) இரண்டும் தவறு
C) 1 மட்டும் சரி
D) 2 மட்டும் சரி
விளக்கம்: அடுக்குத் தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும். சொற்கள் 2 லிருந்து 4 முறை வரை ஒரே சொல் இடம்பெறும். இரட்டைக்கிளவியில் செற்கள் இணைந்தே நிற்கும். சொற்கள் 2 முறை மட்டுமே இடம் பெறும்.