7th Tamil Unit 9 Questions
41) மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தவர்?
A) தந்தை பெரியார்
B) காமராசர்
C) அறிஞர் அண்ணா
D) காயிதே மில்லத்
விளக்கம்: காயிதே மில்லத் தனது ஒரே மகனின் திருமணத்தை மணக்கொடை(வரதட்சணை) பெறாமல் அத்திருமணத்தை நடத்தினார். அத்துடன் மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தார்.
42) ஆட்சி மொழி பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட காயிதே மில்லத் கீழக்கண்ட எதனை உறுதியாக சொன்னார்?
A) மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்
B) இலக்கியம் அதிகம் கொண்ட மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்.
C) பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும்
D) ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்
விளக்கம்: இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சி மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காயிதே மில்லத் பழமையான மொழிகளிலேயே ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
43) காயிதே மில்லத் எம்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மொழி பற்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் குறிப்பிட்டார்?
A) இந்தி
B) ஆங்கிலம்
C) திராவிட
D) தமிழ்
விளக்கம்: இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காயிதே மில்லத் தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
44) இந்த மண்ணிலே முதன் முதலாக பேசப்பட்ட மொழிகள் எது என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்?
A) திராவிட மொழிகள்
B) தமிழ் மொழி
C) பாலி மொழி
D) சமஸ்கிருதம்
விளக்கம்: பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன் என்று காயிதே மில்லத் கூறினார். திராவிட மொழிகள் தாம் இந்த மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழிகள் என்றும் கூறினார்.
45) மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட மொழி என்று காயிதே மில்லத் எம்மொழியை குறிப்பிட்டுள்ளார்?
A) சமஸ்கிருதம்
B) இந்தி
C) கன்னடம்
D) தமிழ்
விளக்கம்: திராவிட மொழிகளிலே பழமையான மொழியான தமிழ்மொழிதான் மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட மொழி என்ற காயிதே மில்லத் கூறினார்.
46) ஃபரூக் கல்லூரியை எங்கு தொடங்க காயிதே மில்லத் காரணமாக இருந்தார்?
A) திருச்சி
B) கேரளா
C) சென்னை
D) கர்நாடகா
விளக்கம்: கல்வி ஒன்று தான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணிய காயிதே மில்லத் அவர்கள் கேரளாவில் ஃபரூக் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்தார்
47) எதிரொலித்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
A) எதிர் + ஒலித்தது
B) எதில் + ஒலித்தது
C) எதிர + ஒலித்தது
D) எதி + ரொலித்தது
விளக்கம்: எதிரொலித்தது என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது எதிர் + ஒலித்தது என்பதாகும்
48) முதுமை + மொழி என்பதனைச் செர்தெழுதக் கிடைக்கும் சொல்________
A) முதுமொழி
B) முதுமைமொழி
C) முதியமொழி
D) முதல்மொழி
விளக்கம்: முதுமை + மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது முதுமொழி. பண்புப் புணர்ச்சியின் ஈறுபோதல் என்னும் விதிப்படி முதுமை + மொழி – முது + மொழி என்று மாறி பின் முதுமொழி என்று சேரும்.
49) பாவண்ணனின் நூல்களுள் பொருந்தாது எது?
A) வேர்கள் தொலைவில் இருக்கின்றன
B) நேற்று வாழ்ந்தவர்கள்
C) கடலோர வீடு
D) வீடு முழுக்க வானம்
விளக்கம்: வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு போன்ற நூல்களை எழுதியவர் பாவண்ணன். வீடு முழுக்க வானம் என்ற நூலை எழுதியவர் சே. பிருந்தா.
50) ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது?
A) பொருள்கோள்
B) விணையாலனையும் பெயர்
C) அன்மொழித் தொகை
D) ஆகுபெயர்
விளக்கம்: ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் என்று அழைக்கப்படுகிறது.