7th Tamil Unit 8 Questions
51) “அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமை நீக்க வேண்டும்” – இதில் பயின்று வந்துள்ள அணி எது?
A) உவமை அணி
B) உருவக அணி
C) ஏகதேச உருவக அணி
D) வஞ்சப்புகழ்ச்சி அணி
விளக்கம்: இதில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு கூறப்படும் இரு பொருளில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
52) “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” இக்குறளில் பயின்ற வந்துள்ள அணி என்ன?
A) உவமை அணி
B) உருவக அணி
C) ஏகதேச உருவக அணி
D) வஞ்சப்புகழ்ச்சி அணி
விளக்கம்: வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்ணிண் தரத்தை அறிய உதவும் உரைக்கல்லாக உருவகம். செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை. எனவே, இது ஏகதேச உருவக அணி.
53) வினாச்சொற்கள் எத்தனை?
A) 10
B) 11
C) 15
D) 12
விளக்கம்: ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்வதாக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்க பயன்படுத்தும் சொற்கள் ‘வினாச்சொற்கள்’. எது, என்ன, எங்கு, எப்படி, எத்தனை, எப்போது, எவற்றை, எதற்கு, ஏன், யார், யாது, யாவை ஆகியவை வினாச் சொற்களாகும்.
54) பொருத்துக.
அ.குறிக்கோள் – 1. Ambition
ஆ.செல்வம் – 2. Objectives
இ.லட்சியம் – 3. Wealth
A) 2, 3, 1
B) 2, 1, 3
C) 3, 2, 1
D) 1, 3, 2
விளக்கம்: குறிக்கோள் – Objective
செல்வம் – Wealth
லட்சியம் – Ambition
55) பொருத்துக.
அ. பொதுவுடைமை – 1. Neighbour
ஆ. கடமை – 2. Communism
இ. அயலவர் – 3. Responsibility
A) 2, 1, 3
B) 3, 2, 1
C) 3, 1, 2
D) 2, 3, 1
விளக்கம்: பொதுவுடைமை – Communism
கடமை – Responsibility
அயலவர் – Neighbour
56) _________ ஒரு நாட்டின் அரணன்று
A) காடு
B) வயல்
C) மலை
D) தெளிந்த நீர்
விளக்கம்: மணநீரும் மண்ணும் மலையும் அணிநிழல் காடு உடையது அரண் – இக்குறளில் தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய 4-ம் உள்ளதே அரண் ஆகும் என்று கூறுகிறது.
57) மக்கள் அனைவரும்_________ஒத்த இயல்புடையவர்கள்
A) பிறப்பால்
B) நிறத்தால்
C) குணத்தால்
D) பணத்தால்
விளக்கம்: “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” – இக்குறள் மூலம் பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகிய செயல்களில் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.
58) நாடென்ப – பிரித்தெழுதுக
A) நாடு + என்ப
B) நா + என்ப
C) நாடு + என்ப
D) நாடு + டென்ப
விளக்கம்: நாடென்ப என்பது நாடு + என்ப எனப் பிரியும்
59) கண் + இல்லது – சேர்த்தெழுதுக
A) கணிஇல்லது
B) கணில்லது
C) கண்ணில்லாது
D) கண்ணில்லது
விளக்கம்:கண் + இல்லது – கண்ணில்லது எனப் புணரும்
60) எவை சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடு என திருவள்ளுவர் கூறுகிறார்?
A) மிக்க பசி
B) ஓயாத நோய்
C) அழிவு செய்யும் பகை
D) அனைத்தும்
விளக்கம்: மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும் என திருவள்ளுவர் கூறுகிறார்.