7th Tamil Unit 9 Questions
21) காயிதே மில்லத் ஓர் உத்தமமான மனிதர் என்று கூறியவர்?
A) அறிஞர் அண்ணா
B) தந்தை பெரியார்
C) முதறிஞர் இராஜாஜி
D) பெருந்தலைவர் காமராசர்
விளக்கம்: காயிதே மில்லத்தின் தலைமைப் பண்பு பற்றி அறிந்த தந்தை பெரியார் அவர்கள், அவர் ஓர் உத்தமமான மனிதர் என்று கூறியுள்ளார்.
22) காயிதே மில்லத் அவர்கள் எப்போது சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றினார்?
A) 1946 – 1949
B) 1946 – 1956
C) 1946 – 1957
D) 1946 – 1952
விளக்கம்: காயிதே மில்லத் தற்போது தமிழ்நாடு என்று அழைக்கப்படும் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார்.
23) கூடு கட்டத் தெரியாத பறவை?
A) காக்கை
B) குயில்
C) சிட்டுக்குருவி
D) தூக்கணாங்குருவி
விளக்கம்: கூடு கட்டத் தெரியாத பறவை குயில் ஆகும். இது காக்கையில் கூட்டில் வசிக்கும்.
24) ‘தானொரு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) தா + ஒரு
B) தான் + னொரு
C) தான் + ஒரு
D) தானே + ஒரு
விளக்கம்: தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தான் + ஒரு
25) சே. பிருந்தா எழுதிய நூல்களுள் பொருந்தாது எது?
A) மழைப் பற்றிய பகிர்தல்கள்
B) வீடு முழுக்க வானம்
C) மகளுக்குச் சொன்ன கதை
D) இயேசு காவியம்
விளக்கம்: சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். இயேசு காவியம் என்பது கவியரசு கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது.
26) இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது என்று தந்தை பெரியாரால் பாராபட்டப்பட்டவர்?
A) கண்ணதாசன்
B) காமராசர்
C) முத்துராமலிங்கத் தேவர்
D) காயிதே மில்லத் முகமுது இஸ்மாயில்
விளக்கம்: தந்தை பெரியார் காயிதே மில்லத் முகமுது இஸ்மாயில் அவர்கள் தமிழகத்திற்காக அவர் செய்த பங்களிப்பு பற்றி இவ்வாறு கூறியுள்ளார்
27) கீழ்கண்டவர்களுள் தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்?
A) அறிஞர் அண்ணா
B) கவியரசு கண்ணதாசன்
C) பாரதியார்
D) சே. பிருந்தா
விளக்கம்: இவர்களில் தமிழக அரசவைக் கவிராக இருந்தவர் கவியரசு கண்ணதாசன் மட்டுமே.
28) காயிதே மில்லத் பற்றிய கூற்றுகளில் பொருந்தாது எது?
1. மிகச் சிறந்த தொழில் துறை அறிவு பெற்றிருந்தார்
2. தம் வாழ்நாள் முழுவதும் சமய பரப்புரைக்காக அர்ப்பணித்தார்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
விளக்கம்: காயிதே மில்லத் மிகச்சிறந்த தொழில்துறை அறிவு பெற்றிருந்தார். அவர் தனது வாழ்நாளை சமய நல்லிணக்கத்தைப் பேண அர்ப்பணித்தார்
29) கூற்று: இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
காரணம்: இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தவர் காயிதே மில்லத்
A) கூற்று தவறு. காரணம் சரி
B) கூற்று சரி, காரணம் தவறு
C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
D) கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
விளக்கம்: காயிதே மில்லத் மிகச் சிறந்த தொழில்துறை அறிவு பெற்றிருந்தார். இந்திய நாட்டின் கனிம வளங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். இதனால் இந்திய அரசு கனிம வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினைப் பெற்றனர்.
30) காயிதே மில்லத்திற்கு பொருந்தாத ஒன்று?
A) சட்ட மன்ற உறுப்பினர்
B) சட்ட மேலவை உறுப்பினர்
C) மாநிலங்களவை உறுப்பினர்
D) மக்களவை உறுப்பினர்
விளக்கம்: காயிதே மில்லத் விடுதலைக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். விடுதலைப் பெற்ற பின் மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்களுக்காகத் தொண்டு செய்தார்.