7th Tamil Unit 9 Questions
11) கண்ணதாசனுக்குப் பொருந்தாதது?
A) காவியங்கள், கவிதைகள்
B) கட்டுரைகள், சிறுகதைகள்
C) நாடகங்கள், புதினங்கள்
D) காப்பியங்கள், அறநூல்கள்
விளக்கம்: கவியரசு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற கண்ணதாசன் அவர்கள், காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்
12) “வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் – அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலைவனம்!” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
A) அரத்தமுள்ள இந்து மதம்
B) சேரமான் காதலி
C) இயேசு காவியம்
D) இவற்றுள் எதுவுமில்லை
விளக்கம்: “ வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழக்கை பாலைவனம் – அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலைவனம்!” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் கவியரசு கண்ணதாசன் அவர்கள் இயற்றிய இயேசு காவியம் ஆகும். மேற்கண்ட நூல்கள் அனைத்தும் கண்ணதாசனால் இயற்றப்பட்ட நூல்கள்
13) நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்ற உட்பொருள் கொண்ட கருத்தை மகளுக்குச் சொன்ன கதை என்னும் தலைப்பில் நூலாக எழுதியவர்?
A) சே. பிருந்தா
B) கண்ணதாசன்
C) காயிதே மில்லத்
D) பாவண்ணன்
விளக்கம்: நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்ற உட்பொருள் கொண்ட கதையை காக்கை மற்றும் குயில் குஞ்சு வைத்து விளக்கியுள்ளார் சே. பிருந்தா அவர்கள்.
14) கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்?
A) கண்ணதாசன்
B) பாவண்ணன்
C) வாணிதாசன்
D) கல்யாண்ஜி
விளக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும் எழுதி வருபவர் பாவண்ணன் அவர்கள். இவர் கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
15) பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
A) 6
B) 5
C) 4
D) 3
விளக்கம்: பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை 1. பொருட்ப்பெயர் 2. இடப்பெயர் 3. காலப்பெயர் 4. சினைப்பெயர் 5. பண்புப்பெயர் 6. தொழிற்பெயர்
16) வீட்டுக்கு வெள்ளை அடித்தான் – இத்தொடரில் பயின்று வந்துள்ள ஆகுபெயர்?
A) இடவாகு பெயர்
B) தொழிலாகு பெயர்
C) பொருளாகு பெயர்
D) பண்பாகு பெயர்
விளக்கம்: இங்கு வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது. இதனால் இது பண்பாகு பெயர் ஆகும்.
17) சினை என்பதன் பொருள்?
A) பாகம்
B) உறுப்பு
C) பகுதி
D) மேற்கண்ட அனைத்தும்
விளக்கம்: சினை என்பது ஆகுபெயரின் வகைகளில் ஒன்றாகும். பொதுவாக சினை என்பது உறுப்பு என்னும் பொருளை தரும். பாகம், பகுதி என்பது உறுப்பை குறிக்கும் வேறு சொற்களாகும்.
18) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
A) சலசல
B) விறுவிறு
C) மளமள
D) பாம்பு பாம்பு பாம்பு
விளக்கம்: மேற்கண்டவற்றில் சலசல, விறுவிறு, மளமள ஆகிய சொற்கள் பிரித்தால் பொருள் தராது. எனவே இது இரட்டைக் கிளவி எனப்படும். ஆனால் பாம்பு பாம்பு பாம்பு என்பது பிரித்தால் பொருள் தரும். இது அடுக்குத் தொடர் ஆகும்.
19) பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது____________?
A) பொருளாகு பெயர்
B) சினையாகு பெயர்
C) பண்பாகு பெயர்
D) இடவாகு பெயர்
விளக்கம்: பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு(சினை) -க்கு ஆகிவருவது பொருளாகு பெயராகும்.
20) தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் திகழ்கிறார் என்று கூறியவர்?
A) தந்தை பெரியார்
B) அறிஞர் அண்ணா
C) காமராசர்
D) இராசகோபாலாச்சாரியார்
விளக்கம்: அறிஞர் அண்ணா அவர்கள் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் தமிழகத்திற்காக அவர் செய்த பங்களிப்பு பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.