7th Tamil Unit 9 Questions
51) சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது என்பது என்ன வகையான ஆகுபெயர்?
A) பொருளாகு பெயர்
B) இடவாகு பெயர்
C) காலவாகு பெயர்
D) தொழிலாகு பெயர்
விளக்கம்: தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைக் குறிக்காமல் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால், இஃது இடவாகுபெயர் ஆகும்.
52) சினையின்(உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது?
A) சினையாகு பெயர்
B) பொருளாகு பெயர்
C) தொழிலாகு பெயர்
D) இடவாகு பெயர்
விளக்கம்: சினை என்றால் உறுப்பு என்று பொருள். சினையின் பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகு பெயர் எனப்படும்.
53) இரட்டைக் கிளவி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1. சொற்கள் இரட்டையாக வரும்
2. பிரித்தால் பொருள் தரும்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டம் தவறு
விளக்கம்: இரட்டைக் கிளவி என்பது சொற்கள் இரட்டையாக இணைந்த வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் ஆகும். (எ.கா) சலசல, விறுவிறு, மளமள.
54) அடுக்குத் தொடர் எதன் காரணமாக தோன்றாது?
A) விரைவு
B) வெகுளி
C) உவகை
D) அடைமொழி
விளக்கம்: அடுக்குத் தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும். அடைமொழியாக வருவது இரட்டைக் கிளவி ஆகும்.
55) இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது_________
A) முதலாகு பெயர்
B) சினையாகு பெயர்
C) தொழிலாகு பெயர்
D) பண்பாகுபெயர்
விளக்கம்: இத்தொடரில் கை என்பது அதனோடு தொடர்புடைய ஒரு நபரைக் குறிக்கிறது. அதாவது ஒரு நபர் பற்றாக் குறையை உணர்த்துகிறது. இங்கு சினையின் (கை) பெயர் முதலாகிய பொருளுக்கு (மனிதன்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகுபெயர் எனப்படும்.
56) திசம்பர் பூ சூடினாள் என்பது என்ன வகையான ஆகுபெயர்?
A) பொருளாகு பெயர்
B) காலவாகு பெயர்
C) இடவாகு பெயர்
D) சினையாகு பெயர்
விளக்கம்: இங்கு திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் பூக்கும் பூவை குறிப்பதால் இது காலவாகு பெயர் ஆகும்.
57) அடைமொழியாய் குறிப்புப் பொருளில் வருவது?
A) இரட்டைக் கிளவி
B) அடுக்குத் தொடர்
C) ஆகுபெயர்
D) அன்மொழித்தொகை
விளக்கம்: இரட்டைக் கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும். இவை பிரித்தால் பொருள் தராது.
58) அடுக்குத் தொடரில் ஒரே சொல் ___________ முறை முதல் _______ முறை வரை வரும்.
A) 2-3
B) 2-5
C) 2-4
D) 2-6
விளக்கம்: அடுக்குத் தொடரில் உள்ள சொற்களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் அவற்றுக்கு பொருள் உண்டு. இவை 2 முதல் 4 முறை வரை வரும்
59) மழை சடசடவெனப் பெய்தது-இத்தொடரில் அமைந்துள்ளது__________
A) அடுக்குத் தொடர்
B) இரட்டைக் கிளவி
C) தொழிலாகு பெயர்
D) பண்பாகு பெயர்
விளக்கம்: இத்தொடரில் உள்ள சொல் சடசட என்பது இரண்டு முறை வந்துள்ளது. இதனை பிரித்தாலும் பொருள் தராது. இது வினைக்கு அடைமொழியாய் குறிப்புப் பொருளில் வந்துள்ளது. எனவே இதனை இரட்டைக் கிளவி எனலாம்.
60) இனிப்பு தின்றான் என்பது எவ்வாகை ஆகுபெயர்?
A) பொருளாகு பெயர்
B) சினையாகு பெயர்
C) பண்பாகு பெயர்
D) தொழிலாகு பெயர்
விளக்கம்: இத்தொடரில் உள்ள இனிப்பு என்னும் பண்புப் பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் இது பண்பாகுபெயர் ஆயிற்று.